முதலமைச்சர் வழங்கிய பதக்கங்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர்..!

இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் வரும் 15 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தின் போது டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துவார். அதேபோல், மாநிலங்களில் மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றி உரையாற்றுவது வழக்கம். அந்த வகையில் தமிழ்நாட்டில் கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறகு உரை நிகழ்த்துவார்.

இந்த ஆண்டு முதலமைச்சரின் காவல் பதக்கம் காவல் துறை உயர் அதிகாரிகள் 6 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. வடசென்னை கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் உள்பட 6 காவல் துறையினருக்கு முதலமைச்சர் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.அதாவது, வட சென்னை கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க், கோவை எஸ்.பி பத்ரி நாராயணன், தேனி எஸ்.பி டோங்கரே பிரவீன் உமேஷ், சேலம் ரயில்வே துணை எஸ்.பி குணசேகரன், நாமக்கல் உதவி ஆய்வாளர் முருகன், நாமக்கல் காவலர் ஆர்.குமார் உள்பட 6 பேருக்கு முதலமைச்சர் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டது.

6 காவல் துறையினருக்கும் முதலமைச்சர் காவல் பதக்கங்கள் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதக்கங்கள் மற்றும் வெகுமதி வழங்கினார்.  இதையடுத்து பதக்கம் பெற்ற இருவரும் நேற்று நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்கண்ணனிடம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கிய காவல் பதக்கங்களை காண்பித்து வாழ்த்து மற்றும் பாராட்டு பெற்றனர்.

மம்தா பானர்ஜி: ”அடுத்தாண்டு மோடி தனது வீட்டில்தான் கொடியேற்றுவார்..!”

நாட்டின் 77-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடியும், மாநில தலைநகரங்களில் அந்தந்த மாநிலங்களின் முதல்வர்களும் தேசிய கொடி ஏற்ற உள்ளனர். இதன்படி பிரதமர் நரேந்திர மோடி காலை 7.30 மணி அளவில் டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

அப்போது பேசிய பிரதமர் அடுத்தாண்டு செங்கோட்டியில் சந்திப்போம் என தெரிவித்தார். அடுத்தாண்டு செங்கோட்டியில் சந்திப்போம் என்ற பிரதமரின் பேச்சுக்கு பதில் அளித்துள்ள காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “உங்களது வெற்றியோ தோல்வியோ அது மக்களின் கையில், வாக்காளர்களின் கையில் உள்ளது.

2024-ல் மீண்டும் ஒரு முறை செங்கோட்டையில் கொடியேற்றுவேன் என்று இப்போதே கூறுவது ஆணவம். அடுத்த ஆண்டு பிரதமர் மோடி மீண்டும் ஒருமுறை தேசிய கொடியை ஏற்றுவார். அதை அவர் அவரது வீட்டில் செய்வார்” என்று தெரிவித்துள்ளார். நாட்டின் 77-வது சுதந்திர தினத்தில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி உரையாற்றிய போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொள்ளவில்லை. அவருக்காக ஒதுக்கப்பட்டிருந்த இருக்கை காலியாக இருந்தது.

இதுகுறித்து கருத்து,” “எனக்கு கண் தொடர்பான சில பிரச்சினைகள் இருந்தது. நெறிமுறைகளின்படி நான் 9.20 மணிக்கு என்னுடைய வீட்டில் மூவர்ணக்கொடி ஏற்றவேண்டும். அதன் பின்னர் காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்து அங்கும் தேசிய கொடி ஏற்றவேண்டும். அதனால் என்னால் அங்கு செங்கோட்டைக்கு செல்ல முடியவில்லை. அங்கு பாதுகாப்பு கெடுபிடி வேறு இருந்தது. பிரதமர் வெளியேறுவதுக்கு முன்பாக அவர்கள் மற்றவர்களை வெளியேற அனுமதிப்பதில்லை.

அதனால் என்னால் நேரத்துக்கு இங்கு வந்திருக்க முடியாது. நேரமின்மை மற்றும் பாதுகாப்பு காரணங்களால் நான் அங்கு செல்லாமல் இருப்பது நல்லது என்று நினைத்தேன்” என்று கார்கே தெரிவித்திருந்தார். முன்னதாக மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி திங்கள் கிழமை ஏற்பாடு செய்திருந்த சுதந்திர தினத்துக்கு முந்தைய நாள் நிகழ்வில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், “பிரதமர் மோடிஜி, செவ்வாய்க்கிழமை டெல்லி செங்கோட்டையில் ஆற்றும் சுதந்திர தின உரையே, பிரதமராக அவர் ஆற்றவிருக்கும் கடைசி உரை. ‘இண்டியா’ கூட்டணி விரைவில் களத்தில் இறங்கி விளையாடும். அந்தக் கூட்டணி நாடு முழுவதும் பாஜகவை வீழ்த்தும். மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பாஜகவை உறுதியாக தோற்கடிக்கும்” என்று தெரிவித்தார்.

அரவிந்த் கேஜ்ரிவால்: “வெறும் பேச்சுக்களால் மட்டும் இந்தியா உலகின் குருவாக மாறிட முடியாது..!”

77-வது சுதந்திர தின விழாவில் வடக்கு டெல்லியில் உள்ள சத்ரசால் மைதானத்தில் முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் கலந்து கொண்டார். டெல்லி மக்களுக்கும் நாட்டு மக்களுக்கும் வாழ்த்துகள் தெரிவித்த அவர், சுதந்திரப்போராட்ட வீரரகள், ராணுவ வீரர்கள், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், “நான் இன்று சற்று சோகமாக இருக்கிறேன். மணிப்பூர் எரிந்து கொண்டு இருக்கிறது. அங்கு ஒரு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த மக்களை கொல்கின்றனர். ஹரியாணாவிலும் ஒரு பிரிவைச் சேர்ந்த மக்கள், மற்றொரு பிரிவினருடன் சண்டையிடுகின்றனர்.

நமக்குள் நாம் சண்டையிட்டுக்கொண்டால் நம்மால் எப்படி விஸ்வகுருவாக மாற முடியும்? நாம் விஸ்வகுருவாகி, முதல் நாடாக மாறவேண்டுமென்றால் நாம் அனைவரும் ஒரு குடும்பம் போல வாழவேண்டும். வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த 150 மாணவர்கள் டெல்லி அரசால் நடத்தப்படும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

நாட்டிலுள்ள அரசுப்பள்ளிகளின் நிலை கவலை அளிப்பதாக உள்ளது. நாட்டிலுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைக்காத பட்சத்தில் நாடு விஸ்வகுருவாக மாறமுடியாது. ஐந்து ஆண்டுகளுக்குள் நாட்டிலுள்ள 10 லட்சம் அரசுப்பள்ளிகளை மேம்படுத்த ரூ.6 லட்சம் கோடி தேவைப்படும் என்று நான் கணக்கிட்டுள்ளேன்.

ஆண்டொன்றுக்கு ரூ.1.20 லட்சம் கோடி என்பது இந்தியா போன்ற நாட்டிக்கு பெரிய விஷயம் இல்லை. நாட்டிலுள்ள 17 கோடி குழந்தைகளுக்கு சிறந்த கல்வியைக் கொடுக்க ரூ. 7.5 லட்சம் கோடி தேவைப்படும். தற்போது அனைத்து அரசுகளும் இந்தத் தொகையைச் செலவழித்து வருகின்றன என தெரிவித்தார்.

செங்கோட்டையில் 77-வது சுதந்திர தின விழாவில் 10,000 காவல்துறை பாதுகாப்பு

நாட்டின் 77-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடியும், மாநில தலைநகரங்களில் அந்தந்த மாநிலங்களின் முதல்வர்களும் தேசிய கொடி ஏற்ற உள்ளனர்.

இதன்படி பிரதமர் நரேந்திர மோடி காலை 7.30 மணி அளவில் டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். விழாவையொட்டி செங்கோட்டையில் சிறப்பு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக வண்ண மலர்களால் ஜி-20 லோகா அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டெல்லி காவல்துறையினர் கூறுகையில், கரோனா கட்டுப்பாடுகள் இல்லாமல் இந்த ஆண்டு சுதந்திர தின விழா நடைபெறுகிறது.

இதன்காரணமாக பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். என்எஸ்ஜி படை, எஸ்பிஜி படை,மத்திய பாதுகாப்பு படைகள், டெல்லி காவல்துறை இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். செங்கோட்டையை சுற்றி 200 மீட்டர் தொலைவு வளாகத்தில் ஒட்டுமொத்தமாக 10,000 பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும் செங்கோட்டை வளாகத்தில் அதிநவீன கருவிகள் மூலம் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். முக்கிய இடங்களில் 1,000 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. உயரமான கட்டிடங்களில் குறி தவறாமல் சுடும் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர். ட்ரோன்களை கண்டறியும் ரேடார் பொருத்தப்பட்டிருக்கிறது என தெரிவித்தன.

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்ட 3 அறிவிப்பு…!

இந்தியாவின் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் காலை 9 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றினார். பின்னர் மக்களுக்கு உரை நிகழ்த்தி பேசினார். இதில், ஆட்டோ ஓட்டும் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு 1லட்சம் மானியம் வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார். மேலும் 500 மகளிர் பயன்பெறும் வகையிலும், 3ம் பாலினத்தவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

ஜொமோட்டோ, ஸ்விங்கி, ஓலா போன்ற சர்வீஸ் துறையில் பணிபுரிபவர்களுக்கு என விரைவுச் சேவை நல வாரியம் அமைக்கப்படுகிறது. அவர்களை வாழ்க்கை மற்றும் பணிகள் முக்கியமானது. அவர்களை காக்கும் விதமாக இந்த நல வாரியம் அமைக்கப்படும். விடுதலை போராட்ட வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 11 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

77-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி, கொடி வணக்கம் செலுத்தினார். இதனையடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், பட்டொளி வீசிப் பறக்கும் மூவர்ணக் கொடிக்கு முதல் வணக்கம். அதன் நிழலில் வாழும் நாட்டு மக்கள் அனைவருக்கும் நல் வணக்கம்.

இந்திய ஒன்றியத்தின் முக்கிய அங்கம் நம் தமிழ்நாடு. மூத்த மொழியாம் தமிழை தாய்மொழியாகக் கொண்ட நம் தமிழ்நாடு, இடைக்காலத்தில் சென்னை மாகாணம், மெட்ராஸ் பிரசிடென்சி, மெட்ராஸ் மாகாணம், மெட்ராஸ் என அழைக்கப்பட்டது. திமுக ஆட்சி அமைந்த பிறகு அண்ணா முதலமைச்சர் ஆன பிறகுதான் 1967, ஜூலை 18-ம் நாள் தமிழ்நாடு என பெயரிடப்பட்டது. ஒரே ஒரு சங்கரலிங்கனார்தான் உயிரிழந்துள்ளார் என்று நினைப்பீர்களேயானால், 5 உயிர்களைத் தர தயாராக இருக்கிறோம் என தமிழக சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர் கருணாநிதி. சென்னை மாகாணத்தின் பிற மொழி பேசும் எல்லா பகுதிகளும் தனித்தனி மாநிலங்களாக பிரிந்த பிறகு தமிழ்நாட்டிற்கு ஏன் தமிழ்நாடு என பெயரிடக்கூடாது என கேட்டவர் பெரியார்.

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோட்டை கொத்தளத்தில் உள்ள 119 அடி உயர கொடிக்கம்பத்தில் 3-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றுவதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இதற்கான வாய்ப்பை அளித்த நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில முதலமைச்சர்களுக்கு சுதந்திர நாளில் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் முதல்வராக இருந்த கருணாநிதி.