Rahul gandhi: நரேந்திர மோடியின் ஆட்சியில் ‘ரயில் பயணம்’ தண்டனையாகிவிட்டது..!

இந்திய மக்கள் ரயில் பயணத்தின்போது படும் இன்னல்களை ராகுல் காந்தி தனது “எக்ஸ்” பக்கத்தில், சாமானியர்களின் ரயில்களில் இருந்து பொதுப் பெட்டிகளைக் குறைத்து ‘எலைட் ரயில்களை’ மட்டுமே ஊக்குவிக்கும் மோடி அரசால் ஒவ்வொரு வகைப் பயணிகளும் துன்புறுத்தப்படுகிறார்கள்.

உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளுடன் கூட மக்கள் தங்கள் இருக்கைகளில் நிம்மதியாக உட்கார முடியாமல் தரையிலும், கழிப்பறையிலும் மறைந்திருந்து பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

மோடி அரசாங்கம் ரயில்வேயை தனது கொள்கைகளால் பலவீனப்படுத்துவதன் மூலம் தன்னை ‘திறமையற்றவர்’ என்று நிரூபிக்க விரும்புகிறது, இதனால் அதை தனது நண்பர்களுக்கு விற்க ஒரு சாக்கு கிடைக்கும்.

சாமானியர்களின் எண்ணிக்கையை காப்பாற்ற வேண்டுமானால், ரயில்வேயை சீரழிக்கும் மோடி அரசை அகற்ற வேண்டும் என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

ரயில் பயணியிடம் காட்டு மிராண்டியாக நடந்துகொண்ட பயணச்சீட்டு பரிசோதகர் பணியிடைநீக்கம்

உத்தரப்பிரசேத்தில் பரவ்னி லக்னோ எக்ஸ்பிரஸ் ரயில் கோண்டா, பாரபங்கி இடையே நேற்று சென்று கொண்டிருந்த போது, பிரகாஷ் என்கிற துணை தலைமை பயணச்சீட்டு பரிசோதகர் பயணிகளிடம் டிக்கெட்டை பரிசோதித்து கொண்டிருந்தார். அப்போது, பயணி ஒருவர் அந்த வகுப்பில் பயணிப்பதற்கான முறையான டிக்கெட் இன்றி பயணம் செய்வதை கண்டறிந்த டி.டி.இ, அந்த பயணியை ‘பளார், பளார்’ என சரமாரியாக அறைந்து கடுமையாக திட்டினார்.

அதோடு பயணி அணிந்திருந்த துண்டை பிடித்து இழுத்துச் செல்ல முயன்றார். இதை, மற்றொரு பயணி ஒருவர் செல்போனில் வீடியோ எடுப்பதை பார்த்த டிடிஇ, செல்போனை பறிக்க முயன்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. பயணியை அடிக்கும் அதிகாரம் டிடிஇக்கு இருக்கிறதா என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பிய நிலையில், டி.டி.இ பிரகாஷ் உடனடியாக பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.