பவன் கல்யாணுக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி!

இந்தியை திணிக்காதீர்கள் என்று கூறுவதால் பிற மொழியை நாங்கள் வெறுக்கிறோம் என்பதல்ல என்று ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் கருத்துக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி மத்திய அரசால் நிறுத்தி வைக்கப்பட்ட நாள் தொடங்கி இதுவரை இந்தி திணிப்பு தொடர்பாக விவாதம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கைக்கு பாஜக மற்றும் அமமுக கட்சிகள் ஆதரவு அளித்து வரும் நிலையில், தேசிய கல்வி கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை தமிழக அரசு தீவிரமாக எதிர்த்து வருகிறது.

இந்நிலையில், ஜன சேனா கட்சியின் 12-வது ஆண்டு விழாவில் பவன் கல்யாண் பேசுகையில், நாட்டில் 2 மொழிகள் மட்டுமல்ல, தமிழ் உட்பட பல மொழிகள் தேவை. மொழியில் பன்முகத்தன்மையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு மட்டுமல்லாமல், மக்களிடையே அன்பையும், ஒற்றுமையையும் வளர்க்கும். இந்தியாவில் பல மொழிகள் இருப்பது நல்லது.

சமஸ்கிருதத்தை ஏன் விமர்சிக்கின்றனர் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. அதேபோல் தமிழக அரசியல்வாதிகள் ஏன் இந்தியை எதிர்க்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. ஆனால் அவர்கள் தமிழ் திரைப்படங்களை இந்தியில் டப் செய்து வெளியிட அனுமதிக்கிறார்கள். பாலிவுட்டில் இருந்து கிடைக்கும் பணம் மட்டும் தேவை.

ஆனால் அவர்களுக்கு இந்தி தேவையில்லையா? இது என்ன லாஜிக் என்று கேள்வி எழுப்பியுள்ளார். பவன் கல்யாணின் இந்த பேச்சு தமிழ்நாட்டில் விவாதமாகியுள்ளது. ஏற்கனவே சனாதன தர்மம் தொடர்பான பவன் கல்யாணின் பேச்சிற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில், பவன் கல்யாணின் கருத்துக்கு நடிகரும், அரசியல்வாதியுமான பிரகாஷ் ராஜ் பதிலடி கொடுத்துள்ளார். பிரகாஷ் ராஜ் கன்னடத்தில் தனது எக்ஸ் பக்கத்தில், உங்களின் இந்தி மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள் என்று சொல்வது, வேறு மொழியை வெறுக்கிறோம் என்று அர்த்தமில்லை. தாய் மொழியை தாயைப் போல் சுயமரியாதையோடு காப்பதற்காகதான். இதனை பவன் கல்யாணிடம் யாராவது கூறுங்கள் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

ஐசிசி தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்விற்கு பிரகாஷ் ராஜ் விமர்சனம்..!

ஐசிசி-யின் தலைவராக தொடர்ச்சியாக இரு முறை பதவி வகித்து வந்த நியூஸிலாந்தைச் சேர்ந்த 62 வயதான கிரேக் பார்க்லேவின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் 3-வது முறையாக தலைவர் பதவியில் தொடர தனக்கு விருப்பம் இல்லை எனவும், நவம்பர் மாதத்துடன் பதவியில் இருந்து விலகுவதாகவும் கிரேக் பார்க்லே தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, ஐசிசி தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்குள் வேட்புமனுக்களை அளிக்கலாம் என்று ஐசிசி நிர்வாகம் அறிவித்தது. வேட்பு மனுக்கள் வழங்குவதற்கான கடைசி நாளான நேற்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவை தவிர வேறு யாரும் மனு வழங்கவில்லை. இதையடுத்து ஜெய் ஷா, போட்டியின்றி ஐசிசி-யின் தலைவராக தேர்வானார்.

இந்நிலையில், விராட் கோலி தனது எக்ஸ் பக்கத்தில் ஐசிசி தலைவராக ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அந்த பதிவில் பிரகாஷ் ராஜ், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக போட்டியின்றி ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், “போட்டியின்றி ஐசிசி தலைவராக தேர்வாகி உள்ள இந்திய கிரிக்கெட் உருவாக்கிய ஆகச் சிறந்த பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர், விக்கெட் கீப்பர், ஃபீல்டர் மற்றும் அல்டிமேட் ஆல்ரவுண்டருக்கு அனைவரும் கைத்தட்டல் அளித்து வாழ்த்துவோம்” என நடிகர் பிரகாஷ் ராஜ் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Prakash Raj: ஒரு நாளைக்கு 5 வேடம் போடுகிற மோடி பருப்பு வேகாது..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், ஏப்ரல் 19 -ஆம் தேதி 102 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் முடிவுற்ற நிலையில் அடுத்து ஏப்ரல் 26 -ஆம் தேதி கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்னும் மீதம் 3 நாட்களே உள்ளதால் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, ”காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கப்படும். நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதிப்பீர்கள்அதை எல்லாம் குழந்தைகள் அதிகம் வைத்துள்ளவர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும். இதுதேவைதானா?

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையும் இதையே சொல்கிறது முன்பு மன்மோகன் சிங் ஆட்சி இருந்தபோதும் இதையே சொன்னார்கள் இதுதான் நகர்ப்புற பயங்கரவாதம்இவர்கள் ஆட்சிக்கு வந்தால் உங்கள் தாலி இருக்காது” இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசியுள்ளார். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடியின் வெறுப்பு பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பிரசாரத்தில் பேசியது குறித்து தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்த நடிகர் பிரகாஷ் ராஜ் ”10 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமராக இருந்தவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பேசிய பேச்சை திரித்து அதை இஸ்லாமியர்கள் என மோடி பேசும்போதே அவரின் திட்டம் நமக்கு தெரிகிறது.

தமிழ்நாட்டில் இருக்கும் போதும், கர்நாடகாவில் இருக்கும் போது மோடி இப்படி பேச மாட்டார். அங்கு இவரது பருப்பு வேகாது. ஆனால் வடமாநிலங்களில் இப்படி பேசுவார். ஒரு நாளைக்கு 5 வேடம் போடுகிற மாதிரி ஒரே நாடு ஒரே மொழி என பேசும் மோடிக்கு 2 நாக்குகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொறு கருத்துக்களை பேசுகிறது. இவை எல்லாம் நாம் தலைகுனிய வேண்டிய அசிங்கமான விஷயம்” என பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

பிரகாஷ் ராஜ் ஆவேசம்: அதிகாரத்துக்கு நரேந்திர மோடி அலைவது வெளிப்படையாக தெரிகிறது..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஏப்ரல் 19 -ஆம் தேதி 102 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் முடிவுற்ற நிலையில் அடுத்து ஏப்ரல் 26 -ஆம் தேதி கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்னும் மீதம் 4 நாட்களே உள்ளதால் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, ”காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கப்படும். நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதிப்பீர்கள்அதை எல்லாம் குழந்தைகள் அதிகம் வைத்துள்ளவர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும். இதுதேவைதானா?

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையும் இதையே சொல்கிறது முன்பு மன்மோகன் சிங் ஆட்சி இருந்தபோதும் இதையே சொன்னார்கள் இதுதான் நகர்ப்புற பயங்கரவாதம்இவர்கள் ஆட்சிக்கு வந்தால் உங்கள் தாலி இருக்காது” இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசியுள்ளார். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடியின் வெறுப்பு பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது “எக்ஸ்” பக்கத்தில், “இந்த கீழ்த்தரமான பேச்சையும் வரலாறு பதிவு செய்யும். அரசருக்கு அறிவுரை சொல்லி எந்தப் பயனும் இல்லை. அதிகாரத்துக்கு அவர் அலைவது வெளிப்படையாக தெரிகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு அவரை அச்சுறுத்தி விட்டது. இன்னும் கொஞ்ச நாட்களில் மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள்” என பிரகாஷ் ராஜ் பதிவிட்டுள்ளார்.