அமைச்சர் மதிவேந்தன் சென்னை தீவுத்திடல் ஆய்வு


சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் அவர்கள் சென்னை தீவுத்திடல் மற்றும் ஹோட்டல் தமிழ்நாடு ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர் மேம்படுத்தப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆராய்ந்தார்.

சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் புதிய ஆக்ஸிஜன் ஜெனரேட்ட ரை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைப்பு


தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி இன்று சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் புதிய ஆக்ஸிஜன் ஜெனரேட்டர் ஒன்றும், குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மையம் ஒன்றும், கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் கோவிட் -19 நிவாரண பொருட்கள் வழங்கினார்.

அன்பின் கரங்கள் நிறுவனம் சார்பில் இரண்டு ஆக்ஸிஜன் செரிவூட்டிகள் வழங்கல்


கொரோனா நிவாரண நிதியாக அன்பின் கரங்கள் தொண்டு நிறுவனம் சார்பில் இரண்டு ஆக்ஸிஜன் செரிவூட்டிகள் வழங்கபட்டது.

தமிழச்சி தங்கப்பாண்டியன் மருத்துவர்கள் மற்றும் திமுக மகளிரணியுடன் கலந்துரையாடல்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி நேற்று சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் புதிய ஆக்ஸிஜன் ஜெனரேட்டர் ஒன்றும், குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மையம் ஒன்றும், கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.


இதனை தொடர்ந்து தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்கள் மருத்துவர்கள் மற்றும் திமுக மகளிரணியை சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடினார்.

சென்னை கிழக்கு மாவட்ட மாணவரணி சார்பில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கல்

கிருஷ்ணவேணி செல்வராஜ்: முத்தான 30 நாட்களில் முதலமைச்சர் முக ஸ்டாலின் செய்த சாதனைகள்

மார்பிங் செய்து இணையதளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டல் எதிரொலி கல்லூரி மாணவி தற்கொலை

கோயம்புத்தூர் சிங்காநல்லூரை அடுத்த உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 19 வயதான மாணவி. கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவியின் பெற்றோர் கோயம்புத்தூரிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். வீட்டில் இருந்த மாணவி கடந்த ஜூன் 11ம் தேதி மாலை 4 மணியளவில் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், மாணவியை மீட்டு சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த சிங்காநல்லூர் காவல்துறை, வழக்குப்பதிவு செய்து மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர். காவல்துறை நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியன.

மாணவியின் வீட்டருகே வசித்து வந்தவர் கேசவக்குமார். கல்லூரி மாணவனான இவரும் விஷம் அருந்திய மாணவியும் காதலித்து வந்துள்ளனர். மேலும் அவ்வப்போது மாணவியிடமிருந்து பணம் கேட்டு பெற்றிருக்கிறார் கேசவக்குமார். மேலும் ஒரு முறை மாணவியின் 2 சவரன் தங்க சங்கிலியையும் பெற்று திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளார்.

மேலும் மாணவியை மிரட்டி வீட்டிலிருந்து ஏ.டி.எம். கார்டை எடுத்துக்கொடுக்கும் படியும் மிரட்டியுள்ளார்., இதனால் மாணவி, கேசவக்குமாரிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். பின்னர் மாணவியை தொடர்ப்புக்கொண்ட கேசவக்குமார் பணம் தரவில்லை என்றால் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை மார்ஃபிங் செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதைக்கேட்டு விரக்தி அடைந்த மாணவி எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இந்த சூழலில்தான் சிகிச்சை பலனின்றி மாணவி கடந்த ஞாயிற்று கிழமை பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் மாணவன் கேசவக்குமார் மீது தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்த சிங்காநல்லூர் காவல்துறை தனிப்படை அமைத்து கேசவக்குமாரை தேடி வருகின்றனர்.

அமைச்சர் இரண்டாம் தவணை கோவிட் -19 நிவாரணம் தொடங்கி வைப்பு

தமிழ்நாட்டில் கோவிட் -19 பாதிப்பின் இரண்டாவது அலை தீவிரமடைந்ததால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மக்களின் நலன் கருதி, அரிசி அட்டைதாரர்களுக்கு கோவிட் -19 நிவாரணமாக 4000 ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி மே மாதம் முதற்கட்டமாக 2000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. இதையடுத்து 14 வகை பொருட்களுடன் கூடிய மளிகைத் தொகுப்பும், இரண்டாம் தவணையாக 2000 ரூபாயும் ஜூன் 15ம் தேதியான இன்று முதல் வழங்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து கோயம்புத்தூர் வடவள்ளி பகுதியில் உனவுத்துறை அமைச்சர் சக்கரபாணி 14 வகையான மளிகை பொருட்கள் மற்றும் 2,000 ரூபாய் கோவிட் -19 நிவாரணம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொடுத்து துவக்கி வைத்தார்.

கிணத்துக்கடவு சட்டமன்ற அலுவலகம் பூஜை செய்து மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

கோயம்புத்தூர் மாவட்டம், குறிச்சி காந்தி நகரில் உள்ள கிணத்துக்கடவு சட்டமன்ற அலுவலகம் பூஜை செய்து மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முகம், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் குறிச்சி மணிமாறன், அ.தி.மு.க மதுக்கரை பேரூராட்சி செயலாளர் சண்முகராஜா, போத்தனூர் பகுதி செயலாளர் டிவிசன் செயலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.