பாஜக தலைவர் வீட்டில் ரெய்டுக்கு சென்ற போலீசாரை தடுத்த நிர்வாகிகள் 10 பேர் மீது வழக்கு பதிவு..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், வேட்பாளர்கள் வாக்கு வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.

இந்நிலையில், மறுபக்கம் வாக்காளர்களுக்கு பணம், பரிசுபொருட்கள் கொடுக்கப்படுகிறதா? என கண்காணிக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள். அதேபோல், வருமான வரித்துறையும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், சேலம் பாஜக மாநகர மாவட்ட தலைவராக இருந்து வரும் சுரேஷ்பாபு வீட்டில் கடந்த 9 -ஆம் தேதி இரவு வாக்காளர்களுக்கு பணம் வழங்க வைத்திருப்பதாக ரகசிய தகவல் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

ஆனால் இந்த சோதனையில் எந்த ஒரு பணமும் பொருளும் பறிமுதல் செய்யப்படவில்லை. அந்த பகுதியில் பாதுகாப்பிற்கு வந்திருந்த சூரமங்கலம் உதவி கமிஷனர் தலைமையிலான 30-க்கும் மேற்பட்ட காவல்துறையினர், மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு வீட்டை சோதனை செய்ய முயன்றுள்ளனர். அப்போது பாஜக நிர்வாகிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து லேசான தள்ளுமுள்ளும் ஏற்பட்ட நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்த காவல்துறை அங்கு சென்று சோதனை நடத்தினர். இந்நிலையில் காவல்துறையினரை சோதனை செய்ய விடாமல் தடுத்தல், அனுமதி இன்றி கூடுதல் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் பிரிவுகளில் சேலம் மாநகர மாவட்ட தலைவர் சுரேஷ் பாபு, மாநகர மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ், ஓ பி சி அணி மாவட்ட தலைவர் கோபிநாத் உட்பட 10 பேர் மீது சூரமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

பழனிசாமி: பாஜக தலைவர், பேட்டிக் கொடுத்து மக்களை நம்ப வைத்து, வாக்குகளைப் பெற முயற்சிக்கிறார்..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில்,மக்களவைத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கார்த்திகேயனை ஆதரித்து பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “இது தேர்தல் பிரச்சாரக் கூட்டமாக இல்லாமல், வெற்றி விழா கூட்டம் போல் மக்கள் வெள்ளம் காட்சியளிக்கிறது. இங்கு கூடியிருக்கும் மக்களின் எழுச்சியில் இருந்து அதிமுக வேட்பாளரின் வெற்றியைப் பார்க்க முடிகிறது. அதிமுக ஒரு வலிமையான இயக்கம்.

புதிதாக ஒரு தலைவர் பாஜகவில் வந்திருக்கிறார். அவர் யார் என்று உங்களுக்குத் தெரியும். அவர் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு பேட்டிக் கொடுப்பார். விமானத்தில் இருந்து இறங்கிய பிறகு பேட்டிக்க கொடுப்பார். பேட்டிக் கொடுப்பதுதான் அவருடைய வேலை. பேட்டிக் கொடுத்தே தலைவர் பதவியில் இருக்கப் பார்க்கிறார். பொதுவாக கட்சித் தலைவர்கள் பல வழிகளில் மக்களைச் சந்திப்பார்கள். ஆனால், பாஜக தலைவர், அவ்வப்போது பேட்டிக் கொடுத்து மக்களை நம்ப வைத்து, வாக்குகளைப் பெற முயற்சிக்கிறார்.

அது ஒன்றும் தமிழக மக்களிடத்தில் எடுபடாது. தமிழகத்தில் உழைப்பவர்களுக்குத்தான் மரியாதை. உழைக்கும் கட்சி அதிமுக. மக்களுக்கு நன்மை செய்த அரசாங்கம் அதிமுக அரசாங்கம். எனவே, அவர் எவ்வளவு பேட்டிகள் கொடுத்தாலும், ஒன்றும் எடுபடப் போவது இல்லை. ஏன் நான் நினைத்தால், பேட்டிக் கொடுக்க முடியாதா? பேட்டிக் கொடுத்துக் கொண்டே இருக்கலாம். அதனால், நாட்டு மக்களுக்கு என்ன பயன்? எப்போது எதைச் சொல்ல வேண்டுமோ, அப்போது அதைச் சொன்னால், அது மக்களிடத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தும். ஆனால், அவர் எல்லாவற்றுக்கும் பேட்டி கொடுக்கிறார்.

நாட்டில் எத்தனையோ தலைவர்கள் பிறக்கிறார்கள், வாழ்கிறார்கள், மறைந்து போகிறார்கள். ஆனால், மக்கள் மனதிலே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அதிமுகவின் தலைவர்கள். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் இன்றளவும் மக்கள் மனதில் வாழ காரணம், அவர்கள் வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு எண்ணற்ற நன்மைகளை செய்தனர். எனவே, அந்த தலைவரைப் போல எத்தனை தலைவர்கள் வந்தாலும், அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது.

இப்போது மத்தியில் இருந்து தமிழகத்துக்கு அடிக்கடி வந்து போகின்றனர். அதனால், என்ன பிரயோஜனம்? மத்தியில் இருந்து இங்கு வருபவர்கள், ஏதாவது திட்டத்தைக் கொண்டுவந்து, அதன்மூலம் மக்கள் பயன் அடைந்திருந்தால், அது பிரயோஜனமாக இருக்கும். ஆனால், அதைவிட்டுவிட்டு, விமானத்தில் இருந்து இறங்குகின்றனர். ரோட்டில் செல்கின்றனர். அத்துடன் கதை முடிந்து போய்விட்டது. மக்கள் வாக்களித்து விடுவார்களா? தமிழக மக்கள் என்ன சாதரணமானவர்களா? அறிவுத்திறன் படைத்தவர்கள்.

சரி, தவறு எது என்று எடைபோட்டு பார்த்து தீர்ப்பளிக்கக் கூடியவர்கள் தமிழக மக்கள். எனவே, இந்த ஏமாற்று வேலை எல்லாம் தமிழகத்தில் எடுபடாது. நாங்கள் 30 ஆண்டு காலம் ஆட்சி செய்து, சிறப்பான ஆட்சி நடத்தி பல்வேறு திட்டங்களைக் கொண்டு நிறைவேற்றி, மக்கள் எண்ணற்ற நன்மைகளைப் பெற்றுள்ளனர். இந்தச் சூழலில், யார் யாரோ வந்து, ஏதேதோ பேசி, மக்களை குழப்பி அந்த குழப்பத்தில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். அதெல்லாம் ஒருபோதும் தமிழகத்தில் நடக்காது” என பழனிசாமி பேசினார்.

பாஜக முதலமைச்சர் மீது ரூ.10 கோடி மானநஷ்ட வழக்கு..!

அசாம் மாநிலத்தில் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அசாம் காங்கிரஸ் தலைவராக புபென் குமார் போரா பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் “புபென் குமார் போரா காங்கிரசில் இருந்து விலகி, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பாஜகவில் சேருவார்” என்று ஹிமந்த பிஸ்வா சர்மா தொடர்ந்து சில நாளிதழ்களில் அறிக்கை வௌியிட்டு வருகிறார்.

இதையடுத்து தன் நற்பெயருக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் சர்மா அறிக்கை வௌியிட்டு வருவதாக புபென் குமார் போரா குற்றம்சாட்டி நீதிமன்றத்தில் ஹிமந்த பிஸ்வா சர்மா மீது ரூ.10 கோடிக்கு மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிருகு பக்சிபத்ரா ஒடிசா பாஜக துணை தலைவர் பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார்..!

ஒடிசாவில் 147 சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் 21 மக்களவை எம்.பி.,க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், மே 13-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 -ஆம் வரை என 4 கட்டங்களாக நடக்கிறது. அம்மாநிலத்தில் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக மாநில துணைத் தலைவராக இருந்தவர் பிருகு பக்சிபத்ரா. இவர் திடீரென நேற்று அந்த பதவியில் இருந்து விலகினார். பின்னர் புவனேஸ்வரில் உள்ள பிஜு ஜனதா தளத்தின் தலைமையகமான சங்கா பவனில், நேற்று நடந்த நிகழ்ச்சியில் அக்கட்சியில் பிருகு பக்சிபத்ரா இணைந்தார்.

தேர்தல் பிரசாரத்தின் போது தேசிய கொடி பயன்படுத்திய பாஜக வேட்பாளர்…!!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், திருவள்ளூர் மக்களவைத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் பாலகணபதி திருவள்ளூர் அடுத்த மெய்யூர் கிராமத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது தேசியக்கொடியை பயன்படுத்தி இருந்தார். அவருடன் பிரச்சாரத்திற்கு அழைத்து வந்த பெண்களின் கைகளில் பா.ஜ.க. கொடியுடன் சேர்த்து தேசிய கொடியும் இடம் பெற்றிருந்தது. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது.

Lok Janshakti Party: லோக் ஜனசக்தி கட்சியின் 22 முக்கியத் தலைவர்கள் விலகல்..! இண்டியா கூட்டணியை ஆதரவளிப்பதாக அறிவிப்பு..!

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியின் உறுப்பினராக எல்ஜேபி பிஹாரில் மொத்தம் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் சமஸ்திபூர், ஹாஜிபூர், வைஷாலி, ககரியா மற்றும் ஜமுவாய் ஆகிய 5 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இவற்றில் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு அன்றி வெளியிலிருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக சிராக் மீது புகார் எழுந்துள்ளது.

எல்ஜேபியின் தலைவரான சிராக்கின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து அக்கட்சியின் முன்னாள் எம்.பி., எம்எல்ஏ., உள்ளிட்ட 22 முக்கியத் தலைவர்கள் விலகியுள்ளனர். இவர்கள் அனைவரும் எதிர்கட்சியான இண்டியா கூட்டணிக்கு தங்கள் ஆதரவை தேர்தலுக்கு அளிப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

இது குறித்து முன்னாள் எம்.பி.யும் எல்ஜேபியில் தேசியப் பொதுச்செயலாளராக இருந்த ரேணு குஷ்வாஹா பேசுகையில், ”கட்சியினருக்கு போட்டியிடும் வாய்ப்பளிக்காமல் வெளியிலிருந்து வந்தவர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்காக தேர்தல் வேலை செய்ய மட்டுமே நாம் வேலையாட்களாக கட்சியில் இல்லை. எனவே, கட்சியிலிருந்து வெளியேறிய நாம் இனி இண்டியா கூட்டணியின் வெற்றிக்காக பாடுபடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

பிரகாஷ்ராஜ்: என்னை விலைக்கு வாங்கும் அளவிற்கு பாஜகவினர் சித்தாந்தம் கொண்டவர்கள் அல்ல..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

பிரச்சாரங்களின் போது அரசியல் கட்சியினர் மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்கி விமர்சித்தும் வருகின்றனர். பல்வேறு சமூக பிரச்னைகள் குறித்து தனது கருத்துகளை தெரிவித்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜ் கடந்த சில நாட்களாகவே பாஜகவையும், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில், இன்று நடிகர் பிரகாஷ்ராஜ் பாஜகவில் இணைய உள்ளதாக வதந்திகள் பரவிய நிலையில், அதற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் அளித்த பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் பிரகாஷ் ராஜ் தனது X தளத்தில், என்னை விலைக்கு வாங்கும் அளவிற்கு அவர்கள் சிந்தாந்த ரீதியாக உயர்ந்தவர்கள் இல்லை என்பதை அவர்கள் உணரந்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே” என்று பதிவிட்டுள்ளார்.

ஓட்டுக்கு ரூ.1,000 கொடுக்க பாஜக திட்டம்…! அதிமுக மாநில செயலாளர் குற்றச்சாட்டு…!

புதுச்சேரி மக்களவைத் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் என புதுச்சேரி அதிமுக வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “புதுச்சேரி மக்களவைத் தேர்தல் நடவடிக்கைகள் நேர்மையாக, வெளிப்படையாக, சமநிலையோடு நடக்கவில்லை. மாநில உள்துறை அமைச்சராக போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு அரசு இயந்திரங்கள் முழுமையாக தேர்தல் சட்ட விதிகளுக்கு புறம்பாக துணை நிற்கின்றன. அவரது பிரச்சாரத்தின்போது காவல் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த ஊழியர்கள் கலந்துகொண்டு வருகின்றனர்.

ஒவ்வொரு பிரச்சாரத்தின்போதும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து வருகின்றன. ஆனால், இதை தேர்தல் துறை கண்டுகொள்ளவில்லை. தற்போது வயது முதிர்ந்தவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் வீட்டில் இருந்தே தபால் வாக்கு போடப்படுகிறது. இது சம்பந்தமான அரசு துறை ஊழியர்களை தன்வசப்படுத்திக் கொண்டு அவர்களது முகவரி பட்டியலை பாஜகவினர் கையில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு வாக்குக்கும் நேரடியாக வீட்டுக்கே சென்று ரூ.500 பணம் கொடுக்கின்றனர். இது சர்வ சாதாரணமாக வெளிப்படையாக நடக்கிறது.

இந்த தேர்தலில் கண்டெய்னர் மூலம் பாஜக வேட்பாளருக்கு பணம் வந்து சேர்ந்துள்ளதாக பேசப்படுகிறது. அந்தப் பணம் முக்கிய நிர்வாகிகளிடம் பிரித்து கொடுக்கப்பட்டு ஒவ்வொரு ஓட்டுக்கும் சுமார் ரூ.1,000 வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது. ஆகையால், புதுச்சேரி அரசு நிர்வாகமே ஒருதலைப்பட்சமாக பாஜக வேட்பாளருக்கு தேர்தல் பணி ஆற்றுவதால் நடைபெற இருக்கும் புதுச்சேரி மக்களவைத் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் என அன்பழகன் தெரிவித்தார்.

பாஜக இணைந்த 12 மணி நேரத்தில் பாஜகவில் இருந்து விலகிய இஸ்லாமியர்கள்..

நாகப்பட்டினம் லோக்சபா தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வை. செல்வராஜ், அதிமுக சார்பில் சுர்சித் சங்கர், பாஜக சார்பில் எஸ்.ஜி.எம் ரமேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா உள்ளிட்டோர் களமிறங்கி உள்ளனர். இந்நிலையில், பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம் ரமேஷை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாகப்பட்டினம் அவுரி திடலில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது நாகூர் பகுதியை சேர்ந்த சமது என்பவர் மேலும் சில இஸ்லாமியர்களோடு பாஜகவில் இணைந்தார்.

இந்நிலையில், அண்ணாமலை முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து 12 மணி நேரத்தில் அவர் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஒட்டுமொத்த சமுதாயமும், தனது குடும்பமும் பாஜகவில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பாஜகவில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார் சமது. நாகூர் தர்காவில் பரம்பரை ஆதினமாக இருக்கும் சமது, அதிமுகவில் இருந்து, அமமுகவுக்கும், பின்னர் காங்கிரஸ் கட்சிக்கும் மாறினார். தேர்தல் சமயத்தில், காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு மாறிய நிலையில், தனது குடும்பத்தினரே எதிர்ப்பு தெரிவித்ததால் பாஜகவில் இருந்தும் விலகியுள்ளார்.

ரூபாய் நோட்டுக் கட்டுகளை காட்டி வாக்கு சேகரித்த பாஜக…!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

அதன்வரிசையில், பாரதிய ஜனதா கட்சியின் கரூர் பாராளுமன்ற தேர்தல் பரப்புரையில் தான்தோன்றி மலையை சுற்றியுள்ள பொது மக்களிடம் வாக்கு சேகரித்த நிலையில் துப்புரவு தொழிலாளர்களின் காலில் விழுந்து வாக்குகளை சேகரித்தார். தொடர்ந்து தான்தோன்றி மலை உள்ள டீக்கடை ஒன்றில் டீ போட்டுக் கொடுத்து நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.

இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் கரூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் வேடசந்தூர் அருகே உள்ள வடமதுரை மற்றும் அய்யலூர் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பிரச்சார வாகனத்தில் நின்று பொதுமக்களிடையே பேசிய திண்டுக்கல் மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ், கரூர் சிட்டிங் எம்.பியான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணியின் புகைப்படத்தை காட்டி, இவர் கடந்த ஐந்து வருடங்களில் எத்தனை முறை ஊருக்கு வந்தார்?

உங்கள் குறைகளை எத்தனை முறை கேட்டறிந்தார்? எத்தனை குறைகளை நிறைவேற்றினார்? என்று கரூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் வந்து எத்தனை பேர் கூறினாலும், அனைவருக்கும் 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்குவதாக நமது வேட்பாளர் செந்தில்நாதன் அறிவிக்கிறார். அதற்காக கரூர் கட்சி அலுவலகத்தில் தனி கவுண்டர் போடப் போகிறோம். அங்கே வந்து நீங்கள் கூறினால் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என்று கூறி 50 ஆயிரம் ரூபாய் பணக்கட்டை ஆட்டிக்காண்பித்து பேசினார்.

இந்த சம்பவம் குறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி திவாகர் வடமதுரை காவல்துறையில் புகார் செய்தார். அதன்பேரில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கரூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன், திண்டுக்கல் மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ், தமிழர் தேசம் கட்சியின் மாநில அமைப்பாளர் மகுடீஸ்வரன், உள்ளிட்ட 5 பேர் மீது வடமதுரை காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.