எடப்பாடி பழனிசாமி: நயினார் நாகேந்திரன் விரும்பினால் என்ன செய்வது..! தன்மானம் தான் முக்கியம்..!

‘அதிமுகவுடன் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி தான் என்று நயினார் நாகேந்திரன் விரும்பினால் மட்டும் என்ன செய்வது, எங்களுக்கு தன்மானம்தான் முக்கியம்’ என எடப்பாடி பழனிசாமி தெவிரித்துள்ளார். சுதந்திர போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 153-வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நெல்லையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், அதிமுக, பாஜக இடையே இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சிதான் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுகவுடன் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி தான் என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறியிருப்பது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ‘அவர் விரும்பினால் மட்டும் என்ன செய்வது.

அதிமுக தலைமையை விமர்சிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அதிகாரத்துக்கு நாங்கள் என்றுமே அடிமையாக இருந்ததில்லை. எங்களுக்கு என மரியாதை, தனித்துவம் உள்ளது. தலைவர்களைப்பற்றி அவதூறாக பேசுகிறார்கள். மனசாட்சி உள்ளவர்கள் யாரும் இதனை ஏற்க மாட்டார்கள். வெற்றி தோல்வி என்பது வேறு, தன்மானம் தான் முக்கியம்’ என எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.

 

நயினார் நாகேந்திரன்: பாஜக – அதிமுக இடையே இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி..!

சுதந்திர போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 153-வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நெல்லையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், தமிழக பாஜக பணிகளை கண்காணிப்பது தொடர்பாக கட்சித்தலைமை முடிவு செய்து ஒருங்கிணைப்பு குழுவை அமைத்திருக்கிறது. அதில் எனது பெயர் இடம்பெறவில்லை. தமிழகத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை கேட்டு அறிவதற்காக அந்த குழு தலைவர் டெல்லி சென்றுள்ளார்.

விஜயதரணி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவுக்கு வந்துள்ளார். ஆகையால் அவருக்கு பாஜக வில் ஏதாவது ஒரு பதவி கொடுத்திருக்க வேண்டும். அதில் தற்போது காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும் அவர் வருத்தப்பட வேண்டாம். வரும் காலத்தில் அவருக்கு உரிய பதவி கொடுக்கப்படும். கட்சியில் எனக்கும் பதவி இல்லை. அதிமுகவில் பல உயர்ந்த பதவிகளில் இருந்து விட்டு பாஜகவுக்கு வந்தேன். பின்னர் மாநில துணைத்தலைவர் பதவி கொடுத்தார்கள். தற்போது சட்டமன்ற குழு தலைவராக மட்டும் இருக்கிறேன். அதிமுக, பாஜக இடையே இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சிதான் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

நயினார் நாகேந்திரன் வேட்பாளர் பட்டியலில் இருந்து அவரது பெயரை நீக்க புகார்..!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ரகசிய தகவலின் பேரில், சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணி அளவில் நெல்லை எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் புறப்படும். இந்த ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். இந்நிலையில், இந்த ரயிலில் நெல்லைக்கு பல கோடி ரூபாய் பணத்தை கொண்டு செல்ல சிலர் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைக்க தகவலின் பேரில் விரைந்த பறக்கும் படை அதிகாரிகள் ஏ.சி. பெட்டியில் பயணம் செய்த சென்னை கொளத்தூர் திருவிக நகரை சேர்ந்த சதீஷ், அவரது தம்பி நவீன், தூத்துக்குடி மாவட்டம் ச்ர்வைகுண்டத்தை சேர்ந்த பெருமாள் ஆகிய 3 பேர் கொண்டுவந்த பைகளை போலீஸார் சோதனை செய்தபோது, அதில் கட்டு கட்டாக பணம் இருந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால், பணத்தை காவல்துறை பறிமுதல் செய்தனர். அவர்கள் 3 பேரையும் தாம்பரம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

பாஜக உறுப்பினர் அடையாள அட்டைமற்றும் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ அடையாள அட்டை நகல் வைத்திருந்த சதீஷிடம் விசாரித்தபோது, ‘‘சென்னை புரசைவாக்கத்தில் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டலில் வேலை செய்கிறேன். ஜெய்சங்கர் என்பவர் இந்த பணத்தை கொடுத்து அனுப்பினார். என்னுடன் வந்திருக்கும் பெருமாள், திருவல்லிக்கேணியில் உள்ள ஓட்டலில் இருந்து ஆசைத்தம்பி என்பவர் கொடுத்து அனுப்பிய பணத்துடன் வந்துள்ளார். நெல்லையில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க எங்களிடம் பணம் கொடுத்து அனுப்பப்பட்டது’’ என்று கூறியதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான விடுதி, சாலிகிராமத்தில் உள்ள அவரது உறவினர் முருகன் வீடு ஆகிய இடங்களில் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். திருநெல்வேலி மேலப்பாளையம் அடுத்த குறிச்சி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த தனியார் மருத்துவமனை மேலாளரும், பாஜக ஆதரவாளருமான கணேஷ்மணி வீட்டிலும் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அங்கு உரிய ஆவணங்களின்றி இருந்த ரூ.2 லட்சம் ரொக்கம், 100 வேட்டிகள், 44 நைட்டிகள், 41 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இதுதொடர்பாக திருநெல்வேலி தொகுதி பொது பார்வையாளர் சோனாலி பொன்ஷே வயங்கங்கரிடம் திருநெல்வேலி மாநகர திமுக வழக்கறிஞர் அணி தலைவர் ஜாகிர் உசேன் புகார் கொடுத்துள்ளார். அதில், ‘நயினார் நாகேந்திரன் வெற்றி பெறுவதற்காக முறைகேடு செய்து வருகிறார். வாக்காளர்களுக்கு கொடுக்க அதிக அளவில் பணத்தை செலவிடுகிறார். வேட்பாளர் பட்டியலில் இருந்து அவரது பெயரை நீக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க. பிரமுகரிடம் ரூ.4 கோடி பறிமுதல்..! வருமான வரித்துறை விசாரணைக்கு பரிந்துரை..!.

சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணி அளவில் நெல்லை எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் புறப்படும். இந்த ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். இந்நிலையில், இந்த ரயிலில் நெல்லைக்கு பல கோடி ரூபாய் பணத்தை கொண்டு செல்ல சிலர் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைக்க தகவலின் பேரில் விரைந்த தாம்பரம் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி நெல்லை விரைவு ரயிலில் கொண்டு செல்ல முயன்ற ரூ .4 கோடியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

இந்த 3 பேரில் ஒருவர் நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான விடுதி மேலாளர் என்பது தெரிய வந்துள்ளது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் விருகம்பாக்கம் காவல்துறை சோதனை மேற்கொண்டனர்.

நயினார் நாகேந்திரன் உறவினரான விருகம்பாக்கம் முருகன் என்பவரின் வீட்டில் இரவு 11.30 மணிக்கு தொடங்கி அதிகாலை 2.30 மணி வரை இந்த சோதனை நடைபெற்றது. இது தவிர திருவல்லிக்கேணி, புரசைவாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனின் குடும்பத்தினருக்கு சொந்தமான ஹோட்டல்களிலும் காவல்துறை சோதனை நடத்தினர். மேலும் பா.ஜ.க. பிரமுகரிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டு வருமான வரித்துறை விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.

நெல்லை எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலில் ரூ.4 கோடி சிக்கியது.. !

சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணி அளவில் நெல்லை எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் புறப்படும். இந்த ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். இந்நிலையில், இந்த ரயிலில் நெல்லைக்கு பல கோடி ரூபாய் பணத்தை கொண்டு செல்ல சிலர் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைக்க தகவலின் பேரில் விரைந்த தாம்பரம் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி நெல்லை விரைவு ரயிலில் கொண்டு செல்ல முயன்ற ரூ .4 கோடியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். புரசைவாக்கம் தனியார் விடுதியின் மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ் உள்ளிட்ட 3 பேர் இதில் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக கைதானவர்கள் வாக்குமூலம் வெளியாகி உள்ளது. நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான புரசைவாக்கத்தில் உள்ள ப்ளூ டைமண்ட் ஹோட்டல் பணியாளர்கள் பணத்தை எடுத்துச் சென்று உள்ளனர் என விசாரணையில் தெரியவந்தது. மேலும் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் விருகம்பாக்கம் காவல்துறை சோதனை மேற்கொண்டனர்.