அஸ்வத்தாமன் கேள்வி: வெள்ளியங்கிரி மலை என்ன உங்கள் வீட்டு சொத்தா.. ?

வெள்ளியங்கிரி மலை ஏற அரசுக்கு ரூ.5353.95 கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில் வெள்ளியங்கிரி மலை என்ன உங்கள் வீட்டு சொத்தா ? உதயநிதி ஸ்டாலின் அவர்களே ? என பாஜக நிர்வாகி அஸ்வத்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு மலையேற்றத் திட்டத்தில் இயற்கை ஆர்வலர்களை மகிழ்விக்கும் விதமாக நீலகிரி, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் 40 தேர்ந்தெடுக்கப்பட்ட மலையேற்ற பாதைகளை வனத்துறை திறந்துள்ளது. இதில் வெள்ளியங்கிரி மலை ஏற அரசுக்கு ரூ 5353.95 கட்டணம் செலுத்த வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு பக்தர்களும், இயற்கை ஆர்வலர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வெள்ளியங்கிரி மலை என்ன உங்கள் வீட்டு சொத்தா என பாஜக நிர்வாகியான அஸ்வத்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார் . இதுதொடர்பாக அஸ்வத்தாமன் எக்ஸ் பக்கத்தில்,” துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டு இருக்கிற ஒரு அறிவிப்பில் தென்கைலாயமான வெள்ளியங்கிரி மலைக்கு செல்பவர்கள் ரூ. 5099 ரூபாய் தமிழக அரசுக்கு கட்ட வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. ‘மலையேற்றத்திட்டம்’ என்ற பெயரில் இந்த அநியாயத்தை திராவிட மாடல் அரசு செய்துள்ளது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று சிவபெருமானை வணங்கி வருகின்றனர்.

வெள்ளியங்கிரி மலைக்கு வருகிறவர்கள் ஆன்மீக பக்தர்களே தவிர மலையேற்றத்திற்கு வருகிற சுற்றுலா பயணிகள் அல்ல. வெள்ளியங்கிரி மலைக்கு சிவராத்திரி தினத்தில் மட்டும் 3 லட்சத்திலிருந்து 4 லட்சம் பக்தர்கள் வந்து தரிசிக்கின்றனர். சித்ரா பௌர்ணமி தினத்தன்று சுமார் பத்து லட்சம் பக்தர்கள் வந்து தரிசிக்கின்றனர். சித்ரா பவுர்ணமி அன்று மலை அடிவாரத்தில் சுற்றி இருக்கிற கிராமத்து மக்கள் வில்லு வண்டியில் வந்து வள்ளி கும்மி, காவடி, ஒயிலாட்டம், மயிலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தி காவடி ஏந்தி கொண்டு வெள்ளியங்கிரி மலையில் ஏறுவார்கள்.

இனிவரும் காலங்களில் அந்த சுற்றுவட்டார கிராமத்து மக்கள் காவடியுடன் வெள்ளியங்கிரி மலையில் ஏறுவதற்கு உதயநிதிக்கு 5099 ரூபாய் தண்டம் கட்ட வேண்டுமா !? தாணிகண்டி, முல்லாங்காடு உள்ளிட்ட சுற்றியுள்ள பல கிராம மக்கள் , வெள்ளியங்கிரியில் மீது அமர்ந்திருக்கிற சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வருகின்றனர். இனிவரும் காலங்களில் அந்த கிராமங்களைச் சார்ந்த மக்கள் தன்னுடைய குலதெய்வத்தை கும்பிடுவதற்கு திராவிட மாடல் அரசுக்கு கப்பம் கட்ட வேண்டுமா!? வெள்ளியங்கிரிக்கு நாள்தோறும் லட்சக்கணக்கில் வரும் பக்தர்களை தடுப்பதற்கு உதயநிதி அவர்கள் திட்டம் தீட்டுகிறாரா !? என்ற கேள்வி எழுகிறது . சனாதன இந்து தர்மத்தை அழிப்பேன் என்று உதயநிதி தொடர்ந்து கூறி வருகிறார்.

அனைவரும் அறிந்ததே . இது உதயநிதி முன்னெடுத்துள்ள சனாதன இந்து தர்ம ஒழிப்பு சதி திட்டத்தின் ஒரு அங்கமா என்பதை உதயநிதி தெளிவுபடுத்த வேண்டும். தென் கைலாயமான வெள்ளியங்கிரியில் தமிழ் பாட்டி அவ்வையார் அவர்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட வெள்ளை விநாயகர் கோவில் ,சீதை வனம் ,பீமன் களி உருண்டை, சித்தர் கூரை உள்ளிட்ட பல்வேறு ஆன்மீக மையங்கள் உள்ளன.வெள்ளியங்கிரி மலையின் ஆறாவது மலையான திருநீர் மலையில் உள்ள ஆண்டி சுனையில் இருந்து புனித நீரை எடுத்து வந்து கும்பாபிஷேகம் பண்ண முடியாத நிலையில் இருக்கிற திருக்கோவில்களில் அபிஷேகம் செய்தால் அந்த கோவிலில் உடனடியாக கும்பாபிஷேகம் நடக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. கடந்த வாரம் கூட திருவண்ணாமலையில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆய்வு என்கிற பெயரில் மலையை சுற்றி வந்தார்.

வேண்டுதலுக்காக கிரிவலம் வந்திருப்பார் என்று மக்கள் பலரும் நினைத்த நிலையில், இப்பொழுது, திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பக்தர்களுக்கும் கூட கட்டணம் வசூலிக்கலாம் என்ற மோசமான யோசனையில் உதயநிதி அங்கு வந்து இருப்பாரோ என்கிற சந்தேகம் எழுகிறது. ஒரு மிகப்பெரிய ஆன்மீக ஆதார ஸ்தலமான வெள்ளியங்கிரி மலையின் வழிபாட்டை வெளிப்படையாகவே குலைக்கும் நோக்கத்தோடு இந்த அறிவிப்பை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக இந்த அறிவிப்பை ரத்து செய்யவில்லை என்று சொன்னால் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும்.” என அஸ்வத்தாமன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆளுநரிடம் கோரிக்கை: முதலமைச்சர், துணை முதலமைச்சர் மீதான குற்றவியல் நடவடிக்கை வேண்டும்..!

தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் இனவாத கருத்துகளை பரப்புவதால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை தொடங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என ஆளுநரிடம் தமிழக பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை, கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவியை, பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார்.

அதன்பின்னர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அஸ்வத்தாமன் பதிலளித்தார். அப்போது அண்மையில் ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ஒரு வரி விடுபட்டது சர்ச்சை யாக்கப்பட்டது. இதில், ஆளுநர் மீது இனவாத அடிப்படை யில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவதூறு கருத்து தெரிவித்து இருந்தார். நான் பெருமைமிகு கிறிஸ்தவன் என சொல்லும் உதயநிதி, சனாதனத்தை வேரறுப்போம் என்கிறார். என தெரிவித்தார்

இதைப்போல், இனவாத கருத்துகளை தொடர்ந்து முன்வைப்பது, ஆளுநரை பணி செய்யவிடாமல் தடுப்பது, இனவாத கருத்துகளை பரப்பி மக்களிடையே அமைதியை குலைக்கும் நோக்கில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழான குற்றங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஆகியோர் மீது பிஎன்எஸ் சட்டம் 218-ன் கீழ் குற்றவியல் நடவடிக்கையை தொடங்குவதற்கான அனுமதிவழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கி றோம். இதுதொடர்பாக ஆளுநர் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

இங்கு மக்கள் பிரச்சினைகள் ஆயிரம் இருக்கின்றன. அவற்றில் கவனம் செலுத்தாமல் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் மக்களை திசை திருப்பும் நயவஞ்சக நாடகங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின் றனர். திமுகவின் வரலாறே இந்திய தேசத்துக்கு எதிரானது. அவர்களின் நடவடிக்கைகள் அனைத்துமே பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதிலும், இனவெறி கருத்துகளை பேசுவதிலும், மதவெறியில் ஊறிப்போய் பேசுவதிலுமே இருக்கிறது.

இல்லாத இனவாதமான திராவிடத்தை பேசுவோர் கையில் தமிழ்ச் சமூகம் சிக்கிக்கொண்டிருக்கிறது. இதைவிடுத்து எப்போது அவர்கள் மனிதவாதம் பேசப்போகிறார்கள் என்பது தெரிய வில்லை என அஸ்வத்தாமன் தெரிவித்தார்.

அஸ்வத்தாமன்: சனாதன ஒழிப்பு மாநாட்டின் தீர்மானங்களை நீங்கள் பார்த்தீர்களா..!?

நான் பெருமைமிகு கிறிஸ்தவன் என சொல்லும் உதயநிதி, சனாதனத்தை வேரறுப்போம் என்கிறார் என பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் தெரிவித்தார். சென்னை, கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவியை, பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார். அதன்பின்னர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அஸ்வத்தாமன் பதிலளித்தார்.

அப்போது, அண்மையில் ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ஒரு வரி விடுபட்டது சர்ச்சை யாக்கப்பட்டது. இதில், ஆளுநர் மீது இனவாத அடிப்படையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவதூறு கருத்து தெரிவித்து இருந்தார். நான் பெருமைமிகு கிறிஸ்தவன் என சொல்லும் உதயநிதி, சனாதனத்தை வேரறுப்போம் என்கிறார்.

இதைப்போல், இனவாத கருத்துகளை தொடர்ந்து முன்வைப்பது, ஆளுநரை பணி செய்யவிடாமல் தடுப்பது, இனவாத கருத்துகளை பரப்பி மக்களிடையே அமைதியை குலைக்கும் நோக்கில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழான குற்றங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஆகியோர் மீது பிஎன்எஸ் சட்டம் 218-ன் கீழ் குற்றவியல் நடவடிக்கையை தொடங்குவதற்கான அனுமதிவழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறோம். இதுதொடர்பாக ஆளுநர் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

இங்கு மக்கள் பிரச்சினைகள் ஆயிரம் இருக்கின்றன. அவற்றில் கவனம் செலுத்தாமல் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் மக்களை திசை திருப்பும் நயவஞ்சக நாடகங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். திமுகவின் வரலாறே இந்திய தேசத்துக்கு எதிரானது. அவர்களின் நடவடிக்கைகள் அனைத்துமே பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதிலும், இனவெறி கருத்துகளை பேசுவதிலும், மதவெறியில் ஊறிப்போய் பேசுவதிலுமே இருக்கிறது.

இல்லாத இனவாதமான திராவிடத்தை பேசுவோர் கையில் தமிழ்ச் சமூகம் சிக்கிக்கொண்டிருக்கிறது. இதைவிடுத்து எப்போது அவர்கள் மனிதவாதம் பேசப்போகிறார்கள் என்பது தெரியவில்லை என அஸ்வத்தாமன் தெரிவித்தார்.

அஸ்வத்தாமன் காட்டம்: அண்ணா தோற்றுவித்த திராவிட முன்னேற்ற கழகம் தற்போது திராவிட கழகமாக மாறி வருகிறது..!

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலுக்கு, பாஜகவின் மாநில செயலாளர் அஸ்வத்தாமன் நேற்று முன்தினம் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, ‘அண்ணா தோற்றுவித்த திராவிட முன்னேற்ற கழகம் தற்போது திராவிட கழகமாக மாறி வருவதாகவும், மக்களின் அன்றாட பிரச்னைகளை கவனிக்காமல் தமிழ்த்தாய் வாழ்த்தை வைத்து அரசியல் செய்கிறது.

மேலும், திருமாவளவனோடு மத்திய அமைச்சர் எல்.முருகனை ஒருபோதும் ஒப்பிட முடியாது. அவர் சட்டம் பயின்றவர். ஆனால், திருமாவளவனோ மதமாற்றம் குறித்த செய்கையில் முனைவர் பட்டம் பெற்றார் என அஸ்வத்தாமன் தெரிவித்தார்.

அஸ்வத்தாமன் நண்பனாக உறவாடியே ஆம்ஸ்ட்ராங்கை கொன்றேன்..!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5-ஆம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருக்கே கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக ஆரம்பத்தில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் திமுக, அதிமுக, பாஜக, தமாகா கட்சிகளைச் சேர்ந்தவர்கள், வழக்கறிஞர்கள், ரவுடிகள் என இந்த வழக்கில் அடுத்தடுத்து சிக்கியுள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 5 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அது போல் இதுவரை 23 பேர் வரை கைது ஆகியுள்ளனர். இவர்களை காவல்துறையினர் ஒவ்வொருவராக காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது காவல்துறை காவலில் பிரபல ரவுடி நாகேந்திரன், அவரது மகனும் முன்னாள் காங்கிரஸ் நிர்வாகி வழக்கறிஞர் அஸ்வத்தாமன் உள்ளனர். இவர்களிடம் தனித்தனியாகவும் நேருக்கு நேர் வைத்தும் தனிப்படை காவல்துறை விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் போது அவர்கள் அளிக்கும் வாக்குமூலங்கள் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த விசாரணையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் சில தகவல்கள் கிடைத்துள்ளதாக காவல்துறை தெரிவிக்கிறார்கள். இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வரும் சம்போ செந்தில் என்பவரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். அவர் தாய்லாந்தில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவரை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அஸ்வத்தாமனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பல்வேறு தகவல்களை தெரிவித்து உள்ளார் என தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது ஆம்ஸ்ட்ராங்குடன் இணக்கமான சூழலை கடைப்பிடித்துள்ளார். அவரிடம் போய் “உங்களுக்கும் அப்பாவுக்கும்தானே முன் விரோதம். நான் இணக்கமாக செல்ல விரும்புகிறேன்” என்று ஆம்ஸ்ட்ராங்கை அங்கிள் என்றே அழைத்தாராம் அஸ்வத்தாமன்.

அவருடன் நட்புடன் இருப்பது போல் நடித்ததாகவும் மாமூல் , அரசியல் எதிர்காலம் என அனைத்துமே பூஜ்ஜியம் ஆகிவிடும் என்பதால் நாகேந்திரனிடம் கூறி ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல சொன்னாராம் அஸ்வத்தாமன். மேலும் கடந்த 4 நாட்களாக அஸ்வத்தாமனிடம் காவல்துறை விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அவர் கூறுகையில், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய அருள் எங்களை அணுகினார். அப்போது நான் அப்பாவிடம் கேட்டுவிட்டு சொல்கிறேன் என கூறினேன்.

அதன் பிறகு அனைத்தும் நல்லவிதமாக முடிந்தால் கண்டிப்பாக கொலை வழக்கில் கைது செய்யப்படுவோருக்கு என்னால் முடிந்த உதவியை செய்கிறேன் என தெரிவித்ததாகவும் கூறியிருந்தார். இந்த கொலைக்கு அஸ்வத்தாமன் ஒப்புக் கொண்டஎன்பதற்கான மூன்று காரணங்கள். ஒரக்காடு நிலப்பிரச்சினையில் என்னை உள்ளே நுழைய விடாமல் ஆம்ஸ்ட்ராங் தடுத்தார். இதனால் எங்கள் வருமானம் பாதிக்கப்பட்டது.

மேலும் மீஞ்சூரில் காங்கிரஸ் பிரமுகர் ஜெயப்பிரகாஷை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய வழக்கில் ஆம்ஸ்ட்ராங் தூண்டுதலின் பேரில் ஜெயப்பிரகாஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த வழக்கில் நான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன். அது எனக்கு மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தியது. அது போல் பகுஜன் சமாஜ் கட்சி மாவட்டச் செயலாளர் தென்னரசு கொலை வழக்கில் எனது தந்தை நாகேந்திரனை குற்றவாளியாக சேர்த்துள்ளனர்.

அவருக்கும் அந்தக் கொலைக்கும் சம்பந்தம் கிடையாது. ஆனால் ஆம்ஸ்ட்ராங் தூண்டுதலால்தான் என் தந்தை சிறைக்குச் சென்றார். எனது வாழ்விலும் எனது தந்தை வாழ்விலும் குறுக்கே வரும் ஆம்ஸ்ட்ராங்குடன் எனக்கு முன்விரோதம் ஏற்பட்டது. இதனால்தான் அருள் என்னை அணுகிய போது நான் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சம்மதம் தெரிவித்தேன் என அஸ்வத்தாமன் தெரிவித்ததாக தெரிகிறது.