பொம்மை முதலமைச்சர் ஆட்சிக்கு, முடிவு கட்டுவோம்..! ஜெ. ஜெயலலிதா நினைவு நாளில் அதிமுகவினர் உறுதிமொழி..!

பொய்யான வாக்குறுதிகளைத் தந்து, மக்களை ஏமாற்றி வரும், பொம்மை முதலமைச்சர் ஆட்சிக்கு, முடிவு கட்டுவோம் என மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் 8-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனிடையே முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா நினைவு தினத்தை யொட்டி பழனிசாமி உறுதி மொழிகளை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அந்த உறுதிமொழியில், “தீயசக்தியை விரட்டியடிக்க, குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிட கழகத்தை நிறுவிய நம் தலைவர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் வழியில் அயராது உழைப்போம். கழகம் காக்க, கர்ஜிக்கும் சிங்கமெனத் திகழ்ந்த புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் திமுக ஆட்சியை, வீட்டுக்கு அனுப்பிட, விண்ணை முட்டும் வீரர்களின், ஆர்ப்பரிப்பைப் பாரீர். பொய்யான வாக்குறுதிகளைத் தந்து, மக்களை ஏமாற்றி வரும், பொம்மை முதலமைச்சர் ஆட்சிக்கு, முடிவு கட்டுவோம்.

குடும்ப ஆட்சியில் தந்தை முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர், மருமகன் அதிகாரம் செலுத்தும், போலி திராவிட மாடலின் பொய் முகத்தை அம்பலப்படுத்துவோம். மக்கள் விரோத திமுக ஆட்சியிலே, குடிநீர் கட்டண உயர்வு; கழிவு நீர் வரி உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு, பத்திரப் பதிவில் வழிகாட்டி மதிப்பு உயர்வு, பேருந்து கட்டண மறைமுக உயர்வு, ஏழை, எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும், ஈரமில்லாத, இரக்கமில்லாத தந்திர மாடல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்.

திமுக ஆட்சியிலே, தொடர் கொலை, கொள்ளை, வழிப்பறிச் சம்பவங்களால் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுப் போச்சு! கள்ளச் சாராய மரணங்களால், ஏழை, எளிய மக்களின் குடும்பமே நிர்கதியாய் ஆச்சு. எங்கும் கஞ்சா போதைகளால், தமிழ் நாடே தத்தளித்துப் போச்சு. விடியா திமுக ஆட்சி தேவையா? என்று மக்கள் மனதில் எண்ணம் வந்திருக்கு. மக்கள் விரோத திமுக அரசை, வீட்டுக்கு அனுப்பும் வரை ஒயமாட்டோம்.

திமுக ஆட்சியில், குற்றவாளிகளுக்கு துளியும் பயமில்லை, தொடர் குற்றங்கள், இந்த ஆட்சியில் தொடர்கிறது. இங்கு தமிழகத்தில் ஆட்சி இருக்கிறதா ? இல்லையா? என்கிற கேள்வியை மக்கள் எழுப்பி வருகிறார்கள். தமிழ் நாட்டை, குற்றவாளிகளின் சொர்க்க பூமியாக மாற்றியிருக்கும் திமுக அரசே ராஜினாமா செய்.

அதிமுக ஆட்சியிலே சிறப்பான திட்டங்கள் மக்களுக்கு செழிப்பான திட்டங்கள் ஏழைகள் பசியாற, அம்மா உணவகங்கள் ஏழைகள் நலம் பெறவே, அம்மா மருந்தகங்கள் மாணவர்கள் பயன்பெறவே, மடிக் கணினி திட்டங்கள் தாலிக்குத் தங்கம் என்று, தாய்க்குலம் புகழும் திட்டங்கள் இத்திட்டங்களை நிறுத்திவிட்டால், ஜெயலலிதாவின் புகழை, மறைத்துவிடாலம் என்று தீய சக்தியாளர்கள் நினைக்கின்றார்கள். அவர்களின் கொட்டத்தை அடக்கிடுவோம்.

ஆட்சிக்கு வந்தவுடன், நீட் தேர்வு ரத்தென்றார்! கல்விக் கடன் ரத்தென்றார். விலைவாசி குறையும் என்றார். பொய் முதல்வர் செய்தாரா?. இனிமேலும் தமிழர்களை ஏமாற்ற விடமாட்டோம் என்று உறுதி ஏற்கிறோம். வருகின்ற சட்டமன்றத் தேர்தல் களத்தில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் வழியில் நின்று, வென்று காட்டுவோம். தமிழகத்தில் கழக ஆட்சியை மீண்டும் அமைத்திடுவோம்” என அந்த உறுதி மொழி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் பாடப்பட்ட “ஐ அம் சாரி ஐயப்பா..” பாடல் திமுக ஆட்சியில் பூதாகரமானது எப்படி..!?

அதிமுக ஆட்சியில் ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்கு முன்பு “ஐ அம் சாரி ஐயப்பா..” என்ற பாடல் இசைவாணியால் பல்வேறு மேடைகளில் பாடிய பாடல் கடந்த ஒரு வார காலமாக சமூக வலைத்தளங்களில் பரவி நாட்டிலேயே அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற முயற்சி செய்கின்றனர்களா என்ற கேள்வி எழுகின்றது.

நாட்டில் மாட்டுக்கறி விஷயம் பெரிதான போது நீலம் பண்பாட்டு மைய ஒருங்கிணைப்பில் கேஸ்ட்லெஸ்ட் கலெக்ஷன் என்கிற இசை குழுவில் ஏ அந்த கறி.. இந்த கறி.. எந்த கறிய துன்னா உனக்கென்னா… நீ யாரா வேணா இருடா எனக்கென்னா.? “பெரிய கறி” என்ற பாடலை பாடியதன் மூலம் வடசென்னையை பூர்வீகமாகக் கொண்ட கானா பாடகி இசைவாணி பெரிய அளவில் பிரபலமானார்.

ஜாதி ஏற்றத்தாழ்வுகள், இட ஒதுக்கீடுக்கு எதிரான மனநிலை, உணவு பழக்கத்தில் நிலவும் பாகுபாடு, பெண்கள் மீது செலுத்தப்படும் தீண்டாமை உள்ளிட்ட சமூகத்தில் படிநிலையில் நிலவும் பல்வேறு ஏற்ற தாழ்வுகளை கலைந்து சமூக உரிமைகளை கூறும் பொருட்டு நீலம் பண்பாட்டு மையம் கேஸ்ட்லெஸ்ட் கலெக்ஷன் என்கிற இசை குழு உருவாகி ஒரு பாடல் வரியோடு the casteless collective பல பாடல்களை இயற்றியது.

“2018-ஆம் ஆண்டு தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்று கொண்டு இருந்த சமயம், கேரளாவில் உள்ள சபரிமலைக்குப் பெண்கள் செல்வது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பாலினப் பாகுபாட்டை முன்வைத்து பெண்களுக்கு உரிமை மறுக்கப்படக்கூடாது என்று தீர்ப்பளித்தது. அப்போது, ஐ அம் சாரி ஐயப்பா என்று ஒரு பாடலை பாடியிருக்கிறார். அந்த வீடியோக்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ஐ அம் சாரி ஐயப்பா.. நான் உள்ளே வந்தால் என்னப்பா…? நான் தாடிக்காரன் பேபி.. இப்ப காலம் மாறிப்போச்சு.. இனி தள்ளி வைத்தால் தீட்டா.. நான் முன்னேறுவேன் மாஷா.. என்ற வரிகள் அதில் இருக்கிறது.

பொதுவாக ஐயப்பன் கோவிலில் பத்து வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் மற்றும் 60 வயதை கடந்த பெண்கள் மட்டும் தான் செல்ல வேண்டும் என்ற நிலை உள்ள நிலையில் இவர் ஐயப்ப பக்தர்கள் உணர்வை சீண்டும் வகையில் பாடல் பாடி இருக்கிறார் என்று இவர் மீது பலர் புகார் கொடுத்து இருக்கிறார்கள்.

அதை ஆதாரமாகக் கொண்டு மிகப்பெரிய விவாதமும் நடைபெற்றது. அதை தொடர்ந்து நாட்டில் உள்ள முற்போக்கு இயக்கங்களும் பெண்களின் உரிமைக்கு ஆதரவாக நின்றன. இதே காலகட்டத்தில் தான் நீலம் பண்பாட்டு மைய ஒருங்கிணைப்பில் இந்த கேஸ்ட்லெஸ்ட் கலெக்ஷன் என்கிற இசை குழு உருவானது.

சமூகப் படிநிலையில் நிலவும் பல்வேறு ஏற்ற தாழ்வுகளை கலைந்து சமூக உரிமைகளை கூறும் ஒரு பாடல் வரியோடு the casteless collective பல பாடல்களை இயற்றியது. ஜாதி ஏற்றத்தாழ்வுகள், இட ஒதுக்கீடுக்கு எதிரான மனநிலை, உணவு பழக்கத்தில் நிலவும் பாகுபாடு, பெண்கள் மீது செலுத்தப்படும் தீண்டாமை உள்ளிட்டவைகள் இதில் அடங்கும்.

இந்நிலையில், கேஸ்ட்லெஸ்ட் கலெக்ஷன் என்கிற இசை குழு,  ஐ அம் சாரி ஐயப்பா என்கிற பாடல் ஆண்டாண்டு காலமாய் இங்கு பேசப்பட்டு வரும் கோயில் நுழைவு உரிமையை கூறுகிற வரிகளோடு துவங்கி பின் பெண்களின் சுதந்திரத்தை பறிக்கும் பொதுவான உரிமைகளை கூறும் பாடலாக பாடல் பாடப்பட்டுள்ளது.

ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இசைவாணியால் பல்வேறு மேடைகளில் பாடிய பாடல் கடந்த ஒரு வார காலமாக சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறது. அதாவது, அதிமுக ஆட்சியில் பாடப்பட்ட பாடல் இன்று திமுக ஆட்சியில் பூதாகரமாக பரப்பப்பட்டு நாட்டிலேயே அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தை கலவர பூமியாக மற்ற முயற்சி செய்கின்றனர்களா என்ற கேள்வி எழுகின்றது.

ஆர்.பி.உதயகுமார்: டேக் இட் ஈஸி…! கருத்து மோதல் இருந்தால் அங்கு ஜனநாயகம் உள்ளது..!

கருத்து மோதல் இருந்தால் அங்கு ஜனநாயகம் உள்ளது என அர்த்தம். எனவே, இதை “டேக் இட் ஈஸியாக” எடுத்துக் கொள்ள வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 2026 -ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கான பணியை அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி உத்தரவில் மாவட்ட வாரியாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த கள ஆய்வுக்கு என்று தனியே குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வளர்மதி, எஸ்பி வேலுமணி உள்பட 10 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி கடந்த 11-ஆம் தேதி சென்னையில் தொடங்கிய அதிமுக கள ஆய்வு குழு ஆலோசனை கூட்டம் தற்போது திருநெல்வேலி, கும்பகோணம்,மதுரை என பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது இந்த கலாய்வுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தலைமை தாங்கி வருகின்றனர்.

இந்நிலையில், திருநெல்வேலியில் எஸ்.பி.வேலுமணி பங்கேற்ற அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் ஏற்பட்ட அடிதடி, மோதல் மற்றும் கும்பகோணத்தில் நிர்வாகிகள் மோதி கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது மதுரையிலும் முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மதுரை திருமங்கலம் பகுதியில் அதிமுக சார்பில் திங்கள்கிழமை இரவு கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் திருமங்கலம் எம்எல்ஏ, ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். மேலும் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செம்மலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு ஆர்.பி.உதயகுமார் பதிலளித்தார். அப்போது, “234 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுகவின் பயிற்சி பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள் தலைமையில் கள ஆய்வு நடைபெறுகிறது. உறுப்பினர் சீட்டு முழுமையாக சென்றடைந்துள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர். ஒன்பது பேர் கொண்ட குழுவாக வாக்குச்சாவடி கிளை கழகம் அமைக்க வேண்டும் பொதுச் செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

எம்ஜிஆர் மற்றும் ஜானகி அம்மையாரின் நூற்றாண்டு விழாவை போல ஜெயலலிதாவின் நூற்றாண்டு விழாவையும் முதல்வராக அவர் நடத்தக்கூடிய காலம் வரும். திமுகவில், வாய் பூட்டு சட்டம் போடப்பட்டுள்ளது. அந்த கட்சியில் அப்பா அல்லது மகன் மட்டும்தான் பேசுவார்கள். தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டு காலம் உள்ளது. அதிமுக தனது கட்டமைப்பை வலிமைப்படுத்துகிற பணியில் ஈடுபட்டுள்ளோம்.

கருத்து மோதல் இருந்தால் அங்கு ஜனநாயகம் உள்ளது என அர்த்தம். இதைவிட பெரிய கருத்து மோதல்கள் எல்லாம் நடந்துள்ளது. எனவே, இதை டேக் இட் ஈஸி-ஆக எடுத்துக் கொள்ள வேண்டும். முதல்வர் ஸ்டாலின் ஆணவத்தின் உச்சிக்கு சென்று விட்டார். அனைவரையும் வேலை இல்லை என்று தான் பேசுகிறார். அவருக்கு தான் வேலை இல்லை. அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் தான் அவருக்கு எல்லாம் புரியும். அதனால் தான் எதிர்க்கட்சித் தலைவர் பரிசை அவருக்கு அளிப்போம் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

எதிர்கட்சியாக செயல்படுவது சின்னம்மா தான்..! செல்லூர் ராஜூ முன்னிலையில் மோதல்..!

அதிமுக அணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சின்னம்மா தலைமையில் ஒன்றினைய வேண்டும் என்று குரல் கொடுத்து இதில் ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கடைசியில் மதுரை அதிமுகவின் கள ஆய்வு கூட்டம் கைகலப்பில் முடிந்தது.

தமிழகத்தில் 2026 -ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கான பணியை அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி உத்தரவில் மாவட்ட வாரியாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கள ஆய்வுக்கு என்று தனியே குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வளர்மதி, எஸ்பி வேலுமணி உள்பட 10 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி கடந்த 11-ஆம் தேதி சென்னையில் தொடங்கிய அதிமுக கள ஆய்வு குழு ஆலோசனை கூட்டம் தற்போது திருநெல்வேலி, கும்பகோணம்,மதுரை என பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது இந்த கலாய்வுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தலைமை தாங்கி வருகின்றனர். அந்த வகையில் மதுரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள சேம்பர் ஆஃப் காமர்ஸ் வளாகத்தில் இன்று காலை அதிமுக மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில், கள ஆய்வுக் கூட்டம், அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சர்களான அதிமுக கழக துணைப் பொதுச் செயலாளர் நத்தம் ஆர். விஸ்வநாதன், மற்றும் அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அதிமுக அணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சின்னம்மா தலைமையில் ஒன்றினைய வேண்டும் என்று குரல் கொடுத்து பேசினார்கள். உடனே செல்லூர் ராஜூ எழுந்நிருச்சு இப்போதைக்கு எதுவும் பேசக்கூடாது கடைசியில் பார்த்துக்கலாம் என்று சொல்ல இதில் ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இரு பிரிவு நிர்வாகிகள் கைகலப்பில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே திருநெல்வேலியில் எஸ்.பி.வேலுமணி பங்கேற்ற அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் ஏற்பட்ட அடிதடி, மோதல் மற்றும் கும்பகோணத்தில் நிர்வாகிகள் மோதி கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது மதுரையிலும் முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

செல்லூர் ராஜூ: தமிழக காவல்துறை உருட்டல், மிரட்டல்… அதிமுககாரனிடம் பருப்பு வேகாது..!

நாங்கள் பல்வேறு அடக்குமுறைகளை பார்த்து வந்தவர்கள் காவல்துறை உருட்டல், மிரட்டல், அதிமுககாரனிடம் பருப்பு வேகாது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரை விளாங்குடி பகுதியில் எம்ஜிஆர் மன்றம் மற்றும் அதிமுக கொடியேற்றி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் செல்லூர் ராஜூ கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, மதுரையில் அதிமுக கொடி ஏற்றுவதற்கு காவல்துறையினர் இடையூறு கொடுத்ததற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். காவல்துறை உருட்டல், மிரட்டல், அதிமுககாரனிடம் பருப்பு வேகாது, நாங்கள் பல்வேறு அடக்குமுறைகளை பார்த்து வந்தவர்கள். நாங்கள் காவல்துறையை கண்ணியமிக்கவர்களாக நடத்தி உள்ளோம். நாட்டில் சட்டம் ஒழுங்கு கேவலமாக உள்ளது.

தபால் தந்தி நகரில் நடைபயிற்சி சென்ற பெண்ணை ஒருவர் தடவி விட்டு செல்கிறார். ஆசிரியர் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது பள்ளிக்குள் சென்று வெட்டுகிறார்கள். உச்சநீதிமன்றம் இந்த திமுக அரசாங்கத்தை ஆட்சி நிர்வாகம் சரியில்லை என பலமுறை தலையில் கொட்டுகிறது. காவல்துறைக்கு கொஞ்சம் கூட வெட்கம், மானம், ரோஷம் எதுவும் இல்லை. மதுரையில் சித்திரை திருவிழாவில் மக்களுக்கு சரியான பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை என செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

அரசு ஊழியர்களை அட கொலைகார பாவிகளா.. என விமர்சனம் செய்த திண்டுக்கல் சீனிவாசன்..!

அட கொலைகார பாவிகளா… எவ்வளவு தெளிவா இருக்காங்க பாருங்க.. என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார். தமிழகத்தில் 2026 -ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கான பணியை அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி உத்தரவில் மாவட்ட வாரியாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த கள ஆய்வுக்கு என்று தனியே குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வளர்மதி, எஸ்பி வேலுமணி உள்பட 10 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் தஞ்சாவூரில் அதிமுக களஆய்வு என்பது நடந்தது. அப்போது அதிமுக நிர்வாகிகள் மத்தியில் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். அப்போது, நமக்கு எதிராக இருந்தவர்கள் அரசு அதிகாரிகளும், ஆசிரிய பெருமக்களும். அது தெரியுமா? தெரியாதா? நமக்கு எதிராக தானே ஓட்டுப்போட்டார்கள். எனக்கு என்ன? நான் இப்போது திண்டுக்கல் தொகுதி MLA, 22 ஆயிரம் ஓட்டில் நான் வெற்றி பெற்றதாக கூறினார்கள். சரியென்று கையெழுத்துப்போட நான் உட்கார்ந்து இருந்தேன். ஆட்சியர் எல்லோரும் உட்கார்ந்து இருந்தோம்.

அப்போது துணை தாசில்தார் ஓடிவந்தாங்க. அய்யா.. அய்யா தபால் ஓட்டு எண்ணி கொண்டு இருக்கிறோம். கொஞ்சம் இருங்க.. கையெழுத்து போடாதீர்கள் என்று சொன்னார். சரி வரட்டும். ஒரு ஆயிரம், இரண்டாயிரம் ஓட்டு கிடைக்கும் என்று உட்கார்ந்து இருந்தேன். ஆனால் வெற்றி வித்தியாசத்தில் 5 ஆயிரம் ஓட்டு எனக்கு குறைந்து போய்விட்டதாக கூறினார்கள்.

என்னய்யா.. என்று கேட்டேன். அதற்கு எல்லா தபால் ஓட்டுகளும் திமுகவுக்கு போய்விட்டது. இதனால் 17,500 ஓட்டில் நீங்கள் ஜெயித்து உள்ளீர்கள் என்றார்கள். அதையாவது கொடுங்களேன்யப்பா.. நான் ஜெயிச்சிட்டேல்ல என்று கூறி தாய்மார்கள் பிரசவத்தின்போது குழந்தையை பார்த்து மகிழ்ச்சியடைவது மகிழ்ச்சியடைந்தேன்.

இதை எதுக்கு சொல்கிறேன் என்றால் என் தொகுதியில் மட்டும் 5 ஆயிரம் ஓட்டு.. தபால் ஓட்டில் எத்தனை ஓட்டு தான்யா எங்களுக்கு வந்துள்ளது என்று கேட்டேன். ஒரு ஓட்டு கூட எனக்கு வரவில்லை என்று கூறினார்கள். எவ்வளவு தெளிவா இருக்காங்க பாருங்க.. அட கொலைகார பாவிகளா என்று சொல்ல வேண்டிய சூழ்நிலை. தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் அவர்களின் குடும்பம் என்று மொத்தம் 80 லட்சம் ஓட்டுகள் தோழர்களே. இதனால் இது விளையாட்டு கிடையாது. அந்த ஓட்டுகளால் தான் நாம் தோற்றோம். இதனால் அவர்களின் ஓட்டுகளை பெற முயற்சிக்க வேண்டும்” என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

செல்லூர் ராஜூ: அதிமுக ஆட்சியில் தமிழக காவல்துறை ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக இருந்தது..!

அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழக காவல்துறை ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக இருந்தது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரை விளாங்குடி பகுதியில் எம்ஜிஆர் மன்றம் மற்றும் அதிமுக கொடியேற்றி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் செல்லூர் ராஜூ கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, மதுரையில் அதிமுக கொடி ஏற்றுவதற்கு காவல்துறையினர் இடையூறு கொடுத்ததற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். காவல்துறை உருட்டல், மிரட்டல், அதிமுககாரனிடம் பருப்பு வேகாது, நாங்கள் பல்வேறு அடக்குமுறைகளை பார்த்து வந்தவர்கள். நாங்கள் காவல்துறையை கண்ணியமிக்கவர்களாக நடத்தி உள்ளோம். நாட்டில் சட்டம் ஒழுங்கு கேவலமாக உள்ளது.

தபால் தந்தி நகரில் நடைபயிற்சி சென்ற பெண்ணை ஒருவர் தடவி விட்டு செல்கிறார். ஆசிரியர் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது பள்ளிக்குள் சென்று வெட்டுகிறார்கள். உச்சநீதிமன்றம் இந்த திமுக அரசாங்கத்தை ஆட்சி நிர்வாகம் சரியில்லை என பலமுறை தலையில் கொட்டுகிறது. காவல்துறைக்கு கொஞ்சம் கூட வெட்கம், மானம், ரோஷம் எதுவும் இல்லை. மதுரையில் சித்திரை திருவிழாவில் மக்களுக்கு சரியான பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை.

காவல்துறை எங்களை அடக்க நினைப்பது என்ன நியாயம், சாதுமிரண்டால் காடு கொள்ளாது, நாங்கள் கண்ணியமிக்கவர்கள். எங்கள் ஆட்சிக் காலத்தில் காவல்துறை ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக இருந்தது. தமிழகத்தில் கள்ளச்சாராயம் தலை விரித்து ஆடுகிறது, மெத்தனால் பல மாநிலங்களில் இருந்து வருகிறது, கள்ளச்சாராய சாவு வழக்கை நீதிமன்றமே சிபிஐ வசம் ஒப்படைத்துவிட்டது. அந்த அளவிற்கு தமிழக காவல்துறை மோசமாக செயல்படுகின்றனர் என செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

திருமாவளவன் முதலமைச்சர் கனவு குறித்த கேள்விக்கு.. “ஆசையே அலை போலே… ” பாடல் பாடி ஜெயக்குமார் பதில்..!

ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே என பாட்டு பாடி பதிலளித்த ஜெயக்குமார். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் வடக்கு மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான அதிமுக கள ஆய்வு கூட்டம் மாவட்ட செயலாளர் சிறுனியம் பலராமன் தலைமையில் நடைபெற்றது. இந்த கள ஆய்வு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், டி. ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு ஜெயக்குமார் பதிலளித்தார். அப்போது, செய்தியாளர் ஒருவர், வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன் தனக்கும் முதலமைச்சர் கனவு இருப்பதாகவும் அதற்கான மையப் புள்ளிகள் அமையவில்லை என கூறியது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி எழுப்பினர்.

அந்த கேள்விக்கு ஜெயக்குமார் அவர்கள், ‘ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே என தொல் திருமாவளனை பாட்டு பாடி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ”கனவு காணுங்கள் என அப்துல் கலாம் கூறியது போன்று எல்லோரும் கனவு காணலாம். அதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதற்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம், பழனியில் , தனியார் திருமண மண்டபத்தை திறந்துவைத்து தொல் திருமாவளவன் பேசினார். அப்போது, நானும் முதலமைச்சராக வேண்டும், எனக்கும் முதலமைச்சர் கனவு உண்டு என்று 20 வருடங்களுக்கு முன்பாக பத்திரிகையில் முதல் பக்கத்தில் வந்த செய்தியை சுட்டிக் காட்டினார்.

அதற்காக இன்று முதல் புள்ளியை வைத்துள்ளோம் இன்னும் கோலங்கள் போட பல புள்ளிகள் தேவைப்படுகிறது , ஒரு புள்ளி வைத்துக் கொண்டு கோலம் போட முடியாது நூற்றுக்கணக்கான புள்ளிகள் வைக்க வேண்டும் அடி எடுத்து வைத்தவுடன் ஆட்சியில் வென்றுவிட முடியாது இப்போது பலர் கட்சி ஆரம்பித்து உடனே முதலமைச்சர் கனவோடு இருக்கிறார்கள் என தொல் திருமாவளவன் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்லூர் ராஜூ: மாணவர்கள் கூகுள் லில் வைத்துக் கொண்டு சுற்றுகிறார்கள்..! தலைவா அது கூல் லிப்..!

மாணவர்களுக்கு கஞ்சா, பீர், சப்ளை செய்கிறது எனவும், எங்கு பார்த்தாலும் மாணவர்கள் கூகுள் லிப் வைத்துக் கொண்டு சுற்றுகிறார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரை விளாங்குடி பகுதியில் எம்ஜிஆர் மன்றம் மற்றும் அதிமுக கொடியேற்றி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் செல்லூர் ராஜூ கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, மதுரையில் அதிமுக கொடி ஏற்றுவதற்கு காவல்துறையினர் இடையூறு கொடுத்ததற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். காவல்துறை உருட்டல், மிரட்டல், அதிமுககாரனிடம் பருப்பு வேகாது, நாங்கள் பல்வேறு அடக்குமுறைகளை பார்த்து வந்தவர்கள். நாங்கள் காவல்துறையை கண்ணியமிக்கவர்களாக நடத்தி உள்ளோம்.

நாட்டில் சட்டம் ஒழுங்கு கேவலமாக உள்ளது, தபால் தந்தி நகரில் நடைபயிற்சி சென்ற பெண்ணை ஒருவர் தடவி விட்டு செல்கிறார். ஆசிரியர் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது பள்ளிக்குள் சென்று வெட்டுகிறார்கள். உச்சநீதிமன்றம் இந்த திமுக அரசாங்கத்தை ஆட்சி நிர்வாகம் சரியில்லை என பலமுறை தலையில் கொட்டுகிறது. காவல்துறைக்கு கொஞ்சம் கூட வெட்கம், மானம், ரோஷம் எதுவும் இல்லை. மதுரையில் சித்திரை திருவிழாவில் மக்களுக்கு சரியான பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை.

காவல்துறை எங்களை அடக்க நினைப்பது என்ன நியாயம், சாதுமிரண்டால் காடு கொள்ளாது, நாங்கள் கண்ணியமிக்கவர்கள். எங்கள் ஆட்சிக் காலத்தில் காவல்துறை ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக இருந்தது. தமிழகத்தில் கள்ளச்சாராயம் தலை விரித்து ஆடுகிறது, மெத்தனால் பல மாநிலங்களில் இருந்து வருகிறது, கள்ளச்சாராய சாவு வழக்கை நீதிமன்றமே சிபிஐ வசம் ஒப்படைத்துவிட்டது. அந்த அளவிற்கு தமிழக காவல்துறை மோசமாக செயல்படுகின்றனர்.

தற்போது தமிழகத்தில் மிட்டாய் வடிவில் போதை மாத்திரைகள் தமிழகத்தில் விற்கப்படுகிறது, மாணவர்கள் கூகுள் லில் வைத்துக் கொண்டு சுற்றுகிறார்கள் என்றார். அப்போது அருகிலிருந்த நிர்வாகிகள் அதனை கவனித்து கூல் லிப் பயன்பாடு அதிகம் உள்ளது என்றனர். உடனடியாக சிரித்து சமாளித்த செல்லூர் ராஜு ‘பாருங்க அது கூட எனக்கு தெரியல சிரித்து சமாளித்தார்.

எஸ்.பி.வேலுமணி பங்கேற்ற கூட்டத்தில் அதிமுகவினர் அடிதடி, மோதலால் பரபரப்பு..!

எஸ்.பி.வேலுமணி பங்கேற்ற அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் ஏற்பட்ட அடிதடி, மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலியில் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கள ஆய்வுக் கூட்டம் முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் மற்றும் தற்போதைய அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா திருநெல்வேலி மாவட்டத்தில் அதிமுக தோல்வி அடைந்து வருவது குறித்து பேசிக் கொண்டிருந்தபோது சலசலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து மாவட்ட செயலாளர் கணேஷ் ராஜா தரப்பு ஆதரவாளர்களுக்கும் பாப்புலர் முத்தையா தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் மூண்டு இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டதால் கூட்டத்தில் பரபரப்பு தொற்றியது. இதையடுத்து எஸ்.பி. வேலுமணி அவர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டார். மேலும் எஸ்.பி. வேலுமணி சமரசத்துக்கு பின்பு கூட்டத்தில் இயல்பு நிலைக்கு வந்தது.