கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனை மருத்துவருக்கு கத்திக்குத்து..!

“சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனைக்கு நான்கு பேர் சிகிச்சைக்காக இன்று வந்துள்ளனர். அங்கு புற்றுநோய் பிரிவில் சிகிச்சையளித்து வந்த மருத்துவர் பாலாஜி என்பவரை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, “சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக நான்கு பேர் சிகிச்சைக்காக வந்துள்ளனர். அங்கு புற்றுநோய் பிரிவில் சிகிச்சையளித்து வந்த மருத்துவர் பாலாஜி என்பவரை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவல்துறை விரைவாக நடவடிக்கை எடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்து சட்ட ரீதியான நடவடிக்கையை எடுப்பார்கள் என மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனைக்கு இன்று வழக்கம்போல் நோயாளிகள் சிகிச்சைக்காக வந்திருந்தனர். இம்மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவின் சிறப்பு மருத்துவர் பாலாஜி பணியில் இருந்தார்.

இந்நிலையில், மருத்துவமனைக்கு வந்த சிலர் மருத்துவர் பாலாஜியிடம் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்தொடர்ச்சியாக, அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் மருத்துவர் பாலாஜியை குத்தி தாக்குதல் நடத்தியதில் ரத்தவெள்ளத்தில் மருத்துவர் பாலாஜி சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்துள்ளார். இந்த சம்பவத்தால் மருத்துவமனை வளாகம் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து கிண்டி காவல்துறைக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மருத்துவர் பாலாஜியை தாக்கிய நபர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆர்.பி.உதயகுமார்: அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லை..!

தற்போது தமிழகத்தில் கடுமையான விஷக் காய்ச்சல் பரவி வருகிறது. இதற்கு அரசு மருத்துவமனைகளில் மருந்து கூட இல்லைஎன ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

தமிழக சட்டசபை எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில்தி முக அரசை கண்டித்து மதுரை டி.பழங்காநத்தம், குண்ணத்தூர் ஜெயலலிதா கோவிலில் ஜெ. பேரவை சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் வரும் 9-ஆம் தேதி நடைபெற இருக்கின்றது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைக்க முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன், அதிமுக அமைப்பு செயலாளர் வி.வி..ராஜன் செல்லப்பா, உண்ணாவிரதத்ததை முடித்து வைக்க இருக்கின்றனர்.

மதுரை டி.குண்ணத்தூர் ஜெயலலிதா கோவிலில் உண்ணாவிரதம் போராட்டத்தல் பங்கேற்கும் இளைஞர்களுக்கு பயிற்சி முகாம் மூன்றாவது நாளாக நடைபெற்றது. இதில் சட்டசபை எதிர்க் கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் ஆலோசனை வழங்கினார்.

அப்போது பேசிய ஆர்.பி.உதயகுமார், “சமானிய முதலமைச்சராக கே.பழனிசாமி இருந்ததால் மக்களுக்கு நெருக்கமாக இருந்தார். ஆனால், இன்று திமுக ஆட்சி மக்களிடம் இருந்து வெகு தொலைவு விலகி சென்றுவிட்டது. மக்கள் அதிமுக ஆட்சி மீண்டும் வராதா என்று ஏங்குகிறார்கள். அதற்கு அடித்தளமாக மதுரையில் மக்களுடைய பிரச்சினைகளை மையமாக கொண்டு உண்ணா விரதம் போராட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே இயக்கமாக அதிமுக மட்டுமே உள்ளது. மற்ற கட்சிகள், திமுகவிடம் எம்எல்ஏ, எம்பி சீட்களுக்காக அடிபணிந்துவிட்டன. கடந்த சட்டசபைத் தேர்தலில் 520 தேர்தல் வாக்குறுதியை திமுக அளித்தது. குறிப்பாக ஐந்து ஆண்டுகளில் 50 லட்சம் வேலை வாய்ப்பை வழங்குவோம் என்றும், ஐந்தரை லட்சம் அரசு காலி பணியிடங்களில் நிரப்புவோம் என கூறினார்கள். ஆனாலும், எதுவும் நடக்கவில்லை.

இன்றைக்கு நாட்டு மக்களை பற்றி சிந்திக்க முதலமைச்சருக்கு நேரமில்லை. ஏனென்றால் தனது வீட்டு மக்களை நலனை முன்னிறுத்திதான் முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார். இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு துரும்பை கூட ஸ்டாலின் கில்லிப் போடவில்லை. இன்றைக்கு இளைஞர்களுக்கு காவல் அரணாக அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமியும் மட்டுமே உள்ளார்.

மூன்று முறை மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, குப்பை வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு இது ஒரு புறம் இருக்க, தற்போது தமிழகத்தில் கடுமையான விஷக் காய்ச்சல் பரவி வருகிறது. இதற்கு அரசு மருத்துவமனைகளில் மருந்து கூட இல்லை” என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

பிரசவ வார்டில் பச்சிளம் குழந்தைகளோடு பெண்கள் தரையில் படுத்து கிடப்பதை கண்டு MLA அதிர்ச்சி..!

காஞ்சீபுரம் ரெயில்வே சாலையில் அவசர சிகிச்சை, பொது மருத்துவம், குழந்தைகள் பிரிவு, எலும்பு மருத்துவம், கண் மருத்துவம், சிறுநீரக மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவுகள் கொண்ட மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை உள்ளது.

மேலும் மகப்பேறு நல மருத்துவ பிரிவு 5 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் உள்ளது. இதில் முதல் தளத்தில் கர்ப்பிணிப் பெண்கள் சிகிச்சை பிரிவு, 2-வது தளத்தில் பெண்கள் அறுவை சிகிச்சை மற்றும் விபத்து பிரிவு, 3-வது தளத்தில் கர்ப்பிணி பெண்கள் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை பகுதி 4-வது தளத்தில் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பகுதி, 5-வது தளத்தில் பிரசவத்திற்கு பின்னர் பெண்கள் பராமரிப்பு பகுதி ஆகியவை உள்ளன.

இந்நிலையில் மகப்பேறு மருத்துவ பிரிவில் போதிய அளவில் படுக்கை வசதி இல்லாமல் பிரசவித்த பெண்கள் பச்சிளம் குழந்தைகளோடு தரையில் படுத்து கிடப்பதாக புகார்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து எழிலரசன் எம்எல்ஏ காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை சென்று திடீரென சென்று ஆய்வு செய்தார்.

அப்போது பிரசவ வார்டில் பச்சிளம் குழந்தைகளோடு படுக்கை வசதி இல்லாமல் பல பெண்கள் தரையில் படுத்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி பணியில் இருந்த மருத்துவர் மற்றும் ஊழியர்களிடம் கேட்டு உடனடியாக அவர்களுக்கு படுக்கை வசதி செய்து கொடுக்க உத்தரவிட்டார்.

சுமார் 2 மணி நேரம் மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை..! உயிரிழந்த சிறுவர்களை 15 கி.மீ தூக்கி சென்ற பெற்றோர்..!

அரசு மருத்துவமனையில் போதிய சிகிச்சை அளிக்காததால் சிறுவர்கள் உயிரிழந்த நிலையில், ஆம்புலன்ஸ் இல்லாத காரணத்தினால் 15 கி.மீ வரை குழந்தைகளின் சடலங்களை தூக்கி சென்ற அவலம். பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிராவின் அகேறி என்ற பகுதியை அடுத்துள்ள பட்டிக்கான் என்ற கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு 6 மற்றும் 3 வயதில் குழந்தைகள் உள்ளன. இந்த சூழலில் இந்த குழந்தைகளுக்கு மிகவும் காய்ச்சல் அடிக்கிறது என்பதால் கடந்த 4-ஆம் தேதி ஜமீல்கட்டா ஆரம்ப சுகாதார நிலையம் த்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.

ஆனால் அங்கே மருத்துவர் இல்லாத காரணத்தினால், சுமார் 2 மணி நேரம் போதிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதனால் இரண்டு சிறுவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். நீண்ட நேரம் கழித்து வந்த மருத்துவர் சிறுவர்கள் உயிரிழந்துவிட்டதாக பெற்றோரிடம் தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர்.

பின்னர் குழந்தைகளின் உடலை தங்கள் வீட்டுக்கு கொண்டு செல்ல முனைந்த பெற்றோர், அதற்காக ஆம்புலன்ஸை எதிர்ப்பார்த்துள்ளனர். ஆனால் ஆம்புலன்சும் இல்லாத காரணத்தினால் வேறு வழியின்றி சேறும், சகதியுமாய் இருந்த பாதையில் சுமார் 15 கி.மீ வரை தங்கள் தோள்களில் தங்கள் குழந்தைகளின் சடலங்களை கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, பாஜக துணை முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் உள்ளிட்டோருக்கு காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.