திண்டுக்கல் சீனிவாசன்: கூட்டணிக்கு வருபவர்கள் ரூ. 50 அல்லது ரூ. 100 கோடி கொடுங்கனு கேட்கிறாங்க..!

திருச்சி மாவட்ட அதிமுக கள ஆய்வு கூட்டம் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, கோகுல இந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “பல முனைகளிலிருந்து அதிமுகவை தாக்கி வருகிறார்கள். தனி ஒரு மனிதனாக எடப்பாடி பழனிசாமி திமுக ஆட்சியின் அவலங்களை எடுத்துக் கூறி வருகிறார்.” “அதிமுக கட்சியின் சில மாவட்டங்களில் கோஷ்டி பூசல்கள் உள்ளன. அதனை முதலில் சரி செய்ய வேண்டும். ஆபரேஷன் செய்தால் மட்டும் தான் மருத்துவம் பலிக்கும் என்ற நிலை உள்ளது. கூட்டணிக்கு வருபவர்கள் 20 சீட் கொடுங்க, ரூ. 50 அல்லது ரூ. 100 கோடி கொடுங்க என்று கேட்கின்றனர்.”

“கூட்டணி குறித்து நான் பார்த்துக் கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துவிட்டார். கூட்டணி குறித்து நீங்கள் பேட்டி கொடுத்து அதை கெடுத்துவிட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணிக்கு செல்பவர்கள் ஜெயிக்க முடியாது. எடப்பாடி பழனிசாமி தான் ஜெயிப்பார்” என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

சீமான்: த.வெ.க கூட்டணி..! நான் திருப்பூர் போகும்போது அவர் திருப்பதி போயிட்டா சிக்கலாகிடும்..!

நான் திருப்பூர் போகும்போது அவர் திருப்பதி போயிட்டா சிக்கலாகிடும்..! அதனால எங்க கால்களை நம்பியே எங்கள் லட்சிய பயணம் தொடரும் என தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார் சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 88 -வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. வ.உ.சிதம்பரனாரின் 88 -வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரின் உருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு சீமான் பதிலளித்தார்.

அப்போது, வ.உ.சிதம்பரனார், கப்பலோட்டியும், செக்கிழுத்தும் நாட்டின் விடுதலைக்கு பாடுபட்டார். தமிழகத்தைச் சேர்ந்த விடுதலை போராட்ட வீரர்கள் மறக்கப்பட்டு, மறைக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் எந்த அடையாளமும் தமிழகத்தில் இல்லை. திராவிடம் என்பது தமிழர்களின் அடையாளங்களை மறக்கடிக்க உருவாக்கப்பட்டது தான். தமிழர்களின் அடையாளங்களை திராவிட அடையாளங்களாக மாற்றியுள்ளார்கள்.

மேலும் சீமான் பேசுகையில், வல்லபாய் பட்டேலை தூக்கிப் பிடித்தவர்கள் ஆர்.என்.ரவியின் கூட்டத்தினர். அதை ஆதரித்தவர்கள் திராவிட கூட்டத்தினர். ஆட்சியாளர் தன் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என கூறினால் அந்த ஆட்சி கொடுமையாக இருக்கிறது என்று தான் அர்த்தம். ஆய்வுக்குச் செல்லும் பொழுது மக்கள் வரவேற்கிறார்கள் என்றால் அவர்களாகவே வரவேற்க வந்தார்களா அல்லது வர வைக்கப்பட்டார்களா? ஒருத்தரை ஒருத்தர் அவர்கள் பாராட்டிக் கொண்டு, போற இடமெல்லாம் சூப்பர் சூப்பர் என்று சொல்கிறார்கள் என முதலமைச்சர் சொல்லிக் கொள்கிறார்.

என் கூட ஒருமுறை வாருங்கள், நான் ஆய்வுக்கு போகிறேன், இந்த மனுக்களை கொடுத்துவிட்டு கவலையோடும், கண்ணீருடன் கதறும் மக்களை ஒருமுறை கேளுங்கள், ஆட்சியாளர்கள் தன் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று சொன்னார் என்றால் அது கொடுமையாக இருக்கிறது என்று அர்த்தம். மக்கள் சொல்ல வேண்டும். நாடும் மக்களும் போற்ற வேண்டும்.

த.வெ.க – அதிமுக கூட்டணி குறித்தெல்லாம் என்னிடம் கேட்கக் கூடாது. நான் திருப்பூர் போகும்போது அவர் திருப்பதி போயிட்டா சிக்கலாகிடும்..! அதனால எங்க கால்களை நம்பியே எங்கள் லட்சிய பயணம் தொடரும். நாங்கள் 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து தான் போட்டியிடுவோம். கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம் என்கிற கொள்கையுடயவன் நான். அவர் அவரோட போறாரு. இவர் இவரோடு போறாரு என இந்த காரை அவர் வைத்திருந்தார். இப்ப யார் வைத்திருக்கிறார் என்ற நகைச்சுவை எல்லாம் நான் சொல்ல தயாராக இல்லை என சீமான் தெரிவித்தார்.

தவெக அறிவிப்பு: அதிமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை..!

தமிழக வெற்றிக்கழகம் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கழகத்தின் கொள்கைகள், கொள்கை எதிரி, அரசியல் எதிரி, தேர்தல் நிலைப்பாடு குறித்தும் தமது உரையில் கழகத் தலைவர் அவர்கள் தெளிவாக, விளக்கமாக எடுத்துரைத்துள்ளார்.

கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சி் அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது.

இச்சூழலில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாக, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஏகோபித்த வரவேற்பையும் ஆதரவையும் பெற்று, மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு அஇஅதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று தொடர்புப்படுத்தி, பிரதான தமிழ் நாளிதழ் ஒன்று உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்களைக் கொண்டு நேற்றுத் தலைப்புச் செய்தி் வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது.

ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக அரசியல் விமர்சகர்கள் என்கிற போர்வையில் உள்நோக்கத்தோடு, தான்தோன்றித்தனமாகச் சிலர் தெரிவிக்கும் பொய்யான கருத்துகளின் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடர்புப்படுத்திப் பரப்பப்படும் இது போன்ற உண்மைக்கு மாறான பொய்ச் செய்திகளைத் தமிழக மக்கள் புறக்கணித்து விடுவார்கள் என்பதை இத்தகையப் பொய்யானச் செய்திகளை உள்நோக்கத்தோடு பரப்புபவர்களுக்கு நினைவூட்டுகிறேன்.

தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பாதை, முழுக்க முழுக்கத் தமிழக மக்களின் நலனுக்கானது. வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரையில் தெரிவித்த நிலைப்பாட்டின் அடிப்படையில் பெரும்பான்மை பலத்தோடு நாட்டு மக்களின் பேராதரவோடு வென்று தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள்.

எனவே, மக்களைக் குழப்பும் நோக்கில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான கருத்துகளைச் செய்திகளாக வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதல் பெற்று இச்செய்திக் குறிப்பு வெளியிடப்படுகிறது என எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

பிரேமலதா விஜயகாந்த்: திமுக தமிழக மக்களின் மூளைச்சலவை செய்து வருகிறது..! 

ஆட்சி, அதிகார, பணபலத்தை வைத்துக்கொண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளை வெல்வோம் என்று கூறி திமுக மக்களை மூளைச்சலவை செய்து வருகிறார்கள்  என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், துணைச் செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பி.பார்த்தசாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்தார். அப்போது, டிசம்பர் மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் வியூகம் அமைத்து வருகிறோம்.

தமிழகம் முழுவதும் ஜனவரி மாதம் முதல் சுற்றுப்பயணம் சென்று மக்களை சந்திக்கவும், மிகப்பெரிய மாநாடு நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து, தேர்தல் பணிகளை இன்று முதல் தொடங்கிவிட்டோம். எனது சுற்றுப்பயண திட்டம் குறித்து ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்படும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த், அதிமுக-தேமுதிக கூட்டணி இன்றுவரை தொடர்கிறது. அதேநேரம் திமுக கூட்டணியில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. 2026 தேர்தல் வரை அந்த கூட்டணி தொடருமா என்பதே கேள்விக்குறி தான். விஜய் நடத்திய மாநாட்டை பார்த்து ஒவ்வொரு கட்சிகளும் உடனடி களப்பணியில் ஈடுபட்டு வருவதாக கூறுவது தவறான கருத்து.

அதேபோல் ஆட்சி, அதிகார, பணபலத்தை வைத்துக்கொண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளை வெல்வோம் என்று கூறி மக்களை மூளைச்சலவை செய்து வருகிறார்கள். ஆனால் 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணியே வெற்றிபெறும். விரைவில் நடைபெற உள்ள தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் விஜய பிரபாகரன் உட்பட நிர்வாகிகள் பலருக்கும் முக்கிய பதவிகள் வழங்கப்பட உள்ளன என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

பிரேமலதா விஜயகாந்த்: சட்டப்பேரவைத் தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்காது..!

சட்டப்பேரவைத் தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்காது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், துணைச் செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பி.பார்த்தசாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்தார். அப்போது, டிசம்பர் மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் வியூகம் அமைத்து வருகிறோம்.

தமிழகம் முழுவதும் ஜனவரி மாதம் முதல் சுற்றுப்பயணம் சென்று மக்களை சந்திக்கவும், மிகப்பெரிய மாநாடு நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து, தேர்தல் பணிகளை இன்று முதல் தொடங்கிவிட்டோம். எனது சுற்றுப்பயண திட்டம் குறித்து ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்படும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த், அதிமுக-தேமுதிக கூட்டணி இன்றுவரை தொடர்கிறது. அதேநேரம் திமுக கூட்டணியில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. 2026 தேர்தல் வரை அந்த கூட்டணி தொடருமா என்பதே கேள்விக்குறி தான். விஜய் நடத்திய மாநாட்டை பார்த்து ஒவ்வொரு கட்சிகளும் உடனடி களப்பணியில் ஈடுபட்டு வருவதாக கூறுவது தவறான கருத்து.

அதேபோல் ஆட்சி, அதிகார, பணபலத்தை வைத்துக்கொண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளை வெல்வோம் என்று கூறி மக்களை மூளைச்சலவை செய்து வருகிறார்கள். ஆனால் 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணியே வெற்றிபெறும். விரைவில் நடைபெற உள்ள தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் விஜய பிரபாகரன் உட்பட நிர்வாகிகள் பலருக்கும் முக்கிய பதவிகள் வழங்கப்பட உள்ளன என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

கிருஷ்ணசாமி: திமுக கூட்டணியிலிருந்து திருமாவளவன் வெளியே வந்த பிறகு முதலமைச்சர் கனவு காணவேண்டும்..!

திமுக கூட்டணியிலிருந்து வெளியே வந்து முதலமைச்சர் ஆகும் முயற்சியை திருமாவளவன் மேற்கொள்ள வேண்டும்” என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இதில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பங்கேற்றார். பின்னர் கிருஷ்ணசாமி கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, புதிய தமிழகம் கட்சி சார்பில் நவம்பர் 7-ஆம் தேதி 6 அம்ச கோரிக்கை குறித்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தப்படும்.

தென் தமிழகத்தில் தொழிற்சாலைகள் வர வேண்டும். மதுவிலக்கு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தப்படுகிறது. முதலமைச்சர் பதவி ஆசை திருமாவளவனுக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் தான் உள்ளது. முதலமைச்சராக ஆசைப்படுவது தவறில்லை.

ஆனால் திமுக கூட்டணியில் இருந்து முதலமைச்சர் கனவு காணக்கூடாது. அது பகல் கனவாகவே இருக்கும். திமுக கூட்டணியிலிருந்து முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படுவது தவறாக புரிந்து கொள்ளப்படும். திமுக கூட்டணியிலிருந்து வெளியே வந்து முதலமைச்சர் ஆகும் முயற்சியை திருமாவளவன் மேற்கொள்ள வேண்டும்” என கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

கே.என்.நேரு: “கூட்டணியை எங்கள் தலைவர் விட்டுக் கொடுக்க மாட்டார்..!”

சுதந்திர போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 153-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது உருவச்சிலைக்கு திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், திமுக தலைமையிலான கூட்டணி மிகச் சரியான கூட்டணி. நான் லால்குடியில் நேற்று பேசியதை சிலர் தவறாக திரித்து வெளியிட்டுள்ளனர். என்றைக்கும் இப்போதைய கூட்டணியை எங்கள் தலைவர் விட்டுக்கொடுக்க மாட்டார். நான் பேசியதன் கருத்து என்னவென்றால், 38 ஆண்டுகளுக்கு பின் தொடர்ந்து இரண்டாம் முறையாக ஆட்சியைப் பிடித்ததை சட்டமன்றத்தில் ஜெயலலிதா பெருமையாக பேசினார்.

அதேபோல, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அடுத்த முறையும் தொடர எந்த நிலை வந்தாலும் பாடுபடுவோம் என்ற அர்த்தத்தில் தான் பேசினேன். அதை தவறாக திரித்து வெளியிட்டுள்ளனர். கூட்டணி கட்சி தலைவர்கள் எங்களோடு சுமுகமாக பழகுகின்றனர். எங்கள் கூட்டணி அருமையாக உள்ளது. எங்கள் கூட்டணி மிகச் சரியான கூட்டணி. என கே.என்.நேரு தெரிவித்தார்.