விஜயலட்சுமி கண்ணீர் வீடியோ: நான் பாலியல் தொழிலாளியா சீமான்.. எனது கண்ணீர் உன்னை சும்மா விடாது..!

நான் பாலியல் தொழிலாளியா, எனது கண்ணீர் உன்னை சும்மா விடாது. சீமான் இனி நன்றாகவே இருக்க மாட்டார். இனி நிம்மதியாகவும் இருக்க முடியாது. என்னுடைய கண்ணீர் என்ன செய்ய போகிறது என பார் என விஜயலட்சுமி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் ஒன்றை அளித்து இருந்தார். அந்த வழக்கு தற்போது சூடுபிடித்து உள்ளது. இதுதொடர்பாக சீமான் வீட்டில் நடைபெற்ற சண்டை, விஜயலட்சுமியின் அடுத்தடுத்த வீடியோக்கள் என விறுவிறுப்பு நாளுக்கு நாள் அதிகாித்து வருகிறது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக சீமான் புறப்பட்டுச் சென்றார். அப்போது, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம், சீமான் பேசுவதையெல்லாம் கேட்டுக் கொண்டு அவரது கட்சியில் பெண்கள் எப்படித்தான் இருக்கிறார்களோ? என கனிமொழி கூறியிருப்பது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான், “என்னை பாலியல் குற்றவாளி என சொல்வதற்கு நீங்கள் யார், நீங்கள் என்ன நீதிபதியா, என் மீது புகார் கொடுத்துள்ள நடிகை ஒரு பாலியல் தொழிலாளி. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.

அவர்தான் பெண், அவருக்கு மட்டும்தான் மனமிருக்கிறதா, அவருக்கு மட்டும்தான் காயம்படுமா? என் வீட்டில் பெண்கள் இல்லையா, என் தாய், என் சகோதரிகள் எல்லாம் இல்லையா, என்னை நேசிக்கும் மனைவி இல்லையா? அவருக்கெல்லாம் காயம்படாதா? நான் கேட்டதில் உங்களுக்கு கண்ணியம் குறைந்துவிட்டது என்றால் நீங்கள் செய்யும் செயலுக்கு என்ன பெயர், அரசியல் ரீதியாக எதிர்கொள்ள பயந்து என்னை பார்த்து திமுகவினர் நடுங்குகிறார்கள். வழக்கு விசாரணையில் இருக்கும் போது என்னை எப்படி குற்றவாளி என கூற முடியும்? என்னை அசிங்கப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்திலேயே தொடர்ந்து அவதூறு பரப்பி செயல்பட்டு வருகிறார்கள்.

Enjoyment without responsibility என்று உங்களது தலைவர் பெரியார்தான் சொல்லியுள்ளார். அதைத்தானே நானும் செய்துள்ளேன். அப்படி பார்த்தால் உங்கள் தலைவர் வழியில்தான் நான் நடந்துள்ளேன். இது எப்படி தவறு, இதற்கு கனிமொழி உள்ளிட்ட திமுகவினர் என்ன பதில் சொல்ல போகிறார்கள்? என சீமான் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட விஜயலட்சுமி தற்போது வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில்,” நான் என்ன பாலியல் தொழிலாளியா சீமான். என்னை பாலியல் தொழிலாளி என்று எப்படி சொல்லலாம். நான் பாலியல் தொழிலாளி என்றால், எதற்காக பெங்களூருவில் என்னுடைய சகோதரியுடன் கஷ்டப்பட போகிறேன்?. இந்த நாள் வரை நீ தப்பித்து இருக்கலாம். ஆனால் இனி நீ தப்பிக்கவே முடியாது. என்னுடைய கண்ணீர் உன்னை சும்மா விடாது. என்ன செய்ய போகுது பார்” என விஜயலட்சுமி வேதனையில் கண்ணீர் விட்டபடி வீடியோவில் பேசி இருந்தார். அவரது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

விஜயலட்சுமி புதிய வீடியோ: அந்த பொம்பளய நேர்ல வரச் சொல்லுங்கனு சொல்றீங்க..! நான் ரெடியா இருக்கேன் சீமான்..!

அந்த பொம்பளய நேர்ல வரச் சொல்லுங்கனு சொல்றீங்க. நான் இங்க தான் இருக்கேன் சீமான். நேர்ல வாங்க.. உங்கள நேர்ல பாத்து, என்ன பாத்தா எப்படிடா இருக்கு னு கேக்க நான் ரெடியா இருக்கேன் என விஜயலட்சுமி புதிய வீடியோ வெளியிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ஆம் ஆண்டு காவல்துறையில் புகார் அளித்தார். சென்னை வளசரவாக்கம் காவல்துறை இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் சீமான் மீது அளித்த புகாரை நடிகை விஜயலட்சுமி திடீரென வாபஸ் பெற்றார். இதனை தொடர்ந்து, விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனை சட்டம் 376-வது பிரிவின்படி வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சீமான் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், “விஜயலட்சுமி இந்த வழக்கை திரும்பப் பெற்றாலும், பாலியல் வன்கொடுமை என்ற தலைப்பில் விசாரிக்க காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. சர்வ சாதாரணமாக இந்த வழக்கை முடித்து விட முடியாது” என்று கூறி சீமானின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும் சீமான் மீது தொடரப்பட்ட வழக்கை, 12 வார காலத்திற்குள் முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். திருமணம் செய்து கொள்வதாக கூறி உறவில் இருந்து தன்னிடம் பெருந்தொகை பெறப்பட்டதாகவும், 6 முறை கருக்கலைப்பு செய்யப்பட்டதாகவும் விஜயலட்சுமி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். எனவே இந்த வழக்கைப் பொறுத்தவரை சீமான் மீதான புகாரை எளிமையாக விட்டு விட முடியாது எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் இன்று காலை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சென்னை, வளசரவாக்கம் காவல்துறை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், இன்று சீமான் நேரில் ஆஜராகாத நிலையில் அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகினர். இந்நிலையில் நாளை சீமான் ஆஜராக அவரது வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது.

காவல்துறையினர் சம்மன் ஒட்டிய சில மணி நேரத்தில், அதனை சீமான் ஆதரவாளர் கிழித்து எறிந்தார். இதுதொடர்பாக காவல்துறை கேட்டபோது ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பாக மாறியது. இதையடுத்து காவல்துறையினரை தாக்க முயன்றதாக சீமான் வீட்டு காவலாளி கைது செய்யப்பட்டார். இதனால் சீமான் வீட்டின் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், நடிகை விஜயலட்சுமி பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் என்னை ஏமாற்றாதீங்க.. எனது பாவத்தை வாங்கி கொள்ளாதீர்கள், சீமான் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் விஜயலட்சுமி. அந்த வீடியோவில், “முதலில் என்னை யார் என்றே தெரியாது என சீமான் கூறினார். 2023-ல் பேச்சுவார்த்தைக்கு வந்தபோது பேசியபடி மாதம் ரூ.50,000 அனுப்பி வைத்தார். முதலில் என்னை காங்கிரஸ் அழைத்து வந்ததாகவும், பிறகு பாஜக அழைத்து வந்ததாகவும், தற்போது திமுக அழைத்து வந்ததாகவும் சீமான் கூறுகிறார்.

உங்க பொன்னான வாயால தான் என்ன பொண்டாட்டி… பொண்டாட்டி என்று அழைச்சீங்க. அப்பறம் என்கிட்ட வீடியோவும் கேட்டீங்க.. இப்போ என்ன நான் திமுக தான் என்னை அழைச்சிட்டு வந்தீங்கனு சொல்றீங்க. திமுக ஒன்னும் போன வரும் என்னிடம் வந்து மாதம் ரூ.50 ஆயிரம் கொடுக்கல. இப்போ என்னனா, அந்த பொம்பளய நேர்ல வரச் சொல்லுங்கனு சொல்றீங்க. நான் இங்க தான் இருக்கேன் சீமான்.

நேர்ல வாங்க.. உங்கள நேர்ல பாத்து, என்ன பாத்தா எப்படிடா இருக்கு னு கேக்க நான் ரெடியா இருக்கேன். 2 நாளைக்கு முன்னாடி கூட பேச்சுவார்த்தைக்கு ஆள் அனுப்பிட்டு, அப்போ பிரஸ் மீட்ல என்னைய பத்தி பேசிருக்கீங்க. நான் அப்படி, இப்படினு பேசிருக்கீங்க. என்னோட பாவம் சும்மா விடாது. இன்னும் என்னலாம் பண்ணப்போகுது பாருங்க. சீமான் இந்த வீடியோவை நிச்சயம் பார்க்கணும்” என விஜயலட்சுமி பேசியுள்ளார்.

நான் சாரி கேட்கிறேன் ப்ளீஸ்..! சீமான் மனைவி.. என்னங்க சாரி..!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டு காவலாளி கைது செய்யப்பட்ட நிலையில், அவரை அழைத்து செல்லும் போது, சீமான் மனைவி கயல்விழி காவல்துறையினரிடம் மன்னிப்பு கேட்டார். பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்த விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோர்ட் ஒட்டும் சம்மனை கிழிக்க கூடாது என்ற விதி உள்ளது.

ஆனால், அதை மீறி நடிகை பாலியல் வழக்கில், சீமான் விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய நேரிடும் என அவரது வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்டது. சம்மன் கிழித்தது குறித்து விசாரணை மேற்கொள்ள வந்த காவல் ஆய்வாளரை சீமான் வீட்டு காவலாளி தாக்கியதால் அவரை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தது.

சீமான் காவலாளி மிரட்டல் விசாரணைக்கு வந்த காவல்துறையினரை சீமான் வீட்டின் காவலாளி தாக்கியதுடன் துப்பாக்கியை காட்டி மிரட்டல் விடுத்தார். இதையடுத்து காவல்துறை அங்கே வந்து காவலாளி சுபாகர், அமல்ராஜ் இருவரையும் கைது செய்தனர். அதோடு அவரின் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். சீமான் நாளை காலை விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீமான் ஓசூரிலுள்ள நிலையில் சீமான் வீட்டு காவலாளி கைது செய்யப்பட்ட நிலையில், அவரை அழைத்து செல்லும் போது, சீமான் மனைவி கயல்விழி போலீசாரிடம் மன்னிப்பு கேட்டார். அதற்கு போலீஸ் அதிகாரி.. என்னங்க சாரி.. என்ன சாரி.. விசாரிக்க வந்த காவல்துறை அதிகாரியிடம் இப்படித்தான் செய்வீர்களா? என்று கடுமையாக கேள்வி எழுப்பினார். இதையடுத்து கயல்விழி அந்த காவல்துறை அதிகாரியிடம் சாரி கேட்டபடியே பின் தொடர்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சீமான்: தமிழகத்துக்கு நிதி வழங்கவில்லை என புலம்புவதை விட வரி செலுத்துமாட்டோம் எனக் கூற வேண்டும்..!

“நிதி தர மறுக்கும் மத்திய அரசுக்கு வரி செலுத்த மாட்டோம் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஓசூரில் பேசினார். நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் ஓசூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன் சீமான் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது, தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழி கொள்கை தமிழகத்துக்கு நிதி தராமல் வஞ்சிப்பது ஆகியனவற்றைக் கண்டித்து நாம்தமிழர் கட்சி சார்பில் தன்னிச்சையாக போராட்டம் செய்வோம். ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, ஒரே வரி, ஒரே கல்விக் கொள்கை,தொகுதி சீரமைப்பு இதனால் நாடு வளர்ந்துவிடும் என்பது எல்லாம் வேடிக்கையாக உள்ளது. தேர்தலில் சீர்திருத்தம் செய்வது அதிகமான வேலையாக உள்ளது.

இந்தியா, நைஜீரியா இந்த இரு நாடுகள் தான் எலக்ட்ரானிக் வாக்கு பதிவுமுறை வைத்துள்ளது. இந்த இரு நாடுகளுமே ஊழலில் மோசமான நாடுகள். மைக்ரோ எலக்ட்ரானிக் சிப்பை சீனா தான் தயாரித்தது. ஆனால் அந்த நாடே பயன்படுத்தவில்லை. அமெரிக்காவும் எலக்ட்ரானிக் முறையை பயன்படுத்துவதில்லை. இதனால், எலக்ட்ரானிக் வாக்கு பதிவுமுறையை ஒழித்துவிட்டு வாக்குச்சீட்டு முறையில் வாக்களிக்க வேண்டும். ஒரு நபர் இரு தொகுதிகளில் போட்டியிடுவதை தவிர்க்க வேண்டும்.

ஒரு பதவியில் உள்ளவர் மற்றொரு பதவிக்கு போட்டியிடுவதை தவிர்க்க வேண்டும். இடைத்தேர்தல் முறையை நீக்க வேண்டும். இரண்டாவதாக வந்தவரை வெற்றி பெற்றதாக அறிவித்து மீதமுள்ள காலங்களில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். இது போன்ற மாற்றங்கள் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும். மத்தியில் ஆளும் எந்த தேசிய கட்சிகளாக இருந்தாலும் தமிழகத்தில் உள்ள வளங்களை சுரண்டிவிட்டு நிதி தர மறுக்கின்றனர். உரிமை எனும் வரும் போது முற்றிலும் மறுத்து விடுகின்றனர்.

பேரிடர்களுக்கு நிதி வழங்கவில்லை. தமிழகம்- கர்நாடகா இரு மாநிலங்களுக்கும் இடையே நதிநீர் உரிமை பெற்றுக் கொடுப்பதிலும் நடவடிக்கை எடுப்பதில்லை. இந்த பிரச்சினை இருந்தால் தான் அவர்களால் அரசியல் செய்ய முடிகிறது. பிஹார் மற்றும் ஆந்திராவில் பாஜகவுக்கு ஆதரவு தேவைப்படுவதால், அந்த மாநிலங்களுக்கு தாராளமாக நிதி வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் அவர்களுக்கு ஆதரவு இல்லை என்பதால் நிதி தரமறுக்கிறது.

இதனை மனதில் வைத்துக்கொண்டு தேர்தலில் தமிழக மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கக்கூடாது. ஆனால் தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை. தமிழகத்துக்கு நிதி வழங்கவில்லை என புலம்புவதை விட வரி செலுத்துமாட்டோம் என கூற வேண்டும் என சீமான் தெரிவித்தார்.

சீமான் சவால் “நாதகவை தாண்டி தமிழகத்தில்இந்தி மொழியை திணித்து விடுங்கள், பார்ப்போம்…!”

“தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியைத் தாண்டி இந்தி மொழியை திணித்து விடுங்கள், பார்ப்போம்!” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம்,  ஆற்காடு அடுத்த திமிரி தனியார் மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பு மறுசீராய்வு மற்றும் புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களின் கேள்விக்கு சீமான் பதிலளித்தார்.

அப்போது, மத்திய அரசுக்கு மற்ற மாநிலங்களை விட அதிகளவில் நாம் வரி செலுத்துகிறோம். ஆனாலும் நமக்கு போதிய நிதியை அவர்கள் அளிக்கவில்லை என்று திமுக ஆட்சியாளர்கள் புலம்புகின்றனர். இதற்கு ஏன் அவர்களுக்கு ஆட்சி, அதிகாரம். பிஹார் மாநிலத்தால் பெற முடிகிறது. உங்களால் முடியவில்லையா? நாதக ஒரு ஜனநாயக கட்சி. இதில், பொறுப்பாளர்கள் கொள்கை, கோட்பாடுக்கு உடன்பட்டு வருகிறார்கள். பின்னர், முரண்பாடு காரணமாக வெளியேறுகிறார்கள். இது கட்சி பிரச்சினை. அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

தமிழகத்தில் இந்தி மொழியை வலுகட்டாயமாக திணிக்கும் போக்கை பாஜக அரசு கைவிட வேண்டும். மொழி பிரச்சினைக்காக பல்வேறு போராட்டகளை சந்தித்துள்ளது தமிழகம். மற்ற மாநிலங்கள் ஏற்கிறது என்றால், நாங்களும் ஏற்க வேண்டும் என்று அவசியமில்லை. மற்ற கட்சிகளை விடுங்கள். தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியைத் தாண்டி இந்தி மொழியை திணித்து விடுங்கள், பார்ப்போம்.

பாஜகவுடன் சேர்ந்து என் மொழியை அழித்தற்கு, திராவிட கட்சிகளுக்கும் பெறும் பங்கு உண்டு. பெரியார் குறித்து நான் அவதூறாக பேசவில்லை. அவர் பேசியதை எடுத்து பேசுகிறேன். அவரை பற்றி இன்னும் பேசவே ஆரம்பிக்கவில்லை அதற்குள் என் வீட்டின் மீது குண்டு போடுகிறார்கள். பேச ஆரம்பித்தால் என்னவாகும்? நான் இருக்கும்போது போடுங்கள், பார்ப்போம்.

2026-ம் ஆண்டு தேர்தல் பணிகளை ஏற்கெனவே தொடங்கி செயல்படுத்தி வருகிறோம். அதுகுறித்த விவரங்களை தேர்தல் நேரத்தில் தெரிவிப்போம். தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதிகளை பெருமளவில் நிறைவேற்றியதாக முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். ஆனால், அதை மக்கள் சொல்லவில்லை. இவர்கள் மக்கள் ஆட்சியை துளியும் செய்யவில்லை. கட்சி, தேர்தல் அரசியல் செய்கிறார்கள். செயல், சேவை ஆட்சியை இந்த ஆட்சியாளர்கள் செய்யவில்லை” என சீமான் தெரிவித்தார்

நாஞ்சில் சம்பத்: சீமான் சாக்கடை ஜென்மம்.. பைத்தியத்தை கைது செய்ய சட்டத்தில் இடமில்லை..!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை, சாக்கடை ஜென்மம் என்றும் பைத்தியங்களை கைது செய்ய சட்டத்தில் இடமில்லை என்றும் திராவிடர் இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கடுமையாக விமர்சித்துள்ளார். கோயம்புத்தூரில் நடைபெற்ற பெரியார் குறித்த கருத்தரங்கில் நாஞ்சில் சம்பத் பேசினார்.

அப்போது, இச்சை வந்தால் தாய், மகளுடன் உறவு வைத்துக் கொள்ளலாம் என பெரியார் பேசியதாக சீமான் பேசினார். அப்போதே சமூக வலைதளத்தில், தாம் செய்வதை எல்லாம் பெரியார் சொன்னதாக பேசுகிறார் சீமான் என பதிவிட்டிருந்தேன்.

தந்தை பெரியாரை இழிவாகப் பேசும் சீமானை ஏன் திராவிட மாடல் அரசு கைது செய்யாமல் இருக்கிறது என என்னிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, பைத்தியங்களை கைது செய்ய சட்டத்தில் இடம் இல்லை என்று பதில் தந்தேன். அத்தகைய பைத்தியத்தை என்ன செய்ய வேண்டும் என்பதை உறவினர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். சீமான் பேசுவதைப் போல தடித்தனமான, தாறுமாறான விமர்சனங்களை பெரியாரின் சீடர்கள் உள்வாங்கி இருக்கிறார்கள்; எதிர்கொண்டு இருக்கிறார்கள்.

பெரியாரை கொச்சைப்படுத்துவதற்கு பாஜக ஒரு வேலைத் திட்டம் வைத்துள்ளது. அந்த வேலைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான குறைந்த கூலிக்கான நபர்தான் சீமான். சீமானுக்கு மேடை போட்டுக் கொடுத்த பாவிகள் இருவர்; ஒருவர் கோவை ராமகிருட்டிணன் மற்றொருவர் கொளத்தூர் மணி. விடுதலைப் புலிகளிடமே மதுவை வாங்கி வர சொன்ன சீமான், தன்னையே விற்பனை செய்யக் கூடியவர்தான்; ஆனால் தமிழா! நீ உன்னை விற்காதே என மேடைகளில் பேசுவார் சீமான்.

மத்திய பாஜக அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் ஏன் தமிழ்நாடு என்ற பெயர் இடம் பெறவில்லை? ஏன் தமிழ்நாட்டுக்கு எந்த திட்டமும் தரவில்லை? எங்கள் தருகிற நிதியில் எங்களுக்கான பங்கை ஏன் தரவில்லை? தேர்தல் வருகிறது என்பதற்காக பீகாருக்கு சலுகை காட்டும் மத்திய அரசு ஏன் தமிழ்நாட்டுக்கு நிதி தர மறுக்கிறீர்கள்? திமுக ஆட்சியை அகற்றும் வரை காலில் செருப்பே அணியமாட்டேன் என சபதம் எடுத்திருக்கிறார் அண்ணாமலை. அவர் சாகும் வரை நிச்சயம் காலில் செருப்பு அணியவே முடியாது; திமுக ஆட்சியை அகற்றவே முடியாது என நாஞ்சில் சம்பத் பேசினார்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறேன் என அறிவித்த காளியம்மாள்..!

நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் பிரகாசம் அவர்கள் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து காளியம்மாள் பிரகாசம் தனது எக்ஸ் பக்கத்தில், இதுவரை இல்லாத கனத்த இதயத்தோடு எழுதுகிறேன். கட்சியில் பயணித்த ஒவ்வொரு கணமும் உண்மையும் நேர்மையுமாய் உளப்பூர்வமாக என் குடும்பத்திற்கும் மேலாக நேசித்து வந்தேன்.

இந்த 6 ஆண்டுகால பயணம் எனக்கு அரசியல் ரீதியான பல அனுபவங்களை கொடுத்துள்ளது. பல உறவுகள் அக்கா, தங்கையாகவும் அண்ணன் தம்பிகளாகவும் கிடைத்ததையும் அவர்கள் என்னுடன் பழகிய விதங்களையும் எண்ணி மகிழ்கிறேன். நமக்கெல்லாம் ஒரே பெருங்கனவுதான். அது தமிழ்த் தேசியத்தின் வெற்றியும் அதனை மக்களிடம் கொண்டு சேர்த்தல் என்னும் உன்னத நோக்கமும் அந்த நோக்கத்தை அடைய வேண்டும் என்ற பாதையிஸ் நானும் ஒரு பகுதியாய் இணைந்து பயணித்ததில் நான் பெருமை கொள்கிறேன்.

ஆனால் இப்பாதை இவ்வளவு சீக்கிரம் முடியும் என நான் கனவிலும் நினைக்கவில்லை. கடந்த 6 ஆண்டுகளாக ஒரு சமூக மாற்றத்திற்காக ஒரு பெண்ணாக இருந்து எவ்வளவு போராட முடியுமோ, என் ஆற்றலையும் மீறி உங்கள் எல்லோர் அன்பாலும், நம்பிக்கையாலும் இந்த களத்தில் நின்றிருக்கிறேன். எனினும் காலத்தின் சூழல் உயிராக எண்ணி, வழிநடந்த நாம் தமிழர் கட்சி எனும் இந்த பாதை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது என்பதை மிகவும் வருத்தத்துடன் கனத்த இதயத்துடனும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கு பயணித்ததில் பலரின் அன்பு, அக்கறை, நம்பிக்கை, என் மீதான அளவற்ற பாசம் என்ற அனைத்தையும் மனதில் நிலை நிறுத்தியுள்ளேன். என்னுடன் இத்தனை நாட்களாக உண்மையாய், உறவாய் பழகிய பயணித்த களத்தில் இன உணர்வோடு நின்று நேர்மையாய் வேலை செய்த அத்தனை உறவுகளுக்கும் உண்மையான உழைப்பாளர்களுக்கும் உலகத் தமிழர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகளுக்கும் நன்றிகளை சொல்வதோடு என் வருத்தங்களையும் பகிர்ந்து கொள்கிறேன் என காளியம்மாள் பிரகாசம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சீமான் 356-வது பிரிவின் கீழ் ஆட்சியை கலைத்தால் தமிழ்நாட்டில் பாஜக ஒரு ஓட்டுகூட வாங்க முடியாது..!

தன்மானம் மிக்க ஒரு இனம். அப்படி திமுகவின் ஆட்சியை கலைத்துவிட்டால் தமிழ்நாட்டில் பாஜக ஒரு ஓட்டுகூட வாங்க முடியாது. அந்த இடத்தில்தான் திமிராக நிற்க வேண்டும். ஆட்சியை கலைத்துவிடு பார்ப்போம் என சொல்ல வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். சென்னையில் சீமான் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, மத்தியில் ஆளும் கட்சிகள், அரசுகள் அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவை பயன்படுத்தி ஆட்சியைக் கலைப்போம் என பூச்சாண்டி காட்டுவார்கள். இந்த பூச்சாண்டிக்குதான் நாம் பயப்படக் கூடாது.

மக்களுக்காக நின்றால் திமுக வெல்லும் 356-வது பிரிவின் கீழ் திமுக ஆட்சியைக் கலைத்துவிடு.. மக்களுக்காக சண்டை போட்டு.. நிதியை தர முடியாதுன்னு மத்திய அரசு சொன்னதால் நாம் நம் வரி வருவாயை தர முடியாது என சொன்னோம்.. ஆட்சியை கலைத்தார்கள்.. சரி மீண்டும் சட்டசபை தேர்தல் வரும்தானே.. அப்போது யார் வெல்வார்கள்? மக்களுக்காக நிற்கிற கட்சி எதுவோ வெல்லும். இந்த இடத்தில்தான் நாம் சமரசம் செய்யக் கூடாது.

பறிபோன உரிமைகள் ஆட்சி கலைப்பு அஞ்சியதால்தான் காவிரி நதிநீர் உரிமை போனது; கச்சத்தீவு பறி போனது; மாநிலப் பட்டியலில் இருந்து கல்வி, பொதுப் பட்டியலுக்குப் போனது. மீண்டும் ஆட்சிக்கு வர முடியாதா? மத்திய அரசு என்னதான் செய்ய முடியும்? ஆட்சியைக் கலைத்தால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாதா? சொல்லுங்க ஆட்சிக்கு மீண்டும் வர முடியாதா? இப்படித்தான் 2009-ல் தமிழினத்தை கொலை செய்த போது பதவிக்கு பயந்து உட்கார்ந்திருந்தோம்.. சிங்களவன் லட்சக்கணக்கில் ஈழத் தமிழரை கொன்று குவித்தான்.

ஆட்சியை கலைத்தால் திமுகதான் வெல்லும் மத்திய அரசை போய்யா.. என்று சொல்லிவிட்டு ஆட்சியை இழந்து மீண்டும் தேர்தலை சந்தித்தால் மக்கள் மறுபடியும் உங்களைத்தான் தேர்வு செய்வான். அப்படி செய்யாமல் இருக்க மானம் கெட்ட, உணர்வு கெட்ட, அறிவு கெட்டவன் தமிழன் அல்ல. தன்மானம் மிக்க ஒரு இனம். அப்படி திமுகவின் ஆட்சியை கலைத்துவிட்டால் தமிழ்நாட்டில் பாஜக ஒரு ஓட்டுகூட வாங்க முடியாது. அந்த இடத்தில்தான் திமிராக நிற்க வேண்டும். ஆட்சியை கலைத்துவிடு பார்ப்போம் என சொல்ல வேண்டும்.

யார் பிரிவினைவாதி? தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானதே பாஜகவும் காங்கிரஸும்தான். இது எங்கள் நிலம். தமிழர் நிலம். நாங்கள் யாருக்கு தேசத்துரோகிகள்? இது என்ன இந்தி பேசுகிறவன் நாடா? எவனை கேட்டு இந்தி திணிப்பை நடத்துகிறீர்கள்? பல மொழி பேசுகிற மக்களின் தேசம் இது.. ஒரு 4 மாநிலத்தில் பேசப்படுகிறதா இந்தி மொழி? என் வரியை வைத்துக் கொண்டு தரவே முடியாது என்பது பிரிவினையை தூண்டுகிறதா? தேசப்பற்றை உருவாக்குகிறதா? யார் பிரிவினையை தூண்டுவது? இந்தியாவின் அதிக வருவாய் தருவதில் 2-வது பெரிய மாநிலம் என் தமிழ்நாடு. என் நிதியை வைத்துக் கொண்டு தர மறுக்கும் நீதிதான் தேச ஒருமைப்பாட்டை சிதைப்பது? என சீமான் தெரிவித்தார்.

பி.கே. சேகர்பாபு கருத்து: காளியம்மாள் வெளியே நாதக..! உள்ளே திமுகவா..!?

காளியம்மாள் திமுகவில் இணைந்தால் அவரை ஏற்பதா வேண்டாமா என்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின்தான் முடிவு செய்வார் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் மாவட்டம் மணப்பாட்டில் நடைபெறும் உறவுகள் சங்கமம் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்கும் காளியம்மாளின் பெயர் சமூக செயற்பாட்டாளர் என குறிப்பிட்டு இருந்தது.

இதனால் காளியம்மாள் நாதக-வில் இருந்து விலகிவிட்டாரா என்ற கேள்வி எழுந்தது. அதை விட அவர் திமுகவில் இணைகிறாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்த விழாவில் திமுக, காங்கிரஸ் கட்சியினர் எல்லாம் கலந்து கொள்கிறார்கள். இது குறித்து காளியம்மாள் கூறுகையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் முடிவை விரைவில் அறிவிப்பேன் என தெரிவித்து இருந்தார்.

இது குறித்து சீமானிடம் கேட்ட போது கட்சிக்கு யார் வந்தாலும் வரவேற்கிறோம். அது போல் போனால் போகட்டும் என வழியனுப்பி வைக்க வேண்டும். இலையுதிர்காலம் போல் எங்கள் கட்சிக்கு இது களையுதிர்காலம் என தெரிவித்திருந்தார். எனவே காளியம்மாள் எந்த கட்சியில் இணைய போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. காளியம்மாள் மீது சீமான் அண்மைக்காலமாக கடும் விமர்சனங்களை முன் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்று பி.கே. சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் திமுகவில் இணைய போகிறாரா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். கட்சியில் இருந்து செல்வோர் செல்லலாம் என சீமானே சிக்னல் கொடுத்துவிட்டாரே! அப்படி வந்தால் காளியம்மாளை ஏற்பது குறித்து முதல்வர் முடிவு எடுப்பார் என பி.கே. சேகர்பாபு தெரிவித்தார்.

வருண்குமார்: சீமான் அவர் ஒரு மைக் புலிகேசி…! தரம் குறைந்த மனிதர்..!

நான் எனது மனைவியை விவாகரத்து செய்துள்ளதாக தரம் தாழ்ந்த தகவல்களை சீமான் தரப்பு பரப்பி வருகிறது சீமான் ஒரு மைக் புலிகேசி எனவும் திருச்சி காவல்துறைத் துணைத்தலைவர் வருண்குமார் கிண்டல் செய்துள்ளார். திருச்சி காவல் கண்காணிப்பாளராக இருந்த வருண்குமார், நாம் தமிழர் கட்சி பிரமுகரான சாட்டை துரைமுருகனை கைது செய்து சிறையில் அடைத்து திட்டமிட்டு பழிவாங்குவதாகவும், சீமான் புகார் கூறியிருந்தார். மேலும் குறிப்பிட்ட சில சாதியினரை சாதி வன்மத்துடன் காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அணுகி வருவதாக சீமான் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே அதாவது வருண்குமாரின் மனைவியுமான ஆகியோரை சில எக்ஸ் கணக்குகளில் இருந்து ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டன. தொடர்ந்து வருண்குமார் ஐபிஎஸ் தரப்பு சீமானுக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் அது தொடர்பாக 15 விளக்கத்தை சீமான் அளித்திருந்தார்.

ஆனால் தங்கள் கேள்விகள் எதற்கும் பதில் அளிக்கவில்லை எனக் கூறி வருண்குமார் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் சீமான் மீது வழக்கு தொடர்ந்தார். மேலும், புகார் தொடர்பாக கடந்த 30-ஆம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் வருண்குமார் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இதற்கிடையே வருண்குமார் மற்றும் அவரது மனைவி வந்திதா பாண்டே ஆகியோரை காவல்துறைத் துணைத்தலைவராக பதவி உயர்வு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. தற்போது வருண்குமார் திருச்சி காவல்துறைத் துணைத்தலைவராகவும், வந்திதா பாண்டே திண்டுக்கல் காவல்துறைத் துணைத்தலைவராகவும் உள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கடந்த 8-ஆம் தேதி திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக வருண்குமார் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். இதனை குறித்துக் கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்து இருந்தார். இந்நிலையில், காவல்துறைத் துணைத்தலைவர் வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணை இன்று திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டார்.

ஆனால் சீமான் ஆஜராகவில்லை. அதே நேரத்தில் வருண்குமார் ஆஜராகி இருந்தார். தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,” சீமான் மீது நான் தொடர்ந்த அவதூறு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அதன் காரணமாக இது தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. அதே நேரத்தில் எனது மனைவி வந்திதா பாண்டே திண்டுக்கல்லில் காவல்துறைத் துணைத்தலைவராக இருக்கிறார். அவருக்கும் எனக்கும் விவாகரத்து நடந்து விட்டதாக சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சியினர் தனிப்பட்ட முறையில் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே அவர்கள் தரக்குறைவாக விமர்சித்ததால் தான் வழக்கு தாக்கல் செய்திருக்கிறேன். நிச்சயம் அதனை வாபஸ் பெற போவதில்லை. வாபஸ் பெறுவது போல் இருந்தால் நான் வழக்கு தொடர்ந்து இருக்க வேண்டும், நிச்சயம் நீதி கிடைக்கும் என நம்புகிறேன். சீமான் பற்றி எல்லாம் பேச விரும்பவில்லை. அவர் ஒரு மைக் புலிகேசி. தரம் குறைந்த மனிதர் ” என வருண்குமார் விமர்சித்தார்.