ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு..!

ஓசூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஜூனியர் வழக்கறிஞர் கண்ணன் என்பவர் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். அப்போது, பயிற்சி வழக்கறிஞர் ஆனந்தன், திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஜூனியர் வழக்கறிஞர் கண்ணனை சரமாரியாக வெட்டியதில், அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். வழக்கறிஞர் கண்ணனை உடனிருந்த வழக்கறிஞர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

வழக்கறிஞர் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று காவல்துறைதுறை முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

ஆளுநரிடம் கோரிக்கை: முதலமைச்சர், துணை முதலமைச்சர் மீதான குற்றவியல் நடவடிக்கை வேண்டும்..!

தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் இனவாத கருத்துகளை பரப்புவதால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை தொடங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என ஆளுநரிடம் தமிழக பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை, கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவியை, பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார்.

அதன்பின்னர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அஸ்வத்தாமன் பதிலளித்தார். அப்போது அண்மையில் ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ஒரு வரி விடுபட்டது சர்ச்சை யாக்கப்பட்டது. இதில், ஆளுநர் மீது இனவாத அடிப்படை யில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவதூறு கருத்து தெரிவித்து இருந்தார். நான் பெருமைமிகு கிறிஸ்தவன் என சொல்லும் உதயநிதி, சனாதனத்தை வேரறுப்போம் என்கிறார். என தெரிவித்தார்

இதைப்போல், இனவாத கருத்துகளை தொடர்ந்து முன்வைப்பது, ஆளுநரை பணி செய்யவிடாமல் தடுப்பது, இனவாத கருத்துகளை பரப்பி மக்களிடையே அமைதியை குலைக்கும் நோக்கில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழான குற்றங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஆகியோர் மீது பிஎன்எஸ் சட்டம் 218-ன் கீழ் குற்றவியல் நடவடிக்கையை தொடங்குவதற்கான அனுமதிவழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கி றோம். இதுதொடர்பாக ஆளுநர் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

இங்கு மக்கள் பிரச்சினைகள் ஆயிரம் இருக்கின்றன. அவற்றில் கவனம் செலுத்தாமல் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் மக்களை திசை திருப்பும் நயவஞ்சக நாடகங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின் றனர். திமுகவின் வரலாறே இந்திய தேசத்துக்கு எதிரானது. அவர்களின் நடவடிக்கைகள் அனைத்துமே பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதிலும், இனவெறி கருத்துகளை பேசுவதிலும், மதவெறியில் ஊறிப்போய் பேசுவதிலுமே இருக்கிறது.

இல்லாத இனவாதமான திராவிடத்தை பேசுவோர் கையில் தமிழ்ச் சமூகம் சிக்கிக்கொண்டிருக்கிறது. இதைவிடுத்து எப்போது அவர்கள் மனிதவாதம் பேசப்போகிறார்கள் என்பது தெரிய வில்லை என அஸ்வத்தாமன் தெரிவித்தார்.