பெண்கள் அரை குறை ஆடைகளை அணிவதே பாலியல் வன்முறைகளுக்கு காரணம்

கடந்த ஜூன் 20 அன்று எச்.பி.ஓவில் ஒளிபரப்பப்பட்ட ஆக்ஸியோஸின் பத்திரிகையாளர் ஜொனாதன் ஸ்வானுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் அளித்த பேட்டியில், ஒரு பெண்ணின் உடைகள் பாலியல் வன்முறையைத் தூண்ட முடியுமா என்ற ஸ்வான் கேள்விக்கு


இது நீங்கள் வாழும் சமுதாயத்தைப் பொறுத்தது. ஒரு சமூகத்தில் மக்கள் அந்த மாதிரியான விஷயங்களைக் காணவில்லை என்றால், அது அவர்களுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். உங்களைப் போன்ற ஒரு சமூகத்தில் நீங்கள் வளர்ந்தால், அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தாது என தெரிவித்தார்.

கே.பி. சர்மா ஒலி: ராமரும் சிதையும் நேபாளத்தில் பிறந்தவர்

காத்மாண்டுவில் நேற்று நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் கே.பி. சர்மா ஒலி பேசுகையில், நம் நாட்டைச் சேர்ந்த முனிவர்கள், யோகிகள் குறித்தும் உலகுக்கு தெரிவிக்க தவறிவிட்டோம்.

நேபாளத்தில் உள்ள அயோத்தியாபுரியில் தான், ராமர் பிறந்தார். சீதாவும் நேபாளத்தின் தேவ்கட் பகுதியில் பிறந்தவர். முனிவர் வால்மீகியும் இங்கு தான் பிறந்தார். ஆனால் இந்த வரலாறு திருத்தப்பட்டுவிட்டது. அதை சரி செய்ய வேண்டிய நேரம் நமக்கு வந்துவிட்டது என தெரிவித்தார்.

“தமிழகமெங்கிலும் இருக்கும் சிறப்பு முகாம்கள் எனப்படும் வதைக்கூடங்களை மூடி, கௌரவமான வாழ்க்கைத்தரத்தையும் உருவாக்க வேண்டும்!”

“தமிழகமெங்கிலும் இருக்கும் சிறப்பு முகாம்கள் எனப்படும் வதைக்கூடங்களை மூடி, ஈழச்சொந்தங்களுக்குப் பாதுகாப்பான நலவாழ்வையும், கௌரவமான வாழ்க்கைத்தரத்தையும் உருவாக்க வேண்டும்!” – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கைஅவர்கள் தலைமையில் வழங்கினார்.

 

K.S. மூர்த்தி அவர்கள் தலைமையில் முன்களப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ரோட்டரி சங்கத்தின் சார்பில் முன்களப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளும், மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களும் வழங்கும் விழா நாமக்கல் மேற்குமாவட்ட கழக செயலாளர் K.S.மூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் சுற்றுலா துறை அமைச்சர் மா.மதிவேந்தன் அவர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். உடன் ஒன்றிய,நகர செயலாளர்கள்,கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இயந்திரங்களின் மூலம் பாதாள சாக்கடை அடைப்புகள் மற்றும் கழிவுகள் அகற்றும் பணி துவக்கம்

சென்னையில் குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் 454 இயந்திரங்களின் மூலம் பாதாள சாக்கடை அடைப்புகள் மற்றும் கழிவுகள் அகற்றும் பணி சைதாப்பேட்டையில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் துவக்கி வைத்தார்.

துரைப்பாக்கத்தில் சித்த கோவிட் -19 சிகிச்சை மையம் திறப்பு

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, துரைப்பாக்கத்தில் ‘இம்ப்காப்ஸ்’சார்பில் அமைத்திருந்த சித்த கோவிட் -19 சிகிச்சை மையம் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் திறந்து வைத்தார்.


இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானா மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற அலுவலகத்தை தொகுதியைச் சேர்ந்த 10 பெண்கள் திறந்து வைப்பு

சென்னை சைதாப்பேட்டையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சட்டமன்ற அலுவலகத்தை தொகுதியைச் சேர்ந்த 10 பெண்கள் திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில். நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, பகுதிச் செயலாளர்கள்‌ துரைராஜ், கிருஷ்ணமூர்த்தி, வட்ட செயலாளர்கள் S.P. கோதண்டம், M. நாகா கழக நிர்வாகிகள், முன்னணியினர், உடன்பிறப்புகள் கலந்துகொண்டனர்.

கோவிட் -19 தடுப்பூசி சான்றிதழில் பிழையா? திருத்திக்கொள்ள வாய்ப்பு

நாடு முழுவதும் கோவிட் -19 தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடப்படுகிறது. மத்திய அரசு நடத்தி வருகிற இந்த தடுப்பூசி திட்டத்தின்கீழ், இதுவரையில் 23 கோடியே 90 லட்சத்து 58 ஆயிரத்து 460 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொள்வோருக்கு ஆன்லைன் வழியாக தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்படுகிறது.

 

0இந்த சான்றிதழில் ஏதேனும் பிழை இருந்தால், அதை ‘கோவின்’ தளத்தில் போய் சரி செய்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச்செயலாளர் விகாஸ் ஷீல் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு பயிர்கடன்களுக்கான காசோலை வழங்கல்

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அம்பாயிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு பயிர்கடன்களுக்கான காசோலையை ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் முன்னிலையில் சுற்றுலா துறை அமைச்சர் மா . மதிவேந்தன் வழங்கினார், இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி மற்றும் ஒன்றிய செயலாளர் பாலு கலந்து கொண்டனர்.

அர்ச்சகர்களுக்கு கோவிட் -19 நிவாரண நிதி வழங்கல்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தொகுதிக்கு உட்பட்ட இந்து சமய அறநிலையத்துறையின் கீழ்வரும் கோயில்களில் பணியாற்றிவரும் மொத்தம் 56 அர்ச்சகர்களுக்கு கோவிட் -19 நிவாரண தொகை ரூ. 4000 மற்றும் 10 கிலோ அரிசி, 15வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் முன்னிலையில் சுற்றுலா துறை அமைச்சர் மா . மதிவேந்தன் வழங்கினார்.