உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி

வங்காள மறுமலர்ச்சியின் தலைவரான ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் ஜி, தனது ஊக்கமளிக்கும் எண்ணங்களால் சமூக தீமைகளை அழித்து, தனது வாழ்நாள் முழுவதும் படித்த மற்றும் முற்போக்கான சமுதாயத்தை கட்டியெழுப்பினார். அவர் உள்ளூர் மொழியில் கல்வியை வலுவாக ஆதரிப்பவராகவும் சாதிவெறியை கடுமையாக எதிர்ப்பவராகவும் இருந்தார்.

.

மனைவி தற்கொலை செய்து கொள்வதை வீடியோ எடுத்த கொடூர கணவன்

ஆந்திரப் பிரதேசம், நெல்லூர் மாவட்டம் அட்மகூர் நகரை சேர்ந்த பெஞ்சலைய்யா என்பவர் ஒரு ஏடிஎம் மையத்தில் பாதுகாவலராகப் பணியாற்றி வருகிறார். பெஞ்சலைய்யாவின் மனைவி கொண்டம்மா இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் அடிக்கடி தகராறு செய்வது வந்தார். இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு, இவர்களுக்கு இடையே மறுபடியும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதம் முற்றி கொண்டம்மா தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். ஆனால் அதை சிறிதும் பொருட்படுத்தாமல் பெஞ்சலைய்யா அதனை வீடியோவாக எடுத்துள்ளார்.

அந்த வீடியோவில், தான் தற்கொலை செய்து கொள்ள முயன்ற கொண்டம்மா கணவன் எதிரே தூக்கில் தொங்கி துடிதுடித்து இறந்ததை பெஞ்சலைய்யா வீடியோ எடுத்து அந்த வீடியோவை மனைவியின் சகோதரருக்கு அனுப்பியுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்ததும், பெண்ணின் பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க, பெஞ்சலைய்யா கைது செய்யப்பட்டார்.

நடிகர் அமிதாப் பச்சன் பான் மசாலா விளம்பரத்திலிருந்து விலகுமாறு கடிதம்

புகையிலை ஒழிப்புக்கான தேசிய அமைப்பின் தலைவர் சேகர் சால்கர், இந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு எழுதிய கடிதத்தில், புகையிலை மற்றும் பான் மசாலா பழக்கம் குடிமக்களின் ஆரோக்கியத்திற்கு எதிராக இருக்கிறது என்பதை மருத்துவ ஆராய்ச்சி முடிவுகள் நிரூபித்துள்ளது.

பான் மசாலா நேரடியாக புற்றுநோயை உண்டாக்கக்கூடிய ஒன்று என்றும் இது வாய்ப் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்று சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் சுட்டி காட்டுகிறது. மேலும் புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவை பான் மசாலா மனிதர்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்துகின்றன என்பதற்கான அறிவியல் சான்றுகளை ஏற்றுக்கொள்கிறது.

சிகரெட் மற்றும் புகையிலை நிறுவனங்களின் இலக்காக தற்போது இளைஞர்கள் என மாறிவிட்டனர். என்ஜிஓவின் உறுப்பினர் மற்றும் புற்றுநோயியல் நிபுணர் எனும் முறையில் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

மேலும், பல்ஸ் போலியோ பிரசாரத்திற்கான அரசாங்க பிராண்ட் அம்பாசிடராகவும் அமிதாப் பச்சன் இருப்பதால், அவர் விரைவில் பான் மசாலா விளம்பரங்களில் இருந்து விலக வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் அவர் தெரிவித்து உள்ளார்.

அமித் ஷா திட்டவட்டம்: கூட்டுறவு அமைப்புகளுக்கான புதிய கொள்கைகளை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும்

டெல்லியில் நடைபெற்ற தேசிய கூட்டுறவு மாநாட்டில் கூட்டுறவுத்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அமித்ஷா, இது இந்தியாவின் 75-வது சுதந்திரதின ஆண்டாகும்.

ஆகையால், அதன் ஒரு பகுதியாக புதிய கூட்டுறவு கொள்கைகளை உருவாக்கும் பணிகளை துவங்க உள்ளோம். கூட்டுறவு அமைப்புகளுக்கான புதிய கொள்கைகளை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும்’ என தெரிவித்தார்.

 

டெல்லி நீதிமன்றத்தில் பயங்கரம்.. ரவுடி உட்பட 4 பேர் பலி..

டெல்லி ரோகிணி நீதிமன்றத்தில் அரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த பிரபல தாதா ஜிதேந்தர் கோகி மற்றும் சிலர் விசாரணைக்காக உள்ளிட்டோர் இன்று ஆஜர் படுத்த கொண்டு வரப்பட்டனர். அறை எண் 207 யில் அவர்கள் சென்றபோது அவர்களை நோக்கி வக்கீல் உடையில் இருந்த கோகியின் எதிர்கோஷ்டியினர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

பாதுகாப்புக்காக வந்து இருந்த காவல்துறையினர் எதிர்கோஷ்டியை நோக்கி சுட்ட சுமார் 40 நிமிடம் துப்பாக்கி சூட்டில் தாதா ஜிதேந்தர் கோகி உள்பட 4 பேர் பலியானார்கள். பட்டப்பகலில் நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.

வங்கிக் கணக்கே இல்லாத கூலித் தொழிலாளி கணக்கில் ரூ.9.90 கோடி டெபாசிட்

இந்தியாவில் சாமானிய மக்களின் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுப் பணம் பரிமாற்றம் செய்வதற்கு பேர்போன மாநிலம் பிஹார். அப்படி பணம் பரிமாற்றம் செய்வதை கண்டுபிடிக்கப்படுவதும் வாடிக்கையாக நிகழும் ஒன்றாகும்.

அதன்வரிசையில் பிஹார் சபுவால் நகரம் அருகேயுள்ள சிசானி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி விபின் சவுகான் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் இணைவதற்காக, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் வாடிக்கையாளர் சேவை மையத்துக்குக் கடந்த சில நாட்களுக்கு முன் சென்று கணக்குத் தொடங்க விரும்பினார்.

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் சேவை மைய அலுவலர், விபின் சவுகானின் ஆதார் எண்ணைப் பதிவு செய்து வங்கிக் கணக்கு தொடங்க முற்பட்டபோது, அவர் பெயரில் ஏற்கெனவே வங்கிக் கணக்கு இருப்பதாகவும் மேலும் அவருடைய வங்கிக் கணக்கில் ரூ.9.99 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருப்பது கண்டுஅதிர்ச்சி அடைந்தார்.

மேலும் சவுகான் பெயரில் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி வங்கிக் கணக்கு தொடங்கி, 2017-ம் ஆண்டு பிப்ரவரி வரை கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. ஆனால், சவுகான் பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் அவரின் புகைப்படம், கைரேகை, கையொப்பம் என எதுவுமே இல்லாத நிலையில் ஆதார் கார்டு எண் மட்டுமே அவருடையதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் விவசாய அமைப்புகள் போராட்டம் 300 நாள் நிறைவு

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த நவம்பர் மாதம் முதல் போராட்டங்கள் நடந்து வருகின்றனர். இந்த விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு 10-க்கும் மேற்பட்ட முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. 3 புதிய சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக இருப்பதால் இந்த பிரச்சினையில் முட்டுக்கட்டை நீடித்து வருகிறது.

இந்நிலையில் விவசாய அமைப்புகள் டெல்லியில் மேற்கொண்டுள்ள போராட்டம் நேற்றுடன் 300 நாள்களை நிறைவு செய்துள்ளது. இதுகுறித்து சம்யுக்த கிசான் மோர்ச்சா வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி எல்லையில் லட்சக்கணக்கான விவசாயிகள் அமைதியாக நடத்தி வரும் அறப்போர் 300 நாள்களைக் கடந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசுக்கு தெளிவாகத் தெரிந்தாலும் மத்திய அரசு அவற்றை ஏற்க மறுகின்றனர், எனவே எங்களின் கோரிக்கைகளை ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்.

உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்: பெண் விண்ணப்பதாரர்களை என்.டி.ஏ நுழைவுத்தேர்வை எழுத அனுமதிக்க வேண்டும்

மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில் ஒன்று என்.டி.ஏ எனப்படும் தேசிய ராணுவ மையத்தில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வை ஆகும். பெண்களுக்கு அவர்களுடைய வயதுக்கேற்ற மருத்துவ அளவுகோள், வழங்கப்பட வேண்டிய பயிற்சி முறைகள், எத்தனை பேரை எடுக்கலாம் என்கிற எண்ணிக்கை, அவர்கள் தங்குவதற்கான இடவசதிகள், தனி கழிவறைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை இல்லாத காரணத்தால் என்.டி.ஏ எனப்படும் ராணுவ மையத்தில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு இதுவரை பெண்கள் எழுத அனுமதிக்கவில்லை.

இந்நிலையில், இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள என்.டி.ஏ நுழைவுத்தேர்வை எழுத பெண் விண்ணப்பதாரர்களை அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவை நீக்க முடியாது என்றும் கூறியுள்ளது.

அமரீந்தர் சிங்: சித்துவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டால் அவருக்கு எதிராக பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்துவேன்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், முன்னாள் பாஜக மாநிலங்களவை உறுப்பினருமான நவஜோத் சிங் சித்து 2017ஆம் ஆண்டு பாஜகவிலிருந்து காங்கிரஸ் கட்சி தாவினார்.தற்பொழுது பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும், மாநில காங்கிரஸ் தலைவரான நவஜோத் சிங் சித்துவுக்கும் இடையே உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது.

இதனையடுத்து, மேலிடம் கொடுத்த அழுத்தம் மற்றும் அவமானத்தின் காரணமாக அமரீந்தர் சிங் சமீபத்தில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். சித்து ஆதரவாளரான சரண்ஜித் சிங் சன்னி புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், அமரிந்தர் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், பஞ்சாப்பிற்கு மிகவும் ஆபத்தானவர் சித்து. வரப்போகும் சட்டசபை தேர்தலில் சித்து முதல் மந்திரி ஆவதை தடுக்க எந்த தியாகத்தையும் நான் செய்வேன்.

சித்துவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டால் அவருக்கு எதிராக பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்துவேன். மூன்று வாரங்களுக்கு முன்பாக நான் ராஜினாமா செய்ய இருப்பதாக கூறிய போது, தொடர்ந்து பதவியில் நீடிக்குமாறு சோனியா காந்தி என்னை கேட்டுக்கொண்டார். எனக்கு தந்திர வித்தையெல்லாம் தெரியாது. காந்தி குடும்பத்தினருக்கும் இது பற்றி தெரியும். ராகுல், பிரியங்கா எனது பிள்ளைகளை போன்றவர்கள் அனுபவமற்றவர்கள் அவர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்” என தெரிவித்தார்.

மம்தா பானர்ஜி: இந்தியா ஒற்றுமையாகவே இருக்கும்//இந்தியாவை தலீபான்கள் போன்று மாற்ற நாங்கள் விடமாட்டோம்

மேற்குவங்கத்தில் நடந்து முடிந்த 8 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் பெருவாரியான இடங்களில் இமாலய வெற்றி மம்தா பானர்ஜி முதலமைச்சரானார். ஆனால் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார்.

அதனால், மம்தா பானர்ஜி 6 மாதங்களுக்குள் அவர் எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்க வேண்டும் என்ற சூழலில், மேற்குவங்கத்தில் காலியாக உள்ள 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வருகிற 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த இடைத்தேர்தலில், பவானிப்பூர் தொகுதியில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். இந்நிலையில், பவானிப்பூர் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் மம்தா பானர்ஜி இன்று பேரணியில் பங்கேற்றார்.

அந்த பேரணிக்கு பின்னர் நடந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசுகையில், மேற்குவங்காளத்தில் துர்கா பூஜை, லெட்சுமி பூஜைக்கு திரிணாமுல் அரசு அனுமதி அளிக்கமாட்டோம் என பாஜக பொய் கூறியுள்ளது. நரேந்திரமோடி, அமித்ஷா நீங்கள் இந்தியாவை தலீபான்கள் போன்று மாற்ற நாங்கள் விடமாட்டோம். இந்தியா ஒற்றுமையாகவே இருக்கும். காந்தி, நேதாஜி, விவேகானந்தர், சர்தார் வல்லபாய் படேல், குருநானக் ஜி, கவுதம புத்தர், ஜெயின்ஸ் அனைவரும் இந்தியாவில் ஒற்றுமையாக இருப்பார்கள். இந்தியாவை யாரேனும் பிளவுபடுத்த நாங்கள் விடமாட்டோம்’ என பேசினார்.