அன்பில் மகேஷ் பொய்யாமொழி: 3-வது மொழி மாணவர்களுக்கு பெரும் சுமை.. 56 மொழிகளை இந்தி அழித்துள்ளது .. !

ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட வேண்டிய ரூ.2,151 கோடி கல்வி நிதியை விடுவிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பதில் கடிதம் எழுதி இருக்கிறார்.

அந்த கடிதத்தில், பாஜக ஆளாத மாநிலங்களிலும் தேசியக் கல்வி கொள்கை ஏற்கப்பட்டுள்ளது. அதனால் தமிழ்நாடும் ஏற்றுக் கொள்ள வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்று பிஎம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்தாத காரணத்தால் தமிழ்நாடு ரூ.5 ஆயிரம் கோடி நிதியை இழக்கிறது. இந்திய கல்வி திட்டத்தின் முதுகெலும்பாக மும்மொழிக் கொள்கை உள்ளது என்று தெரிவித்திருந்தார். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கருத்துக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்துள்ளார்.

அதில், தமிழ்நாடு ஏற்கனவே தரமான கல்வியை கொடுக்கிறது. பிஎம்ஸ்ரீ மூலம் கல்வித் தரத்தை உயர்த்த போகிறீர்கள் என்றால், அப்படி அந்த திட்டத்தில் என்ன மாற்றம் செய்ய போகிறீர்கள்? புதிய கல்விக் கொள்கையை பிஎம்ஸ்ரீ மூலம் கொண்டு வருவதை ஏற்கனவே அறிந்து கொண்டுவிட்டோம். மும்மொழிக் கொள்கை, 3, 5 மற்றும் 8 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு போல் ஒன்றை கொண்டு வருவது என்று திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இது அதிகளவில் மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்கும். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது மாணவர்கள் இடைநிற்றலை குறைத்திருக்கிறோம். மீண்டும் ஒரு மொழிப்போரை கொண்டு வரக்கூடாது என்ற வகையில் தமிழக அரசு கண்டனத்தை தெரிவித்து வருகிறோம். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உருவாக்கி உள்ளோம் என்று கூறியிருக்கிறார்.

இளைய சமுதாயத்தை மனதில் வைத்து திட்டத்தை உருவாக்கி இருந்தால், புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாது. சாதாரணமாக அமர்ந்து கையெழுத்திடுங்கள்.. பேசிக் கொள்ளலாம் என்ற ரீதியில் வலியுறுத்தி இருக்கிறார். இருமொழிக் கொள்கையில் படித்துள்ள மாணவர்கள் அனைத்து துறைகளிலும் முன்னிலையில் இருக்கிறார்கள். மருத்துவர்கள், தொழில்நுட்பம், இஸ்ரோ, ஐடி என்று பல்வேறு துறைகளிலும் இருமொழிக் கொள்கையின் கீழ் படித்தவர்களே முதன்மையாக இருக்கிறார்கள்.

தேசிய கல்விக் கொள்கை குறித்து யாரிடமும் கருத்து கேட்கவில்லை. தூண்டிலை போட்டுவிட்டு மீன் சிக்காதா என்ற ரீதியில் மத்திய அரசு செயல்படுகிறது. தமிழின் பெருமையை நீங்கள் சொல்லி அறிய வேண்டியதில்லை. தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம். மும்மொழிக் கொள்கை மாணவர்களிடையே அறிவாற்றல் சுமையை உருவாக்கும். இந்தி இல்லாமல் 3-வது வேறு மொழியை பயிற்றுவிக்க போதிய ஆசிரியர்கள் இல்லை.

பாடத்திட்டத்திற்கு வெளியே இந்தி மொழியை கற்றுக்கொள்ள ஊக்குவிக்கத்தான் செய்கிறோம். கட்டாயம் என்று சொல்லி ஒரு மொழியை கொண்டு வரும் போதுதான், தேவையில்லாத மன அழுத்தத்தை மாணவர்களுக்கு கொடுக்கும். மும்மொழி கொள்கை மாணவர்களின் கால்களில் சங்கிலியை போட்டு இழுப்பதை போன்றதாகும். இந்தியாவில் 56 மொழிகள் இந்தி மொழியால் விழுங்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் சொந்த மொழியாக ஒரியா மொழி உட்பட 56 மொழிகள் முழுமையாக இந்தி திணிப்பால் அழிக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற நிலை தமிழுக்கும் வந்துவிடக் கூடாது. தமிழ்நாடு மாடலை பின்பற்ற வேண்டும் என்று சொல்வதற்கு பதிலாக, நாங்கள் சொல்வதை நீங்கள் கேளுங்கள் என்ற சொல்லைதான் எதிர்க்கிறோம் என அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

அன்பில் மகேஷ்: ஹிட்லருடன் நூடுல்ஸ், காந்தியுடன் காஃபி சாப்பிட்டவர் என அளந்து விடும் சீமான்..!

திருவள்ளுவர் திருக்குறள் எழுதும் போது ஓலைச்சுவடி கிழித்து கொடுத்தவர். ஹிட்லருடன் நூடுல்ஸ் சாப்பிட்டவர். காந்தியடிகளுடன் காஃபி சாப்பிட்டவர். சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பீரங்கி படையில் பயிற்சி பெற்றவர் இப்படி பல அனுபவங்களைக் கொண்டுள்ள சீமானை விமர்சிக்கும் தகுதி எங்களுக்கு இல்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியுள்ளார்.

கோயம்புத்தூர் மாநகர் மாவட்ட திமுக மற்றும் திமுக மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் சிங்காநல்லூர் கரும்புக்கடை மைதானத்தில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், மாவட்ட துணை செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், தளபதி இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு பேசினார். அப்போது, தமிழ்நாட்டில் நானும் ஒரு அரசியல் தலைவர் என சொல்லிக் கொண்டு ஒருவர் திரிகிறார். திருவள்ளுவர் திருக்குறள் எழுதும்போது அவருக்கு நான்தான் ஓலைச்சுவடி கிழித்து கொடுத்தேன், ஹிட்லருடன் சேர்ந்து நூடுல்ஸ் சாப்பிட்டேன், காந்தியடிகளுடன் சேர்ந்து காஃபி சாப்பிட்டேன், சுபாஷ் சந்திரபோஸ் பீரங்கி படையில் பயிற்சி அளித்தேன் என அளந்துகொண்டே போவார்.

அவரது பெயரை இங்கே குறிப்பிட்டு, எனது மரியாதையை நான் குறைத்துக்கொள்ள விரும்பவில்லை. மத்திய பாஜக அரசு நம் மீது இந்தியை திணித்து, தமிழ் மொழியின் தொன்மையையும் நமது பண்பாட்டையும் அழிக்க பார்க்கிறது. அவர்களுக்கு அடிபணிந்து நாம் இந்தி படித்தால், நாம் யார் என்பதை மறந்துவிடுவோம். 5,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் இரும்பை பயன்படுத்தி உள்ளான் என சமீபத்திய ஆய்வறிக்கை ஆதாரத்துடன் குறிப்பிடுகிறது.

அப்படியானால், நமது பழமையும், தொன்மையும் என்னவென்று உலகிற்கு தெரியும். திருக்குறளை இன்று ஒவ்வொரு நாடும் போட்டி போட்டு, மொழி பெயர்த்துக்கொண்டு இருக்கின்றன. இப்படி தமிழ்மொழியை உலகெங்கும் கொண்டு செல்ல உறுதுணையாக இருக்கிறார் நமது முதலமைச்சர். தமிழகத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டத்துக்கு ‘சர்வ சிக்‌ஷா அபியான்’ என மத்திய அரசு இந்தியில் பெயர் சூட்டியுள்ளது.

மத்திய அரசின் கல்விக் கொள்கையை நாம் ஏற்றால்தான் மத்திய அரசிடமிருந்து நமக்கு வரவேண்டிய ரூ. 2,151 கோடி நிதியை தருவோம் என்கிறார்கள். நம் கொள்கையை அடகுவைத்து, அப்படி ஒரு நிதியை பெறவேண்டாம் என நமது முதலமைச்சர் நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல், மத்திய அரசுக்கு பாடம் புகட்டியுள்ளார். வேறு எந்த முதலமைச்சருக்கு இப்படி ஒரு தைரியம் வரும்? எடப்பாடி பழனிசாமிக்கு வருமா? நிதி பகிர்வு மூலம், நியாயமாக நமக்கு வரவேண்டிய நிதியை தர மறுக்கிறார்கள்.

நமது மாநிலத்தில் உள்ள 40 லட்சம் மாணவர்களின் கல்வியோடு, மத்திய அரசு விளையாடுகிறது. இது, பெரியார், அண்ணா, கலைஞர் வாழ்ந்த மண். இந்த மண்ணில், வேறு யாரும் ஆதிக்கம் செலுத்த முடியாது. 7 -ஆவது முறையும் திமுகதான் ஆட்சி பொறுப்பில் அமரும். வெல்வோம் இருநூறு, படைப்போம் வரலாறு என அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.

தமிழ்த்தாய் வாழ்த்தை நீக்கி விடுவோம் என சீமான் பேசியது வேதனை அளிக்கிறது..!

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தை நீக்கி விடுவோம் என சீமான் பேசியிருப்பது வேதனை அளிக்கிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பள்ளிகல்வித்துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம், கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் கனவு ஆசிரியர் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 34 ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 22 ஆசிரியர்கள் என 54 ஆசிரியர்கள் அக்டோபர் 23-ஆம் தேதி காலை சென்னையிலிருந்து புறப்பட்டு ஃபிரான்ஸ் செல்கின்றனர். அக்டோபர்28-ஆம் தேதி வரை ஃபிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

தமிழகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 54 ஆசிரியர்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்தார்.

அப்போது, கனவு ஆசிரியர் திட்டத்தில் தேர்வான ஆசிரியர்களை பாரீஸ்க்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்ல உள்ளோம். ஆசிரியர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் முதன்முறையாக வெளிநாட்டிற்கு சுற்றுலா அழைத்துச் செல்ல உள்ளோம்.

பள்ளிக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட குறைபாடுகளை கண்டறிந்து அதனை சரி செய்யும் வகையில் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். அதேபோல பள்ளிக்கு வர இயலாத மாற்றுத்திறனாளி குழந்தைகள், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உள்ளிட்டோரையும் கண்டறிந்து அவர்களுக்கும் முறையாக கல்வி வழங்கப்படுகிறது.

மேலும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில்,  தமிழ்நாட்டு அரசியலே கல்வியில்தான் இருக்கிறது. அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தான் நீதிக்கட்சி தொடங்கப்பட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தை நீக்கி விடுவோம் என சீமான் பேசியிருப்பது வேதனையாக இருக்கிறது என அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

ஹெச்.ராஜா: பாலியல் வன்கொடுமை..! கிறிஸ்தவர்கள் தொடர்புடைய பள்ளிகளை பற்றி அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசிவதில்லை..!?

பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா, திருச்சியில் 40-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியும், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதுபற்றி பேசவில்லை. கிறிஸ்தவர்கள் தொடர்பு இருப்பதால்தான் பேசவில்லையா? என தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜன சங்கம் கட்சி தலைவர் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா 108-வது பிறந்தநாள் விழா சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. அவரது படத்துக்கு பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர், செய்தியாளர்களள் சந்திப்பில் ஹெச்.ராஜா பேசுகையில், நாடு முழுவதும் 24-ம் தேதி வரை 5 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். பழநி பஞ்சாமிர்தம் குறித்து கருத்து தெரிவித்த இயக்குநர் மோகன் ஜியை கைது செய்தது முறையற்றது. நீதிமன்றமும் அதையே சொல்லி, தமிழக அரசு, காவல் துறைக்கு பலத்த அடி கொடுத்துள்ளது. அதேநேரம், பிரதமர் குறித்து அவதூறாக பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசனை முதலமைச்சர் இன்னும் பதவி நீக்கம் செய்யவில்லை.

விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் விஜயகாந்துடன் மக்கள்நல கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தன. ஆனால், அந்த கூட்டணிக்கு வெறும் 6 சதவீத வாக்குகள்தான் கிடைத்தன. அதனால், திமுக நினைப்பதுபோலவே, விசிக ஒன்றும் தவிர்க்க முடியாத பெரிய அரசியல் சக்தி இல்லை.

மேலும் பேசிய ஹெச்.ராஜா, மகாவிஷ்ணு விவகாரத்தில் 2 தலைமை ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், திருச்சியில் 40-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியும், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதுபற்றி பேசவில்லை. கிறிஸ்தவர்கள் தொடர்பு இருப்பதால்தான் பேசவில்லையா? என ஹெச்.ராஜா தெரிவித்தார்.

Anbil Mahesh Poyyamozhi: மதிப்பெண் மட்டுமே புத்திசாலித்தனம் அல்ல; நல்லது, கெட்டது எது என அறிந்து கொள்ளும் பகுத்தறிவு வேண்டும்…!

சென்னை அசோக் நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேச்சாளர் ஒருவர் மாணவிகள் மத்தியில் நிகழ்த்திய சொற்பொழி மற்றும் சொற்பொழிவு சம்பந்தமாக அப்பள்ளியின் ஆசிரியர் ஒருவருடன் அந்தப் பேச்சாளர் மேடையில் இருந்தபடியே வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தமிழகத்தில் இன்று பேசுபொருளானது.

இந்நிலையில் இன்று காலை சம்பந்தப்பட்ட அரசுப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் அப்பள்ளியில் இன்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெறவிருப்பதால் போராட்டக்காரர்களுடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில், “பள்ளி நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி. அனைத்து பள்ளிகளுக்கும் பாடமாக இருக்கும் வகையில் அந்த நடவடிக்கை அமையும்.” என அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

பின்னர் பள்ளி நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “பள்ளி மாணவர்கள் சுயமாக சிந்தித்து செயல்பட வேண்டும். உணர்ச்சிப் பெருக்கில் சிக்கிவிடக் கூடாது. அறிவை செலுத்தி சிந்திக்க வேண்டும். கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். மாணவர்கள் ஏன், எதற்கு என்று கேள்வி கேட்க வேண்டும். மதிப்பெண் மட்டுமே புத்திசாலித்தனம் அல்ல; நல்லது, கெட்டது எது என அறிந்து கொள்ளும் பகுத்தறிவு வேண்டும். ” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசுகையில், “பள்ளிக்குள் யாரை சிறப்பு விருந்தினராக அனுமதிப்பது என்பதில் பள்ளியில் ஆசிரியர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்” என்று எச்சரித்தார் மேலும் ஆன்மிக சொற்பொழிவாளரின் பிற்போக்கு சிந்தனைகளை கேள்வி கேட்ட ஆசிரியர் சங்கரையும் பாராட்டினார்.

Anbil Mahesh Poyyamozhi: பள்ளியில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய விவகாரம் அனைத்து பள்ளிகளுக்கும் பாடமாக இருக்கும்..!

சென்னை அசோக் நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேச்சாளர் ஒருவர் மாணவிகள் மத்தியில் நிகழ்த்திய சொற்பொழி மற்றும் சொற்பொழிவு சம்பந்தமாக அப்பள்ளியின் ஆசிரியர் ஒருவருடன் அந்தப் பேச்சாளர் மேடையில் இருந்தபடியே வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தமிழகத்தில் இன்று பேசுபொருளானது.

இந்நிலையில் இன்று காலை சம்பந்தப்பட்ட அரசுப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் அப்பள்ளியில் இன்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெறவிருப்பதால் போராட்டக்காரர்களுடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில், “பள்ளி நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி. அனைத்து பள்ளிகளுக்கும் பாடமாக இருக்கும் வகையில் அந்த நடவடிக்கை அமையும்.” என அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை ஆத்தூர் ஸ்ரீ ராம் பிரதர்ஸ் சந்திப்பு

இல்லம் தேடி கல்வித் திட்டம் மாபெரும் வெற்றியைக் கண்டுள்ள நிலையில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிகளின் நிலை குறித்து மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. இதில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு, தங்கள் பகுதியைச் சேர்ந்த பள்ளிகள் தொடர்பாக கோரிக்கைகளை தெரிவித்தனர்.

ஆய்வுக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ”இல்லம் தேடி கல்வி மாபெரும் வெற்றியைக் கண்டுள்ளது” எனத் தெரிவித்தார். .சேலம் மாவட்டத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்பு சேலத்தில் இருந்து சென்னை செல்லும் பொழுது மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியில் ஆத்தூர் ஸ்ரீ ராம் பிரதர்ஸ் 50-க்கும் மேற்பட்டோர் சந்தித்து பொன்னாடை போற்றினார்கள்.