சீமான் ஆவேசம்: குடுகுடுப்பைக்காரன் போல செயல்படுகிறார் மோடி…! சிலிப்பர் செல்லாக அண்ணாமலையை நான் தான் வைத்திருக்கிறேன்…!

மதுரை கோ.புதூர் பஸ்நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட சீமான், தேர்தல் வந்தால் மட்டுமே மோடிக்கு திடீர் தமிழ் பற்று வரும். புதிதாக திறக்கப்பட்ட நாடாளுமன்ற கட்டிடத்தில் சமஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம், ஆகியவை உள்ளது. ஆனால், தமிழ் மொழிக்கு கல்வெட்டு வைக்கவில்லை. இதற்கு பிரதமர் மோடியிடம் பதில் இல்லை.

நடிகர் திலகம் சிவாஜியையும் தாண்டி மோடி நடிக்கிறார். ஏமாந்து விடுவோம் என தப்பு கணக்கு போட்டு மக்களை ஏமாற்ற பார்க்கிறார். சிலிப்பர் செல்லாக அண்ணாமலையை நான் தான் வைத்திருக்கிறேன். நாங்கள், முருகனைப் பற்றி பேசினால், அவர்களும் முருகனைப் பற்றி பேசுவார்கள். வேல் பற்றி பேசினால், அதையும் பேசுவார்கள். இது போல் அனைத்து விஷயங்களிலும் எங்களை பின்தொடர்ந்து அவர்கள் செயல்படுகின்றனர்.

நாட்டின் வளர்ச்சி என பேசும் மோடி ஒரு குடுகுடுப்பைக்காரன் போல் செயல்படுகிறார். அவர் சொல்லும் வளர்ச்சி என்பது அம்பானி குடும்பத்திற்கும், அதானி குடும்பத்திற்கு மட்டுமே உள்ளது. அவர் கூறும் வார்த்தைகள் அனைத்தும் வெற்று வார்த்தைகள். திராவிட கட்சிகள் பங்காளிகள் தான். பாஜக தான் எங்களின் முதல் எதிரி. அவர்களை இந்த நாடாளுமன்றத் தேர்தலில் துரத்தி துரத்தி தோற்கடிக்க வேண்டும் என சீமான் பேசினார்.

சீமான் ஆவேசம்: “ கேட்ட சின்னம் கிடைத்திருக்கும் நான் கூட்டணி வைத்திருந்தால் ”

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் முந்தய தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகள், இடங்களைப் பெற்றால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக, சின்னங்களை இழக்காத கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும். கடந்த ஆண்டு இந்திய தேர்தல் ஆணையம் மாநில அந்தஸ்து, தேசிய அந்தஸ்துகளை இழக்கும் கட்சிகள் பட்டியலை வெளியிட்டது.

இதில் புதுச்சேரியில் பாமக மாநில கட்சி அந்தஸ்தை பறிகொடுத்தது. இதனால் பாமக தமது மாம்பழ சின்னத்தையும் இழந்து இனி தேர்தல்களில் மாம்பழம் என்ற பொதுச் சின்னத்தில் போட்டியிடாத சூழ்நிலை உருவானது. அதேபோல டிடிவி தினகரனின் அமமுக, ஜிகே வாசனின் தமாகா மிக மிக சொற்பமான வாக்குகளைப் பெற்று டெபாசிட்டை இழந்தன. இதனால் இந்த கட்சிகளுக்கும் குக்கர் மற்றும் சைக்கிள் சின்னங்கள் கிடைக்காத நிலை ஏற்படாது. அதுபோல நாம் தமிழர் கட்சி, விசிக மற்றும் மதிமுகவிற்கும் சின்னங்கள் கிடைக்காத நிலை ஏற்படாது.

இந்நிலையில் லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் உரிய காலத்தில் விண்ணப்பித்து தங்களுக்கான சின்னங்களைப் பெறுவதில் முனைப்பு காட்டி வந்தன. பாமகவும் மாம்பழம் சின்னத்துக்கு விண்ணப்பித்திருந்தது. அமமுக குக்கர் சின்னத்துக்கும் ஜிகே வாசன் கட்சி சைக்கிள் சின்னத்துக்கும் மதிமுக பம்பரம் சின்னத்துக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பானை சின்னத்துக்கும் நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்துக்கும் விண்ணப்பித்தன. ஆனால் பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக சேர்ந்த உடனேயே அக்கட்சிக்கு மாம்பழ சின்னம் உறுதி செய்யப்பட்டது.

அதேபோல தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னமும் ஜிகே வாசனின் தமாகாவுக்கு சைக்கிள் சின்னமும் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டது. பாஜக கூட்டணியில் இடம் பெறாத மதிமுக, விசிக, நாம் தமிழர் கட்சிகளுக்கு கேட்ட சின்னத்தைத் தர முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதனால் இந்த அரசியல் கட்சிகள் அனைத்தும் நீதிமன்றங்களை நாடி தீர்ப்புக்கு காத்திருக்கிறது.

மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்திருந்த நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் வேறு மாநில கட்சியான பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டது. தொடர்ந்து தேர்தலுக்கு குறைந்த நாட்களே இருப்பதை கருத்தில் கொண்டு புதிய சின்னத்தை தேர்வு செய்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பும் பணியை நாம் தமிழர் கட்சி மேற்கொண்டது.

அதன்படி, அனுப்பிய சின்னங்களில் நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, இன்று சின்னத்தை அறிமுகப்படுத்தி செய்தியாளர்களைச் சந்தித்தார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

பின்னர் பேசிய அவர், “கடைசி நொடி வரை போராடி பார்த்தேன். ஆனால் கிடைக்கவில்லை. அதனால் தான் மைக் சின்னத்தில் போட்டியிடுவது என்று முடிவெடுத்தோம். இவ்வளவு இடையூறுகளையும் தாங்கிக்கொண்டு நாங்கள் களத்தில் நிற்பது மக்களுக்காகதான். மக்கள் எங்களை கைவிட்டுவிட மாட்டார்கள் என்று நம்புகிறோம்.

கூட்டணி வைத்திருந்தால் நான் கேட்ட சின்னம் வந்திருக்கும். அப்படி கூட்டணி வைத்தவர்களுக்கு சின்னங்கள் வந்துள்ளது. நான் கூட்டணி வைக்க மறுத்துவிட்டேன். எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன். இந்த நாட்டில் நல்ல அரசியலை உருவாக்க நினைக்கிறேன். அதில் எந்தச் சூழலிலும் என் வாழ்நாளில் எந்த சமரசமும் செய்ய மாட்டேன்.

சின்னத்தில் மட்டும் விவசாயி அல்ல நான். உண்மையிலேயே விவசாயிதான். எனவே, நாங்கள் நம்பிக்கையோடு பயணிக்கிறோம். கொஞ்சம் தாமதம் தான். சின்னம் முதலிலேயே இருந்திருந்தால் பாதி தொகுதிக்கு சென்றிருப்பேன். இப்போது முதலில் இருந்து தொடங்க வேண்டும். நாளையில் இருந்து பிரச்சாரம் செல்கிறேன்.

எங்களை சுயேச்சையாக நிறுத்தி, 40 தொகுதிகளுக்கும் 40 சின்னங்கள் கொடுக்க வேண்டும் என்பது தான் அவர்களின் எண்ணம். ஏழு சதவிகித வாக்குக்கே பயம் என்றால், இந்தத் தேர்தலில் நான் என்ன செய்வேன் என்று யாருக்கு தெரியும்.” என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

விஜயலட்சுமியின் ஆவேசமான வீடியோ…! சீமானை பாக்கெட்டில் போட்டுக் கொள்ளலாம் என யாராவது பிளான் வைத்திருந்தால்..!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011 -ம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் அவர் கர்நாடகா மாநிலம் பெங்களூருக்குச் சென்று விட்ட நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். விஜயலட்சுமியின் புகாரின் பேரில் வளசரவாக்கம் காவல்துறை நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலம் பெறப்பட்டு நடிகை விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அடுத்த ஒரு மாதத்தில், வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு தனது வழக்கறிஞர்களுடன் சென்ற நடிகை விஜயலட்சுமி, சீமான் மீதான புகாரை வாபஸ் பெறுவதாக கூறி எழுத்துப்பூர்வமான கடிதத்தை அளித்தார். தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி, விஜயலட்சுமிக்கு அடைக்கலம் கொடுத்திருந்த நிலையில், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மீண்டும் வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு பெங்களூருக்குச் சென்றுவிட்டார் விஜயலட்சுமி. சீமானுக்கு எதிராக வீடியோ வெளியிட்டு வந்த வீரலட்சுமிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை விஜயலட்சுமியும் வீடியோ வாயிலாக பேசி இருந்தார்.

மேலும், சீமான் மீதான வழக்கை வாபஸ் பெற்றது பற்றி அதிருப்தியோடு பேசி இருந்தார். திரும்பவும் சென்னைக்கு வரும் மனநிலையில் இல்லை. சீமான் சாரிடமும் பேசினேன். வழக்கை வாபஸ் பெற யாரும் கட்டாயப்படுத்தவில்லை. புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. காவல்துறை நடவடிக்கை குறித்துத் தெரியவில்லை. முதலில் என்னை விசாரித்தார்கள். சீமானுக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பினார்கள். என்னால் தனி ஒருவராகப் போராட முடியவில்லை. சீமானை எதிர்கொள்ள எனக்குப் போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை. சீமான்தான் சூப்பர். அவருக்குத்தான் தமிழ்நாட்டில் ஃபுல் பவர் இருக்கிறது. அவர் முன்னால் யாருமே ஒண்ணுமே பண்ண முடியாது. நான் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புதிதாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் நடிகை விஜயலட்சுமி. அதில் பேசியுள்ள அவர், “எனது வழக்கின்போது, 2 விபச்சாரிகளை வைத்து திமுக அரசியல் செய்வதாக நாம் தமிழர் கட்சியினர் சொன்னபோது ஆளுங்கட்சியான திமுக, எந்த அளவுக்கு இந்த வழக்கில் தீவிரமாக விசாரித்து எனக்கு நியாயம் வாங்கித் தந்திருக்க வேண்டும்? ஆனால், ஆகஸ்ட் முதல் ஜனவரி வரை காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். சீமான் ஒருபக்கம், நாம் தமிழர் கட்சியினர் ஒருபக்கம் திமிர் பிடித்து சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். 12 வருடங்களாக இந்த வழக்கில் நியாயம் கிடைக்காமல் பெண்ணான நான் கதறிக் கொண்டிருக்கிறேன்.

இது ஒன்றும் தீர்க்க முடியாத வழக்கு அல்ல. காவல்துறைக்கு தெரியும் இல்லையா? கடந்த மார்ச் மாதத்தில், சீமான், மதுரை செல்வம் என்பவர் மூலமாக பேச்சுவார்த்தை வந்து, கயல்விழிக்கு தெரியாமல் நான் 50 ஆயிரம் கொடுக்கிறேன் எனக் கூறி வீடியோ வாங்க என்னை எப்படி எல்லாம் டார்ச்சர் செய்தார், நான் எப்படி கதறிக்கொண்டு வந்து புகார் கொடுத்தேன் என்பது எல்லோருக்கும் தெரியுமில்லையா? தெரிந்தால் கூட எல்லோரும் அமைதியாக இருக்கிறார்கள். 2011-ல் எனது வழக்கை வைத்து அஇஅதிமுக சீமானை பாக்கெட்டில் போட்டுக் கொண்டது.

வரக்கூடிய லோக்சபா தேர்தல் நேரத்தில் எனது வழக்கை எடுத்து சீமானை பாக்கெட்டில் போட்டுக் கொள்ளலாம் என யாராவது, எந்த அரசியல் கட்சியாவது பிளான் வைத்திருந்தால், நான் இப்போதே சொல்லி விடுகிறேன், நான் யாருக்கும் ஒத்துழைப்பு கொடுக்க மாட்டேன். இதே தமிழ்நாட்டில் சீமானுக்கு பயந்து, நான் வாழ்வதற்கு கூட வீடு கொடுக்காமல் செய்தார்கள். தூக்கி கர்நாடகாவில் போட்டார்கள். கர்நாடகா என்னைக் காப்பாற்றியது. எனது அம்மாவுக்கு இறுதிச் சடங்கு கூட செய்யவிடாமல் செய்தார்கள். கர்நாடகாவில் பிறந்த ஒரே காரணத்திற்காக, 12 வருடங்களாக எனக்கு நியாயம் தேடித் தராமல் அலைக்கழிக்கிறார்கள்.

இதற்கு நான் முடிவு கட்டுவேன். பல மேட்டர் வெளியே வரும்.. உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்.. 12 வருடங்களாக என்னிடம் தமிழ்நாடு காவல்துறை ஆதாரங்களை வாங்கிக்கொண்டு நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள், என் போனையும் கொடுக்கமாட்டேன் என்கிறார்கள் எனக் கூறி கர்நாடகா நீதிமன்றத்தில் வழக்கை போடுவேன். அன்றைக்குத்தான் சீமான் – விஜயலட்சுமி இடையேயான போரில் ஒரு நியாயம் கிடைக்கும். யாரிடமும் இனி தமிழ்நாட்டில் கெஞ்ச மாட்டேன். யாரிடமும் பிச்சை எடுக்க மாட்டேன். ஒருநாள் உங்களுக்கு ஒரு அதிர்ச்சியை கொடுப்பேன். நான் இதை விடவே மாட்டேன்” என ஆவேசமாகப் பேசியுள்ளார்.

ஜனநாயகத்தை மதிக்க தெரியாதவர்கள் அண்ணாமலை மற்றும் சீமான்…!

நாட்டில் அரசியல் தலைவர்கள் கொடுக்கும் செய்திகளை அப்படியே வெளியிட வேண்டும், அவர்களின் குறைகளை தட்டி கேட்காமல் அவர்களுக்கு ஜால்ரா போடும் கேள்விகளை கேட்க வேண்டும் என்ற மன வியாதியில் ஒரு சில தலைவர்கள் நாட்டில் உலவி கொண்டுள்ளனர். குறிப்பாக பாஜக தலைவர்கள் H. ராஜா அண்ணாமலை மற்றும் நாம் தமிழர் கட்சி சீமான் போன்றோர் பத்திரிகையாளர்களை தொடர்ந்து அவமதித்து வருகின்றனர்.

அதன்வரிசையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, என்னுடன் கூடுகிற கூட்டம் இரண்டு கட்சியும் வேண்டாம் என வெறுத்துப் போய் கூடுகிற கூட்டம். என்னுடைய செல்வாக்கு என்பதே திராவிட கட்சிகளை ஒழிக்கனும்னு நினைக்கிற மக்கள்தான். 60 ஆண்டுகளாக ஆண்டு மக்களை இந்த நிலைக்கு தள்ளிட்டாங்களேன்னு வெறுக்கிற மக்கள்தான் என் பின்னாடி திரளுகிறார்கள் சீமான் என்றார்.

அப்போது குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர், அப்ப தொகுதிக்கு 3,000 ஓட்டு மட்டும் வாங்கினா போதுமா சார் என கேள்வி கேட்டார். இதனையடுத்து சட்டென கோபமடைந்த சீமான், ஒரு தொகுதிக்கு 26,000 ஓட்டு வாங்கி இருக்கேன்.. நீங்க தூக்குல தொங்குறீங்களா? விஷம் குடிக்கிறீங்களா? 37,000 ஓட்டு வாங்கியிருக்கேன் தூத்துக்குடியில்..அப்புறம்… என தலையை தூக்கி கையை உயர்த்தி சொடக்குப் போட்டபடி, 3,000 ஓட்டு எந்த தொகுதியில் வாங்கினேன்னு சொல்லுங்க.. நான் தீக்குளிக்கிறேன்.. என்றார். அத்துடன் கையை நீட்டி மிரட்டும் தொனியில் தம்பி.. தம்பி.. ஏய்.. என சொல்ல அப்போதும் செய்தியாளர் குறுக்கிட, இதெல்லாம் பேசக் கூடாது என சீமான் எச்சரித்தார்.

தொடர்ந்து, திராவிட கட்சிகள் காசு கொடுக்கிறாங்களா இல்லையா? என செய்தியாளரிடம் சீமான் கேள்வி கேட்க, நான் இதுவரை பார்த்தது இல்லை என பட்டென அந்த செய்தியாளர் பதில் சொன்னார். உடனே வேறு வேலையை பாருங்க என்ற சீமான், அந்த செய்தியாளரை அழைத்து நீங்க எந்த இதழில் வேலை செய்றீங்க என்றார். அவர் தாம் பணிபுரியும் பத்திரிகையின் பெயரை சொன்ன உடனே, அந்த பத்திரிகை அவ்வளவு கேவலமாக போய்விட்டது என்றார். பின்பு, உங்க பெயர் என்ன என சீமான் கேள்வி கேட்க, சிராஜூதீன் என்றார் அந்த செய்தியாளர். உடனே, அப்ப நீ பேசுவ? என மீண்டும் சீண்ட இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது.

இந்த அடாவடி அடங்கும் முன்னே தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எல்லோருக்குமே தமிழ்நாடு பாஜக மீது கோபம்தானே. பாஜகவுக்கு ஒரே ஒரு தேர்தல் தேவைப்படுகிறது. 25% வாக்கு வங்கியை பாஜக காட்டிவிட்டால் தமிழ்நாட்டின் அரசியல் தலைகீழாக மாறும். தமிழ்நாட்டில் மேல்மட்டத்தில் என்ன கருத்து வைக்கிறார்களோ அதற்கு நேர் எதிரான நிலைபாட்டை எடுப்போம். இந்தியாவில் பாஜகதான் தூய்மையான கட்சி. எனவே அதன் மீது வெறுப்பு இருக்கத்தானே செய்யும்” என்றார்.

அப்போதுதான் பெண் பத்திரிகையாளர், பாஜக மாநில தலைவராக இல்லாமல் கட்சியில் தொடர்வீர்களா என்று கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த அண்ணாமலை, “நீங்க வாங்க சிஸ்டர்.. இங்க வாங்க. பக்கத்துல வாங்க. கேள்வி கேட்பதற்கு ஒரு மரபு இருக்கிறது. இதுபோல் கேள்வி கேட்பவர்களை தமிழ்நாடு மக்கள் பார்க்க வேண்டும்.” என்றார். அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு சக பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அவர், “நான் சொல்வதை கவனியுங்கள். நீங்கள் தமிழ்நாடு பாஜக கட்சி தலைவராக இல்லாவிட்டால் பாஜகவில் தொடர்வீர்களா? என்று கேட்கிறார்.

இந்த மாதிரி அறிவாளித்தனமாக கேள்வி கேட்பது யார் என்று எல்லோரும் பார்க்க வேண்டும். நான் சொல்வது என்ன தவறு. அண்ணே.. கேள்விக்கு ஒரு மரபு இருக்கிறது. அந்த மரபை தாண்டினால் அண்ணாமலை யாராக இருந்தாலும் விட மாட்டான். நான் என்ன இந்த சீட்டை பசை போட்டுள்ளேனா. தயவு செய்து வாங்க சிஸ்டர்.” என்று அவர் அழைத்தவுடன் மீண்டும் செய்தியாளர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர்.

அண்ணாமலை பாஜகவின் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டது தொடங்கியே கட்சியின் மூத்த தலைவர்களையும், கூட்டணி கட்சித் தலைவர்களையும் மதிக்காமல் செயல்படுகிறார், அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் போன்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை அளந்துவிட்ட பொய், அதிமுகவை கோபப்படுத்தியதும், அதைத் தொடர்ந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியதையும் நாம் அறிவோம்.

ஆகவே, அண்ணாமலையின் இந்த நடவடிக்கையால், அவர் மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்படலாம் என்ற செய்தி அரசியல் வட்டாரத்தில் உலாவரத் தொடங்கியுள்ளது. ஆகவே, அண்ணாமலையை பொறுத்தவரை, பத்திரிகையாளர்கள் எழுப்பும் நியாயமான கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் வசமாக சிக்கிக்கொள்ளும் பட்சத்தில் அதை எவ்வாறு சமாளிப்பது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல், கேள்வி கேட்ட பத்திரிகையாளரை நோக்கி “நீங்கள் எந்த பத்திரிகையை சேர்ந்தவர்? உங்கள் பெயர் என்ன? உங்களுக்கு கேள்வி கேட்க தெரியவில்லை” என்பது போன்ற தரம்கெட்ட செயலில் ஈடுபட்டு தப்பிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

தமிழ்நாடு அரசியல் களம் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை பார்த்துள்ளது. ஆனால், பத்திரிகையாளர்கள் எழுப்பும் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல், மூன்றாம் தர நடவடிக்கையில் ஈடுபட்ட எந்த ஒரு தலைவரையும் தமிழ்நாடு இதற்கு முன் சந்தித்ததில்லை. ஆகையால், “பெண் பத்திரிகையாளரிடம் கீழ்த்தரமாக நடந்துகொண்ட அண்ணாமலை மற்றும் கும்பகோணத்தில் சீமான் செய்தியாளர்களுடன் நடந்து கொண்டதை இந்தியா ஃபஸ்ட் மாத இதழ் வன்மையாக கண்டிக்கிறது. ஊடக நிறுவனங்கள் தங்களின் TRP -க்காக அண்ணாமலை மற்றும் சீமான் செய்திகளை வெளியிடுவது மற்றும் செய்தியாளர் சந்திப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்று இந்தியா ஃபஸ்ட் மாத இதழ் வலியுறுத்துகிறது.

“சீமான் தமிழர் முன்னேற்றப்படை வீரலட்சுமி கணவர் பூவை கணேசன்” ஷார்ப்பா இருக்குற கத்தி சவுண்டே போடாது தெரியுமா தம்பி…மொக்க கத்திதான் சவுண்டு போடும்…

நடிகை விஜயலட்சுமியை பண்ணை வீட்டில் தங்க வைத்து, விஜயலட்சுமிக்கு ஆதரவாகவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக தமிழர் முன்னேற்றப்படை வீரலட்சுமி நின்றார். நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் சீமானுக்கும் தமிழர் முன்னேற்றப்படை வீரலட்சுமிக்கும் இடையே மோதல் வெடித்தது. என் வாழ்க்கையில் தமிழர் முன்னேற்றப்படை வீரலட்சுமிக்கு எல்லாம் மன்னிப்பே இல்லை சீமான் காட்டமாக விமர்சித்தார்.

இந்நிலையில் தமிழர் முன்னேற்றப்படை வீரலட்சுமியின் கணவர் பூவை. கணேசன், சீமானை அண்ணே! நீங்க நல்லா இருக்கீங்களாண்ணே? “அண்ணே நம்ம ரெண்டு பேரும் பாக்சிங் பண்ணலாமா? டவர் ஏறி? ரிங் ஏறி.. ரிங் ஏறி.. உங்க கூட பாக்சிங் பண்ணனும்னு ஆசையா இருக்குண்ணே என போனில் பேசிய ஆடியோ சமூக வலைதளதங்களில் பரவி வருகிறது. இந்த ஆடியோ தொடர்பாக சீமான் அளித்த பேட்டியில், பாக்சிங் அது சரிதான்.. அவரு பகல் நேரத்துல பேசுனா நாம பாக்சிங் போகலாம்.. 7 மணிக்கு மேல பேசுறாரு.. அவரு பாக்சிங்கிக்கு கூப்பிடுறாரு.. நான் பேசி அவர் பதிவு பண்றாருன்னு தெரியுது.

நாம எதையாவது பேசி அவர் பதிவு பண்ணி இந்த மாதிரி கேள்வி வரும்னுதான் செல்போனை கட் செய்தேன். அவர் எங்க கையாலதான் சாகனும்னு முடிவெடுத்துட்டாருன்னா சந்தோஷமாக எதிர்கொள்கிறேன்.. கேட்டு சொல்லுங்க.. இடம், நேரம் எல்லாம் நீங்க சொல்வீங்களாம்.. எப்ப வேணும்னாலும் அவரு வருவாருன்னு சொல்லிடுங்க நீங்க வாங்க அவரோட சண்டை போட்டு ஜெயிச்சிடுங்கன்னு சொல்லுங்க.. அவர் கிட்ட நேரில் முதலில் ஒருமுறை வந்து நில்லு.. அப்புறம் சண்டை போடலாம்னு சொல்லுங்க.. கேட்கும்போது சிரிப்பா இருக்குல்ல.. மகிழ்ச்சியாக இருங்க.. ” என்றார்.

இந்நிலையில்,சீமான் பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக தமிழர் முன்னேற்றப்படை வீரலட்சுமி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஊடகவியலாளர் மத்தியிலும் நாட்டு மக்கள் மத்தியிலும் ஒழுங்கினமான பேச்சு, பேசிக்கொண்டு இருந்தீர்கள். நீங்க பேசும் பேச்சை எல்லாம் பொது வாழ்க்கையில் இருக்கும் பெண்ணாக தலைவராக நான் வேண்டும் என்றால் இதை கடந்து போய்விடலாம். ஆனால், நீங்கள் என்னை பேசிய பேச்சை கேட்டுவிட்டும் கடந்து போக வேண்டிய அவசியம் என் கணவருக்கு கிடையாது.

அதனால், உங்களை தொடர்பு கொண்டு நான் தமிழர் முன்னேற்றப்படை வீரலட்சுமியின் கணவர் பூவை கணேசன் பேசுகிறேன் என்றதும் நீங்கள் அழைப்பை துண்டித்து விட்டீர்கள். மறுபடியும் உங்களை தொடர்பு கொண்டார். அப்போது உங்கள் கூட பாக்சிங் பண்ண ஆசையாக இருக்கு.. ஒண்டிக்கு ஒண்டி நிற்கலாமா என பேசினார். அதைக் கேட்டுட்டு போனில் பேசுவதற்கு உங்களுக்கு வீரம் இல்லை. ஊடகங்கள் முன்னாடி மைக்கிற்கு முன்னாடிதான் உங்களுக்கு வீரம் வருமா? போனை கட் பண்ணிட்டு.. ஊடகங்களிடம் முதலில் அவரை எதிரில் வந்து நிற்க சொல்லுங்க என சொன்னீர்கள்.

நான் நிற்கிற இடம் என்னவென்று தெரியுதா.. இங்க தான் என் கணவருடன் பாக்சிங்.. சண்டை போடவேண்டிய கிரவுண்ட் இடம் இது… இந்த கிரவுண்ட் எங்கேஇருக்கிறது என்றல் திருவள்ளூர் மாவட்டம் தொட்டிக்கலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட இடம் இது.. இந்த இடத்தில் தான் பாக்சிங் போடுவதற்கான இடத்தை நாங்கள் தீர்மானம் பண்ணியிருக்கிறோம். தேதி எப்போ பார்த்தீங்கள் என்றால் 2024 தை மாதம் காணும்பொங்கல்.

அன்னைக்குதான் உங்களுக்கும் எனது கணவருக்கும் சண்டை நடக்க போகிறது.. இந்த சண்டையில் பாக்சிங் கராத்தே, மல்யுத்தம், குங்பூ இதில் எந்த சண்டை வேண்டும் என்றாலும் நீங்க போடுங்க… எல்லாவற்றையும் சமாளிக்க தயாராக இருக்கிறார். இந்த சண்டையில் யாரு நாக் அவுட் ஆகி தோற்கீறிங்களோ அவர்கள் தோற்றதை ஒத்துக்கொள்ள வேண்டும். போட்டியில் என்ன பந்தயம் என்பதை போட்டி நடப்பதற்கு முன்பாக நாட்டு மக்களுக்கு நான் அறிவிப்பேன். இவ்வாறு வீரலட்சுமி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சீமானுக்கும் தமிழர் முன்னேற்றப்படை வீரலட்சுமிக்கும் இடையே வார்த்தை யுத்தம் நடைபெற்றுக் கொண்டு இருந்த நிலையில், இன்று இவ்விவகாரம் தொடர்பாக சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு சீமான், எல்லாரும் என்னிடம் அறிவுறுத்தியிருக்கிறது என்னவென்றால், வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது என்பதால் வாயை மூடிக்கொண்டு போ என்கிறார்கள்.. பெரியவர்களாகிய நீங்க கேட்பதால் சொல்கிறேன்.. நான் புலி.. பூனை சண்டைக்கு கூப்பிட்டால் சண்டையிட போகுமா இல்லை அமைதியா செல்லுமா.. அதுமட்டும் யோசித்துக்கொள்ளுங்கள்.. தேவையில்லாமல் பேசுறாங்க.. சிவபெருமான் எழுதி கொடுத்த பாட்டை நக்கீரர் குறை சொல்வார்.. தருமி கேட்பார்.

பாட்டு எழுதி புகழ் பெறும் புலவர்களும் உண்டு.. பாட்டை குற்றம், குறை சொல்லி புகழ் பெறும் புலவர்களும் உண்டு. என்னையை எதிர்த்து பேசுவதால் உங்களுக்கு ஒரு அடையாளம் உண்டு. என்னை எதிர்க்க வேண்டிய தேவை, விமர்சித்து பேசுவதற்கு தேவை உங்களுக்கு இருக்கு. எனக்கு உங்களை எதிர்த்து பேசவேண்டிய, விமர்சித்து பேச தேவை இருக்கா?.. என்னை எதிர்க்கிறவர்கள் எல்லாம் எனக்கு எதிரி கிடையாது.

நான் யாரை எதிர்க்கிறேனோ அவர்கள் தான் எதிரி.. அவங்க தான் என் எதிரி.. இனிமேலா பிறந்து எனக்கு எதிரி வரப்போகிறான். நான் தீர்மானித்துவிட்டேன்.. என் எதிரி யார்?… என் இலக்கு எது?… என் பயணம் எவ்வளவு தூரம்?.. இதெல்லாம் வெற்று பேச்சு.. என்னை உங்களோடு ஒப்பிட்டு ஒப்பிட்டு பேசுவது உங்களுக்கும் சிறுமை, எனக்கும் சிறுமை. என் வேலைக்கும் சிறுமை.. அதை விட்டுவிடுங்கள்.. என கூறி சீமான் ஜகா வாங்கினார்.

இந்நிலையில், சீமான் ஏன் சண்டை போடுவதில் இருந்து பின்வாங்கினார் என்பது குறித்து தமிழர் முன்னேற்றப்படை வீரலட்சுமியின் கணவர் பூவை கணேசன் முதன்முதலாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது: உன் கையால தான் எனக்கு சாவுனு நீ சொல்லிருக்க. முதல்ல என்னை பத்தி விசாரிச்சியா நீ? என்னை பத்தி விசாரிச்சிருந்தா இந்த வார்த்தைய நீ விட்ருக்க மாட்ட. இப்போ என்னை பத்தி நீ விசாரிச்சுட்ட. அதனாலதான் சண்டைக்கு வர மாட்டேன்னு சொல்ற. நீ பூந்தமல்லிக்கு போய் யார்கிட்ட வேணாலும் என்னை பத்தி கேட்டு பாரு. நீ கேட்டதுமே, “தம்பி ஏம்ப்பா அவர பத்தி கேக்குற.. அவர் பக்கத்துல மட்டும் போய்டாதனு தான் எல்லோரும் சொல்லுவாங்க.

நீ கொட்டை எடுத்த புளி.. நான் பாயுற புலி. தனியா நின்னு 10 பேரை அடிக்குறவன் தம்பி நான். நீ என்ட்ட சிங்கிளா மாட்டுன உன்ன அடிச்சு துவைச்சு காயப் போட்ருவேன். வடசென்னை மூளக்கொத்தளம் ஏரியால பொறந்தவன் நான். அங்க பெரிய பாக்ஸரா இருந்த புருஷோத்தமன்ட்ட மூணு வயசுல இருந்து பாக்சிங் கத்துருக்கேன். சின்ன வயசுல இருந்தே மண்ணையும், உப்பையும் தரையில போட்டு வெறும் கையால குத்தி வளர்ந்தவன் நான். அதுக்கு அப்புறம், பூந்தமல்லில ஸ்டீபன் கராத்தே மாஸ்டர்ட்ட கராத்தே படிச்சவன். அவரோ பெஸ்ட் சிஷ்யனே நான்தான்.

எனக்கு வேலையே சண்டை போடுறதும், சண்டை பயிற்சி கொடுக்குறதும் தான். சீமான மாதிரி நடிக்கிறதும், தண்ணி போட்டு சுத்துறதும் எனக்கு வேலை கிடையாது. நான் ஒரு கிரிக்கெட் ப்ளேயரு. ஃபுட்பால் ப்ளேயரு. கபடி ப்ளேயரு. சோறு தண்ணி இல்லனாலும் 16 மணிநேரம் கிரவுண்டுலியே தான் இருப்பேன். என் கையில நீ மாட்டுனா நான் உன்ன என்ன பண்ணுவேன். பறந்து பறந்து அடிப்பேன்.

அது தெரிஞ்சுதான் நீ சண்டைக்கு வர மாட்ற. நீ என் கூட ரிங்குக்கு ஏறி இருந்தா, உன்னை 10 செகண்டுல அடிச்சு போட்டு உன்ன தோள்ல தூக்கிட்டு வெளியே வந்துருப்பேன். ஷார்ப்பா இருக்குற கத்தி சவுண்டே போடாது தெரியுமா தம்பி. மொக்க கத்திதான் சவுண்டு போடும். எங்கள்ட்ட சவுண்டே இருக்காது. ஆனா சம்பவம் ஷார்ப்பா இருக்கும் என பூவை கணேசன் கூறினார்.

அண்ணன் ஆட்சியில் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா சமாதிகளை கோடாரி, கடப்பாரை.. கொண்டு இடிக்கிறோம்..!

நாகப்பட்டினம் மாவட்டத்தில், வேதாரண்யத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டத்தில் சீமான் பேசுகையில், உலகின் 2-வது பெரிய கடற்கரையில் ஆளுக்கு இரண்டரை ஏக்கரில் படுத்துகிடக்கிறார்களே.. அவர்கள் என்ன செய்தார்கள்? நாம் தமிழர் ஆட்சி அமையும்.. எப்படி கர்நாடகா அரசு, தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தும் போது அமைதி காக்கிறதோ அதேபோல, மெரினா கடற்கரையில் உள்ள சமாதிகளை கடப்பாரை கொண்டு இடிப்பார்கள்.. அங்கே இருக்கும் எலும்புகளை எடுத்துக் கொண்டு போய் எங்கேயெனும் வைத்துக் கொள்.. அண்ணன் அரசு அமைதியாக இருக்கும்.

கர்நாடகாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உருவப் படத்துக்கு காலணி மாலை அணிவிக்கிறார்கள். அவர் இறந்தது போல தூக்கி செல்கிறார்கள். எனக்கு துடிக்கிறது. வலிக்கிறது.. ஏன் எனில் அவர் ‘தமிழ்நாட்டு’ முதலமைச்சர் என்பதால். ஆனால் திமுகவில் யாரும் உயிருடன் இல்லாததால், மானம் ரோஷம் இல்லை என்பதால் வாய் திறக்கவில்லை. அதற்கும் நாம் தமிழர்தான் பேச வேண்டியதிருக்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் சொல்லட்டும்..: கர்நாடகா மக்களின் போராட்டத்தை தடுக்க முடியாது என்கிறார் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா. அதேபோல, தமிழ்நாட்டு மக்களின் உணர்வெழுச்சியை தடுக்க முடியாது என தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லிவிட்டு அமைதியாக இருக்கட்டும். நாங்க பார்த்து கொள்கிறோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட அவமதிப்பு என்பது 8 கோடி தமிழ் மக்களுக்கு அவமானம். ஒரு பேரினத்துக்கு ஏற்பட்ட பெருத்த அவமானம்.

எனக்கு நீ ஒருமுறை அதிகாரத்தைக் கொடு. சிங்களவன் ஒரு மீனவனைத் தொட முடியுமா? அப்படி ஒரு மீனவனைத் தொட்டுவிட்டால் நான் முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிடுவேன். எங்கே என் மீனவனை தொடச் சொல்லுங்க பார்ப்போம். இந்திய ராணுவம் ஒரு மீனவரைக் கூட காப்பாற்றவில்லையே.. என் ராணுவம் என்னைக் காப்பாற்றி இருந்தால் நான் ஏன் நெய்தல் படை கட்ட வேண்டும்? என் மீனவர்கள் மீதான தாக்குதல்கள், ஈழத் தமிழர் படுகொலை காட்சிகள் என் ஆழ்மனதில் இருக்கின்றன.

இதற்கு ஒருநாள் பதில் சொல்லாமல் ஒரு சிங்களவனும் தப்பிக்க முடியாது. நான் வன்மம் கொண்ட மிக மோசமான மிருகம். நாம் தமிழர் கட்டும் நெய்தல் படையில் கையெறி குண்டுகளும் துப்பாக்கிகளும் கொடுத்து அனுப்புவோம். சிங்களவன் தொட்டல் அடித்து தாக்கு என்போம். வெறுமனே கடலுக்குள் சாவதற்கு பதில் சிங்களவனை கொன்றுவிட்டு செத்துப் போகலாம் என சீமான் தெரிவித்தார்.

சீமான் அடாவடி பேச்சு: 3,000 ஓட்டு எந்த தொகுதியில் வாங்கினேன்னு சொல்லுங்க.. நான் தீக்குளிக்கிறேன்..

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, என்னுடன் கூடுகிற கூட்டம் இரண்டு கட்சியும் வேண்டாம் என வெறுத்துப் போய் கூடுகிற கூட்டம். என்னுடைய செல்வாக்கு என்பதே திராவிட கட்சிகளை ஒழிக்கனும்னு நினைக்கிற மக்கள்தான். 60 ஆண்டுகளாக ஆண்டு மக்களை இந்த நிலைக்கு தள்ளிட்டாங்களேன்னு வெறுக்கிற மக்கள்தான் என் பின்னாடி திரளுகிறார்கள் சீமான் என்றார்.

அப்போது குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர், அப்ப தொகுதிக்கு 3,000 ஓட்டு மட்டும் வாங்கினா போதுமா சார் என கேள்வி கேட்டார். இதனையடுத்து சட்டென கோபமடைந்த சீமான், ஒரு தொகுதிக்கு 26,000 ஓட்டு வாங்கி இருக்கேன்.. நீங்க தூக்குல தொங்குறீங்களா? விஷம் குடிக்கிறீங்களா? 37,000 ஓட்டு வாங்கியிருக்கேன் தூத்துக்குடியில்..அப்புறம்… என தலையை தூக்கி கையை உயர்த்தி சொடக்குப் போட்டபடி, 3,000 ஓட்டு எந்த தொகுதியில் வாங்கினேன்னு சொல்லுங்க.. நான் தீக்குளிக்கிறேன்.. என்றார். அத்துடன் கையை நீட்டி மிரட்டும் தொனியில் தம்பி.. தம்பி.. ஏய்.. என சொல்ல அப்போதும் செய்தியாளர் குறுக்கிட, இதெல்லாம் பேசக் கூடாது என சீமான் எச்சரித்தார்.

மேலும் 30,000 ஓட்டு எப்படி வாங்கினேன்? என சீமான் கேட்க, அதை எப்படி உங்க தனிப்பட்ட செல்வாக்குன்னு சொல்ல முடியும் என மீண்டும் செய்தியாளர் குறுக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு அப்ப ‘உங்க செல்வாக்கா என கிண்டலடித்தார் சீமான். ஒழுங்கா பேசப் பாருங்க..: அத்துடன் நீங்க கேள்வி கேட்பதாக இல்லை; விதண்டவாதம் செய்யுறதா இருக்கீங்க.. பேட்டி முடிந்த உடன் ரெண்டு பேரும் பேசிப் பார்ப்போம். ஒழுங்கா பேசப் பாருங்க.. 3,000 ஓட்டு முதலில் வாங்கினேன்.. 30,000 ஓட்டு அப்புறம் எப்படி வந்தது? அடுத்த தேர்தலில்? என மீண்டும் சொன்னதையே திரும்ப சீமான் சொன்னார்.

அதற்கும் விடாத செய்தியாளர், தம்பிமார்களின் செயல்பாடுகள் காரணமாக இருக்கலாம் அல்லவா? என்றார். அப்போதும் தங்கச்சிமார்கள் எல்லாம் செயல்படலையா? என சீமான் நக்கலடித்தார். தம்பிமார் செயல்பட்டாலும் மக்கள் வாக்கு தரனும்ல.. மக்கள் வாக்கு தருகிறார்கள்தானே.. திமுக, அதிமுக காசு கொடுக்காம வாக்கு வாங்குனீங்களா? அதை நீ நேர்மையான பத்திரிகையாளன் கேள்வி கேட்பியா? கேட்டு இருக்கீகளா? என்றார். மேலும் எங்க கேட்டீங்க? என்றார்.

தொடர்ந்து, திராவிட கட்சிகள் காசு கொடுக்கிறாங்களா இல்லையா? என செய்தியாளரிடம் சீமான் கேள்வி கேட்க, நான் இதுவரை பார்த்தது இல்லை என பட்டென அந்த செய்தியாளர் பதில் சொன்னார். உடனே வேறு வேலையை பாருங்க என்ற சீமான், அந்த செய்தியாளரை அழைத்து நீங்க எந்த இதழில் வேலை செய்றீங்க என்றார். அவர் தாம் பணிபுரியும் பத்திரிகையின் பெயரை சொன்ன உடனே, அந்த பத்திரிகை அவ்வளவு கேவலமாக போய்விட்டது என்றார். பின்பு, உங்க பெயர் என்ன என சீமான் கேள்வி கேட்க, சிராஜூதீன் என்றார் அந்த செய்தியாளர். உடனே, அப்ப நீ பேசுவ? என மீண்டும் சீண்ட இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது.

அந்தர் பல்டி அடித்த சீமான்…! நான் புலி.. பூனை சண்டைக்கு கூப்பிட்டால் போகுமா.. !?

நடிகை விஜயலட்சுமியை பண்ணை வீட்டில் தங்க வைத்து, விஜயலட்சுமிக்கு ஆதரவாகவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக வீரலட்சுமி நின்றார். நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் சீமானுக்கும் வீரலட்சுமிக்கும் இடையே மோதல் வெடித்தது. என் வாழ்க்கையில் வீரலட்சுமிக்கு எல்லாம் மன்னிப்பே இல்லை சீமான் காட்டமாக விமர்சித்தார்.

இந்நிலையில் வீரலட்சுமியின் கணவர் பூவை. கணேசன், சீமானை அண்ணே! நீங்க நல்லா இருக்கீங்களாண்ணே? “அண்ணே நம்ம ரெண்டு பேரும் பாக்சிங் பண்ணலாமா? டவர் ஏறி? ரிங் ஏறி.. ரிங் ஏறி.. உங்க கூட பாக்சிங் பண்ணனும்னு ஆசையா இருக்குண்ணே என போனில் பேசிய ஆடியோ சமூக வலைதளதங்களில் பரவி வருகிறது. இந்த ஆடியோ தொடர்பாக சீமான் அளித்த பேட்டியில், பாக்சிங் அது சரிதான்.. அவரு பகல் நேரத்துல பேசுனா நாம பாக்சிங் போகலாம்.. 7 மணிக்கு மேல பேசுறாரு.. அவரு பாக்சிங்கிக்கு கூப்பிடுறாரு.. நான் பேசி அவர் பதிவு பண்றாருன்னு தெரியுது.

நாம எதையாவது பேசி அவர் பதிவு பண்ணி இந்த மாதிரி கேள்வி வரும்னுதான் செல்போனை கட் செய்தேன். அவர் எங்க கையாலதான் சாகனும்னு முடிவெடுத்துட்டாருன்னா சந்தோஷமாக எதிர்கொள்கிறேன்.. கேட்டு சொல்லுங்க.. இடம், நேரம் எல்லாம் நீங்க சொல்வீங்களாம்.. எப்ப வேணும்னாலும் அவரு வருவாருன்னு சொல்லிடுங்க நீங்க வாங்க அவரோட சண்டை போட்டு ஜெயிச்சிடுங்கன்னு சொல்லுங்க.. அவர் கிட்ட நேரில் முதலில் ஒருமுறை வந்து நில்லு.. அப்புறம் சண்டை போடலாம்னு சொல்லுங்க.. கேட்கும்போது சிரிப்பா இருக்குல்ல.. மகிழ்ச்சியாக இருங்க.. ” என்றார்.

இந்நிலையில்,சீமான் பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக வீரலட்சுமி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஊடகவியலாளர் மத்தியிலும் நாட்டு மக்கள் மத்தியிலும் ஒழுங்கினமான பேச்சு, பேசிக்கொண்டு இருந்தீர்கள். நீங்க பேசும் பேச்சை எல்லாம் பொது வாழ்க்கையில் இருக்கும் பெண்ணாக தலைவராக நான் வேண்டும் என்றால் இதை கடந்து போய்விடலாம். ஆனால், நீங்கள் என்னை பேசிய பேச்சை கேட்டுவிட்டும் கடந்து போக வேண்டிய அவசியம் என் கணவருக்கு கிடையாது.

அதனால், உங்களை தொடர்பு கொண்டு நான் வீரலட்சுமியின் கணவர் பூவை கணேசன் பேசுகிறேன் என்றதும் நீங்கள் அழைப்பை துண்டித்து விட்டீர்கள். மறுபடியும் உங்களை தொடர்பு கொண்டார். அப்போது உங்கள் கூட பாக்சிங் பண்ண ஆசையாக இருக்கு.. ஒண்டிக்கு ஒண்டி நிற்கலாமா என பேசினார். அதைக் கேட்டுட்டு போனில் பேசுவதற்கு உங்களுக்கு வீரம் இல்லை. ஊடகங்கள் முன்னாடி மைக்கிற்கு முன்னாடிதான் உங்களுக்கு வீரம் வருமா? போனை கட் பண்ணிட்டு.. ஊடகங்களிடம் முதலில் அவரை எதிரில் வந்து நிற்க சொல்லுங்க என சொன்னீர்கள்.

நான் நிற்கிற இடம் என்னவென்று தெரியுதா.. இங்க தான் என் கணவருடன் பாக்சிங்.. சண்டை போடவேண்டிய கிரவுண்ட் இடம் இது… இந்த கிரவுண்ட் எங்கேஇருக்கிறது என்றல் திருவள்ளூர் மாவட்டம் தொட்டிக்கலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட இடம் இது.. இந்த இடத்தில் தான் பாக்சிங் போடுவதற்கான இடத்தை நாங்கள் தீர்மானம் பண்ணியிருக்கிறோம். தேதி எப்போ பார்த்தீங்கள் என்றால் 2024 தை மாதம் காணும்பொங்கல்.

அன்னைக்குதான் உங்களுக்கும் எனது கணவருக்கும் சண்டை நடக்க போகிறது.. இந்த சண்டையில் பாக்சிங் கராத்தே, மல்யுத்தம், குங்பூ இதில் எந்த சண்டை வேண்டும் என்றாலும் நீங்க போடுங்க… எல்லாவற்றையும் சமாளிக்க தயாராக இருக்கிறார். இந்த சண்டையில் யாரு நாக் அவுட் ஆகி தோற்கீறிங்களோ அவர்கள் தோற்றதை ஒத்துக்கொள்ள வேண்டும். போட்டியில் என்ன பந்தயம் என்பதை போட்டி நடப்பதற்கு முன்பாக நாட்டு மக்களுக்கு நான் அறிவிப்பேன். இவ்வாறு வீரலட்சுமி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சீமானுக்கும் வீரலட்சுமிக்கும் இடையே வார்த்தை யுத்தம் நடைபெற்றுக் கொண்டு இருந்த நிலையில், இன்று இவ்விவகாரம் தொடர்பாக சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு சீமான், எல்லாரும் என்னிடம் அறிவுறுத்தியிருக்கிறது என்னவென்றால், வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது என்பதால் வாயை மூடிக்கொண்டு போ என்கிறார்கள்.. பெரியவர்களாகிய நீங்க கேட்பதால் சொல்கிறேன்.. நான் புலி.. பூனை சண்டைக்கு கூப்பிட்டால் சண்டையிட போகுமா இல்லை அமைதியா செல்லுமா.. அதுமட்டும் யோசித்துக்கொள்ளுங்கள்.. தேவையில்லாமல் பேசுறாங்க.. சிவபெருமான் எழுதி கொடுத்த பாட்டை நக்கீரர் குறை சொல்வார்.. தருமி கேட்பார்..

பாட்டு எழுதி புகழ் பெறும் புலவர்களும் உண்டு.. பாட்டை குற்றம், குறை சொல்லி புகழ் பெறும் புலவர்களும் உண்டு. என்னையை எதிர்த்து பேசுவதால் உங்களுக்கு ஒரு அடையாளம் உண்டு. என்னை எதிர்க்க வேண்டிய தேவை, விமர்சித்து பேசுவதற்கு தேவை உங்களுக்கு இருக்கு. எனக்கு உங்களை எதிர்த்து பேசவேண்டிய, விமர்சித்து பேச தேவை இருக்கா?.. என்னை எதிர்க்கிறவர்கள் எல்லாம் எனக்கு எதிரி கிடையாது.

நான் யாரை எதிர்க்கிறேனோ அவர்கள் தான் எதிரி.. அவங்க தான் என் எதிரி.. இனிமேலா பிறந்து எனக்கு எதிரி வரப்போகிறான். நான் தீர்மானித்துவிட்டேன்.. என் எதிரி யார்?… என் இலக்கு எது?… என் பயணம் எவ்வளவு தூரம்?.. இதெல்லாம் வெற்று பேச்சு.. என்னை உங்களோடு ஒப்பிட்டு ஒப்பிட்டு பேசுவது உங்களுக்கும் சிறுமை, எனக்கும் சிறுமை. என் வேலைக்கும் சிறுமை.. அதை விட்டுவிடுங்கள்.. என சீமான் பேசினார்.

மன்னிப்பு கேளுங்க..! இல்லாவிட்டால் ரூ 2 கோடி கொடு …! சீமானுக்கு வீரலட்சுமி நோட்டீஸ்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி அவர் புகார் கூறிய நிலையில் விஜயலட்சுமிக்கு ஆதரவாக தமிழர் முன்னேற்ற படை தலைவி வீரலட்சுமி செயல்பட்டார். இந்நிலையில் சீமானை வீரலட்சுமி பொதுவெளியில் கடுமையாக விமர்சித்து வந்தார்.

மேலும் வீரலட்சுமியும் விஜயலட்சுமியும் சேர்ந்து சமூகவலைதளங்களில் சீமானை விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டனர். இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி தனது புகாரை கடந்த 16-ம் தேதி இரவோடு இரவாக வாபஸ் வாங்கிக் கொண்டு பெங்களூர் சென்றுவிட்டார்.

இதைத் தொடர்ந்து வீரலட்சுமி, விஜயலட்சுமியின் காலில் சீமான் விழுந்து சமரசம் செய்து கொண்டதாகவும் தன்னிடம் உள்ள படையை திரட்டிவந்தால் நாம் தமிழர் கட்சியால் வடதமிழகத்தில் கால் ஊன்ற முடியாது என்றும் சீமானுக்கு சவால் விடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து வீரலட்சுமி மீது சீமான் கடுமையான விமர்சனங்களை வைத்தார்.

இந்நிலையில் தன் மீது அவதூறு பரப்பும் வீரலட்சுமியும் விஜயலட்சுமியும் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் ரூ 1 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர போவதாக சீமான் தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான் தன் மீது அவதூறு பேச்சுக்கு சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி கேட்காவிட்டால் ரூ 2 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என வீரலட்சுமி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சீமானுக்கு தேதி குறித்த வீரலட்சுமி…! நாங்க ரெடி.. நீங்க ரெடியா..?

நடிகை விஜயலட்சுமியை பண்ணை வீட்டில் தங்க வைத்து, விஜயலட்சுமிக்கு ஆதரவாகவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக வீரலட்சுமி நின்றார். ஆனால் அந்த பண்ணை வீட்டில் தன்னை அடைத்து வைத்து வீரலட்சுமி சகோதரி சித்ரவதை செய்ததாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனிடம் போனில் விஜயலட்சுமி கதறினார். பின்னர் வழக்கறிஞர் ஒருவர் மூலமாக அவர் மீட்கப்பட்டு புகார் வாபஸ் பெறப்பட்டு பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் சீமானுக்கும் வீரலட்சுமிக்கும் இடையே மோதல் வெடித்தது. என் வாழ்க்கையில் வீரலட்சுமிக்கு எல்லாம் மன்னிப்பே இல்லை சீமான் காட்டமாக விமர்சித்தார். இந்நிலையில் வீரலட்சுமியின் கணவர் பூவை. கணேசன், சீமானை அண்ணே! நீங்க நல்லா இருக்கீங்களாண்ணே? “அண்ணே நம்ம ரெண்டு பேரும் பாக்சிங் பண்ணலாமா? டவர் ஏறி? ரிங் ஏறி.. ரிங் ஏறி.. உங்க கூட பாக்சிங் பண்ணனும்னு ஆசையா இருக்குண்ணே என போனில் பேசிய ஆடியோ சமூக வலைதளதங்களில் பரவி வருகிறது. இந்த ஆடியோ தொடர்பாக சீமான் அளித்த பேட்டியில், பாக்சிங் அது சரிதான்.. அவரு பகல் நேரத்துல பேசுனா நாம பாக்சிங் போகலாம்.. 7 மணிக்கு மேல பேசுறாரு.. அவரு பாக்சிங்கிக்கு கூப்பிடுறாரு.. நான் பேசி அவர் பதிவு பண்றாருன்னு தெரியுது.

நாம எதையாவது பேசி அவர் பதிவு பண்ணி இந்த மாதிரி கேள்வி வரும்னுதான் செல்போனை கட் செய்தேன். அவர் எங்க கையாலதான் சாகனும்னு முடிவெடுத்துட்டாருன்னா சந்தோஷமாக எதிர்கொள்கிறேன்.. கேட்டு சொல்லுங்க.. இடம், நேரம் எல்லாம் நீங்க சொல்வீங்களாம்.. எப்ப வேணும்னாலும் அவரு வருவாருன்னு சொல்லிடுங்க நீங்க வாங்க அவரோட சண்டை போட்டு ஜெயிச்சிடுங்கன்னு சொல்லுங்க.. அவர் கிட்ட நேரில் முதலில் ஒருமுறை வந்து நில்லு.. அப்புறம் சண்டை போடலாம்னு சொல்லுங்க.. கேட்கும்போது சிரிப்பா இருக்குல்ல.. மகிழ்ச்சியாக இருங்க.. ” என்றார்.

இந்நிலையில்,சீமான் பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக வீரலட்சுமி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஊடகவியலாளர் மத்தியிலும் நாட்டு மக்கள் மத்தியிலும் ஒழுங்கினமான பேச்சு, பேசிக்கொண்டு இருந்தீர்கள். நீங்க பேசும் பேச்சை எல்லாம் பொது வாழ்க்கையில் இருக்கும் பெண்ணாக தலைவராக நான் வேண்டும் என்றால் இதை கடந்து போய்விடலாம். ஆனால், நீங்கள் என்னை பேசிய பேச்சை கேட்டுவிட்டும் கடந்து போக வேண்டிய அவசியம் என் கணவருக்கு கிடையாது.

அதனால், உங்களை தொடர்பு கொண்டு நான் வீரலட்சுமியின் கணவர் பூவை கணேசன் பேசுகிறேன் என்றதும் நீங்கள் அழைப்பை துண்டித்து விட்டீர்கள். மறுபடியும் உங்களை தொடர்பு கொண்டார். அப்போது உங்கள் கூட பாக்சிங் பண்ண ஆசையாக இருக்கு.. ஒண்டிக்கு ஒண்டி நிற்கலாமா என பேசினார். அதைக் கேட்டுட்டு போனில் பேசுவதற்கு உங்களுக்கு வீரம் இல்லை. ஊடகங்கள் முன்னாடி மைக்கிற்கு முன்னாடிதான் உங்களுக்கு வீரம் வருமா? போனை கட் பண்ணிட்டு.. ஊடகங்களிடம் முதலில் அவரை எதிரில் வந்து நிற்க சொல்லுங்க என சொன்னீர்கள்.

10 வருடத்திற்கு முன்னாடி உங்க எதிரில் வந்து கேள்வி கேட்டது அவர் தான்.. அது உங்களுக்கு நியாபகம் இருக்காது விடுறுங்க.. நான் நிற்கிற இடம் என்னவென்று தெரியுதா.. இங்க தான் என் கணவருடன் பாக்சிங்.. சண்டை போடவேண்டிய கிரவுண்ட் இடம் இது… இந்த கிரவுண்ட் எங்கேஇருக்கிறது என்றல் திருவள்ளூர் மாவட்டம் தொட்டிக்கலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட இடம் இது.. இந்த இடத்தில் தான் பாக்சிங் போடுவதற்கான இடத்தை நாங்கள் தீர்மானம் பண்ணியிருக்கிறோம். தேதி எப்போ பார்த்தீங்கள் என்றால் 2024 தை மாதம் காணும்பொங்கல்.

அன்னைக்குதான் உங்களுக்கும் எனது கணவருக்கும் சண்டை நடக்க போகிறது.. இந்த சண்டையில் பாக்சிங் கராத்தே, மல்யுத்தம், குங்பூ இதில் எந்த சண்டை வேண்டும் என்றாலும் நீங்க போடுங்க… எல்லாவற்றையும் சமாளிக்க தயாராக இருக்கிறார். இந்த சண்டையில் யாரு நாக் அவுட் ஆகி தோற்கீறிங்களோ அவர்கள் தோற்றதை ஒத்துக்கொள்ள வேண்டும். போட்டியில் என்ன பந்தயம் என்பதை போட்டி நடப்பதற்கு முன்பாக நாட்டு மக்களுக்கு நான் அறிவிப்பேன். இவ்வாறு வீரலட்சுமி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.