போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 300 வழக்குகள்…! அதிகமான வழக்குகளுக்கு சொந்தக்காரர்..!

கர்நாடக தலைநகரம் பெங்களூருவில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பலமுறை விதிகளை மீறி, அதற்காக ரூ.50,000 க்கு மேல் அபராத நிலுவைத்தொகை வைத்திருப்பவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, நேரடியாக அவர்கள் வீட்டுக்கே சென்று அபராத தொகையை வசூலிக்க பெங்களூரு மாநகர போக்குவரத்து காவல் துறை இணை ஆணையர் அனுசேத் உத்தரவிட்டுள்ளார்.

அந்தவகையில், பெங்களூருவில் இதுவரை 300க்கும் அதிகமான முறை போக்குவரத்து விதிகளை மீறி, பெங்களூருவில் அதிகமான விதிமீறல் வழக்குகளை பெற்றதுடன், அதிகமான அபராத தொகை செலுத்த வேண்டிய சுதாமாநகரை சேர்ந்த வெங்கட்ராமன். இவர் KA 05 KF 7969 என்ற பதிவெண் கொண்ட ஹோண்டா ஆக்டிவா பைக்கை வைத்திருக்கின்றார்.

இவர் ஆர்.எஸ்.நகர், வில்சன் கார்டன் உள்ளிட்ட பல பகுதிகளில் ஹெல்மெட் அணியாமல், போக்குவரத்து காவல்துறை மீதோ தன் உயிர் மீதோ எந்த பயமும் இல்லாமல் செல்போனில் பேசியபடி பலமுறை சென்றுள்ளார். அதனால் அவர் மீது போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 300 வழக்குகள் உள்ளன. 300க்கும் அதிகமான முறை விதிகளை மீறி வாகனம் ஓட்டிய அவர் ரூ.3.20 லட்சம் அபராதமாக செலுத்த வேண்டியுள்ளது. பெங்களூருவில் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக அதிகமான வழக்குகளுக்கு சொந்தக்காரர்.

அந்த அபராத தொகையை வசூலிப்பதற்காக காவல்துறை அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது, என் பைக்கே வெறும் ரூ.20-25 ஆயிரம் தான். ஆனால் அபராதம் ரூ.3.20 லட்சமா? அதெல்லாம் செலுத்த முடியாது. வேண்டுமென்றால் பைக்கை தருகிறேன் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் அபராதம் எல்லாம் செலுத்த முடியாது என்று காவல்துறையினரிடம் தெரிவித்தார்.

லோக்சபாவில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்

மணிப்பூர் மாநிலத்தில் 3 மாதங்களாக வன்முறை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மைத்தேயி- குக்கி இன மக்களிடையேயான மோதலை மத்திய அரசு தடுக்கவில்லை என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. இந்த மோதல் மிசோரம், மேகாலயா, அஸ்ஸாம் மற்றும் நாகாலாந்து மாநிலங்களிலும் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி வருகிறது. குக்கி இனமக்களுடன் மிசோரம் மாநிலத்தின் மிசோ மக்கள் தொப்புள் கொடி உறவு கொண்டவர்கள்.

அதனால் குக்கி இனத்தவரை தாக்குகிற மைத்தேயி மக்கள், மிசோரம் மாநிலத்தை விட்டு வெளியேற ஆயுத குழுவினர் கெடு விதித்தனர். இதனையடுத்து மிசோரம் மாநிலத்தில் இருந்து மைத்தேயி மக்கள் அஸ்ஸாமுக்கு இடம் பெயர்ந்தனர். இதற்கு பதிலடியாக அஸ்ஸாம் மாநிலத்தைவிட்டு மிசோ மக்கள் வெளியேற மாணவர் அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். மணிப்பூர் பிரச்சனையில் பிரதமர் மோடி விளக்கம் தரக் கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டம் நடத்துகின்றன.

இதனால் நாடாளுமன்றம் கடந்த 4 நாட்களாக முடக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூர் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயார் என்கிறார். இதனிடயே பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் பேச வைப்பதற்காக, லோக்சபாவில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. 26 எதிர்க்கட்சிகள் கூட்டணியான இந்தியா கூட்டணி சார்பாக இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. இது தொடர்பாக நேற்று 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆலோசனை நடத்தினர்.

இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலமாக பிரதமர் மோடியை மணிப்பூர் குறித்து பேசவைக்க முடியும் என்பது எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை. இதனையடுத்து இன்று லோக்சபா செயலகத்தில் காங்கிரஸ் குழு துணைத் தலைவர் கவுரவ் கோகோய், நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பான நோட்டீஸ் வழங்கினார். நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாத தேதியை லோக்சபா அலுவல் ஆய்வு குழு கூட்டம் முடிவு செய்யும் என தெரிய வருகிறது.