ஆர்.பி.உதயகுமார்: தனிநபர் விமர்சனத்திற்கு நீங்க தயார் என்றால், நாங்களும் தயார்…! கூவம் போல் நாறிவிடும்..!

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சத்தமாக பேசுவதால், அவர் சொல்வதெல்லாம் உண்மையாகி விடாது. இதுவரை தமிழ்நாட்டிற்கு அவர் என்ன செய்துள்ளார்? தேர்தலின் போது எட்டு முறை பிரதமரை பிரசாரத்திற்கு அழைத்து வந்த அண்ணாமலை, தமிழ்நாடு வெள்ள பேரிடரில் சிக்கியபோது பிரதமரை ஏன் அழைத்து வரவில்லை. வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை பார்வையிட, அங்கு புதிதாக பதவி ஏற்ற இணை அமைச்சர் சுரேஷ்கோபி பிரதமரை அழைத்துச் சென்றார். ஆனால், இதுவரை தமிழக மக்களுக்காக எப்போதாவது பிரதமரை அண்ணாமலை அழைத்து வந்துள்ளாரா?.

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதற்கு கேள்வி எழுப்பினாரா? மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்காதது குறித்து கேள்வி எழுப்பினாரா?. ரயில்வே திட்டங்களில் நிதி ரத்தானதற்கு கேள்வி எழுப்பினாரா?. நீங்கள் மட்டும்தான் தமிழ்நாட்டை காக்க வந்த அவதார புருஷன் என்று, மூச்சு விடாமல் பேசினால் அதெல்லாம் உண்மையாகிவிடாது. நீங்கள் பாஜக மாநில தலைவராக தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. நியமனப் பதவியை வைத்துக் கொண்டு, அதனை தக்கவைக்க எல்லா தலைவர்களையும் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது எந்த முறையில் நியாயம்?.

நீங்கள் தலைவராக இருக்கும் மூன்றாண்டுகளில் எத்தனை தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றிருக்கிறீர்கள்? அண்ணாமலை முதலில் நாவடக்கத்தை, பணிவை கற்றுக்கொள்ள வேண்டும். மாநில தலைவராக நான் பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாட்டுக்கு எவ்வளவு நிதி, எத்தனை தொழிற்சாலை கொண்டு வந்திருக்கிறேன் என்று அவரால் கூற முடியுமா? உங்களுடைய நேரம், உழைப்பு, அறிவாற்றல், செல்வாக்கு, தொலைநோக்கு சிந்தனையை தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக, முன்னேற்றத்திற்காக செலவழிக்க வேண்டும்.

அதைவிடுத்து அவரை அழிப்பேன், இவரை ஒழிப்பேன் என்று கூறுவதற்கு நீங்கள் என்ன எமதர்மராஜாவா? தனிநபர் விமர்சனத்திற்கு அண்ணாமலை தயார் என்றால், நாங்களும் தயார். நாங்கள் மதுரை தமிழில் பேச ஆரம்பித்தால், இப்போதைய கூவம் போல் நாறிவிடும் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

ஆர்.பி.உதயகுமார்: மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது..!

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் கல்லுப்பட்டி ஒன்றியம் சார்பில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி, கல்லுப்பட்டி, பேரையூர் ரோட்டிலுள்ள சிவன் கோயில் அருகே நடைபெற்றது. மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணிச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கி முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் பேசுகையில், “இன்றைக்கு ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து சூழ்ந்து கொண்டிருக்கிறது. அதைக் காப்பாற்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்து வருகிறார்.

முல்லைப் பெரியாறு அணை குறித்து ஒரு மத்திய அமைச்சர், “முல்லைப் பெரியாறு அணை உடைந்து விட்டால் கேரளா என்ன ஆகும்?” என்று கூறுகிறார். முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது என்று பாதுகாப்பு குழு வல்லுநர்கள் கூறியதை தொடர்ந்து உச்ச நீதிமன்றமும் கூட கூறியுள்ளது. முல்லைப் பெரியாறு அணை தென் மாவட்ட மக்களின் ஜீவாதார உரிமை. அப்படியிருந்தும் முல்லை பெரியாறு அணை குறித்து முதல்வர் வாய் திறக்காமல் மவுன சாமியாராக தான் உள்ளார். இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை?

இன்றைக்கு கருணாநிதிக்கு 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ளார்கள். அது குறித்து எங்களுக்கு வருத்தம் இல்லை. ஆனால், அந்த விழாவுக்கு மத்திய அமைச்சர், இணையமைச்சர், அண்ணாமலை வருகிறார்கள். இதுவரை பாஜக எதிர்ப்பாளராக தன்னை காட்டிக் கொண்ட திமுகவும், அதன் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் வெளிச்சம் போட்டு காட்டவிட்டது. என் அப்பாவுக்கு நாணயத்தை வெளியிட மத்திய அரசையும், அதன் அமைச்சர்களையும், பாஜகவினரை வாருங்கள், வாருங்கள் என்று அழைக்கிறார். ஆனால், இன்றைக்கு நிதி நிலை அறிக்கையில் தமிழகத்துக்கு போதுமான நிதி ஒதுக்காதபோது இப்படி அவரை மத்திய அரசை வலியுறுத்த வில்லை. கீழே இறங்கி சென்று உதவி கேட்கவில்லை.

ஆனால், அப்பாவின் நாணயம் வெளியிடும் விழாவுக்கு கீழே இறங்கி சென்று பாஜகவினர் அனைவரையும் வரவேற்கிறார். கேட்டால், திமுகவினர், மாற்று கட்சியினருக்கு, மாற்று கொள்கை கொண்டவர்களுக்கும் மரியாதை கொடுக்க தெரிந்தவர்கள் என்று காரணம் கூறுகிறார். அப்படியென்றால், நிதி ஆயோக்கை கூட்டத்தை ஏன் ஸ்டாலின் புறக்கணித்தார்? ஆனால், ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டுள்ளார். ஏனென்றால் தனது தந்தை பெயரில் நாணயத்தை வெளியிட வேண்டும் என்பதற்காகத்தான் அந்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டுள்ளார். பாஜகவின் வாழ்நாள் அடிமையாக திமுக மாறிவிட்டது,” என ஆர்.பி.உதயகுமார் விமர்ச்சித்தார்.

ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்: “பாஜகவின் வாழ்நாள் அடிமையாக திமுக மாறிவிட்டது…! ”

ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்: “முதல்வர் பதவிக்கு அண்ணாமலை ஆசைப்படுவதற்கு முன்பு…வார்டு தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு நின்று வெற்றி..!”

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சோழவந்தானில் அதிமுகவினருக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உறுப்பினர் அட்டைகளை வழங்கிய முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், “தமிழகத்தில் பாஜக தலைமையில் அதிமுக கூட்டணி ஆட்சி என்று அண்ணாமலை பேசுகிறார்.

அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி 50 ஆண்டுகள் பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரர். எதையும் அறிவுசார்ந்து, நூறு தடவை யோசித்துத்தான் பேசுவார். அண்ணாமலைக்கு ஆட்சி, அரசியல், வரலாற்றைப் பற்றிப் பேசுவதற்கு என்ன அருகதை உள்ளது? இதே அண்ணாமலை தான் அதிமுக இருக்கக் கூடாது என்று சொன்னார். இவர் தாத்தா வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது. இன்றைக்கு விரக்தியின் விளிம்பில் அண்ணாமலை பேசுகிறார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் வாக்களிக்கவில்லை என்ற காரணத்துக்காக மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு நிதி ஒதுக்காமல் வஞ்சிக்கிறது. ஆனால், அதிமுக ஆளுங்கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் இருக்கும்போதும் மக்கள் சேவை செய்வதில் நாங்கள் பின்வாங்குவதில்லை. தமிழகத்துக்காக வாதாடி, போராடி நிதியைப் பெற்றுத் தராத அண்ணாமலை, முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறார். அது பகல் கனவு. முதலில் அவர் வார்டு தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு நின்று வெற்றி பெற்று பொதுச்சேவை செய்து, அதன் பின்பு சட்டமன்ற தேர்தலில் நின்று வெற்றி பெற்று பணியாற்றி கஷ்ட நஷ்டம் அறிந்து கொள்ள வேண்டும்.

அதிமுகவுக்கு மதிப்பெண் கொடுக்க நீங்கள் யார்? அண்ணாமலை ஐபிஎஸ் படித்த மேதாவியாக இருக்கலாம். அவருக்குத் தமிழகத்துக்கு ஒரு பைசாகூட நிதி பெற்றுத்தர அருகதை இல்லை. ஆனால் வாய்க்கு வந்தபடி பேசுகிறார். அதிமுக பற்றிப் பேச இவருக்கு என்ன அதிகாரம் உள்ளது?

மாநில தலைவராக உள்ள நீங்கள், டெல்லியில் சென்று முற்றுகையிட்டு மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி வாங்கி வந்தீர்களா? வளர்ச்சி நிதி வாங்கிவந்தீங்களா? வறட்சி நிதி வாங்கி வந்தீர்களா? எட்டு முறை தமிழகத்திற்குப் பாரதப் பிரதமரை அழைத்து வந்த நீங்கள் கள்ளச் சாராய மரணங்கள் நிகழ்ந்த போதும், பேரிடர் காலத்திலும் அவரைக் கூட்டி வந்தீர்களா? இது எதுவும் அண்ணாமலை செய்யவில்லை” என ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

ஆர்.பி.உதயகுமார்: ஈயம் பித்தளைக்கு பேரீச்சம் பழம் தான் அண்ணாமலைக்கு தெரியும்..!“

மதுரை திருமங்கலம் பகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனை ஆதரித்து ஆர்.பி.உதயகுமார் பேசினார். அப்போது, ‘‘அண்ணாமலை ரெடிமேட் அரசியல்வாதி. இரண்டு விதமான சட்டைகளை நாம் போடுவோம். ஒன்று அளவு எடுத்து டெய்லர் தைத்த சட்டையைப் போடுவோம். மற்றொன்று அளவு எடுத்து தைக்காமல் ஆத்திர அவசரத்துக்கு கடையில் சென்று எடுத்து ரெடிமேட் சட்டையை எடுத்துப்போடுவோம். அதுமாதிரி பாஜகவில் தலைவர்கள் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தை நிரப்புவதற்கு ரெடிமேட் அரசியல்வதியாக அண்ணாமலை பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதனால், ரெடிமேட் தலைவர் அண்ணாமலை ரெடிமேட் டயலாக்குதானே பேசுவார். அவருக்கு தெரிந்தது எல்லாம் ஈயம் பித்தளைக்கு பேரீச்சம் பழம், இரும்புகடை போன்றவைதான் தெரியும். அவருக்கு எங்கே அரசியல் தெரியும். தமிழக அரசியல் கட்சிகள், தலைவர்களை தெரியும். அதிமுக எஃகு கோட்டை. அந்தக் கோட்டை பக்கம் கூட அவரால் நெருங்க கூட முடியாது.

அவர் ரெடிமேட் அரசியல்வாதி என்பதால் அவருக்கு வரலாறு தெரியாது. அதனாலேயே, தேர்தலுக்காக தினமும் ரெடிமேடாக தினமும் இரண்டு டயலாக்கைப் படித்துவிட்டு வந்து பேசி வருகிறார். அது தவறு என்று தெரியாமலே குழந்தைபோல் படித்து வந்த டயலாக்கை ஒப்புவிக்கிறார். இப்படி மனப்பாடம் செய்து அரசியலில் வசனம் பேசும் அண்ணாமலை விரைவில் தமிழக அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்படுவார் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

ஆர்.பி.உதயகுமார்: அதிமுகவை அழிக்க அண்ணாமலை அல்ல..! அவரது தந்தையே வந்தாலும் முடியாது…!!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “அதிமுகவை அழிக்க அண்ணாமலை அல்ல, அவரது தந்தையே வந்தாலும் முடியாது. நாங்கள் பதிலடி கொடுத்தால் அண்ணாமலை தாங்க முடியாது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விரக்தியில் உள்ளார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அதிர்ச்சியால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் பேச்சுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் தர வேண்டியதில்லை.

லேகியம் விற்பவர் போல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசிக் கொண்டு இருக்கிறார். கவுன்சிலர் பதவி கூட அண்ணாமலை ஜெயிக்கவில்லை. தேர்தலில் நின்று வெற்றி பெற்றால் தான் பக்குவம் வரும். இன்னும் அவருக்கு அரசியல் பக்குவம் இல்லை,என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

ஆர்.பி.உதயகுமார்: கடல் என்றைக்கு வற்றுவது, ராகுல்காந்தி எப்போது பிரதமர் ஆவது?

மதுரையில் எடப்பாடி பழனிசாமிக்கு, புரட்சித்தமிழர் பட்டம் வழங்கியதை முன்னிட்டு, ஆட்டோ தொழிலாளருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும், சந்திரயான்-3 வெற்றி பெற்றதை முன்னிட்டு கேக் வெட்டி இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சியும் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க வளாகத்தில் நடந்தது.தமிழக சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கி ஆட்டோ தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, சந்திரயான்-3 வெற்றிக்கு கேக் வெட்டினார்.

பின்னர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், தமிழக மக்களுக்கு பல்வேறு புரட்சிகரமான திட்டங்களை தந்ததால் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித்தமிழர் என்ற பட்டம் சூட்டப்பட்டது. இந்த பட்டத்தை வழங்கிய மதுரை மக்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கி சாதனை படைத்து இருக்கிறது. அதற்கு தமிழர் வீரமுத்துவேல் முக்கிய காரணமாக திகழ்கிறார்.

மேலும் கருவாடு மீன் ஆகாது. காகித பூ மணக்காது. அதேபோல் நீட் தேர்வினை தி.மு.க.வால் ரத்து செய்ய முடியாது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், நீட் தேர்வினை ரத்து செய்வோம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார். இப்போது ராகுல்காந்தி பிரதமராக வந்தால்தான் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று சொல்கிறார். இவரது பேச்சை கேட்டு மக்கள் சிரிக்கிறார்கள்.

உதயநிதியின் பேச்சு எப்படி இருக்கிறது என்றால், கடல் வற்றி கருவாடு தின்னலாம் என்று காத்திருந்த கொக்கு கடைசியில் குடல் வற்றி செத்து போனதாம். அதுபோல கடல் என்றைக்கு வற்றுவது, மீன் என்றைக்கு பிடிப்பது, அது என்றைக்கு கருவாடு ஆவது, அந்த கருவாடு கொக்குக்கு என்றைக்கு கிடைப்பது? அதுபோல தான் ராகுல்காந்தி எப்போது பிரதமராக வருவது, நீட் தேர்வினை எப்போது ரத்து செய்வது என்பது தமிழக மக்களின் கேள்வியாக இருக்கிறது என ஆர்.பி.உதயகுமார் பேசினார்.