மகாராஷ்டிரா அரசு ததோபா-அந்தரி தேசிய பூங்காவை நீட்டிக்க முடிவு

மகாராஷ்டிராவில் நேற்று மாநில வனவிலங்கு வாரியத்தின் 17 வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் பேசிய உத்தவ் பாலசாகேப் தாக்கரே வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்கான எங்கள் இலக்கை அதிகரிக்க, ததோபா-அந்தரி தேசிய பூங்காவின் மையப் பகுதியை 78.89 சதுர கிமீ நீட்டிக்கும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த கூட்டத்தில் ஆதித்யா தாக்கரே மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

உலக சுற்றுலா தினம்: பம்பாய் உயர் நீதிமன்றத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

உலகெங்கிலும் உள்ள மக்கள் ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 27 ஆம் தேதி, உலக சுற்றுலா தினத்தை கொண்டாடுகிறார்கள். மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உலக சுற்றுலா தினத்தையொட்டி, இன்று பாரம்பரிய சுற்றுப்பயணங்களுக்கான பம்பாய் உயர் நீதிமன்றத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் உத்தவ் தாக்கரே சுற்றுலாத்துறைக்கான புதிய இணைய தளத்தை தொடங்கி வைத்தார். மேலும் ஆங்கிலம், பிரெஞ்ச் , இந்தி, மராத்தி, குஜராத்தி, பெங்காலி, தெலுங்கு, உள்ளிட்ட 9 மொழிகளில் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது. விருந்தினர்கள் தான் கடவுள் என்பது நமது கலாசாரம், எனவே அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தால் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை நமது விளம்பர தூதர்களாக மாற்ற முடியும். அவர்கள் மற்றவர்களிடம் மராட்டியம் செல்ல பரிந்துரைப்பார்கள்.

அதனால் நாம் சுற்றுலாத்துறைக்காக தனியாக ஒரு விளம்பர தூதரை நியமிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. பல மாநிலங்கள் மற்றும் நாடுகளில் சுற்றுலா முக்கிய வருவாய் தரும் துறையான மகாராஷ்டிராவில் முன்பு சுற்றுலா துறை புறக்கணிக்கப்பட்டது. ஆனால் இன்று சுற்றுலாவின் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொண்டதால் இப்போது அதிக கவனம் செலுத்தி வருகிறோம். சுற்றுலா துறை வளர்ச்சியை கருத்தில் கொண்டு டெக்கன் ஒடிசி, சொகுசு சுற்றுலா ரெயிலில் மாநில மந்திரிசபை கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் முடிக்கப்படாத சாக்ரடா பேமிலியாக நினைவு சின்னத்தை உதாரணமாக கொண்டு, ஒற்றை பாறையில் செதுக்கப்பட்ட எல்லோரா குகைகளைப்போல ஒரு நவீன குறையை செதுக்க வேண்டிய அவசியம் உள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் சுற்றுலா துறை பெரும் பின்னடைவை சந்தித்தது. இருப்பினும் புதிய கொள்கைகள், திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கியதற்காக மாநில சுற்றலா துறையை நான் பாராட்டுகிறேன் என தெரிவித்தார்.