அமைச்சர் மனோ தங்கராஜ்: அநாகரிகத்தின் மொத்த வடிவம் பா.ஜ.க.

தமிழக மாணவர்களின் மருத்துவராகும் கனவைச் சிதைத்து, அவர்களின் உயிரைப் பறிக்கின்ற உயிர்க்கொல்லியாக உருவெடுத்துள்ள நீட் தேர்வைத் திணிக்கும் மத்திய பாஜக அரசு நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா தற்போது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகின்றார்.

இந்நிலையில் மத்திய பாஜக அரசு, ஆளுநரை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் மதுரை தவிர மாநிலம் முழுவதும் இன்று உண்ணாவிரதம் நடைபெறுகிறது.மதுரையில் திமுகவினரின் உண்ணாவிரதப் போராட்டம், வரும் 23-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தில், மாணவ – மாணவிகள், அவா்களின் பெற்றோா்கள், கல்வியாளா்கள், சமூகச் செயற்பாட்டாளா்கள் உட்பட பலா் கலந்து கொள்ளவுள்ளனா். இதையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டத்தை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,எந்த ஒரு மேற்படிப்பாக இருந்தாலும் அதற்கு ஒரே தகுதி தேர்வு போதும் என கருணாநிதி அறிவித்தார். இதைத்தான் தி.மு.க. அரசு இன்றளவும் கடைப்பிடித்து வருகிறது.

அதே சமயம் கல்வியை மத்திய பட்டியலில் சேர்த்து விடக்கூடாது. மாநில அரசின் பட்டியலிலேயே இருக்க வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வு தேவையற்றது. இது மாணவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் உயிரையும் பறித்து வருகிறது. மேலும் அநாகரிகத்தின் மொத்த வடிவாக பா.ஜ.க. திகழ்கிறது. சொகுசு பயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பற்றி விமர்சிப்பதோ, அவரை பற்றி பேசுவதற்கோ அருகதை இல்லை. கடமை, கண்ணியம், நாகரிகம் என அனைத்தையும் தி.மு.க.வினர் கடைபிடித்து வருகின்றனர் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

கனிம வளங்களை கொண்டு செல்லும் வாகனங்களை தடுக்கும் நடவடிக்கை மாநில அரசுக்கு இல்லை…! மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது..!

தமிழக மாணவர்களின் மருத்துவராகும் கனவைச் சிதைத்து, அவர்களின் உயிரைப் பறிக்கின்ற உயிர்க்கொல்லியாக உருவெடுத்துள்ள நீட் தேர்வைத் திணிக்கும் மத்திய பாஜக அரசு நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா தற்போது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகின்றார்.

இந்நிலையில் மத்திய பாஜக அரசு, ஆளுநரை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் மதுரை தவிர மாநிலம் முழுவதும் இன்று உண்ணாவிரதம் நடைபெறுகிறது.மதுரையில் திமுகவினரின் உண்ணாவிரதப் போராட்டம், வரும் 23-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தில், மாணவ – மாணவிகள், அவா்களின் பெற்றோா்கள், கல்வியாளா்கள், சமூகச் செயற்பாட்டாளா்கள் உட்பட பலா் கலந்து கொள்ளவுள்ளனா். இதையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டத்தை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், எந்த ஒரு மேற்படிப்பாக இருந்தாலும் அதற்கு ஒரே தகுதி தேர்வு போதும் என கருணாநிதி அறிவித்தார். இதைத்தான் தி.மு.க. அரசு இன்றளவும் கடைப்பிடித்து வருகிறது. அதே சமயம் கல்வியை மத்திய பட்டியலில் சேர்த்து விடக்கூடாது. மாநில அரசின் பட்டியலிலேயே இருக்க வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வு தேவையற்றது.

இது மாணவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் உயிரையும் பறித்து வருகிறது. மேலும் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு கனிம வளங்கள் கொண்டு செல்வது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. கனிம வளங்களை கொண்டு செல்லும் வாகனங்களை தடுக்கும் நடவடிக்கை மாநில அரசுக்கு இல்லை. இதனை தடுக்க மத்திய அரசு தான் முன்வர வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

நீட் தேர்வு பயிற்சிக்காக 20 லட்சம் செலவு… வசதியில்லாத பெற்றோர்களால் அதனை செய்ய முடியுமா..?

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. 2016 -ம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட நீட் எனப்படும் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு எதிராக பாஜகவை தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன. நீட் தேர்வுக்கு விலக்கு கோரி முந்தைய அதிமுக ஆட்சியிலும், தற்போதைய திமுக ஆட்சியிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

தற்போது திமுக அரசு கொண்டு வந்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான நீட் தேர்வு முடிவுகளில் சாதித்த மாணவர்கள், பெற்றோருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடிய நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில் சேலத்தை சேர்ந்த மாணவியின் தந்தை நீட் தேர்வு பயிற்சிக்காக தனது மகளுக்கு 20 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ததாகவும், வசதி இருக்கும் தன்னால் அந்த செலவை செய்ய முடிந்தது.

அதேவேளையில் மருத்துவக் கல்வி கனவுடன் இருக்கும் மாணவர்களின் வசதியில்லாத பெற்றோர்களால் அதனை செய்ய முடியுமா? எப்போது நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்திடுவீர்கள் என்று அம்மாசியப்பன் கேட்க, இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத ஆளுநர் மாளிகை அதிகாரிகள் அந்த பெற்றோரிடமிருந்து மைக்கை வலுக்கட்டாயமாக பறித்துள்ளனர். இதற்கு பதிலளித்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி ஒருபோதும் தான் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன் என தெரிவித்தார்.