அதிஷி மெர்லினா சிங்: அரசு பங்களா தேவையில்லை நாங்கள் சாலையில் அமர்ந்து ஆட்சி செய்வோம்..!

பெரிய பங்களாவில் வாழ்வதற்காக நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. தேவைபட்டால் சாலையோரம் அமர்ந்தும் ஆட்சி செய்வோம் என டில்லி முதலமைச்சர் அதிஷி மெர்லினா சிங் தெரிவித்தார்.

டில்லி ஆம் ஆத்மி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த நிலையில் நீதிமன்ற உத்தரவால் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். இத்தனை தொடர்ந்து செப்டம்பர் 21-ஆம் தேதி டில்லி புதிய முதலமைச்சராக அதிஷி மெர்லினா சிங் பதவிறே்றார்.

இந்நிலையில் டில்லி முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ பங்களாவான எண் 6, பிளாக் ஸ்டாப் சாலையில் கடந்த 6-ஆம் தேதி அதிஷி மெர்லினா சிங் குடியேறினார். இந்நிலையில் நேற்றைய முன்தினம் திடீரென அவரது உடமைகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் தூக்கி வெளியே வீசப்பட்டன. மேலும் அதிஷி மெர்லினா சிங்கை கட்டாயப்படுத்தி அரசு பங்களாவிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதன் பின்னணியில் துணை நிலை கவர்னரும், பாஜகவும் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இத்தனை தொடர்ந்து நேற்று முதலமைச்சர் அதிஷி மெர்லினா சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆப்ரேஷன் தாமரையை துவங்கிய பாஜக எங்களை அரசியல் ரீதியாக தோற்கடிக்க முடியாததால் மிகுந்த கவலையில் உள்ளது. இப்போது முதல்வர் இல்லத்தையும் பாஜகவினர் ஆக்கிரமிப்பு செய்ய துவங்கியுள்ளனர்.

சொகுசு காரில் செல்வதற்கும், அரசு பங்களாவில் வாழ்வதற்காகவும் நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. தேவைப்பட்டால் சாலையோரம் அமர்ந்தும் ஆட்சி செய்வோம். மக்கள் மனதில் நாங்கள் உள்ளோம் என காரசாரமாக அதிஷி மெர்லினா சிங் பேசினார்.

ஆம் ஆத்மி தகவல்: அரவிந்த் கெஜ்ரிவால் நாளை மாலை பதவி விலகல்..!

டெல்லி ஆளுநர் வி.கே.சக்சேனாவை, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை மாலை 4.30 மணி அளவில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்குவார் என ஆம் ஆத்மி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ‘ஆளுநரை சந்திக்க அரவிந்த் கெஜ்ரிவால் நேரம் கேட்டிருந்தார். நாளை மாலை 4.30 மணிக்கு சந்திப்புக்கு ஆளுநர் நேரம் ஒதுக்கி உள்ளார். அப்போது, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்குவார்’ என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கடந்த மார்ச் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். கடந்த 13-ஆம் தேதி அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். எனினும் முதலமைச்சர் அலுவலகத்துக்கு செல்லக் கூடாது. ஆளுநரின் ஒப்புதல் இன்றி கோப்புகளில் கையெழுத்திடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

சிறையில் இருந்து விடுதலையான பிறகு டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் நேற்று பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “அடுத்த 2 நாட்களில் டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன். ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் புதிய முதலமைச்சரை தேர்வு செய்வார்கள். நான் நேர்மையற்றவன், ஊழல்வாதி என்று பாஜக குற்றம் சாட்டுகிறது.

எனவே, அடுத்த சட்டப்பேரவைத் தேர்தல் வரை நான் முதலமைச்சர் பதவியில் அமர மாட்டேன். டெல்லியின் ஒவ்வொரு தெரு, ஒவ்வொரு வீட்டுக்கும் செல்வேன். நான் நேர்மையானவன் என்று மக்கள் நினைக்கிறார்களா என்பதை அவர்களிடமே கேட்பேன். நான் நேர்மையானவன் என கருதி மக்கள் எனக்கு வாக்களித்து மீண்டும் முதலமைச்சராக்கிய பிறகே முதலமைச்சர் இருக்கையில் அமர்வேன்” என அறிவித்தார்.

இதனையடுத்து, ஆளுநரை சந்திக்க கெஜ்ரிவால் நேரம் கேட்டிருந்தார். நாளை மாலை 4.30 மணிக்கு சந்திப்புக்கு ஆளுநர் நேரம் ஒதுக்கி உள்ளதாகவும், அப்போது, முதலமைச்சர் கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்குவார் என்றும் ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

Sanjay Singh: நரேந்திர மோடி ஊழல் குறித்து பேசும்போது, ​​ஒசாமா பின்லேடனும், கப்பர் சிங்கும் அகிம்சையைப் போதிப்பது போல் தெரிகிறது

டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்க்கண்டு முதலமைச்சர ஹேமந்த் சோரன் ஆகியோர் கைதை கண்டித்து I.N.D.I.A. கூட்டணி கட்சியின் கூட்டம் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருந்த ராகுல் காந்தி திடீர் உடல்நலக்குறைவால் கூட்டத்தை தவிர்த்துள்ளார். இதனை அறிவித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “ராகுல் காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், அவரால் இன்று டெல்லியை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. அதேநேரத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூட்டத்தில் பங்கேற்பார்” என தெரிவித்திருந்தார்.

I.N.D.I.A. கூட்டணி சார்பில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டுக்கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, பஞ்சாப் முதலமைச்சர் பகவந் சிங் மான், அர்விந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா, ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடி ஊழல் குறித்து பேசும்போது, ​​ஒசாமா பின்லேடனும், கப்பர் சிங்கும் அகிம்சையைப் போதிப்பது போல் தெரிகிறது. ஊழலுக்கு எதிராகப் பேசுகிறார் நரேந்திர மோடி. ஆனால் ஹேமந்த் சோரன், கேஜ்ரிவாலை பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளார். இப்போது மோடி வாஷிங் பவுடர் வந்துள்ளது. அது உங்கள் ஊழல்கள் அனைத்தும் தூய்மையாக்கும்” என பேசினார்.

புதிய இணையதளம்: கெஜ்ரிவால் அரசின் பணிகளை முன்னிலைப்படுத்த ‘ஏஏபியின் ராம ராஜ்ஜியம்’

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தேசிய தலைநகரில் ராமரின் லட்சியங்களை உணர முயற்சிப்பதாகக் கூறி, “ராம் ராஜ்ஜியம்” என்ற கட்சியின் கருத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆம் ஆத்மி தனது “ஏஏபி கா ராம்ராஜ்யா” இணையதளத்தை இன்று தொடங்கியது. ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் சஞ்சய் சிங், அதிஷி, சவுரப் பரத்வாஜ், ஜாஸ்மின் ஷா ஆகியோர் இணையதளத்தைத் தொடங்கிவைத்து செய்தியாளர்களிடம் பேசினர்.

அப்போது, “கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் டெல்லியில் மூன்றுமுறை ஆம் ஆத்மி அரசை அமைத்துள்ளோம் என்பது மட்டுமல்ல, பஞ்சாபிலும் மிகப் பெரிய பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளோம். கெஜ்ரிவால் தலைமையில் டெல்லியிலும், பகவந்த் மான் தலைமையில் பஞ்சாபிலும் ஆம் ஆத்மி கட்சி பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. நாங்கள் செய்துள்ள பணிகளை மக்களுக்குத் தெரிவிக்கவும், ராம ராஜ்ஜியத்தை அமைக்க வேண்டும் என்ற எங்கள் கனவின் உறுதியை வெளிப்படுத்தவும் இந்த இணையதளத்தைத் தொடங்கி உள்ளோம்.

மேலும், ராம ராஜ்ஜியம் குறித்த எங்கள் கனவை அறிந்துகொள்ள விரும்புபவர்கள் இந்த இணையதளத்தை அவசியம் காண வேண்டும். டெல்லியிலும், பஞ்சாபிலும் நாங்கள் என்ன செய்திருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ள முடியும். அதன் பிறகு நீங்கள் எங்களோடு இணையலாம்” என சஞ்சய் சிங் தெரிவித்தார்.

டெல்லி அமைச்சர் அடிஷி பேசுகையில், “ராம சரித மானஸ் காப்பியம் தந்த உந்துதல் காரணமாகவே டெல்லி மற்றும் பஞ்சாப் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தனது அரசு கடந்த 9 ஆண்டுகளாக பாடுபட்டுக் கொண்டிருக்கிறது என கெஜ்ரிவால் கூறி இருக்கிறார். ராம ராஜ்ஜியம் குறித்த நிறைவை மக்கள் பெறுவதற்காக ராமர் கடுமையான சவால்களை எதிர்கொண்டார். 14 ஆண்டுகள் வனத்துக்குச் சென்றார். ஆனாலும், அவர் தனது வாக்குறுதியை மீறவில்லை. கெஜ்ரிவாலும் அதே கடுமையான போராட்டங்களை எதிர்கொண்டு வருகிறார்” எனத் தெரிவித்தார்.

Kalvakuntla Kavitha: சிபிஐ கஸ்டடி கிடையாது…! பாஜக கஸ்டடி..!

டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் சிறையில் உள்ளனர். இந்த வழக்கில் தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கல்வகுண்ட்ல கவிதாவை அமலாக்கத்துறை கடந்த மாதம் 15-ம் தேதி கைது செய்தது. இதையடுத்து கல்வகுண்ட்ல கவிதா நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில், அவரை கைது செய்த சிபிஐ 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தியது. காவல் முடிவடைந்த நிலையில் கே.கவிதா டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 23-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நீதிமன்றத்தில் இருந்து மீண்டும் கல்வகுண்ட்ல கவிதா திகார் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,‘‘இந்த விவகாரத்தில் பாஜக வெளியில் என்ன பேசுகிறதோ அதனை தான் சிபி.ஐ தரப்பில் நீதிமன்றத்தில் வாதங்களாகவும் கேள்வியாகவும் முன்வைக்கப்படுகிறது. உன்மையை சொல்ல வேண்டுமென்றால் இது சிபிஐ கஸ்டடி கிடையாது. பாஜக கஸ்டடியாகும் ஆகும் என கல்வகுண்ட்ல கவிதா தெரிவித்தார்.

Bhagwant Mann: “திஹார் சிறையில் கெஜ்ரிவாலை பயங்கரவாதியை போல நடத்துகிறார்கள்”

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கையில் முறைகேடு விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை கடந்த நவம்பர் முதல் 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் 8 சம்மன்களையும் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து நிராகரித்து வந்தார். இதனை தொடர்ந்து கெஜ்ரிவாலை கடந்த 21-ம் தேதி அமலாக்கத் துறை கைது செய்து திஹார் சிறை அடைத்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், பஞ்சாப் முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான பகவந்த் மான் திஹார் சிறையில் உள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார். இரு தலைவர்களும் இன்டர்காம் மூலம் பேசியதாக கூறப்படுகிறது. இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பகவந்த் மான் பேசுகையில், “சிறையில் கொடுமையான குற்றவாளிகளுக்கு கிடைக்கும் வசதிகள் கூட கெஜ்ரிவாலுக்கு கொடுக்காதது வேதனையளிக்கிறது. அவரைப் பார்த்து நான் உணர்ச்சிவசப்பட்டேன்.

கெஜ்ரிவால் என்ன தவறு செய்தார்? பள்ளிகளை உருவாக்குகிறார். மக்களுக்கு இலவச மின்சாரம் கொடுத்துள்ளார். மக்களுக்கு சிகிச்சை அளிக்க மொஹல்லா கிளினிக்குகளை உருவாக்கி வருகிறார். நாட்டின் மிகப் பெரிய பயங்கரவாதியை பிடித்து வைத்திருப்பது போல் அவரை நடத்துகிறார்கள். பிரதமருக்கு என்ன வேண்டும்? அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு நேர்மையான நபர், அவர் வெளிப்படையான அரசியலைத் தொடங்கி பாஜகவின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதனால்தான் அவர் இவ்வாறு நடத்தப்படுகிறார்.

நான் எப்படி இருக்கிறீர்கள் என்று கெஜ்ரிவாலிடம் கேட்டதற்கு அவர் தன்னைப் பற்றி பேசவில்லை, அவர் என்னிடம் பஞ்சாப் பற்றி கேட்டார். நாங்கள் கெஜ்ரிவாலுடன் நிற்கிறோம். ஜூன் 4-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்போது, ஆம் ஆத்மி கட்சி நாட்டில் பெரிய அரசியல் சக்தியாக உருவெடுக்கும்” என பகவந்த் மான் தெரிவித்தார்.

வசீகரன் பேச்சு: தாமரை மலர்ந்தால் நாடு நாசமாகிவிடும்..!

நாகப்பட்டினம் அருகே தேவூரில், நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி கட்சி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜை ஆதரித்து ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர் வசீகரன் பிரசாரம் செய்தார். அப்போது, ‘அதிமுகவிற்கு வாக்களிப்பதும், பாஜவுக்கு வாக்களிப்பதும் ஒன்று தான்.

இரண்டு பேரும் கூட்டணி இல்லை என கூறி நம்மை ஏமாற்றி வாக்குகளை பெற்று கொள்வார்கள். வெற்றி பெற்ற பின் ஒன்றாக இணைந்து விடுவார்கள். குளத்தில் தாமரை படர்ந்தால் ஆக்சிஜன் செல்லாமல் அங்கு வசிக்கும் மீன்கள் இறந்து குளம் நாசமாக போகும். அதுபோல நாட்டில் தாமரை மலர்ந்தால் நாடு நாசமாகிவிடும். என வசீகரன் பேசினார்.

அமைச்சர் அதிஷி மர்லினாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

டெல்லி மதுபான வழக்கில் ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி மர்லினா அண்மையில் என்னையும், அமைச்சர் சவுரப் பரத்வாஜ், எம்.எல்.ஏ துர்கேஷ் பதக், எம்.பி. ராகவ் சதா ஆகியோரை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர். பாஜகவில் சேர வேண்டும், இல்லையெனில் ஒரு மாதத்தில் கைது செய்யப்படுவீர்கள்” என ஒன்றிய பாஜக அரசு மிரட்டல் விடுத்ததாக டெல்லி அமைச்சர் அதிஷி மர்லினா அண்மையில் ஒரு குற்றச்சாட்டை தெரிவித்து இருந்தார்.

அதிஷி மர்லினாவின் இந்த குற்றச்சாட்டு நாடெங்கும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து மறுப்பு தெரிவித்த பாஜக, தேர்தல் ஆணையத்திலும புகார் அளித்தது. இந்நிலையில் அதிஷி மர்லினாக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், “நீங்கள் தேசிய தலைநகர் டெல்லி அரசின் அமைச்சராகவும், ஒரு அரசியல் கட்சியின் தலைவராகவும் இருக்கிறீர்கள்.

தேர்தல் நேரத்தில் வாக்காளர்கள் தங்கள் தலைவர்கள் என்ன சொன்னாலும் அதை நம்புகிறார்கள். தலைவர்கள் வௌியிடும் அறிக்கைகள் பிரசாரங்களை பாதிக்கிறது. உங்கள் கருத்துக்கு ஆதாரம் இருக்க வேண்டும். இதுபற்றி வரும் 8-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்” என தேர்தல் ஆணையம் நோட்டீஸில் குறிப்பிடப்படுள்ளது.

சவுரப் பரத்வாஜ்: “தற்போதைய சூழலில் ஆம் ஆத்மியை ஒருங்கிணைக்க சுனிதா கேஜ்ரிவாலே சிறந்தவர்”

நாட்டின் தலைநகரம் டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரவிந்த் கேஜ்ரிவால் முதலமைச்சராக பதவி வகிக்கின்றார். கடந்த 2021 -ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 -ஆம் தேதி டெல்லி அரசால் கலால் கொள்கை அமல்படுத்தப்பட்டு புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது.

அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. 2022 -ஆம் ஆண்டு ஜூலை 31 புகார் எழுந்ததையடுத்து கலால் கொள்கை டெல்லி அரசால் ரத்து செய்யப்பட்டது.

இந்த கலால் கொள்கைக்கு ஏராளமான முறைகேடுகள் என்று புகார்கள் எழுந்தன. அதாவது, மது விற்பனை செய்ய லைசன்ஸ் பெற்றவர்களுக்கு ரூ.144.36 கோடிக்கு மேல் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், விதிகள், செயல்முறைகளைப் பின்பற்றாமல் ஒரு நிறுவனத்தின் ரூ.30 கோடி மதிப்பிலான டெபாசிட் பணம் திருப்பி அளிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது குறித்து சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்திருந்தார். இதனையடுத்து அமலாக்கத்துறையும், சிபிஐ-யும் வழக்கு விசாரணையை கையில் எடுத்தன. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் மதுபான கொள்கையில் முறைகேடு விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை கடந்த நவம்பர் முதல் 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் 8 சம்மன்களையும் அரவிந்த் கேஜ்ரிவால் தொடர்ந்து நிராகரித்து வந்தார். இதனை தொடர்ந்து கேஜ்ரிவாலை கடந்த 21-ம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது.

அமலாக்கத் துறையின் விசாரணையை அடுத்து அவரை வரும் 15-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அரவிந்த் கேஜ்ரிவால் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திஹார் சிறையில் இருந்தவாறு அரவிந்த் கேஜ்ரிவால் அளித்த செய்திகளை மூன்று முறை அவரது மனைவி சுனிதா கேஜ்ரிவால் சமூக ஊடகங்கள் மூலம் தெரிவித்திருக்கிறார். அதோடு, இண்டியா கூட்டணி சார்பாக டெல்லியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சுனிதா கேஜ்ரிவால், அங்கு அரவிந்த் கேஜ்ரிவாலின் உரையை வாசித்தார். மேலும், அரவிந்த் கேஜ்ரிவால் ஒரு சிங்கம் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

சுனிதா கேஜ்ரிவாலின் இத்தகைய நடவடிக்கைகளை விமர்சித்துள்ள பாஜக, டெல்லியில் ஒரு ராப்ரி தேவி உருவாகி வருவதாக கூறி வருகிறது. இந்நிலையில், சவுரப் பரத்வாஜின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது. டெல்லி அமைச்சருமான சவுரப் பரத்வாஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், “அரவிந்த் கேஜ்ரிவாலின் செய்தியை தற்போது சுனிதா கேஜ்ரிவால் வழங்கி வருகிறார். இது கட்சியினர் மத்தியிலும் ஆதரவாளர்கள் மத்தியிலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதை நாங்கள் முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறோம். தற்போதைய சூழலில் ஆம் ஆத்மி கட்சியை ஒருங்கிணைக்க சுனிதா கேஜ்ரிவால்தான் சிறந்த நபர்” என சவுரப் பரத்வாஜ் கருத்து தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்காக சுனிதா கேஜ்ரிவால் பிரச்சாரம் செய்வாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “அது நிகழ்ந்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம். ஆனால், பிரச்சாரத்தில் பங்கேற்பது என்பது அவரது தனிப்பட்ட முடிவு” என சவுரப் பரத்வாஜ் கூறினார்.

அரவிந்த் கேஜ்ரிவால் ஆவேசம்: உண்மையில் 100 கோடி ஊழல் நடந்தால், பணம் எங்கே..!?

நாட்டின் தலைநகரம் டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரவிந்த் கேஜ்ரிவால் முதலமைச்சராக பதவி வகிக்கின்றார். கடந்த 2021 -ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 -ஆம் தேதி டெல்லி அரசால் கலால் கொள்கை அமல்படுத்தப்பட்டு புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. 2022 -ஆம் ஆண்டு ஜூலை 31 புகார் எழுந்ததையடுத்து கலால் கொள்கை டெல்லி அரசால் ரத்து செய்யப்பட்டது.

இந்த கலால் கொள்கைக்கு ஏராளமான முறைகேடுகள் என்று புகார்கள் எழுந்தன. அதாவது, மது விற்பனை செய்ய லைசன்ஸ் பெற்றவர்களுக்கு ரூ.144.36 கோடிக்கு மேல் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், விதிகள், செயல்முறைகளைப் பின்பற்றாமல் ஒரு நிறுவனத்தின் ரூ.30 கோடி மதிப்பிலான டெபாசிட் பணம் திருப்பி அளிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்திருந்தார். இதனையடுத்து அமலாக்கத்துறையும், சிபிஐ-யும் வழக்கு விசாரணையை கையில் எடுத்தன.

இந்நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் மதுபான கொள்கையில் முறைகேடு விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை கடந்த நவம்பர் முதல் 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் 8 சம்மன்களையும் அரவிந்த் கேஜ்ரிவால் தொடர்ந்து நிராகரித்து வந்தார். இதனை தொடர்ந்து கேஜ்ரிவாலை கடந்த 21-ம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்று அரவிந்த் கேஜ்ரிவால் நீதிமன்றத்தில் சில நிமிடங்கள் பேச அனுமதிக்கப்பட்டார். அப்போது, “ஆம் ஆத்மி கட்சியை அமலாக்கத் துறை அழிக்கப் பார்க்கிறது. நான் கைது செய்யப்பட்டுள்ளேன். ஆனால், எந்த நீதிமன்றமும் என்னை குற்றவாளியாக சொல்லவில்லை. மேலும், ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாக சொல்லப்பட்டதில் கொஞ்சம் கூட மீட்கவில்லை. உண்மையில் 100 கோடி ஊழல் நடந்தால், பணம் எங்கே?.

சிபிஐ 31,000 பக்கங்கள், அமலாக்கத் துறை 21,000 பக்கங்கள் குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளன. இந்த இரண்டையும் ஒன்றாக படித்தால் கூட எஞ்சி நிற்கும் கேள்வி, நான் ஏன் கைது செய்யப்பட்டேன் என்பதே? ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் என் பெயர் நான்கு முறை மட்டுமே இடம்பெற்றுள்ளது.

அதிலும் ஒரு முறை ‘சி அரவிந்த்’ என்று இருந்தது. இந்த சி அரவிந்த் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் செயலாளராக இருந்தார். அவர் முன்னிலையில் சிசோடியாஜி என்னிடம் சில ஆவணங்களைக் கொடுத்தார் என்று குற்றப்பத்திரிகையில் சொல்லப்பட்டுள்ளது. கோப்புகளை கொடுக்க, அரசு குறித்து விவாதிப்பதற்காக எம்.எல்.ஏ.க்கள் தினமும் என் வீட்டுக்கு வந்தனர். பதவியில் இருக்கும் முதலமைச்சரைக் கைது செய்ய இப்படி ஓர் அறிக்கை போதுமா?

இந்த வழக்கில் இதற்கு முன் கைது செய்யப்பட்டு அப்ரூவராக மாறியவர்கள் என் மீது குற்றம்சாட்ட கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். அமலாக்கத் துறைக்கு ஒரே ஒரு பணி மட்டுமே, அது எப்படியாவது என்னை சிக்க வைக்க வேண்டும் என்பதே. இந்த வழக்கில் நான்கு சாட்சிகளால் நான்கு முறை என் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. பதவியில் இருக்கும் முதல்வரைக் கைது செய்ய 4 சாட்சிகள் போதுமானதா? இந்த வழக்கின் ஒரு சாட்சி என் பெயரை குறிப்பிடாத ஆறு அறிக்கைகளை அளித்திருந்தார். ஆனால் ஏழாவது அறிக்கையின் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். அதேபோல் மூன்றாவது சாட்சியான சரத் ரெட்டி கைது செய்யப்பட்ட பிறகு அவர் பாஜகவுக்கு ரூ.50 கோடி நன்கொடை அளித்துள்ளார். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது” என்று அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.

இதேபோல் அரவிந்த் கேஜ்ரிவால் தரப்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், “அமலாக்கத் துறையானது பாரதிய ஜனதா கட்சியால் எதிர்க்கட்சிகளை குறிவைக்க பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக தேர்தலுக்கு முன்பு எதிர்க்கட்சிகளை மிரட்டி பணம் பறிக்கும் வேலைகளில் ஈடுபடுகின்றனர். ஆம் ஆத்மி கட்சி ஊழலற்றது என்பது தேசத்தின் முன் கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே அமலாக்கத் துறை விசாரணையை எதிர்கொள்ளத் தயார். நீங்கள் விரும்பும் வரை என்னை ரிமாண்டில் வைத்திருக்கலாம். விசாரணைக்கு நான் தயார்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்வி ராஜு, “அரவிந்த் கேஜ்ரிவால் நாடகம் ஆடுகிறார். அமலாக்கத் துறையிடம் எத்தனை ஆவணங்கள் உள்ளன என்பது அவருக்கு எப்படித் தெரியும்? அவர் சொல்பவை அனைத்தும் அவரது கற்பனையே. கோவா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு லஞ்சம் மூலம் பெறப்பட்ட பணம் பரிசாக கிடைத்துள்ளது. ஹவாலா மூலம் பணம் வந்ததற்கான அறிக்கைகள் மற்றும் ஆவணங்கள் எங்களிடம் உள்ளன.

அரவிந்த் கேஜ்ரிவால் ரூ.100 கோடிக்கான பரிசுகளை கேட்டார் என்பதைக் காட்ட எங்களிடம் ஆதாரங்கள் உள்ளது. அரவிந்த் கேஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார். மழுப்பலாக பதிலளித்து வருகிறார். மேலும், தனது டிஜிட்டல் சாதனங்களின் கடவுச்சொற்களை தரவும் மறுக்கிறார்” என்று வாதிட்டார். இந்த வாதங்களுக்கு பின் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலின் அமலாக்கத் துறை காவலை மேலும் நான்கு நாட்களுக்கு ஏப்ரல் 1-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.