தமிழிசை செளந்தரராஜன்: அக்காவும், தம்பியும் சேர்ந்து ஸ்டாலினை வீட்டிற்கு அனுப்புகிறோமா, இல்லையானு பாருங்கள்..!

அண்ணனும், தம்பியும் சேர்ந்து காங்கிரஸை வீட்டிற்கு அனுப்புவோம் என்று பேசுவதை கேட்டு இருக்கிறேன். இன்று சொல்கிறேன்.. இந்த அக்காவும், தம்பியும் சேர்ந்து ஸ்டாலினை வீட்டிற்கு அனுப்புகிறோமா, இல்லையா என்று பாருங்கள் என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார். சென்னை திருவான்மியூரில் நடந்த பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்றுப் பேசினார். அப்போது, என்னை இனி யாரும் உயரம் குறைவு என்று சொல்ல முடியாது. ஏனென்றால் தொண்டர்களால் உயர்ந்து நிற்பவள் நான்.

இது பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் மட்டுமல்ல. இது 2026-ல் திமுகவை வீட்டிற்கு அனுப்பும் முதல் கூட்டம் இது. இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஒன்றும் இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ரூ.1.5 லட்சம் கோடி வட்டியில்லா கடன் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகம் என்ற பெயரில் ஆயிரம் மருந்தகங்களை திறக்கப் போகிறார்களாம். இதைவிட காப்பியடிக்க கூடிய ஒரு முதல்வரை பார்க்க முடியாது. 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே பிரதமர் மக்கள் மருந்தகங்களை திறந்து வைத்துவிட்டார்.

இம்முறை மருத்துவத்திற்கு அதிகளவில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் கேன்சர் மருத்துவமனை கொண்டு வரப்படவுள்ளது. ஏனென்றால் இன்றளவில் 9 பேரில் ஒருவருக்கு கேன்சர் வருகிறது. அண்ணாமலை இருப்பதே சிலருக்கு பயமாக இருக்கிறது. அவர் இருந்தால், எங்களுக்கு வெற்றி என்று திமுகவினர் சொல்கிறார்கள். அண்ணாமலை இருந்தால் பாஜகவுக்கு வெற்றி என்று நாங்கள் ஏற்கனவே சொல்லி வைத்துள்ளோம். இப்போது பயத்தில் அவர்கள் சொல்லி கொண்டு இருக்கிறார்கள். ஆன்மீகத்தை தமிழ்நாட்டை காப்பாற்ற போகிறது, காவி தான் தமிழகத்தை ஆளப் போகிறது.

பெரியாரை பற்றி தவறாக பேசினால் ஓட்டு கிடைக்காது என்று கூறுகிறார்கள். பெரியாரின் பெயருக்கு களங்கள் விளைவித்தால் ஓட்டு கிடைக்காது என்று கனிமொழியும் கூறியிருக்கிறார். தூத்துக்குடியில் போட்டிபோடுவதற்கு முன் நான், பனங்காட்டு நரி.. எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டேன் என்று கூறினேன். அதற்கு கனிமொழி, ட்விட்டர் ஐடியிலுள்ள பெரியாரின் படத்தை எடுத்துவிட்டு பன மரத்தை வைத்தார்.

பெரியாரை விடவும் பனமரம் அதிக வாக்குகளை பெற்றுக் கொடுக்கும் என்று கனிமொழி நினைத்தார். அதனை இன்று மாற்றி பேசுகிறார். நாடாளுமன்றத்தில் திமுக எம்பி-க்கள் சமஸ்கிருதம், இந்தி என்று பேசிக் கொண்டே இருக்கிறார்கள். தொடர்ந்து ஒரு தமிழ்நாட்டு பெண் 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார். அதற்காகவாது தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பிரதமருக்கு மாலை போட வேண்டும்.

1967-ல் கலைஞர் பேசும் போது, அண்ணன் இருக்கிறார்.. தம்பி நான் இருக்கிறேன். அண்ணனும், தம்பியும் சேர்ந்து காங்கிரஸை வீட்டிற்கு அனுப்புவோம் என்று பேசுவதை கேட்டு இருக்கிறேன். இன்று சொல்கிறேன்.. இந்த அக்காவும், தம்பியும் சேர்ந்து ஸ்டாலினை வீட்டிற்கு அனுப்புகிறோமா, இல்லையா என்று பாருங்கள். பாஜகவை ஆட்சிக்கு கொண்டு எப்போதும் அண்ணாமலையுடன் நானிருப்பேன். அண்ணா வளர்தத்து தமிழ் அல்ல, ஆண்டாள் வளர்த்த தமிழ், பெரியார் வளர்த்த தமிழ் அல்ல, பெரியாழ்வார் வளர்த்த தமிழ் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என தமிழிசை செளந்தரராஜன் பேசினார்.

அந்த பக்கம் சு.வெங்கடேசனுக்கு ராம.சீனிவாசன் … இந்த பக்கம் பிடிஆருக்கு தமிழிசை..

சென்னை – திருநெல்வேலி இடையே புதிய வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் 7 மணி 50 நிமிடங்களில் 652 கி.மீ தூரத்தை கடந்து சென்னையை மதியம் 1:50 மணிக்கு சென்றடையும்.

இந்த அதிவிரைவு ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மேலும் சென்னையில் இருந்து மதியம் 2:50 மணிக்கு புறப்பட்டு இரவு 10:40 மணிக்கு திருநெல்வேலியை வந்தடையும்.

இந்நிலையில் திருநெல்வேலியில் இருந்து வந்தே பாரத் ரயிலை மத்திய அமைச்சர் எல்.முருகன், தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் தொடங்கி வைத்து அந்த ரயிலேயே பயணம் செய்தனர். ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ரயில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டார். அடுத்த சில மணி நேரத்தில் வந்தே பாரத் ரயில் மதுரை ரயில் நிலைய சந்திப்பை வந்தடைந்தது.

மதுரையில், தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் வந்தே பாரத் ரயிலை போன்று உருவாக்கப்பட்ட கேக்கை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், எம்.பி. சு.வெங்கடேசன், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் இணைந்து வெட்டினர்.

திடீரென கேக் துண்டை எடுத்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஊட்டினார். திமுக அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக தொடர்ந்து பேசிவரும் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், திமுக அமைச்சருக்கு கேக் ஊட்டியது அங்கிருந்தோரை புருவம் உயர்த்தச் செய்தது.

இதுமட்டுமின்றி தொலைக்காட்சி விவாதங்களில் எதிரும் புதிருமாக மோதிக் கொள்ளும் பாஜகவின் ராம.சீனிவாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி சு.வெங்கடேசனுக்கு கேக் ஊட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் இந்த நிகழ்வு அங்கிருந்தவர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் மதுரையில் நடந்த வந்தே பாரத் நிகழ்ச்சியில் எதிரெதிர் தரப்பினர் கேக் ஊட்டிக்கொண்ட சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களிலும் ட்ரெண்டாகி வருகிறது.