செல்வப்பெருந்தகை: தலைவர்களுக்கு பஞ்சம் இருக்கிற பாஜகவில் அண்ணாமலை தலைவராகி விட்டார்..!

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நீண்ட காலமாகவே விருப்பு வெறுப்பின் அடிப்படையில் ஆதாரமற்ற கருத்துகளை கூறி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணிபுரிந்த அவர், பதவியை விட்டு விலகி பாஜகவில் சேர்ந்து சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு தோல்வியடைந்து, பதவி உயர்வு பெற்று தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை அமர்ந்தவர்.

பாஜகவில் நீண்டகாலம் பணியாற்றிய அனுபவமோ, அமைப்பு ரீதியான தொடர்பு எதுவுமே இல்லாமல் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று அபத்தமாக பேசக் கூடிய அண்ணாமலை நாள்தோறும் ஊடக வெளிச்சம் பெறுவதற்காக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை நேற்று நந்தனத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் குற்றம் சுமத்தி பேசியிருக்கிறார்.

இந்தியாவுக்கு விடுதலை பெற்றுத் தந்த காங்கிரஸ் கட்சிக்கு 1971 முதல் திராவிட கட்சிகளுக்கு அடிமையாக இருப்பதாக கூறியிருக்கிறார். யாருக்கு யார் அடிமையாக இருந்தார்கள் என்பதை வரலாற்றுப் புரிதல் இல்லாத அண்ணாமலைக்கு சில கருத்துகளை ஆதாரப்பூர்வமாக, புள்ளி விவரங்களோடு கூற விரும்புகிறோம். பெருந்தலைவர் காமராஜர் மறைவிற்கு முன்பு திமுக எதிர்ப்பு அரசியலில் முழு வீச்சில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி 1971 சட்டமன்றத் தேர்தலில் 55 லட்சம் வாக்குகளும், மொத்த வாக்குகளில் 35 சதவிகிதம் தனித்து போட்டியிட்டு பெற்றதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அதற்கு பிறகு அதிமுக உதயமான பிறகு 1977 மக்களவை தேர்தல் நடைபெற்றது. அதில் அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 14 இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. அதற்கு பிறகு 1980 மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மக்களவை தேர்தலில் திமுக 16 இடங்களிலும், காங்கிரஸ் 22 இடங்களிலும் போட்டியிட்டது. இதில் காங்கிரஸ் 20 இடங்களில் வெற்றி பெற்றது.

அதேபோல, 1984 மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 26 இடங்களில் போட்டியிட்டு 25 இடங்களில் வெற்றி பெற்றது. அதேபோல, சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 73 இடங்களில் போட்டியிட்டு 61 இடங்களில் வெற்றி பெற்றோம். 1991 மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் 28 இடங்களில் போட்டியிட்டு 28 இடங்களிலும் வெற்றி பெற்றோம். இதைப்போல, திமுக கூட்டணியில் 2019, 2024 தேர்தல்களில் போட்டியிட்டு சுயமரியாதையோடு தொகுதி பங்கீடு நடைபெற்று காங்கிரஸ் கட்சி வெற்றியை பெற்றிருக்கிறது.

எந்த கூட்டணியிலும் காங்கிரஸ் கட்சி அதிகமான இடங்களை பெற்றதற்கு காரணம் காங்கிரஸ் பங்கேற்கிற கூட்டணிக்கு தான் தமிழக மக்கள் ஆதரவு அளிப்பதால் கூட்டணியில் அதிக இடங்களை காங்கிரஸ் கட்சி பெற முடிந்தது. இதுதான் தமிழக தேர்தல் களத்தின் யதார்த்த நிலை. அதேபோல, தமிழக தேர்தல் களத்தில் 1977 இல் அன்னை இந்திரா காந்தி பதவி விலகியதற்கு பிறகு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டு 27 இடங்களில் வெற்றி பெற்று 20 சதவிகித வாக்குகளை பெற்றது.

1989 சட்டமன்றத் தேர்தல் என்பது திமுக, அதிமுக(ஜெ), அதிமுக(ஜா), காங்கிரஸ் என்று நான்குமுனை போட்டி நடைபெற்றது. அதில் தலைவர் ராஜிவ்காந்தி அவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று கூறி தனித்து போட்டியிட்டு 48 லட்சம் வாக்குகளும், 20 சதவிகித வாக்கு வங்கியும், 26 இடங்களிலும் வெற்றி பெற்றோம். அதேபோல, அதிமுக ஒரு இடத்திற்கு கூடுதலாக 27 இடங்களில் வெற்றி பெற்றது.

ஆனால், பாஜக எந்த தேர்தலிலாவது, எந்த கூட்டணியிலாவது காங்கிரஸ் பெற்றதைப் போல மொத்தம் 39 மக்களவை தொகுதிகளில் 27 தொகுதிகளிலும் போட்டியிட்டு 27 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற சரித்திரம் உண்டா ? அதேபோல, சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு 20 சதவிகித வாக்குகளை பெற்று 26 சட்டமன்ற உறுப்பினர்களை என்றைக்காவது பெற்றிருக்கிறதா ? 2016 சட்டமன்றத் தேர்தலில் பாஜக பெற்ற வாக்குகள் 12 லட்சம். வாக்கு சதவிகிதம் 2.86 தான்.

அதேபோல, 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. சமீபத்தில் நடந்து முடிந்த 2024 மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க.வுடன் சேர்ந்து 23 இடங்களில் பாஜக போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. பாமகவும் வெற்றி பெற முடியவில்லை. ஆனால், 18 சதவிகித வாக்கு வங்கியை பெற்றதாக அண்ணாமலை கூறுகிறார். கூட்டணியில் போட்டியிடுகிற போது எந்த கட்சிக்கு எவ்வளவு வாக்குகள் என்பதை துல்லியமாக கூற முடியாது என்பதை நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளானாக இருக்கிற அண்ணாமலை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

தலைவர்களுக்கு பஞ்சம் இருக்கிற பாஜகவில் அண்ணாமலை தலைவராகி விட்டார். மத்திய அரசில் பாஜக இருப்பதனால் பண பலத்தை கொண்டு அரசியல் நடத்தி வருகிறார். கடந்த காலத்தில் திராவிட இயக்கங்களோடு காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்த போது சுயமரியாதையோடு தான் நடத்தப்பட்டதே தவிர, பாஜகவை போல காங்கிரஸ் கட்சி என்றைக்குமே அடிமைகளாக இருந்ததில்லை.

எனவே, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களே, உங்களது நாவை அடக்கிக் கொள்ள வேண்டும். இல்லையென்றுச் சொன்னால் வருகிற ஒவ்வொரு தேர்தலிலும் தமிழக மக்கள் உங்களது மக்கள் விரோத போக்கிற்கு உரிய பாடத்தை புகட்டுவார்கள். நீங்களாக உங்களை திருத்திக் கொள்ளவில்லை என்றால் மக்கள் உங்களுக்கு வழங்குகிற மரண அடி மூலம் நீங்கள் திருத்தப்படுவீர்கள் என எச்சரிக்கிறேன் என செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

ரஜினிகாந்த் பேச்சு: திமுகவினர் ஆலமரம்..! எந்தப் புயல் அடித்தாலும் தாங்கி நிற்பார்கள்..!..!

நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் அமைந்த கொடியை அறிமுகம் செய்தார். இந்த கொடியில் இரண்டு பக்கம் யானை வைக்கப்பட்டு உள்ளது. நடுவில் வாகை மலர் வைக்கப்பட்டு உள்ளது. அதை சுற்றி ஸ்டார்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த கொடி முழுக்க முழுக்க தமிழ், தமிழ் தேசியம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகின்றது.

நடிகர் விஜய் தனது கட்சி கொடியை அறிமுகப்படுத்திய சில நாட்களிலே, ஒரு காலத்தில் அரசியலுக்கு வருவதாக சொல்லி, பின்னர் பின்வாங்கிய நடிகர் ரஜினிகாந்த்க்கு அழைத்து அவர் வாயால் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பாராட்டி திமுக சார்பாக கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த் பேசினார். அரசியலுக்கு வந்து கடினமாக உழைத்து தனக்கென பாணியை உருவாக்கி உதயநிதி ஸ்டாலின் உள்ளார். தனக்கொரு நல்ல அரசியல் எதிர்காலம் இருக்கு என்று நிரூபிக்கும் வகையில் உதயநிதி செயல்படுகிறார். அதோடு நிற்காமல், எந்த மாதிரியான விமர்சனங்களையும் ஆக்கப்பூர்வமாக எடுத்துக்கொண்டு கையாண்டவர் கலைஞர். தற்போது சிலர் விமர்சனம் செய்கின்றனர்.

ஆனால், பிறர் மனதை நோகடிக்கும் வகையில் விமர்சனங்கள் உள்ளன. பிறர் மனதை நோகடிக்கும் வகையில் விமர்சனங்கள் கூடாது. உலகில் எந்தவொரு தலைவருக்கும் இந்த மாதிரி ஒரு நூற்றாண்டை யாரும் கொண்டாடி இருக்க மாட்டார்கள். கொண்டாடவும் முடியாது திமுகவினர் ஆலமரம் போன்றவர்கள்; அவர்கள் எந்தப் புயல் அடித்தாலும் தாங்கி நிற்பார்கள்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் மிகப்பெரிய வெற்றி” ராஜ்நாத் சிங் ஏன் கருணாநிதியை 30 நிமிடம் புகழ்ந்தார்? ஒரு கட்சியை கட்டி காப்பது என்பது மிக கடினம், அதை சிறப்பாக செய்கிறார் முதலமைச்சர். முதலமைச்சர் கையில் புத்தகத்தை பெற்றதில் பெருமை என்று கூறினார். எப்போதுமே பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய மாணவர்கள் ஒரு பிரச்சனையாக இருக்க மாட்டார்கள். அவர்களை ஈஸியாக சமாளித்து விடுவார்கள். ஆனால் பழைய மாணவர்களை சமாளிப்பது சாதாரண விஷயம் அல்ல. இங்கு ஏகப்பட்ட பழைய ஸ்டூடன்ஸ் உள்ளனர். அவர்கள் சாதாரண பழைய ஸ்டூடன்ஸ் இல்லை. அசாத்தியமானவங்க. எல்லோரும் ரேங்க் வாங்கிவிட்டு வகுப்பறையை விட்டு போகமாட்டேன் என உட்கார்ந்து கொண்டுள்ளனர். அவர்களை சமாளிப்பது எல்லாம் சாதாரணமாங்க, என ரஜினிகாந்த் புகழ்ந்து பேசினார்.

சீமான்: “வருண்குமார் திமுக ஐடி விங்கில் வேலை செய்யக் கூடாது…!”

திருவாரூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, திருச்சி காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் வழக்கு தொடுப்பதாக கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு, “ஏற்கெனவே என் மீது 138 வழக்குகள் உள்ளன. அதை அதிகப்படுத்தி 200 ஆக்கிவிடலாம் என்று நினைக்கிறார். டபுள் செஞ்சுரி அடித்தார் சீமான் என்று வரலாற்றில் வரவேண்டும் அல்லவா. அவர் ஐபிஎஸ் அதிகாரியாக இயங்க வேண்டும். திமுகவின் ஐடி விங்கில் வேலை செய்யக் கூடாது.

நான் பார்க்காத வழக்கா? அவர் அதிகாரத்தின் ஒரு புள்ளி. நான் அதிகாரத்தையே எதிர்த்து சண்டை செய்து கொண்டிருக்கிறேன். மத்திய அரசு, மாநில அரசை எதிர்த்து சண்டை செய்து கொண்டிருக்கிறேன். அகில உலகத்தை எதிர்த்து சண்டை செய்தவரின் மகன் நான். நீ எம்மாத்திரம். ஃஎப்ஐஆர் போடு, என்னத்தையாவது போடு, என் வீட்டில் ஐந்தாறு குப்பைக் கூடைகள் இருக்கிறது, நான் கிழித்துப் போட்டுவிட்டு போய்க்கொண்டே இருப்பேன்,” என சீமான் தெரிவித்தார்.

அண்ணாமலை காட்டம்: எடப்பாடி பழனிசாமி, செல்லூர் ராஜூ, உதயகுமாரை ஊரை தாண்டினால் யாருக்கும் தெரியாது..!

மதுரை, முனிச்சாலையில் நகர் பாஜக சார்பில் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் தலைமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஐந்து முறை முதலமைச்சராக இருந்த கலைஞருக்கு, பாரதிய ஜனதா மரியாதை செலுத்தும் வகையில் நாணயம் வெளியிடும் நிகழ்ச்சியில் மத்திய அரசு சார்பாக பங்கேற்றோம். எதிரியாக இருந்தாலும் தகுதியான எதிரியை தேர்வு செய்து அவர்களுக்கு மதிப்பளிப்பார்கள் என்பதற்கு அந்த நிகழ்ச்சியே சாட்சி. அதில் நாங்கள் அரசியல் செய்ய மாட்டோம். இதே மரியாதையை MGR நூற்றாண்டு விழாவில் செய்தோம்.

அந்த விழாவில், MGRக்கு 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டபோது, பிரதமர் மோடி கலந்து கொண்டார். MGR நாடு முழுவதும் தெரிய வேண்டிய தலைவர். அவரின் புகழை நாடு முழுவதும் கொண்டு செல்வதற்காகத்தான், பிரதமர் மோடி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியிட்டார். ஆனால், 2017-ல் வெளியிட்ட நாணயத்தை, 2019-ல் தான் அதிமுகவினர் வெளியிட்டார்கள். மோடியின் பக்கம் மக்கள் சென்று விடுவார்கள் என்ற காழ்ப்புணர்ச்சியில் 2 ஆண்டுகள் கழித்து நாணயத்தை வெளியிட்டார்கள்.

எடப்பாடி பழனிசாமி, செல்லூர் ராஜூ, உதயகுமாரை தங்களது ஊர் தாண்டினால் யாருக்கும் தெரியாது. அதிமுகவில் அற்புதமான தலைவர்களாக இருந்த MGR, ஜெயலலிதா ஆகியோருக்கு பின்னால் வந்த தலைவர்களை மக்கள் வேறுபடுத்தி பார்க்கின்றனர். அவர்களிடம் இருந்த நேர்மை, பின்னால் வந்தவர்களிடம் இல்லை. மக்கள் இவர்கள் மீது கடும் எதிர்ப்பில் உள்ளனர் என அண்ணாமலை பேசினார்.

அண்ணாமலை சூட்சுமம்: MGR, ஜெயலலிதா நேர்மை, பின்னால் வந்தவர்களிடம் இல்லை..!

ஜெயக்குமார் சரவெட்டி: சட்டசபையில் 4 பாஜக எம்எல்ஏ.,க்கள் அதிமுக போட்ட பிச்சை..!

கருணாநிதி நாணயம் வெளியீடு விழாவை தொடர்ந்து அதிமுக மற்றும் பாஜக இடையே மோதல் வெடித்துள்ளது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக.,வுக்கும் பாஜகவுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. உதயநிதி, பிரதமர் மோடியை சந்தித்தத்தில் இருந்து நடைபெற்று வரும் சம்பவங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக உள்ளன. கருணாநிதி சிலையை வெங்கய்யா நாயுடுவை அழைத்து வந்து திறந்தார்கள். சோனியாவையோ, ராகுலையோ அழைக்கவில்லை.

லோக்சபா தேர்தல் சமயத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையின் நோக்கம் அதிமுக.,வை மட்டும் குறிவைத்து இருந்தது திமுக.,வை எதிர்க்கவில்லை. திமுகவினருக்கு எதிராக ஊழல் பைல்ஸ் வெளியிட்டார் கவர்னரிடம் மனு அளித்தார். ஆனால் அது தொடர்பாக ஒரு மேல்நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவர் அதன்பின்னர் வலியுறுத்தினாரா? இல்லை. அதெல்லாம் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வருகிறது. வெற்றி பெற்ற திமுக கூட்டணி எம்.பி.,க்கள் டில்லி சென்றார்கள். அங்கு ஒரு வெற்றி கூட்டம் நடந்தது. அதில் ஜே.பி. நட்டாவை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளனர்.

இயக்குநர் விக்ரமன் திரைப்படங்கள் மாதிரி ஒரு குடும்ப சென்டிமென்ட் நிகழ்ச்சியாக நாணயம் வெளியீட்டு விழா நடைபெற்றது. திமுகவும், பாஜகவும் அண்ணன், தம்பி போல் குடும்ப விழாவாக அதை நடத்தினர். ஸ்டாலின் எப்போதும் கருப்பு பேண்ட் தான் போடுவார். ஆனால், அந்த நிகழ்ச்சியில் சந்தன நிற பேண்ட் போட்டு சென்றுள்ளார். கருப்பு பேண்ட் போட்டால், கோ பேக் மோடி, கோ பேக் ராஜ்நாத் சிங் என்பது போலாகிவிடும்.

முளைத்து மூன்று இலை கூட விடவில்லை. அதற்குள் இரட்டை இலையைப் பற்றி அண்ணாமலை பேசுகிறார். இது 50 ஆண்டுகளுக்கு மேலிருக்கும் கட்சி; 31 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி. அதிமுக போட்ட பிச்சையில் சட்டசபையில் 4 பாஜக எம்எல்ஏ.,க்கள் உள்ளனர். சொந்தக் காலும் கிடையாது, செல்வாக்கும் கிடையாது. எதுவுமே இல்லாமல் பாஜக எங்களை பார்த்துப் பேசுவது வினோத வேடிக்கையாக உள்ளது. 2026-ல் தனியாக நின்று ஒரு சீட் தனியாக நின்று ஜெயித்து பாருங்கள்; முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.

ஜெயக்குமார்: விக்ரமன் பணியில் திமுக, பாஜக அண்ணன், தம்பி போல் கருணாநிதி நாணயம் வெளியீடு விழா..!

அண்ணாமலை பதிலடி கருணாநிதிக்கு கும்பிடு போடுவது தவறில்லை..! ஒருவரது காலில் விழுவது தான் தவறு..!

பல்லடம் அருள்புரத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் மக்கள் மேம்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு மையத்தின் கிளையை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று திறந்து வைத்து, மரக்கன்றுகளை நட்டார். தொடர்ந்து பல்லடம் அருகே நாதகவுண்டன்பாளையத்தில் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.என்.எஸ்.பழனிச்சாமி நினைவு மண்டபத்துக்கு வந்து அண்ணாமலை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அத்திக்கடவு – அவிநாசி திட்டம் முழுமையாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி வந்தோம். தற்போது அந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது விவசாயிகளுக்கான வெற்றி. பாஜக அணில் போல் வேலை செய்துள்ளோம். அத்திக்கடவு – அவிநாசி 2-வது திட்டத்தை துவங்க வேண்டும். ஆனைமலை நல்லாறு திட்டம் மற்றும் பாண்டியாறு புன்னம்புழா திட்டத்தையும் கொண்டுவர அரசு தீவிரம் காட்ட வேண்டும்.

பெருமாநல்லுரில் போராட்டத்தின் போது உயிர் நீத்த 3 விவசாயிகளுக்கு பாஜக சார்பில் மணி மண்டபம் கட்டுவோம். கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா மாநில அரசு நடத்திய விழா ஆகும். மத்திய அரசு சார்பில் அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்றார். கருணாநிதிக்கு கும்பிடு போடுவது தவறில்லை. ஒருவரது காலில் விழுவது தான் தவறு. முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆ.பி. உதயகுமார் சசிகலா முன்பு எவ்வாறு நிற்பார் என்பது அனைவருக்கும் தெரியும். பன்முகத் திறன் கொண்ட கருணாநிதியை கும்பிட்டதில் எந்த தவறும் இல்லை. திமுகவை எதிர்க்கிற ஒரே அரசியல் கட்சி பாஜக தான். அமைச்சர் ராஜ்நாத் சிங் வரும்போது அவருடன் கருணாநிதிக்கு செலுத்த வேண்டிய மரியாதையை செலுத்தவே நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.

ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையில் நான் தரகர் என பழனிசாமி கூறுகிறார். கள்ள உறவு என்று கொச்சையான வார்த்தையை தெரிவித்துள்ளார். ஒரு முதிர்ச்சியான அரசியல்வாதி போன்று, அவரது பேச்சு இல்லை. பாஜக கூட்டணி மாமன், மச்சான் கூட்டணியாக உள்ளது. இந்த கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அதிமுக, திமுக பாஜக பங்காளிகள் தான். எந்த பங்காளியுடனும் சேரப்போவதில்லை. எங்கள் தலைமையில் மாமன் – மச்சான் கூட்டணி வேற்றுமையில் ஒற்றுமையாகும். நடிகர் விஜயும் மாமன் – மச்சான் தான். அவர் மாமன் – மச்சான் கூட்டணிக்கு வந்தால் ஏற்போம்,” என அண்ணாமலை பேசினார்.

ஆர்.பி.உதயகுமார்: மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது..!

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் கல்லுப்பட்டி ஒன்றியம் சார்பில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி, கல்லுப்பட்டி, பேரையூர் ரோட்டிலுள்ள சிவன் கோயில் அருகே நடைபெற்றது. மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணிச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கி முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் பேசுகையில், “இன்றைக்கு ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து சூழ்ந்து கொண்டிருக்கிறது. அதைக் காப்பாற்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்து வருகிறார்.

முல்லைப் பெரியாறு அணை குறித்து ஒரு மத்திய அமைச்சர், “முல்லைப் பெரியாறு அணை உடைந்து விட்டால் கேரளா என்ன ஆகும்?” என்று கூறுகிறார். முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது என்று பாதுகாப்பு குழு வல்லுநர்கள் கூறியதை தொடர்ந்து உச்ச நீதிமன்றமும் கூட கூறியுள்ளது. முல்லைப் பெரியாறு அணை தென் மாவட்ட மக்களின் ஜீவாதார உரிமை. அப்படியிருந்தும் முல்லை பெரியாறு அணை குறித்து முதல்வர் வாய் திறக்காமல் மவுன சாமியாராக தான் உள்ளார். இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை?

இன்றைக்கு கருணாநிதிக்கு 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ளார்கள். அது குறித்து எங்களுக்கு வருத்தம் இல்லை. ஆனால், அந்த விழாவுக்கு மத்திய அமைச்சர், இணையமைச்சர், அண்ணாமலை வருகிறார்கள். இதுவரை பாஜக எதிர்ப்பாளராக தன்னை காட்டிக் கொண்ட திமுகவும், அதன் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் வெளிச்சம் போட்டு காட்டவிட்டது. என் அப்பாவுக்கு நாணயத்தை வெளியிட மத்திய அரசையும், அதன் அமைச்சர்களையும், பாஜகவினரை வாருங்கள், வாருங்கள் என்று அழைக்கிறார். ஆனால், இன்றைக்கு நிதி நிலை அறிக்கையில் தமிழகத்துக்கு போதுமான நிதி ஒதுக்காதபோது இப்படி அவரை மத்திய அரசை வலியுறுத்த வில்லை. கீழே இறங்கி சென்று உதவி கேட்கவில்லை.

ஆனால், அப்பாவின் நாணயம் வெளியிடும் விழாவுக்கு கீழே இறங்கி சென்று பாஜகவினர் அனைவரையும் வரவேற்கிறார். கேட்டால், திமுகவினர், மாற்று கட்சியினருக்கு, மாற்று கொள்கை கொண்டவர்களுக்கும் மரியாதை கொடுக்க தெரிந்தவர்கள் என்று காரணம் கூறுகிறார். அப்படியென்றால், நிதி ஆயோக்கை கூட்டத்தை ஏன் ஸ்டாலின் புறக்கணித்தார்? ஆனால், ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டுள்ளார். ஏனென்றால் தனது தந்தை பெயரில் நாணயத்தை வெளியிட வேண்டும் என்பதற்காகத்தான் அந்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டுள்ளார். பாஜகவின் வாழ்நாள் அடிமையாக திமுக மாறிவிட்டது,” என ஆர்.பி.உதயகுமார் விமர்ச்சித்தார்.

அண்ணாமலை விமர்சனம்: அரசியல் முதிர்வில்லா எடப்பாடி பழனிசாமி ஒரு கிணற்று தவளை…!

கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடந்த இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு சார்பாக நடந்த கருத்தரங்கில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், இங்கு எதை செய்தாலும் அரசியலாக பார்க்கப்படுகிறது. 5 முறை முதல்வராக இருந்த தலைவருக்கு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நாங்கள் சிந்தாந்த ரீதியாக எதிரும்புதிருமாக தான் இருக்கிறோம். கலைஞர் நாணய வெளியீடு நிகழ்ச்சி மகிழ்ச்சி அளிக்கிறது.

நாணய வெளியீடு நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி அரசியலை கலப்பது வேதனை அளிக்கிறது. எம்.ஜி.ஆருக்கு உரிய மரியாதையை கூட்டணியில் இல்லாத போதும் பாஜக அரசு 2017-ல் செய்தது. அதே போல 2024-ல் கலைஞருக்கு மரியாதை கொடுத்துள்ளோம். கலைஞர் உடல் நலக்குறைவில் இருந்த போது மோடி அவரை டெல்லிக்கு அழைத்தார், அது அரசியலுக்கு அப்பாற்பட்டது. ராஜ்நாத் சிங் கலைஞருக்கு முழு மரியாதை செய்ய வேண்டும் என எண்ணி நினைவிடம் சென்றார்.

ஆட்சியில் இருக்கும் போது, மத்தியில் உறவு வைத்து தமிழகத்திற்கு நிதியயை பெற்று கொண்டு மாநில அரசு செய்ததாக எடப்பாடி காட்டி கொண்டார். ஜெயலலிதாவிற்கு விழா எடுக்க வேண்டும் என்றால் முதல் ஆளாக பாஜக இருக்கும். டீ பார்ட்டிக்கு சென்றால்தான், நாணய வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வருவார் என கூறுவது அரசியல் புரிதலில் எடப்பாடி பழனிசாமி கிணற்று தவளையாக உள்ளதை காட்டுகிறது. இன்னும் நிறைய அரசியல் முதிர்வை எடப்பாடியிடம் எதிர்பார்க்கிறோம் என அண்ணாமலை பேசினார்.