ஹெச்.ராஜா: பாலியல் வன்கொடுமை..! கிறிஸ்தவர்கள் தொடர்புடைய பள்ளிகளை பற்றி அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசிவதில்லை..!?

பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா, திருச்சியில் 40-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியும், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதுபற்றி பேசவில்லை. கிறிஸ்தவர்கள் தொடர்பு இருப்பதால்தான் பேசவில்லையா? என தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜன சங்கம் கட்சி தலைவர் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா 108-வது பிறந்தநாள் விழா சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. அவரது படத்துக்கு பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர், செய்தியாளர்களள் சந்திப்பில் ஹெச்.ராஜா பேசுகையில், நாடு முழுவதும் 24-ம் தேதி வரை 5 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். பழநி பஞ்சாமிர்தம் குறித்து கருத்து தெரிவித்த இயக்குநர் மோகன் ஜியை கைது செய்தது முறையற்றது. நீதிமன்றமும் அதையே சொல்லி, தமிழக அரசு, காவல் துறைக்கு பலத்த அடி கொடுத்துள்ளது. அதேநேரம், பிரதமர் குறித்து அவதூறாக பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசனை முதலமைச்சர் இன்னும் பதவி நீக்கம் செய்யவில்லை.

விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் விஜயகாந்துடன் மக்கள்நல கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தன. ஆனால், அந்த கூட்டணிக்கு வெறும் 6 சதவீத வாக்குகள்தான் கிடைத்தன. அதனால், திமுக நினைப்பதுபோலவே, விசிக ஒன்றும் தவிர்க்க முடியாத பெரிய அரசியல் சக்தி இல்லை.

மேலும் பேசிய ஹெச்.ராஜா, மகாவிஷ்ணு விவகாரத்தில் 2 தலைமை ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், திருச்சியில் 40-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியும், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதுபற்றி பேசவில்லை. கிறிஸ்தவர்கள் தொடர்பு இருப்பதால்தான் பேசவில்லையா? என ஹெச்.ராஜா தெரிவித்தார்.

ஜோக்கர் சர்க்கார் நடத்தும் பொம்மை முதலமைச்சர்..! மகாவிஷ்ணு பஞ்சாயத்தில் குதித்த ஜெயக்குமார்..!

பரம்பொருள் அறக்கட்டளையை நடத்தி வரும் மகாவிஷ்ணு என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மற்றும் அசோக் நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு முன்பாக தன்னை உணர்தல் என்ற ஆன்மீக வகுப்பை நடத்தியுள்ளார். “நான் வேற மாதிரி பேசிருவேன்! உங்களுக்கு எப்படி பேசணும்? தலைமை ஆசிரியையிடம் கேட்ட மகாவிஷ்ணு ” அப்போது மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசிய அவர் கடந்த ஜென்மத்தில் பாவ புண்ணியங்களின் அடிப்படையில்தான் இந்த ஜென்மத்தில் நாம் பிறந்திருக்கிறோம்.

மாற்றுத்திறனாளிகள் ஏழைகள் அப்படி பிறந்தவர்கள் தான் என்ற ரீதியில் பேசியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இப்போது அங்கிருந்து அனைவரும் அமைதியாக இருந்த நிலையில் மாற்றுத்திறனாளியான ஆசிரியர் ஒருவர் அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் பள்ளிக்கூடத்தில் ஆன்மீகம் போதிக்கிறீர்கள்.. மறுபிறவி பாவ புண்ணியம் பற்றி பேசுவது என்ன நியாயம்? என வாக்குவாதம் செய்தார். இதை அடுத்து அவரை மற்ற ஆசிரியர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மகா விஷ்ணு ஆன்மீக சொற்பொழிவு நடத்தினார்.

இதை அடுத்து அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், அவருக்கு எதிராக கடும் கண்டனம் எழுந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆவேசமாகக் கூறினார். மேலும் மாற்றுத் திறனாளிகள் குறித்து அவதூறாகப் பேசியதாக மகாவிஷ்ணு மீது சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தை சேர்ந்த சிலர் புகார் அளித்தனர். இதற்கிடையே மகாவிஷ்ணு தலைமறைவாகி விட்டதாகவும், ஆஸ்திரேலியாவில் அவர் தங்கியிருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எக்ஸ் பக்கத்தில்,”ஊழல்-லஞ்சம் என கொள்ளை அடிப்பதையே நோக்கமாக கொண்டிருக்கும் கொள்ளைக்கார அரசிற்கு கொள்கை என்ற ஒன்றே இல்லை! பொழுதுப்போக்கான சினிமா முதல் தாகத்திற்கு அருந்தும் தண்ணீர் பாட்டில் வரை இந்த ஒரு குடும்பம் மட்டுமே அதிகாரத்தை பயன்படுத்தி அராஜக தொழில் செய்து வருகிறது.

இதை எல்லாம் பாதுகாக்க தமிழ்நாட்டை காவி நாடாக மாற்ற முயற்ச்சிக்கிறதா இந்த அரசு? பாஜக அரசிற்கு பச்சை கொடி காட்டுவது தான் பள்ளிக்கல்வித்துறையின் பணியா? பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர்-மாணவர்களிடையே ஆயிரம் வன்முறைகள்! கல்லூரியை காட்டிலும் கஞ்சா-செல்போன் என பள்ளி வகுப்பறையில் பயன்படுத்தி‌ மாணவச் சமுதாயமே சீரழிவின் உச்சியில் உள்ளது.

எதை பற்றியும் கவலைப்படாமல் உதயநிதிக்கென தனி உலகம் அமைக்க பாடுபடும் அன்பில் மகேஷ் அவர்களே..’மாணவர்கள் மனதில் மதவாதத்தை விதைக்க அனுமதி அளித்தது யார்? நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாமல் ஜோக்கர் சர்க்கார் நடத்தும் பொம்மை முதலமைச்சர் சரியாக இருந்தால் இவ்வளவு நிர்வாக சீர்கேடுகள் நிகழுமா?” என அமைச்சர் ஜெயக்குமார் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மகாவிஷ்ணு ஆதரவாக ஹெச் ராஜா! ஆன்மீகம் குறித்தும் நீதி போதனை குறித்தும் பள்ளிகளில் சொல்லித் தர வேண்டும்..!

ஆன்மீகம் குறித்தும் நீதி போதனை குறித்தும் பள்ளிகளில் சொல்லித் தர வேண்டும் என ஹெச் ராஜா தெரிவித்தார்.சென்னை அசோக் நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேச்சாளர் மகாவிஷ்ணு மாணவிகள் மத்தியில் நிகழ்த்திய சொற்பொழி மற்றும் சொற்பொழிவு சம்பந்தமாக அப்பள்ளியின் ஆசிரியர் ஒருவருடன் அந்தப் பேச்சாளர் மேடையில் இருந்தபடியே வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தமிழகத்தில் இன்று பேசுபொருளானது.

இந்நிலையில், அசோக் நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேச்சாளர் மகாவிஷ்ணு மாணவிகள் மத்தியில் முன் ஜென்மம் பாவ புண்ணியம் குறித்தெல்லாம் பேசியுள்ளார். அங்கிருந்த ஒரு ஆசிரியர் மட்டுமே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும், மகாவிஷ்ணு தனது சர்ச்சை பேச்சைத் தொடர்ந்தார். பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நெட்டிசன்கள் பலரும் மகாவிஷ்ணுவுக்கு எதிராகக் காட்டமான கருத்துகளைக் கூறி வருகின்றனர்.மேலும் பலரும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று அடுத்த சில நாட்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். அதைத்தொடர்ந்து அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை இடமாற்றமும் செய்யப்பட்டார். காவல்துறையினரும் மகாவிஷ்ணுவுக்கு எதிராக விசாரணையில் இறங்கியுள்ளனர்.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவின் ஹெச் ராஜா கருத்து கூறியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த போது ஹெச் ராஜா, “இந்த திராவிட மாடல் என்பவர்கள் ஆட்சிக்கு வந்ததும் முதலில் செய்தது என்ன தெரியுமா.. நீதி போதனை வழக்குகளை ரத்து செய்தார்கள். ஆட்டையைப் போட வந்தவர்கள் ஆட்சிக்கு வந்த உடன் அறம் செய்ய விரும்பு எனக் குழந்தைகளுக்குச் சொல்லித் தருவதை அவர்கள் விரும்பவில்லை. இதனால் அவர்கள் அதை நீக்கிவிட்டார்கள்.மேலும், ஆன்மீகம் குறித்தும் நீதி போதனை குறித்தும் பள்ளிகளில் சொல்லித் தர வேண்டும் என்றும் அதை எதிர்க்கக்கூடாது என ஹெச் ராஜா தெரிவித்தார்.

Anbil Mahesh Poyyamozhi: மதிப்பெண் மட்டுமே புத்திசாலித்தனம் அல்ல; நல்லது, கெட்டது எது என அறிந்து கொள்ளும் பகுத்தறிவு வேண்டும்…!

சென்னை அசோக் நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேச்சாளர் ஒருவர் மாணவிகள் மத்தியில் நிகழ்த்திய சொற்பொழி மற்றும் சொற்பொழிவு சம்பந்தமாக அப்பள்ளியின் ஆசிரியர் ஒருவருடன் அந்தப் பேச்சாளர் மேடையில் இருந்தபடியே வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தமிழகத்தில் இன்று பேசுபொருளானது.

இந்நிலையில் இன்று காலை சம்பந்தப்பட்ட அரசுப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் அப்பள்ளியில் இன்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெறவிருப்பதால் போராட்டக்காரர்களுடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில், “பள்ளி நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி. அனைத்து பள்ளிகளுக்கும் பாடமாக இருக்கும் வகையில் அந்த நடவடிக்கை அமையும்.” என அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

பின்னர் பள்ளி நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “பள்ளி மாணவர்கள் சுயமாக சிந்தித்து செயல்பட வேண்டும். உணர்ச்சிப் பெருக்கில் சிக்கிவிடக் கூடாது. அறிவை செலுத்தி சிந்திக்க வேண்டும். கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். மாணவர்கள் ஏன், எதற்கு என்று கேள்வி கேட்க வேண்டும். மதிப்பெண் மட்டுமே புத்திசாலித்தனம் அல்ல; நல்லது, கெட்டது எது என அறிந்து கொள்ளும் பகுத்தறிவு வேண்டும். ” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசுகையில், “பள்ளிக்குள் யாரை சிறப்பு விருந்தினராக அனுமதிப்பது என்பதில் பள்ளியில் ஆசிரியர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்” என்று எச்சரித்தார் மேலும் ஆன்மிக சொற்பொழிவாளரின் பிற்போக்கு சிந்தனைகளை கேள்வி கேட்ட ஆசிரியர் சங்கரையும் பாராட்டினார்.

Anbil Mahesh Poyyamozhi: பள்ளியில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய விவகாரம் அனைத்து பள்ளிகளுக்கும் பாடமாக இருக்கும்..!

சென்னை அசோக் நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேச்சாளர் ஒருவர் மாணவிகள் மத்தியில் நிகழ்த்திய சொற்பொழி மற்றும் சொற்பொழிவு சம்பந்தமாக அப்பள்ளியின் ஆசிரியர் ஒருவருடன் அந்தப் பேச்சாளர் மேடையில் இருந்தபடியே வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தமிழகத்தில் இன்று பேசுபொருளானது.

இந்நிலையில் இன்று காலை சம்பந்தப்பட்ட அரசுப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் அப்பள்ளியில் இன்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெறவிருப்பதால் போராட்டக்காரர்களுடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில், “பள்ளி நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி. அனைத்து பள்ளிகளுக்கும் பாடமாக இருக்கும் வகையில் அந்த நடவடிக்கை அமையும்.” என அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.