Palanivel Thiaga Rajan: அதிமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தி வைத்திருந்தது..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், மதுரை சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பிரச்சாரம் செய்தார்.

அப்போது, கடந்த அதிமுக ஆட்சியில் 4 ஆண்டுகளாக தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தி வைத்திருந்தது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் தாலிக்கு தங்கமும் வாங்கவில்லை; நிதியும் அதற்காக ஒதுக்கவும் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்த பின் தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்திவிட்டார்கள் என்று பச்சை பொய் சொல்கிறார்கள்.

அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட திட்டத்துக்கு பதிலாக புதுமைப்பெண் திட்டத்தை செயல்படுத்தினோம். பெண்கள் கல்வி பெறுவதற்காகவே மாதந்தோறும் ரூ.1,000 கல்வி உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தினோம். தாலிக்கு தங்கம் திட்டத்தைவிட சிறப்பான திட்டமாக புதுமைப்பெண் திட்டம் துவக்கப்பட்டது என பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

பாஸ்கு திருவிழாவில் கட்சி வேறுபாட்டை கடந்து பாசத்தை பகிர்ந்த திமுக, அதிமுகவினர்!

திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் புனித வியாகுல அன்னை ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி பாஸ்கு திருவிழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் கலந்துகொள்ள நேற்று அமைச்சர் ஐ.பெரியசாமி, மார்க்சிஸ்ட் வேட்பாளர் சச்சிதானந்தம், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், நத்தம் ஆர்.விசுவநாதன், எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர் முகமது முபாரக் ஆகியோர் ஒன்றாக ஒரே இடத்தில் அமர்ந்து கட்சி பாகுபாடின்றி பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது நத்தம் ஆர்.விசுவநாதனும் அமைச்சர் ஐ.பெரியசாமியும் கைகொடுத்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். மேலும், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது மகன் சதீஷை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு அறிமுகப்படுத்தி, ‘பெரியப்பா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கு’ என்றார். அவரது மகன் சற்றே தயங்கி முழங்காலைத் தொட்டு வணங்கினார். ‘நன்றாக காலில் விழு’ என முன்னாள் அமைச்சர் கூறியதையடுத்து மீண்டும் அமைச்சர் ஐ.பெரியசாமியின் காலைத் தொட்டு ஆசிபெற்றார்.

பின்னர், அருகிலிருந்த திமுக மாவட்டச் செயலாளரும் ஐ.பெரியசாமியின் மகனுமான இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ.வை இது அண்ணன் என்றும், அருகில் இருந்த மேயர் இளமதியை அக்காள் என்றும் தனது மகனுக்கு திண்டுக்கல் சீனிவாசன் அறிமுகப்படுத்தினார். அப்போது, ‘இவனுக்குதான் சீட் வாங்கலாம் என்று இருந்தோம், அதற்குள் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கி விட்டனர்’ என அமைச்சர் ஐ.பெரியசாமியிடம், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். திமுக, அதிமுக முக்கிய பிரமுகர்கள் கட்சி வேறுபாடின்றி ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தது விழாவுக்கு வந்திருந்த மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

சிங்கமுத்து: ஜனவரி, பிப்ரவரியை தவிர அனைத்து வரிகளையும் உயர்த்திவிட்டனர்…!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மீண்டும் கார்த்தி சிதம்பரம், அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ், பா.ஜ.க வேட்பாளர் தேவநாதன் யாதவ் களமிறங்கியிருக்கிறார்கள். சிவகங்கை அருகே மதகுபட்டியில் அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸை ஆதரித்து சிங்கமுத்து பேசுகையில், திமுக ஆட்சியில்தான் கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருட்கள் தமிழகத்துக்கு வந்தன. தமிழக மக்களை போதைக்கு அடிமையாக்கிவிட்டனர். பள்ளி மாணவர்கள் கையில் கஞ்சா உள்ளது.

திமுக ஆட்சியில் பலரும் வறுமைக் கோட்டுக்கு கீழ் சென்றுவிட்டனர். இதனால், அதிமுக எப்போது ஆட்சிக்கு வரும் என்று மக்கள் காத்திருக்கின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எப்போதும் பெண்களைச் சார்ந்தே திட்டங்களை நிறைவேற்றினார். ஆனால், திமுக பொதுமக்களிடம் வசூலிக்கும் வரிப் பணத்தில், மக்களுக்கு நன்மை எதுவும் செய்வதில்லை. நாம் பேருந்தில்கூட செல்ல முடியவில்லை. ஆனால், திமுககாரர்கள் ஒவ்வொருவரும் 10 கார்கள் வைத்துள்ளனர்.

பொய்யான வாக்குறுதியை நம்பி திமுகவுக்கு வாக்களித்து, ஏமாந்துவிட்டீர்கள். கடனைத் தள்ளுபடி செய்வார்கள் என்று கருதி, நகைகளை அடகு வைத்தனர். திமுகவைச் சேர்ந்த சிலருக்கு மட்டும் தள்ளுபடி செய்ததால், அடகு வைத்த நகைகளைத் திருப்ப முடியவில்லை. மேலும் பேசிய சிங்கமுத்து ஜனவரி, பிப்ரவரியை தவிர, தமிழகத்தில் அனைத்து வரிகளையும் ஏற்றிவிட்டனர். இந்தியா மற்றும் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்ல, அதிமுகவை ஆதரிக்க வேண்டும். அதிமுக கூட்டணியை 40 தொகுதிகளிலும் வெற்றிபெறச் செய்ய வேண்டும். இவ்வாறு சிங்கமுத்து பேசினார்.

சி.ஆர்.சரஸ்வதி: “இரட்டை இலை சின்னத்தை விலைபேசி…! அதிமுகவை அழித்துக் கொண்டிருக்கிற எடப்பாடி அணி..!”

தேனி நாடாளுமன்ற அமமுக வேட்பாளர் டிடிவி தினகரனை ஆதரித்து மதுரை சோழவந்தான் பகுதியில் வாக்குகள் கேட்டு சி.ஆர்.சரஸ்வதி பிரச்சாரம் செய்தார். அப்போது, “தமிழகத்தில் மூன்று அணியாக இருக்கிறோம், ஒன்று துரோகத்துக்கு பேர் போன, இரட்டை இலை சின்னத்தை விலைபேசிக்கொண்டு திமுகவுக்கு சாதகமாக பிரச்சாரம் செய்து, அதிமுகவை அழித்துக் கொண்டிருக்கிற எடப்பாடி அணி. மற்றொன்று திமுக அணி. அடுத்தது தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமையில் என மூன்று அணிகள் இருக்கின்றன.

எடப்பாடி பழனிசாமி எவ்வாறு முதல்வர் ஆனார் என்று நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. இன்றுவரை டிவியில் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் உலகத்திலேயே முட்டி போட்டு முதல்வரானது எடப்பாடி பழனிசாமி தான். ஒரு மனிதன் நன்றி மறக்கலாமா? துரோகம் செய்யலாமா?. ஓபிஎஸ்-ஐ எல்லோருக்கும் தெரியும், எடப்பாடியை யாருக்குத் தெரியும் சேலத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்தவர் தமிழகத்தில் ஒரு அமைச்சர் அவ்வளவுதான். அவரை முதல்வராக பரிந்துரை செய்தவர் டிடிவி தினகரன். அவரை முதல்வராக்கியவர் சசிகலா.

பரிந்துரை செய்த டிடிவிக்கும் துரோகம் செய்துவிட்டார், முதல்வராக்கிய சசிகலாவுக்கும் துரோகம் செய்துவிட்டார். நான்கரை வருடம் உறுதுணையாக இருந்த ஓபிஎஸுக்கும் துரோகம் செய்துவிட்டார். தாங்கிப் பிடித்த பிஜேபிக்கும் துரோகம் செய்துவிட்டார். எடப்பாடியிடம் நன்றி, உண்மை, விசுவாசம் என எதுவும் இல்லை, துரோகம் மட்டும்தான் உள்ளது.

இரட்டை இலை சின்னத்துக்காக பாடுபட்டவர்களில் ஒருவர் நான். ஜெயலலிதா எத்தனையோ தேர்தல்களை சந்திக்கும்போது இதே சோழவந்தானில் இரட்டை இலைக்காக வாக்குகள் சேகரித்தோம். ஆனால் இன்று, இரட்டை இலைக்கு எதிராக பேச வேண்டிய நிலைக்கு ஏற்பட்டுள்ளது. அதற்கு ஆர்.பி.உதயகுமார், ஜெயக்குமார், சிவி சண்முகம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்தான் காரணம். இரட்டை இலையை மீட்க வேண்டிய நிலை தற்போது உள்ளது.

அவர்கள் ஒன்றாக இருந்திருந்தால் 2021ல் திமுக ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா? பாரதிய ஜனதாவின் ஆலோசனையை அவர்கள் கேட்டிருந்தால் அனைவரும் ஒன்றாகி இருந்திருப்போம் 2021ல் ஜெயலலிதாவின் ஆட்சி அமைந்திருக்கும், இந்த ஆட்சி பறிபோனதற்கு காரணம் எடப்பாடி தான்.

அடுத்தடுத்து வரும் தோல்விகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது எடப்பாடியால் தான். ஆகையால் இதை மாற்ற டிடிவி தினகரனை டெல்லி நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும்.” என சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்தார்.

கே.பி.முனுசாமி: “வெற்றிப் பாதைக்கு வர முடியாமல் கடைசி இடத்தில் இருப்பவர்களை பற்றி பேசுவதற்கு வாய்ப்பு இல்லை..!

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெய பிரகாஷை ஆதரித்து, கிருஷ்ணகிரி நகரில் பிரச்சாரம் மேற்கொண்ட அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி பேசுகையில், “ஓட்டப் பந்தயத்தில் முன்னணியில் செல்பவர்கள் அடுத்ததாக யார் வருகிறார்கள் என்பதை தான் பார்ப்பார்கள். அவரை தோற்கடிக்க வேண்டும் என்கிற சிந்தனையில்தான் ஓடிக்கொண்டிருப்பார்கள்.

தற்போதைய தேர்தல் களம் என்கிற ஓட்டப் பந்தயத்தில் அதிமுக முன்னணியில் ஓடிக்கொண்டிருக்கிறது. எங்கள் பின்னால் திமுக ஓடி வந்து கொண்டிருக்கிறது. அதனால், திமுகவை பற்றிதான் பேசி வாக்கு சேகரிப்போம். வெற்றிப் பாதைக்கு வர முடியாமல் கடைசி இடத்தில் இருப்பவர்களை பற்றி பேசுவதற்கு வாய்ப்பு இல்லை. அந்தக் கடைசி இடத்தில்தான் பாஜக உள்ளது.

நேரடி களத்தில் வருபவர்களை பற்றிதான் பேச முடியும். பாஜகவை சரியான நேரத்தில் விமர்சிப்போம். இதுகுறித்து ஸ்டாலின் அவர்கள் கவலைப்பட வேண்டிய தில்லை. மேலும், தேசிய அளவில் பாஜக பெரிய ஆளாக இருந்தாலும், தமிழகத்தை பொறுத்தவரை பாஜக ஒரு தவழுகின்ற குழந்தையாகும்.

தமிழக மக்களிடத்திலேயே உங்களுடைய எந்த விதமான சித்து விளையாட்டுகளும் எடுபடாது. எம்ஜிஆர், ஜெயலலிதாவை குறித்து பிரதமர் மோடி பேசுவது, எங்கள் தலைவர்களை உண்மையாக நேசித்து கூறவில்லை. தமிழக மக்கள், எம்ஜிஆர் மீதும், ஜெயலலிதா மீதும் ஈடில்லா அன்பு கொண்டிருப்பதால், அந்த அன்பு உள்ளங்கள் மாறி நமக்கு வாக்களிக்க மாட்டார்களா என்ற சுயநலத்தோடுதான் மோடி இந்த கருத்துகளை சொல்லிக்கொண்டிருக்கிறார்” என கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

அதிமுக நகர செயலாளர் வீட்டில் நகை, பணம் பறிமுதல்..!

சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுக்கா, தாரமங்கலம் சன்னதி தெருவை சேர்ந்த அதிமுக நகர செயலாளர், நகர்மன்ற உறுப்பினரான பாலசுப்பிரமணியம். பாலசுப்பிரமணியம் 2 நகைக்கடைகள் நடத்தி வருகிறார். தற்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வளங்குவதற்காக கோடிக்கணக்கில் பணத்தை பாலசுப்பிரமணியம் பதுக்கி வைத்திருப்பதாக சேலம் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், பாலசுப்பிரமணியத்தின் இரண்டு வீடுகள், நகைக்கடைகளில் சோசாதனை செய்தனர். மேலும் அவரது மகன் பாஸ்கரின் வீடு, அவருக்கு தொடர்புடைய இடங்களிலும் அதிகாரிகள் சோதனையிட்டனர். இந்த சோதனையின்போது, கணக்கில் வராத சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான நகை, பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஓட்டுக்கு ரூ.1,000 கொடுக்க பாஜக திட்டம்…! அதிமுக மாநில செயலாளர் குற்றச்சாட்டு…!

புதுச்சேரி மக்களவைத் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் என புதுச்சேரி அதிமுக வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “புதுச்சேரி மக்களவைத் தேர்தல் நடவடிக்கைகள் நேர்மையாக, வெளிப்படையாக, சமநிலையோடு நடக்கவில்லை. மாநில உள்துறை அமைச்சராக போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு அரசு இயந்திரங்கள் முழுமையாக தேர்தல் சட்ட விதிகளுக்கு புறம்பாக துணை நிற்கின்றன. அவரது பிரச்சாரத்தின்போது காவல் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த ஊழியர்கள் கலந்துகொண்டு வருகின்றனர்.

ஒவ்வொரு பிரச்சாரத்தின்போதும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து வருகின்றன. ஆனால், இதை தேர்தல் துறை கண்டுகொள்ளவில்லை. தற்போது வயது முதிர்ந்தவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் வீட்டில் இருந்தே தபால் வாக்கு போடப்படுகிறது. இது சம்பந்தமான அரசு துறை ஊழியர்களை தன்வசப்படுத்திக் கொண்டு அவர்களது முகவரி பட்டியலை பாஜகவினர் கையில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு வாக்குக்கும் நேரடியாக வீட்டுக்கே சென்று ரூ.500 பணம் கொடுக்கின்றனர். இது சர்வ சாதாரணமாக வெளிப்படையாக நடக்கிறது.

இந்த தேர்தலில் கண்டெய்னர் மூலம் பாஜக வேட்பாளருக்கு பணம் வந்து சேர்ந்துள்ளதாக பேசப்படுகிறது. அந்தப் பணம் முக்கிய நிர்வாகிகளிடம் பிரித்து கொடுக்கப்பட்டு ஒவ்வொரு ஓட்டுக்கும் சுமார் ரூ.1,000 வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது. ஆகையால், புதுச்சேரி அரசு நிர்வாகமே ஒருதலைப்பட்சமாக பாஜக வேட்பாளருக்கு தேர்தல் பணி ஆற்றுவதால் நடைபெற இருக்கும் புதுச்சேரி மக்களவைத் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் என அன்பழகன் தெரிவித்தார்.

பழனிசாமி பெருமிதம் தமிழகம் முழுவதும் அதிமுக அலை வீசுகிறது…!”

சேலம் மாவட்டம் வீரப்பன்பாளையம் பகுதியில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி கலந்துகொண்டு, தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, “எடப்பாடி தொகுதி என்பது அதிமுகவின் கோட்டை. இத்தொகுதியில் உள்ள ஒவ்வொருவரையும், எம்எல்ஏவாகவும், கட்சியின் பொதுச் செயலாளராகவும் பார்க்கிறேன். தமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன். அப்படி செல்லும்போது அனைத்து இடங்களிலும் எடப்பாடி என்றுதான் எழுதியுள்ளனர்.

ஒருசில இடங்களில்தான் எனது பெயர் எழுதப்பட்டுள்ளது. நூற்றுக்கு 90 சதவீதமான இடங்களில் எடப்பாடி என்றுதான் எழுதியுள்ளனர். இந்தக் கூட்டத்துக்கு வந்திருக்கும் அத்தனை பேரும்தான் அந்த பெருமைக்கு சொந்தக்காரர்கள். எடப்பாடி என்று சொன்னாலே, அந்தப் பகுதியைச் சார்ந்த அனைவரையும் அந்த பெயர் குறிக்கும். அதிமுகவின் வெற்றி உங்கள் அனைவரையும் சார்ந்தது. 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக போட்டியிட்டது. அதில், அதிமுக வேட்பாளர்களிலேயே அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற தொகுதி சட்டமன்ற தொகுதி எடப்பாடி.

சுமார் 94 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்தீர்கள். இந்தமுறை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இந்தத் தொகுதியில் மக்கள் வைத்த கோரிக்கைகள் முழுவதையும் நிறைவேற்றித் தந்துள்ளோம். தமிழகத்துக்கே ஒரு முன்மாதிரி சட்டமன்ற தொகுதியாக எடப்பாடி தொகுதி விளங்கி வருகிறது. இன்னும் நிறைய திட்டங்களைச் செய்யலாம், அதற்கு வாய்ப்பு இருக்கிறது. நான் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது, எங்கு பார்த்தாலும், அதிமுக அலைதான் வீசிக் கொண்டிருக்கிறது என பழனிசாமி பேசினார்.

செல்லூர் ராஜு: கூமுட்டையாகத் தான் அண்ணாமலை இருக்கிறார்…!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

அதன்வரிசையில், ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்றத் தொகுதியில் பாஜக கூட்டணி கட்சி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வேணுகோபால் வேட்பாளரை ஆதரவாக அண்ணாமலை பிரச்சாரம் செய்தார். அப்போது, “1980இல் நடந்த விஷயங்களை எல்லாமே சம்பந்தமே இல்லாமல் திமுக இப்போது பேசி வருகிறார்கள். இந்தி- சமஸ்கிருதம், வடக்கு- தெற்கு எனப் பேசி வருகிறார்கள். அந்த பிஞ்சு போன செருப்பை அவர்கள் இன்னும் தூக்கி எறியவில்லை” என்று அவர் பேசினார்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பலர் தங்கள் இன்னுயிரை ஈந்த நிலையில், அதைப் பிஞ்சு போன செருப்பு என அண்ணாமலை பேசியது சர்ச்சையானது. பல அரசியல் கட்சியினரும் ரும் அண்ணாமலை பேச்சைக் கடுமையாகச் சாடி வருகிறார்கள். இந்தச் சூழலில் அண்ணாமலையின் இந்த கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கடுமையாக எதிர்வினையாற்றி உள்ளார். செய்தியாளர்களிடம் நல்ல சிரித்துப் பேசிக் கொண்டு இருந்தவர் அண்ணாமலையின் இந்த கருத்து குறித்துக் கேட்டதும் டென்ஷன் ஆனார்.

அப்போது, “அவரே ஒரு செருப்பு சமானம் தான். சுதந்திரப் போராட்டத்திற்கு ஈடான ஒரு போராட்டம். மொழிக்காக உயிர் நீத்த தியாகிகளைக் கொண்டது தான் தமிழ் இனம். தமிழருக்கு என்று தனியாக ஒரு குணம் இருக்கிறது. மொழிக்காகப் போராடி உயிர் நீத்த வரலாறு தமிழர்களுக்கு இருக்கிறது. என்ன காரணம் காங்கிரஸ் பேரியக்கத்தை வேரோடு வேராக அழித்து, 52 ஆண்டுகள் ஆட்சி இன்னும் தமிழகத்தில் அவர்கள் ஆட்சிக்கு வரவே முடியாத சூழல் தான் இருக்கிறது. தேசிய கட்சிக்கு அப்படியொரு நிலைமையை ஏற்படுத்தியதே தமிழர்கள் தான். அதைக் கொச்சைப்படுத்துகிறார் என்றால் அது அவரது குணம், தரம் ஆகியவற்றைக் காட்டுகிறது.

தம்பி அண்ணாமலை கிட்ட நான் ஒரு கேள்வி கேட்கிறேன். இந்தி படித்தவர்கள் அதிகம் பேர் ஏன் தமிழ்நாட்டுக்கு வேலை தேடி வந்துள்ளனர். ஆனால் இங்கே தமிழும் ஆங்கிலமும் படித்தவர்கள் வெளிநாடுகளிலும் இஸ்ரோவிலும் இருக்கிறார்கள். பல உயர்ந்த பொறுப்புகளில் இருக்கிறார்கள். இதெல்லாம் அண்ணாமலைக்குத் தெரிய வேணாமா. இது கூட தெரியாத கூமுட்டையாகத் தான் அண்ணாமலை இருக்கிறார். அப்படி தான் அவரை பார்க்க வேண்டும்” என செல்லூர் ராஜு தெரிவித்தார்.

தடா பெரியசாமி தடாலடி: பாஜகவில் ஜால்ரா அடிப்பவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது…!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், பாஜக மாநில பட்டியலின அணி தலைவர் தடா பெரியசாமி சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் பழனிசாமியை சந்தித்து அவரது முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தடா பெரியசாமி, “பாஜகவின் தவறான முடிவுகளால் அழுத்தம் ஏற்பட்டு அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைத்துள்ளேன். எனது சொந்த தொகுதி சிதம்பரம். இந்நிலையில் சிதம்பரம் தொகுதியில் நான் வேட்பாளராக நிற்பதற்கு வேலைகளை செய்துவந்தேன். பாஜகவும் அந்த தொகுதியில் என்னை வேலை பார்க்கச் சொல்லியது. ஆனால், திடீரென வேறு ஒரு வேட்பாளரை அறிவித்தார். அத்தொகுதிக்காக நான் நிறைய வேலைகளை செய்து வைத்திருந்தேன். ஆனால், என்னை கேட்காமல் வேறு வேட்பாளரை நிறுத்தியது எனக்கு மிகப்பெரிய வருத்தம்.

எனது தொகுதிக்கு வந்தபோதுகூட அண்ணாமலை என்னிடம் இந்த தொகுதியில் நிற்பீர்களா என்று கேட்டார். வாய்ப்பு கொடுத்தால் நிற்பேன் என்றேன். அவர் தான் இந்த தொகுதியில் வேலையை தொடங்குங்கள் என்றார். அவரை நம்பி தொகுதியில் வேலை பார்த்தேன். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.

பட்டியலின சமூகத்தினருக்கு பாஜகவில் அங்கீகாரம் இல்லை. எனவே தான், எனக்கான அங்கீகாரத்தை தேடும் வகையில் அதிமுகவில் இணைந்துகொண்டேன். பாஜகவில் ஜால்ரா அடிப்பவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. உழைப்பவர்களுக்கு அக்கட்சியில் அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை. பாஜக எதிராக பிரச்சாரம் செய்ய வாய்ப்பு கொடுத்தால் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வேன்.

வாய்ப்பு கிடைக்காத என்னைப் போல் நிறைய பேர் இதே மனநிலையில் உள்ளனர். தற்போது நான் மட்டும் விலகியுள்ளேன். ஒருவாரத்தில் நிறைய பேர் பாஜகவில் இருந்து கட்சி மாறுவார்கள்.” என தடா பெரியசாமி தெரிவித்தார்.