பிரியங்கா காந்தி: ஜனநாயகத்தை காக்க உயிரையும் தியாகம் செய்ய தயார்..!

அரசியலமைப்பையும் அம்பேத்கரையும் அவமதிப்பதை பொறுத்துக் கொள்ளாதீர்கள். அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க உயிரையும் தியாகம் செய்ய தீர்மானிக்க வேண்டும் என பிரியங்கா காந்தி தெரிவித்தார். மகாத்மா காந்தி தலைமையில் கடந்த 1924- ஆம் ஆண்டு டிசம்பர் 27 -ஆம் தேதி நடந்த மாநாட்டின் வரலாற்று சிறப்புமிக்க நூற்றாண்டு விழாவை கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி பெலகாவியில் நடத்துவது என்று காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருந்த நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவால் ஒத்திவைக்கப்பட்ட அந்த மாநாடு, நேற்று பெலகாவியில் நடந்தது.

பெலகாவி சிபிஇடி மைதானத்தில் நடந்த மாநாட்டில் பிரியங்கா காந்தி பேசுகையில், நாட்டின் சுதந்திரத்திற்காக உயிரைக் கொடுத்த வரலாறு நமக்கு உண்டு. ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதியவர்கள் நாம் அல்ல. அரசியலமைப்பு சட்டத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற உயிரை விடவும் நாம் தயாராக இருக்கிறோம். தீய அரசுக்கு எதிரான நமது போராட்டம் தொடரும். எங்களுடன் இணைந்து போராட மக்களாகிய நீங்களும் உறுதியாக இருக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கரை அவமதித்தார். இப்படியொரு அரசையும், அமைச்சரையும் இதற்கு முன் நாம் பார்த்ததில்லை. அரசியலமைப்பையும் அம்பேத்கரையும் அவமதிப்பதை பொறுத்துக் கொள்ளாதீர்கள். அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க உயிரையும் தியாகம் செய்ய தீர்மானிக்க வேண்டும் என பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின் கற்பி – ஒன்று சேர் – புரட்சி செய் என்று அறிவுப் பரவலின் மகத்துவத்தை உணர்த்தியவர் அம்பேத்கர்

‘கற்பி – ஒன்று சேர் – புரட்சி செய்’ என்று அறிவுப் பரவலின் மகத்துவத்தையும், ஒற்றுமையின் அவசியத்தையும், உரிமைக்கான போர்க் குரலையும் முழக்கமாக தந்த சட்டமேதையின் பணிகளைப் போற்றிடுவோம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பாபாசாஹெப் அம்பேத்கரின் 68-வது நினைவு நாளை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

1891-ஆம் ஆண்டு ஏப்ரல் 14- ந் தேதி பிறந்த அம்பேத்கர் சட்ட மேதை, பொருளாதார நிபுணர், அரசியல் தலைவர், சமூக சீர்திருத்தவாதி என பன்முகங்களைக் கொண்டு இருந்தார். இந்திய அரசியலமைப்பின் வரைவுக் குழு தலைவராக விளங்கியவர். பட்டியல் சமூகத்தில் பிறந்தவரான அம்பேத்கர், புத்த மதத்தைத் தழுவினார். 1956-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி டெல்லியில் உள்ள தனது வீட்டில் அம்பேத்கர் காலமானார்.

அம்பேத்கரின் மறைவு தினமான இன்று, பிறப்பு இறப்பு எனும் கர்மத்தில் இருந்து விடுபடுவதைக் குறிக்கும் வகையில் மஹாபரிநிர்வான் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது. பாபாசாஹெப் அம்பேத்கரின் 68-வது நினைவு நாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள தலைவர்கள் அவரது திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், இந்திய ஒன்றிய விளிம்பு நிலைச் சமூகங்களின் விடிவெள்ளி அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள் இன்று. ‘கற்பி – ஒன்று சேர் – புரட்சி செய்’ என்று அறிவுப் பரவலின் மகத்துவத்தையும், ஒற்றுமையின் அவசியத்தையும், உரிமைக்கான போர்க் குரலையும் முழக்கமாக தந்த சட்டமேதையின் பணிகளைப் போற்றிடுவோம்.

இந்தியாவில் ஜனநாயகத்தையும் – சமூக நீதியையும் நிலைநாட்டிட அண்ணல் அம்பேத்கர் உருவாக்கித் தந்த அரசியலமைப்புச் சட்டத்தை என்றென்றும் உயர்த்திப் பிடிப்போம்! ஏற்றத்தாழ்வுகள் நிரம்பிய இந்தியச் சமூகத்தில் அரசியல் சட்டம் தான் அடித்தட்டு மக்களின் ஆறுதல்.

அண்ணல் கொடுத்த அரசியல் சட்டத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதலைத் தடுப்போம், பாசிசவாதிகளிடம் இருந்து இந்தியாவைக் காப்போம்! என உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பெரியார், அம்பேத்கருக்கு நடுவே விஜய்..! வைரலாகும் தவெக மாநாட்டு திடல் புகைப்படம்..!

தமிழக வெற்றிக் கழக மாநாட்டு திடலில் இடம் பெற்றுள்ள காமராஜர், பெரியார், அம்பேத்கர் ஆகியோருக்கு நடுவே விஜய் கட்-அவுட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வரும் 27-ஆம் தேதி மாலை தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறவுள்ளது.

‘வெற்றிக் கொள்கை திருவிழா’ என்கிற வாசகத்துடன் மாநாடு நுழைவாயிலில் கோட்டையின் மதில் சுவர் போல செட் அமைக்கப்பட்டு அதில் 2 யானைகள் முன்னங் கால்களை உயர்த்தி பிளிரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநாட்டுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் மாநாட்டு ஏற்பாடுகளை ஒப்பந்ததாரர்கள் இரவு பகலாக செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மாநாட்டு திடலில் காமராஜர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் பிரம்மாண்ட கட்-அவுட்களுக்கு நடுவே விஜய்யின் கட்-அவுட்டும் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

“பெரியார், அம்பேத்கர் கருத்துகளை வளப்படுத்துபவர்” திருமாவளவன்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் தனது ட்விட்டர் பதிவில், “இம்மண்ணில் ஆழ விதைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் – புரட்சியாளர் அம்பேத்கர் கருத்துகளைத் தனது பேச்சாலும் செயல்களாலும் வளப்படுத்திடும் அன்புச் சகோதரர் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தாராபுரம் நகராட்சி தந்தை பெரியார் சிலை அல்லது பேரறிஞர் அண்ணா அருகில் டாக்டர் கலைஞர் அவர்களின் திரு உருவச் சிலை அமைக்க தீர்மானம்

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகர்மன்றக் அரங்கில் தாராபுரம் நகராட்சியில் நகர்மன்றத் தலைவர் பாப்பு கண்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக நகர கழக துணைச் செயலாளரும் 26 -வது வார்டு நகர் மன்ற உறுப்பினருமான தனலட்சுமி அயப்பன் அவர்கள் டாக்டர் கலைஞர் அவர்களின் திரு உருவச் சிலையினை தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட தந்தை பெரியாரின் சிலையின் அருகில் அல்லது பேரறிஞர் அண்ணாவின் சிலை அருகில் அமைக்க வேண்டும் என இன்று நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் அளித்தார்.

மேலும் தமிழ் இனத்திற்காக உழைத்த தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா , டாக்டர் கலைஞர், சட்டமேதை அம்பேத்கர் மட்டுமின்றி இன்று தமிழகத்தில் நல்லாட்சி ஆட்சி செய்துக் கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆகிறோரின் திரு உருவப் படங்களை நகர்மன்ற அரங்கில் வைக்க 26 -வது வார்டு உறுப்பினர் தனலட்சுமி அயப்பன் அவர்களால் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.‌