K.S. அழகிரி விளக்கம்: தந்தை பெரியார் பேசாத எதையும் பொன்முடி பேசவில்லை..!

தந்தை பெரியார் பேசாத எதையும் பொன்முடி பேசவில்லை திராவிடர் கழக கூட்டத்தில் தான் அப்படி பேசி இருக்கிறார் என தமிழக காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் K.S. அழகிரி தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நேற்று தமிழக காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் K.S. அழகிரி தனது குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார். பின்னர், K.S. அழகிரி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது, பாஜக அரசு தவறான அரசியல் பாதையில் நாட்டை அழைத்துச் செல்கிறது. பாஜக அரசின் கொள்கை மற்றும் சித்தாந்தம் உச்சநீதிமன்ற நீதிபதிகளை மிரட்டுவதாக இருக்கிறது. ஆளுநருக்கு எதிரான வழக்கில் சட்டத்தின் வழியில் நின்று வெற்றிப் பெற்று வேந்தராகி இருப்பவர் முதல்வர் ஸ்டாலின் மட்டும் தான். ஆனால், அதை ஆளுநரால் பொறுக்க முடியவில்லை. அதிமுக – பாஜக கூட்டணி வலிமையற்ற கூட்டணி. எடப்பாடி பழனிசாமியின் முடிவால் அதிமுக சிதைந்து கொண்டு இருக்கிறது.

ஒரு கூட்டணி அமைத்தால் எழுச்சி வரும். ஆனால், அந்த கூட்டணியில் அப்படி இல்லை. இந்த கூட்டணியால் அதிமுக தொண்டர்கள் கவலையில் உள்ளனர். இந்த கூட்டணியை அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை. திமுக ஆட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளது. மீண்டும் திமுக கூட்டணியே வெற்றி பெறும். 2026 தேர்தலில் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தி அதிக இடங்களை கேட்போம். பெண்கள் குறித்து அவதூறாக அமைச்சர் பொன்முடி பேசியது தவறு தான். ஆனால், பெரியார் பேசாததை எதையும் அமைச்சர் பொன்முடி பேசவில்லை.

அரசு நிகழ்ச்சியில் பொன்முடி அதுபோல பேசவில்லை. திராவிடர் கழக கூட்டத்தில் தான் அப்படி பேசி இருக்கிறார். காங்கிரஸ் கட்சி அவரது தவறை நியாயப்படுத்த விரும்பவில்லை. அவர் அப்படி பேசியதற்காக தண்டிக்கப்பட்டு விட்டார். ஒரு தவறுக்கு ஒரு தண்டனை தான் கொடுக்க வேண்டும். தேர்தல் நெருங்குவதால் மற்ற கட்சியினர் அமைச்சர் பொன்முடியை குறிவைத்துள்ளனர் என K.S. அழகிரி தெரிவித்தார்.

நாஞ்சில் சம்பத்: அண்ணாமலை சாகும் வரை நிச்சயம் காலில் செருப்பு அணியவே முடியாது..!

திமுக ஆட்சியை அகற்றும் வரை காலில் செருப்பே அணியமாட்டேன் என சபதம் எடுத்திருக்கிறார் அண்ணாமலை. அவர் சாகும் வரை நிச்சயம் காலில் செருப்பு அணியவே முடியாது, திமுக ஆட்சியை அகற்றவே முடியாது என திராவிடர் இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

கோயம்புத்தூரில் நடைபெற்ற பெரியார் குறித்த கருத்தரங்கில் நாஞ்சில் சம்பத் பேசினார். அப்போது, இச்சை வந்தால் தாய், மகளுடன் உறவு வைத்துக் கொள்ளலாம் என பெரியார் பேசியதாக சீமான் பேசினார். அப்போதே சமூக வலைதளத்தில், தாம் செய்வதை எல்லாம் பெரியார் சொன்னதாக பேசுகிறார் சீமான் என பதிவிட்டிருந்தேன்.

தந்தை பெரியாரை இழிவாகப் பேசும் சீமானை ஏன் திராவிட மாடல் அரசு கைது செய்யாமல் இருக்கிறது என என்னிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, பைத்தியங்களை கைது செய்ய சட்டத்தில் இடம் இல்லை என்று பதில் தந்தேன். அத்தகைய பைத்தியத்தை என்ன செய்ய வேண்டும் என்பதை உறவினர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். சீமான் பேசுவதைப் போல தடித்தனமான, தாறுமாறான விமர்சனங்களை பெரியாரின் சீடர்கள் உள்வாங்கி இருக்கிறார்கள்; எதிர்கொண்டு இருக்கிறார்கள்.

பெரியாரை கொச்சைப்படுத்துவதற்கு பாஜக ஒரு வேலைத் திட்டம் வைத்துள்ளது. அந்த வேலைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான குறைந்த கூலிக்கான நபர்தான் சீமான். சீமானுக்கு மேடை போட்டுக் கொடுத்த பாவிகள் இருவர்; ஒருவர் கோவை ராமகிருட்டிணன் மற்றொருவர் கொளத்தூர் மணி. விடுதலைப் புலிகளிடமே மதுவை வாங்கி வர சொன்ன சீமான், தன்னையே விற்பனை செய்யக் கூடியவர்தான்; ஆனால் தமிழா! நீ உன்னை விற்காதே என மேடைகளில் பேசுவார் சீமான்.

மத்திய பாஜக அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் ஏன் தமிழ்நாடு என்ற பெயர் இடம் பெறவில்லை? ஏன் தமிழ்நாட்டுக்கு எந்த திட்டமும் தரவில்லை? எங்கள் தருகிற நிதியில் எங்களுக்கான பங்கை ஏன் தரவில்லை? தேர்தல் வருகிறது என்பதற்காக பீகாருக்கு சலுகை காட்டும் மத்திய அரசு ஏன் தமிழ்நாட்டுக்கு நிதி தர மறுக்கிறீர்கள்? திமுக ஆட்சியை அகற்றும் வரை காலில் செருப்பே அணியமாட்டேன் என சபதம் எடுத்திருக்கிறார் அண்ணாமலை. அவர் சாகும் வரை நிச்சயம் காலில் செருப்பு அணியவே முடியாது, திமுக ஆட்சியை அகற்றவே முடியாது என நாஞ்சில் சம்பத் பேசினார்.

நாஞ்சில் சம்பத்: சீமான் சாக்கடை ஜென்மம்.. பைத்தியத்தை கைது செய்ய சட்டத்தில் இடமில்லை..!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை, சாக்கடை ஜென்மம் என்றும் பைத்தியங்களை கைது செய்ய சட்டத்தில் இடமில்லை என்றும் திராவிடர் இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கடுமையாக விமர்சித்துள்ளார். கோயம்புத்தூரில் நடைபெற்ற பெரியார் குறித்த கருத்தரங்கில் நாஞ்சில் சம்பத் பேசினார்.

அப்போது, இச்சை வந்தால் தாய், மகளுடன் உறவு வைத்துக் கொள்ளலாம் என பெரியார் பேசியதாக சீமான் பேசினார். அப்போதே சமூக வலைதளத்தில், தாம் செய்வதை எல்லாம் பெரியார் சொன்னதாக பேசுகிறார் சீமான் என பதிவிட்டிருந்தேன்.

தந்தை பெரியாரை இழிவாகப் பேசும் சீமானை ஏன் திராவிட மாடல் அரசு கைது செய்யாமல் இருக்கிறது என என்னிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, பைத்தியங்களை கைது செய்ய சட்டத்தில் இடம் இல்லை என்று பதில் தந்தேன். அத்தகைய பைத்தியத்தை என்ன செய்ய வேண்டும் என்பதை உறவினர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். சீமான் பேசுவதைப் போல தடித்தனமான, தாறுமாறான விமர்சனங்களை பெரியாரின் சீடர்கள் உள்வாங்கி இருக்கிறார்கள்; எதிர்கொண்டு இருக்கிறார்கள்.

பெரியாரை கொச்சைப்படுத்துவதற்கு பாஜக ஒரு வேலைத் திட்டம் வைத்துள்ளது. அந்த வேலைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான குறைந்த கூலிக்கான நபர்தான் சீமான். சீமானுக்கு மேடை போட்டுக் கொடுத்த பாவிகள் இருவர்; ஒருவர் கோவை ராமகிருட்டிணன் மற்றொருவர் கொளத்தூர் மணி. விடுதலைப் புலிகளிடமே மதுவை வாங்கி வர சொன்ன சீமான், தன்னையே விற்பனை செய்யக் கூடியவர்தான்; ஆனால் தமிழா! நீ உன்னை விற்காதே என மேடைகளில் பேசுவார் சீமான்.

மத்திய பாஜக அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் ஏன் தமிழ்நாடு என்ற பெயர் இடம் பெறவில்லை? ஏன் தமிழ்நாட்டுக்கு எந்த திட்டமும் தரவில்லை? எங்கள் தருகிற நிதியில் எங்களுக்கான பங்கை ஏன் தரவில்லை? தேர்தல் வருகிறது என்பதற்காக பீகாருக்கு சலுகை காட்டும் மத்திய அரசு ஏன் தமிழ்நாட்டுக்கு நிதி தர மறுக்கிறீர்கள்? திமுக ஆட்சியை அகற்றும் வரை காலில் செருப்பே அணியமாட்டேன் என சபதம் எடுத்திருக்கிறார் அண்ணாமலை. அவர் சாகும் வரை நிச்சயம் காலில் செருப்பு அணியவே முடியாது; திமுக ஆட்சியை அகற்றவே முடியாது என நாஞ்சில் சம்பத் பேசினார்.

சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு: “பெரியார் மண் அல்ல.. எங்களுக்கு பெரியாரே மண்தான்..!”

திரும்பத் திரும்ப சொல்கிறேன்.. இதனை பெரியார் மண்.. பெரியார் மண் என்று சொன்னால் கொலை வெறியாகிவிடும், பெரியார் மண் அல்ல.. எங்களுக்கு பெரியாரே மண்தான்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து புதுக்கோட்டையில் செய்தியாளர்களின் கேள்விக்கு சீமான் பதிலளித்தார். அப்போது, “திராவிடா உனக்கு ஒரு தலைவர் பெரியார் மட்டும்தான். ஆனால் தமிழர்கள் எங்களுக்கு எத்தனையோ தலைவர்கள் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் முதல் இந்தி எதிர்ப்பு போரை நடத்தியது பெரியார் என பேசுகிற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வரலாற்றை தலையில் அடித்துக் கொண்டு சிரித்து கொண்டுதான் போக வேண்டும். முதன்முதலில் தமிழ்நாட்டில் இந்தி பள்ளியைத் தொடங்கியதே உங்கள் பெரியார்தான்.

இந்தி எதிர்ப்பு போரில் தமிழர்கள் தீக்குளித்த போது கொலைகாரர்களாக பார்த்தவர் பெரியார்தான். கடன் தொல்லையால் கீழப்பழூர் சின்னசாமி தற்கொலை செய்ததாக இழிவுபடுத்தியது பெரியார்தான். இந்திக்கு எதிராக போராடுகிற கருங்காலிகளை பெட்ரோல், டீசல் கொண்டு கொழுத்துங்க, வெட்டுங்க என்று சொன்னவர்தான் பெரியார். எல்லாரையும் படிக்க வைத்த பெரியார், உங்களைப் படிக்க வைக்காமல் விட்டுவிட்டார் வெரி சாரி.

பிரபாகரன் ஒரு தீவிரவாதி.. பயங்கரவாதி.. தனித் தமிழீழம் தீர்வு அல்ல என்று சொல்கிற கட்சிதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இலங்கையில் தமிழினத்தை அழித்தது காங்கிரஸ், துணை நின்றது திமுக. அப்போது ஆதரித்தது கம்யூனிஸ்ட் கட்சி. உலகத் தமிழினம் நெடுமாறனைத்தான் மன்னிக்காது. தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்.. இப்போதுதான் பேசினேன்.. மகள் துவாரகா வந்து கொண்டிருக்கிறார் என்று சொன்ன நெடுமாறனை உலகத் தமிழ் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். எனக்கு எந்த பதற்றமும் இல்லை.. எல்லோரும்தான் என்னை பார்த்து பதற்றம் அடைகிறார்கள்.

வீரமிக்க ஆண் மக்கள், ஆகச் சிறந்த தலைவர்கள் பெரியாரின் பிராமண எதிர்ப்பை ஏற்பதாக இருந்தால், ஏன் ஒரு பிராமண பெண்ணின் தலைமையை ஏற்றீர்கள். அம்மா, அம்மா என்று காலில் விழுந்து கும்பிட்டீர்கள்! உங்கள் பெரியார் சொன்னதை திராவிட கட்சிகள் செய்ததா?. தாழ்த்தப்பட்ட அருந்ததியர் ஒருவரை சபாநாயகர் ஆக்கியது, பெரியார் எதிர்த்த அந்தப் பார்ப்பணிய பெண் தான். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை சபாநாயகராக நிறுத்தி அனைவரையும் எழுந்து நிற்க வைத்தது பிராமண பெண்தான். பெரியார் செய்த சமூக சீர்திருத்தத்தை, பெண்ணிய உரிமையை, சாதிய ஒழிப்பை, சமூக நீதியை, ஒரே ஒரு முறை மேடைபோட்டு, பட்டியலிட்டு பேசுங்கள்.

பெரியாரை ஆதரித்து பேசினேன்தான். நான் அதனை இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், தற்போது தலை வலிக்கிறது மாத்திரை போடுகின்றேன். பெரியாரை நான் புள்ளி அளவிற்குதான் விமர்சித்து பேசியுள்ளேன். பெரியாரை எங்களை விட அதிகமாக எதிர்த்து பேசியது பேரறிஞர் அண்ணாவும், கலைஞரும் தான்.

திமுக ஏழாவது முறையாக ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை. உண்மையையும் நேர்மையும் எடுத்துக்கொண்டு வலுவான கருத்து வைக்கும் போது சில சலசலப்புகள் ஏற்படத்தான் செய்யும். ஏற்கெனவே உள்ள ஒரு கோட்பாட்டையும் மரபையும் தகர்த்து, புதிய ஒரு கோட்பாட்டை கட்டமைப்பை கட்டமைக்க நினைக்கும் போது அதை ஏற்பார்கள், எதிர்ப்பார்கள் ஆதரிப்பார்கள், அருவருப்பார்கள், விமர்சிப்பார்கள் என்றெல்லாம் அச்சப்படக் கூடாது. அதை துணிந்து செய்கிறவனுக்குத்தான் ஒரு போர் வீரனுக்கு உள்ள துணிவும் வீரமும் தேவைப்படுகிறது. அப்படி நின்றவன்தான் உலகெங்கிலும் உள்ள மாறுதல்களை கொண்டு வந்திருக்கின்றான். இதான் வரலாறு.

தற்போது பெரியவர்களுக்குள் சண்டை நடக்கிறது. விஜயை இப்போது ஏன் இழுக்கிறீர்கள்? மெயின் ரவுடிகள் மோதும் போது விஜயை ஏன் இழுக்கிறீர்கள்?. திரும்பத் திரும்ப சொல்கிறேன்.. இதனை பெரியார் மண்.. பெரியார் மண் என்று சொன்னால் கொலை வெறியாகிவிடும். இது சேர சோழ பாண்டியர் மண்.. பூலித்தேவர் மண்.. வேலுநாச்சியார் மண்.. முத்துராமலிங்க தேவர் மண். காமராஜர் மண். இது என் மண்.. தமிழ் மண்.. பெரியார் மண் அல்ல.. எங்களுக்கு பெரியாரே மண்தான்” என பேசி மீண்டும் சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளார்.

பழ.நெடுமாறன்: பெரியாரின் கொள்கையான சாதி ஒழிப்பினை செயல்படுத்தியவர் பிரபாகரன்..!

பெரியாரின் முக்கிய கொள்கைகளில் ஒன்றான சாதி ஒழிப்பினை செயல்படுத்திய பெருமை பிரபாகரனுக்கு உண்டு, விடுதலைப்புலிகள் திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால், சாதி மறுப்பு திருமணம் அல்லது விதவைத் திருமணம் ஆகிய இரண்டில் ஒன்றைப் பின்பற்றவேண்டும் என ஆணையிட்டார் என பழ.நெடுமாறன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக பழ.நெடுமாறன் வெளியிட்ட அறிக்கையில், உலக தமிழர்களின் இருபெரும் ஆளுமைகளான பெரியாரையும், பிரபாகரனையும் ஒருவருக்கெதிராக மற்றொருவரை நிறுத்த செய்யப்படும் முயற்சி குறுகிய அரசியல் ஆதாய நோக்கத்தோடு செய்யப்படுவதாகும். இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். பெரியார் பெண்ணுரிமைக்காக தொடர்ந்து போராடியவர்.

அவரது இக்கொள்கையை நிறைவேற்றும் வகையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பெண்களையும் சேர்த்து, ஆயுத பயிற்சி அளித்து களத்தில் போராட வைத்த பெருமை பிரபாகரனுக்கு மட்டுமே உண்டு. வேறு எந்த நாட்டின் விடுதலை இயக்கத்திலும் பெண் போராளிகள் சேர்க்கப்பட்டதில்லை.

2009-ஆம் ஆண்டு இறுதிப் போருக்கு முன்பாக தமிழீழத்தின் பெரும் பகுதி விடுதலைப்புலிகளின் ஆட்சிக் கட்டுப்பாட்டின்கீழ் இருந்தது. அப்போது பெரியாரின் முக்கிய கொள்கைகளில் ஒன்றான சாதி ஒழிப்பினை செயல்படுத்திய பெருமை பிரபாகரனுக்கு உண்டு. விடுதலைப்புலிகள் திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால், சாதி மறுப்பு திருமணம் அல்லது விதவைத் திருமணம் ஆகிய இரண்டில் ஒன்றைப் பின்பற்றவேண்டும் என ஆணையிட்டார். அவரது திருமணம் முதல் விடுதலைப்புலிகள் பலரின் திருமணங்கள் இத்தகைய புரட்சிகர திருமணங்களாகவே அமைந்தன.

பெரியார் உயிரோடு இருந்திருந்தால், தனது கோட்பாடுகளை செயல்படுத்திய பேரன் பிரபாகரனை சந்தித்து பாராட்ட நேரில் தமிழீழம் சென்றிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில், பெரியாரைப் பற்றியோ, பிரபாகரனைப் பற்றியோ எத்தகைய புரிந்துணர்வும் இல்லாமல், அவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுபவர்கள் தங்களின் தகாத போக்கினை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

சாதி, சமய வேறுபாடுகளால் பிளவுபட்டுக் கிடக்கும் தமிழர்களை ஒன்றுபடுத்தவும், பகுத்தறிவு சமதர்ம பாதையில் தொடர்ந்து நடக்கவும் அரும்பாடுபட்ட இரு தலைவர்களையும் கொச்சைப்படுத்தும் போக்கில் நடந்துகொள்பவர்களை தமிழ்கூறும் நல்லுலகம் ஒருபோதும் மன்னிக்காது என பழ.நெடுமாறன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

திருமுருகன் காந்தி: “தமிழ்நாட்டின் சாவர்க்கர் சீமான்”

சீமான் எந்த புத்தகமும் படிக்காமல் வாய்க்கு வந்ததை உளறுகிறார். இவர்களுக்கு எல்லாம் இதைப் பற்றி எந்தவொரு அக்கறையும் கிடையாது. தமிழ்நாட்டின் சாவர்க்கர் என திருமுருகன் காந்தி மிக காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

கடந்த ஜனவரி 8 -ஆம் தேதி கடலூரில் பத்திரிகையாளர்களை சந்தித்த சீமான், பெரியாரின் பெண்ணியம் சார்ந்த கருத்துகள் தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சீமானின் பேச்சுக்கு எதிராக தமிழ்தேசிய, பெரியாரிய இயக்கங்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட அமைப்புகள் நீலாங்கரையிலுள்ள சீமான் வீட்டை முற்றுகையிட முயன்று கைதாகி இருக்கின்றனர்.

இந்த முற்றுகையை முன்னிட்டு சீமானின் வீட்டை சுற்றி நாம் தமிழர் தொண்டர்கள் உருட்டுக்கட்டையோடு நிற்கும் சம்பவமும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. இதுகுறித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, “பெரியார் குறித்து அவதூறாக பத்திரிகையாளர் முன்புதான் பேசினார். அப்போது, அவர்கள் முன்பே பெரியார் தொடர்பான ஆதாரத்தைக் காட்ட வேண்டியதுதானே. டயலாக் பேசுவதற்கு மட்டும் பத்திரிகையாளர் சந்திப்பு. ஆனால் மன்னிப்பு கேட்பது மட்டும் நீதிமன்றத்தில். பொது வெளியில் கேட்டால் சீமான் பதில் சொல்லமாட்டாரா?

பதில் சொன்னால் என்ன பிரச்னை ஆகிவிடும். நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் ஆவணத்தை பொது வெளியில் வெளியிடட்டும். அது என்ன ரகசிய ஆவணமா. ரகசியமாக சீமானே தயாரித்து வைத்திருக்கிறாரா. நீங்கள்தான் வீழ்ந்து விடாத வீரன், மண்டியிடாத மானம் என்று டயலாக் பேசுகிறீர்கள். அப்போது தைரியமாக ஆவணத்தை பொது வெளியில் வெளியிடுங்கள்.

பெரியார் குறித்த அவதூறுக்கான எந்த ஆதாரமும் இல்லை. நாங்கள் அந்தப் புத்தகத்தை படித்துள்ளோம். சீமான் கூறும் ஆதாரம் எல்லாம் பாஜகவினர் எழுதிய புத்தகம். சீமானுக்கு புத்தகம் படிக்கும் பழக்கமே இல்லை. அண்ணாமலை 20 ஆயிரம் புத்தகம் என்று கதை விடுகிறார். சீமான் எந்த புத்தகமும் படிக்காமல் வாய்க்கு வந்ததை உளறுகிறார். இவர்களுக்கு எல்லாம் இதைப் பற்றி எந்தவொரு அக்கறையும் கிடையாது. தமிழ்நாட்டின் சாவர்க்கர் சீமான்” என காட்டமாக திருமுருகன் காந்தி விமர்சனம் செய்தார்.

திருமுருகன் காந்தி: சீமான் டயலாக் பேசுவதற்கு பத்திரிகையாளர் சந்திப்பு…!

சீமான் டயலாக் பேசுவதற்கு மட்டும் பத்திரிகையாளர் சந்திப்பு. ஆனால் மன்னிப்பு கேட்பது மட்டும் நீதிமன்றமா என திருமுருகன் காந்தி மிக காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். கடந்த ஜனவரி 8 -ஆம் தேதி கடலூரில் பத்திரிகையாளர்களை சந்தித்த சீமான், பெரியாரின் பெண்ணியம் சார்ந்த கருத்துகள் தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சீமானின் பேச்சுக்கு எதிராக தமிழ்தேசிய, பெரியாரிய இயக்கங்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட அமைப்புகள் நீலாங்கரையிலுள்ள சீமான் வீட்டை முற்றுகையிட முயன்று கைதாகி இருக்கின்றனர்.

இந்த முற்றுகையை முன்னிட்டு சீமானின் வீட்டை சுற்றி நாம் தமிழர் தொண்டர்கள் உருட்டுக்கட்டையோடு நிற்கும் சம்பவமும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. இதுகுறித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, “பெரியார் குறித்து அவதூறாக பத்திரிகையாளர் முன்புதான் பேசினார். அப்போது, அவர்கள் முன்பே பெரியார் தொடர்பான ஆதாரத்தைக் காட்ட வேண்டியதுதானே. டயலாக் பேசுவதற்கு மட்டும் பத்திரிகையாளர் சந்திப்பு. ஆனால் மன்னிப்பு கேட்பது மட்டும் நீதிமன்றத்தில். பொது வெளியில் கேட்டால் சீமான் பதில் சொல்லமாட்டாரா?

பதில் சொன்னால் என்ன பிரச்னை ஆகிவிடும். நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் ஆவணத்தை பொது வெளியில் வெளியிடட்டும். அது என்ன ரகசிய ஆவணமா. ரகசியமாக சீமானே தயாரித்து வைத்திருக்கிறாரா. நீங்கள்தான் வீழ்ந்து விடாத வீரன், மண்டியிடாத மானம் என்று டயலாக் பேசுகிறீர்கள். அப்போது தைரியமாக ஆவணத்தை பொது வெளியில் வெளியிடுங்கள்.

பெரியார் குறித்த அவதூறுக்கான எந்த ஆதாரமும் இல்லை. நாங்கள் அந்தப் புத்தகத்தை படித்துள்ளோம். சீமான் கூறும் ஆதாரம் எல்லாம் பாஜகவினர் எழுதிய புத்தகம். சீமானுக்கு புத்தகம் படிக்கும் பழக்கமே இல்லை. அண்ணாமலை 20 ஆயிரம் புத்தகம் என்று கதை விடுகிறார். சீமான் எந்த புத்தகமும் படிக்காமல் வாய்க்கு வந்ததை உளறுகிறார். இவர்களுக்கு எல்லாம் இதைப் பற்றி எந்தவொரு அக்கறையும் கிடையாது. தமிழ்நாட்டின் சாவர்க்கர் சீமான்” என்று காட்டமாகப் பேசியிருக்கிறார்.

மு.க.ஸ்டாலின்: “என்னை செயல்பட வைப்பது என்னுடைய எதிரிகள்” என தந்தை பெரியார் சொல்வார்..!

தந்தை பெரியார் அடிக்கடி ஒன்றைச் சொல்வார், “என்னை செயல்பட வைப்பது, என்னுடைய தோழர்கள் அல்ல; என்னுடைய எதிரிகள்” என்று சொல்வார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னையில் திமுக சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று நடைபெற்றது.

இந்த மாநாட்டில் கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “இந்த மாநாட்டின் முக்கியமான நிகழ்ச்சியாக, மாநிலங்களவை உறுப்பினரும், மத்திய முன்னாள் அமைச்சருமான கபில் சிபல், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி – மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் ஆகியோரைக் கொண்ட, “ஒரே நாடு ஒரு தேர்தல்” என்ற கலந்துரையாடல் ஏற்பாடு செய்து, அவர்களும் தங்களுடைய வாதங்களை அழுத்தமாக வைத்திருக்கிறார்கள். இன்றைய காலக்கட்டத்தில் மிகத் தேவையான உரையாடல் இது.

இந்த மாநாடு வாயிலாக, நான் அனைவருக்கும் சொல்லிக்கொள்ள விரும்புவது, மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பாஜகவை பொறுத்த வரைக்கும், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே உடை, ஒரே உணவு என்று ஒற்றைப் பண்பாட்டை நோக்கி நாட்டை நகர்த்த பார்க்கிறது. அதற்காகத்தான் ஒரே தேர்தல் என்று கிளம்பி இருக்கிறார்கள். ஒரே அரசு என்ற நிலையை உருவாக்க மாநிலங்களை அழிக்கப் பார்க்கிறார்கள்.

பாஜகவைப் பொறுத்தவரைக்கும் பெரும்பாலும் குறுகிய கால செயல் திட்டமாக இருக்காது. நீண்டகால செயல்திட்டமாகத்தான் இருக்கும். இப்போது நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்று சொல்பவர்கள், காலப்போக்கில் நாட்டுக்கே ஒரே தேர்தல்தான் என்று சொல்லும் நிலைமையை உருவாக்க நினைக்கிறார்கள். இது ஒற்றையாட்சிக்குதான் வழிவகுக்கும். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இது, தனிமனிதர் ஒருவரிடம்தான் அதிகாரத்தைக் கொண்டு சென்று சேர்க்கும்.

இது, பாஜக என்ற கட்சிக்கே கூட நல்லதல்ல. இன்றைக்கு பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியைச் சர்வாதிகாரியாக ஆக்கத்தான் இந்தச் சட்டம் பயன்படும். பாஜகவும், பாஜகவுக்கு மூளையாக இருந்து செயல்படும் அமைப்புகளும் விரிக்கும் வலையில், இன்று அரசியல் காரணங்களுக்காக பாஜகவை ஆதரிக்கும் கூட்டணிக் கட்சிகள் விழுந்துவிடக் கூடாது. இந்தச் சட்டத்தை ஆதரிக்கக் கூடாது என்று இந்தக் கூட்டத்தின் வாயிலாகக் கோரிக்கை வைக்கிறேன். பாஜக ஆட்சியை ஆதரிப்பது, உங்கள் தனிப்பட்ட விருப்பம். ஆனால், இந்தியாவின் கூட்டாட்சிக் கருத்தியலுக்கே முரணான சட்டங்களை, மக்களாட்சி மேல் நம்பிக்கை வைத்திருக்கும் எந்த அரசியல் அமைப்புகளும் ஆதரிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஒரு திட்டத்தை அறிவித்தபோது, நம்மைப் போன்ற அரசியல் இயக்கங்களைக் கடந்து, வெளியில் இருந்து எதிர்த்தவர், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் மரியாதைக்குரிய எஸ்.ஒய்.குரேஷி. “பல முறை தேர்தல்கள் நடத்துவதால், தேர்தல் செலவு அதிகமாகிறது” என்று பாஜக தரப்பு சொன்னபோது, “ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால்தான் அதிகமான செலவாகும். தேர்தலுக்கான கருவிகளும், ஆட்களும், பாதுகாப்பும் ஒரே நேரத்தில் தேவைப்படுவதால் செலவு அதிகமாகத்தான் ஆகும்” என்று குரேஷி சரியாகச் சொன்னார்.

இந்தச் சூழலில், இந்திய அரசியலமைப்பை கூட்டாட்சிக் கருத்தியலைக் காக்க ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை நாம் இறுதி வரை எதிர்த்தாக வேண்டும். ஏன் என்றால், நான் முன்பே சொன்னது போன்று, பாஜகவின் செயல் திட்டங்கள் நீண்ட காலத்துக்கானது. தங்களின் செயல் திட்டங்களுக்கு இடையூறாக இருப்பவர்களுக்கு எதிரான கருத்துருவாக்கங்களை மெதுவாகச் சமூகத்தில் விதைப்பார்கள்.

அதற்கு துணையாகப் பல எடுபுடிகளை பேச வைப்பார்கள். தங்களின் கையில் இருக்கும் ஊடகங்களை வைத்தே பொய்ச் செய்திகளை பரப்புவார்கள். விவாதங்களைக் கட்டமைப்பார்கள். அளவில்லாத அவதூறுகளை அள்ளி இறைப்பார்கள். பச்சையான பொய்களால் கொச்சைப்படுத்துவார்கள். பாஜகவின் வாட்ஸ்அப் யூனிவர்சிட்டி தீயாக வேலை செய்யும். இதையெல்லாம் கடந்துதான் நாம் போராட வேண்டும்,வெற்றி பெற வேண்டும்.

இப்போது கூட, இந்திய நாட்டையும், அரசியலமைப்புச் சட்டத்தையும், மக்களாட்சியையும் காக்கத்தான் நாம் போராடிக் கொண்டு இருக்கிறோம். ஆனால், நம்மை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானவர்களாகச் சித்தரிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி . எந்த ஆளுநர்? மரபுப்படி, நிறைவாக பாடப்படும் நாட்டுப்பண் பாடலுக்குக்கூட நிற்காமல் வெளியேறிய ஆளுநர். இருந்தாலும், மத்திய அரசுக்கு நான் வைக்கும் கோரிக்கை என்பது, நான் ஆளுநரை விமர்சிக்கிறேன் என்று அவரை மாற்றிவிடாதீர்கள். அவர் பேசப் பேசத்தான் பாஜக அம்பலப்படுகிறது. திராவிடக் கொள்கைகள் மேலும் மேலும் மக்களிடம் சென்று சேருகிறது.

மக்களுக்கும் மாநில சுயாட்சி முழக்கத்தின் நியாயங்கள் புரிகிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இன்று முழுவதும் இந்த மாநாட்டில், நம்முடைய கட்சியினர் திராவிடவியல் குறித்து அழுத்தமாக உணர்வோடு பேசுவதற்கான தூண்டுகோலாக இருப்பவரும் நம்முடைய ஆளுநர்தான். தந்தை பெரியார் அடிக்கடி ஒன்றைச் சொல்வார், “என்னை செயல்பட வைப்பது, என்னுடைய தோழர்கள் அல்ல; என்னுடைய எதிரிகள்” என்று சொல்வார். அப்படிப்பட்ட கொள்கை எதிரிகளை பண்பாட்டு எதிரிகளைத்தான் நாம் இன்றைக்குப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

இன்றைய எதிரிகள் கருத்தியல் மோதலுக்கு தயாராக இல்லை. ஏன் என்றால், கருத்தியல் ரீதியாக பேசினால் அவர்களால் ஒருபோதும் வெற்றிபெற முடியாது. அதனால்தான், அவதூறுகளை ஆயுதங்களாக எடுக்கிறார்கள். அந்த துரோகக் கூட்டத்தைத் துடைத்தெறிய வேண்டிய கடமை – சட்டப் போராளிகளான உங்களுக்கு இருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை காக்கும் கடமை நமக்கு இருக்கிறது. இந்தியா முழுமைக்கும் சமூகநீதியை உருவாக்கித் தந்து பாதுகாக்கும் கடமையும் நமக்கு இருக்கிறது.

எனவே, இங்கிருக்கும் சட்டப் போராளிகளுக்கு நான் சொல்லிக் கொள்வது, நீங்கள் கொள்கைப் போராட்டத்திலும் உதவ வேண்டும்; தேர்தல் களத்திலும் உதவ வேண்டும். தேர்தல் நேரத்தில் உங்களுடைய ‘வார் ரூம்’ பணிகள் மகத்தானது, பாராட்டுக்குரியது. இந்த நேரத்திலும் அதை நினைத்து நான் மகிழ்கிறேன்.2019 முதல் நடந்த அனைத்து தேர்தல்களிலும் நாம் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கு உங்களுடைய பணிகளும் முக்கியக் காரணம். இந்த வெற்றிப் பயணம் 2026-லும் தொடர வேண்டும்.

2026 தேர்தல் வெற்றி என்பது, நம்முடைய திராவிட மாடல் ஆட்சிக்கு, மக்கள் அளிக்கப் போகும் மகத்தான அங்கீகாரமாக அமையப் போகிறது. திமுக ஆட்சி மீண்டும் அமைய இந்தியா முழுமைக்கும் திராவிடக் கோட்பாடுகளை வென்றெடுக்க திமுக சட்டத்துறை சளைக்காமல் சமரசம் இல்லாமல் உழைக்க வேண்டும். சட்டத்துறை சார்பில், வழக்கறிஞர்கள் நலனுக்காக இன்றைக்கு ஐந்து கோடி ரூபாய் கொடுத்திருக்கிறீர்கள். அதை ஆக்கபூர்வமான திட்டங்களில் பயன்படுத்திக் கொள்ள என்.ஆர்.இளங்கோவை ஒரு செயல் திட்டம் வகுக்கச் சொல்லி இருக்கிறேன். அதனடிப்படையில், அதற்கான அறிவிப்புகள் வரும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தமிழிசை சவுந்தரராஜன்: பெரியார் சமூக சீர்த்திருத்தவாதி இல்லை..!

பெரியார் சமூக சீர்த்திருத்தவாதி இல்லை என பாஜக தலைவர்கள் ஏற்கனவே பலமுறை பதிவு செய்திருக்கிறார்கள். என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை சாலிகிராமத்திலுள்ள தனது இல்லத்தில், பொங்கல் விழாவைக் கொண்டாடினார். அதன்பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது, பொங்கல் பரிசோடு சாமானிய மக்களுக்கு பொங்கல் விழா ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால், தமிழக மக்களுக்கு ஏமாற்றத்துடன் ஆரம்பித்து இருக்கிறது. கடந்த ஆட்சியில், பொங்கல் பரிசை அதிகமாக கொடுக்க வேண்டும் என்று கூறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இப்போது ஒரு ரூபாய் கூட கொடுக்க முன்வராதது மிகவும் கண்டிக்கத்தக்கது.

தமிழக மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பாஜக புறக்கணித்திருக்கிறது. அந்தவகையில், திமுகவை அனைத்து கட்சிகளும் புறக்கணிக்கிறது.மேலும் தொடர்ந்து பேசிய தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையே கருத்து மோதல் தொடர்கிறது. இதுபோன்ற கருத்து வேற்றுமைகள் மாநில மக்களுக்கு பலன் தராது என்பதால், இருவரும், தங்களது வேற்றுமைகளை மறந்து அமர்ந்து பேசி மாநில பிரச்சினைகளை பற்றி விவாதித்து முடிவெடுக்க வேண்டும்.

தெலங்கானாவில், சந்திர சேகரராவ் முதலமைச்சராக இருந்த போது, பிரதமர் வந்தால் வரவேற்க வரமாட்டார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை போல, மத்திய அரசின் திட்டங்களையும் சந்திர சேகரராவ் எதிர்த்து வந்தார். அதனால் தான், இன்று அவர் வீட்டில் இருக்கிறார். பல்வேறு ஆலோசனை, ஆய்வுக்கு பிறகு தான் மத்திய அரசு ஒரு திட்டத்தை கொண்டு வருகிறது. எனவே, மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு மறுப்பது நல்லதல்ல. துணை வேந்தரை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஒரு வரைவை கொடுத்து திருக்கிறார்.

இந்த வரைவு வருவதற்கு முன்பே, அதை சட்டமாக்கிவிட்டதை போல தமிழக அரசு நாடகமாடுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக டெபாசிட் வாங்காது என அமைச்சர்கள் கூறுவதை பற்றி நாங்கள் கவலைப்பட போவதில்லை. தேர்தலில் பாஜகவின் போட்டியை ஏற்றுக்கொள்ளும் தகுதி திமுகவுக்கு இல்லை.

திமுகவில் நேர்மையான போர் வீரர்களே இல்லை. திமுகவினர் முதுகில் குத்துபவர்கள். பெரியார் சமூக சீர்த்திருத்தவாதி இல்லை என பாஜக தலைவர்கள் ஏற்கனவே பலமுறை பதிவு செய்திருக்கிறார்கள். தற்போது சீமானும் பதிவு செய்வது வரவேற்கத்தக்கது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

சீமான் கேள்வி: எந்த இடத்தில் கொள்கை வழிகாட்டி..! பெண்ணிய உரிமையா..!?

பெண்ணிய உரிமையா? உனக்கு உடல் இச்சை வந்தால், பெற்ற தாயோ, மகளோ, அக்காவோ, தங்கையோ அவர்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக இரு என சொன்னது பெண்ணிய உரிமையா? என சீமான் கேள்வியெழுப்பினார். கடலூர் மாவட்டத்தில் நாதக கலந்தாய்வுக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து சீமான் பேசினார். அப்போது, ‘விஜயை முதலில் நேசித்த நீங்கள் தற்போது ஏன் அவருடன் முரண்பாடு’ என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த சீமான், “அண்ணன் தம்பி பாசம் என்பது வேறு, கொள்கை கோட்பாடு முரண் என்பது வேறு. அவர் பெரியாரை கொள்கை வழிகாட்டி என்றால், எந்த இடத்தில் அவர் கொள்கை வழிகாட்டி எனும் கேள்வி கேட்க வேண்டியது இருக்கிறது. உலகில் மொழியில் இருந்து தான் அனைத்தும் பிறக்கிறது. அந்த மொழியையே சனியன், குப்பை, காட்டுமிராண்டி மொழி, உங்க தமிழ்த்தாய்க்கு என்ன கொம்பா இருக்கிறது, 3000 ஆண்டுகளாக உங்களைப் படிக்க வைத்தாளா என்று கேட்டால், திருக்குறள், சிலப்பதிகாரம், சங்க இலக்கியங்கள் உள்ளிட்டவற்றை எழுதியவர்களை எல்லாம் எங்கள் தமிழ்த்தாய் படிக்கவைக்கவில்லையா.

தமிழை சனியன் என்று சொன்ன பெரியார் எந்த மொழியில் எழுதினார். என் மொழியை ஒன்றுமில்லை என்று சொல்லும்போது, பிறகு என்ன சமூக மாற்றம், சீர்திருத்தம், அரசியல் இருக்கிறது. ஆகச் சிறந்த உலக வாழ்வியல் நெறி திருக்குறளை மலம் என்று சொல்லிவிட்டீர்கள். அவரைக் கொண்டு வந்து கொள்கை வழிகாட்டி என்றால், எந்த இடத்தில் கொள்கை வழிகாட்டி. பெண்ணிய உரிமையா? உனக்கு உடல் இச்சை வந்தால், பெற்ற தாயோ, மகளோ, அக்காவோ, தங்கையோ அவர்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக இரு என சொன்னது பெண்ணிய உரிமையா?

மேலும், தன் தோட்டத்திலிருந்த 1000 தென்னை மரங்களை வெட்டினார். அவர் பகுத்தறிவாளர் தானே, என் தோட்டத்தில் கள்ளு இறக்க அனுமதி இல்லை என்று சொல்லி இருந்தால் போதுமே எதற்கு மரங்களை வெட்ட வேண்டும். இது பகுத்தறிவா? உலகில் எந்த நாட்டில் மது இல்லை. அனைவரும் மது அருந்துகிறார்கள். மது குடிக்க வேண்டாம் என்பது, கட்டிய மனைவியுடன் படுக்க வேண்டாம் என்று சொல்வதற்கு சமம் என்று சொல்லியிருக்கிறாரா? இல்லையா? அப்போ இந்த இடத்தில் ஏற்கிறீர்களா?

சமூகநீதிக்கும் பெரியாருக்கும் சம்பந்தம் இருக்கிறதா அல்லது இடஒதுக்கீட்டிற்கும் ஆனைமுத்துக்கும் சம்பந்தம் இருக்கிறதா? போராடி பெற்றுக்கொடுத்தது ஆனைமுத்தா, பெரியாரா? என பெரியார் குறித்து சரமாரியாக குற்றம் சாட்டினார்.