திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியமிளகு பாறை நாயக்கர் தெருவில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த வீட்டின் உரிமையாளர் ஜீவாசின்னத்துரை என்பவரது குடும்பத்தினரை அமைச்சர் கே.என் . நேரு நேரில் சந்தித்தார். அத்துடன் நிவாரண உதவியாக ரூ.20 ஆயிரத்துடன் அரிசி, மளிகை பொருட்களையும் வழங்கி ஆறுதல் கூறினார்.
Author: rajaram
தர்மபுரி அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தை கடத்தல்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நாச்சனூர் கிராமத்தை சேர்ந்த மாலினி அருள்மணி தம்பதியினர் . மாலினி கர்ப்பமான நிலையில் பிரசவத்துக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் கடந்த 18-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மாலினிக்கு சுகப்பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.
நேற்று காலை மாலினி தனது குழந்தையை கட்டிலில் படுக்க வைத்துவிட்டு குளியல் அறைக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. இதுகுறித்து மாலினி குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அருள்மணி மற்றும் அவருடைய குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வந்தனர்.
அப்போது பச்சிளங்குழந்தையை மர்ம நபர்கள் கடத்தி சென்றது தெரியவந்தது. இதுபற்றி குழந்தையின் பெற்றோர் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் குழந்தை காணாமல் போனது குறித்து தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தர்மபுரி டவுன் காவல் நிலையத்தில் நிலையத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
தொண்டர்களோட எழுச்சிய பார்த்து பயந்து போயிருக்காங்கனு தெரியுது…!
ஜெயலலிதாவின் தோழி 38 ஆண்டுகால அதிமுகவின் ஆணிவேர் என புகழப்படும் சசிகலா தினமும் தொண்டர்களை சந்தித்து பேசி வருகிறார். அந்தவகையில் திருவாரூரை சேர்ந்த விஷ்வா கணேஷ் என்ற தொண்டரிடம் சசிகலா பேசினார்.
அப்போது, எல்லாம் பயத்துல ஏதேதோ பேசிகிட்டு இருக்காங்க… தலைவர் மறைவுக்கு பிறகு அம்மாவை இப்படித்தான் கட்டம் கட்டி பேசிக்கிட்டு இருந்தாங்க… ஆனால் கடைசியில என்ன ஆச்சு…. தொண்டர்கள் எல்லாரும் அம்மாகூட தான் நின்னாங்க… நினைச்சபடி அம்மா வந்தாங்க… அதனால பேசட்டும்… பேசட்டும்… இவங்க பேசுறதெல்லாம் பார்த்தா, தொண்டர்களோட எழுச்சிய பார்த்து பயந்து போயிருக்காங்கனு தான் எனக்கு தெரியுது. தொண்டர்கள் நம்ம பக்கம் தான் இருக்காங்க… பாத்துக்கலாம். ஊரடங்கு முடிஞ்சதும் நான் வந்துடுவேன் கவலையே படாதீங்க என தெரிவித்தார்.
அமைச்சர் கே.என். நேரு அவர்கள் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டாவது தவணையாக ரூ.2000 வழங்கல்
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் துறை சார்பாக சிறப்பு நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், அமைச்சர் கே.என். நேரு அவர்கள் கலந்துகொண்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டாவது தவணையாக ரூ.2000 மற்றும் 14 வகையான மளிகை பொருள் தொகுப்புகளை வழங்கினார்.
காங்கிரஸ் கட்சியின் துணை கொறடா நியமனம்
பவானிதேவிக்கு விளையாட்டு அலுவலர் பணி
இந்தியாவிலிருந்து ஒலிம்பிக் 2021 வாள் வீச்சிற்கு தேர்வு செய்யப்படும் முதல் பெண் தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி அவர்களை ஊக்கப்படுத்திட அவர் தாயாரிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ரூ. 5 லட்சத்திற்கான காசோலை மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் விளையாட்டு அலுவலர் பணி வழங்கினார்.
ராகுல் காந்தியின் 51 பிறந்த நாளை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் வழங்கல்
தொழுநோயாளிகளுக்கு கோவிட் -19 தடுப்பூசி போடும் பணி தொடக்கம்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் சிகிச்சை பெற்றுவரும் 11490 தொழுநோயாளிகளுக்கு கோவிட் -19 தடுப்பூசி போடும் பணியை முன்னிலையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், சட்டமன்ற் உறுப்பினர் ரமேஷ் அரவிந்த் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசுச் ராதாகிருஷ்ணன், அரசு உயர் அதிகாரிகள், பகுதிச் செயலாளர் திரு.எஸ்.வி. ரவிச்சந்திரன், கழக நிர்வாகிகள், முன்னணியினர், மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்துகொண்டனர்.
24/7 செயல்படும் “மின்னகம்” என்ற புதிய மின் நுகர்வோர் சேவை மையம் திறப்பு
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று மின் தொடரமைப்பு தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் மின்துறை சார்ந்த புகார்களை தெரிவித்திட, 24/7 செயல்படும் “மின்னகம்” என்ற மின் நுகர்வோர் சேவை மையத்தை திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில்பாலாஜி, உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத மேலாண்மை இயக்குநர் இராஜேஷ் லக்கானி மற்றும் எரிசக்தி துறை முதன்மைச் செயலாளர் மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.