Narendra Modi: என் கடவுள் சிவாஜி மகாராஜாவிடம் தலை வணங்கி மன்னிப்புக் கேட்கிறேன்..!

மகாராஷ்டிரா மாநிலம் ராஜ்கோட் கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த டிசம்பர் 4-ம் தேதி 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலையைத் திறந்து வைத்தார். கடந்த 26-ஆ ம் தேதி கனமழை மற்றும் சூறாவளி காரணமாக இந்த சிலை சரிந்து விழுந்தது. நிறுவிய 8 மாதத்திலேயே சிலை விழுந்ததால் எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் அரசைக் கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில், சிலை உடைந்தது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிலையை வடிவமைத்த கட்டட பொறியாளர் சேதன் பட்டீல் என்பவரை காவல்துறை கைது செய்த நிலையில் சிற்பி ஜெயதீப் ஆப்தே தலைமறைவாகி உள்ளார். கடற்படைதான் சிலையை நிறுவியது என விளக்கமளித்த நிலையில் ள்ளது. மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே “சத்ரபதி சிவாஜியின் பாதத்தில் 100 முறை விழுந்து மன்னிப்புக் கேட்கத் தயார்” என தெரிவித்தார்.

இந்நிலையில் சிலை உடைந்தது தொடர்பாக முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடிபேசியுள்ளார் . மகாராஷ்டிராவின் பால்கர் என்ற பகுதியில் பேசியபோது, “சத்ரபதி சிவாஜி மகாராஜா வெறும் பெயர் அல்ல, என் கடவுள் சிவாஜி மகாராஜாவிடம் இன்று தலை வணங்கி மன்னிப்புக் கேட்கிறேன். சிவாஜியை தங்கள் அடையாளமாகக் கருதுபவர்களிடம் தலை வணங்கி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்தார்.