Rahul gandhi: நாட்டில் ஊழல் பள்ளியை நடத்தி வரும் நரேந்திர மோடி..!”

ஊழலை ஒழிக்கப்போவதாக கூறி ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஊழலின் புற்றாகவே கடந்த 10 ஆண்டுகாள ஆட்சியை நடத்தி வந்துள்ளது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஆட்சி ஊழலை ஒழிக்கும் என மேடைக்கு மேடை மோடி முழங்குகி வருகிறார். இந்நிலையில் நாட்டில் ஊழல் பள்ளியை நரேந்திர மோடி நடத்தி வருகிறார் என்று காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அதில் “முழுமையான ஊழல் அறிவியல் பாடத்தின் கீழ், நிதி வர்த்தகம் குறித்து பாஜக தலைவர்களுக்கு பிரதமர் மோடி வகுப்பு எடுக்கிறார். சோதனைகளை நடத்தி எப்படி நன்கொடைகளை வசூலிப்பது? நன்கொடைகளை பெற்ற பிறகு ஒப்பந்தங்களை எப்படி வழங்குவது?. ஊழல்வாதிகளை வாஷிங் மெஷின் மூலம் எப்படி சலவை செய்வது? விசாரணை அமைப்புகளை, மீட்பு முகவர்களாக்கி, சிறையில் தள்ளுதல் மற்றும் ஜாமீன் வழங்குதல் விளையாட்டுகளை எப்படி விளையாடுவது?

உள்ளிட்ட பாடங்களை பிரதமர் மோடி கற்பித்து வருகிறார். ஊழல் பாடம் பாஜக தலைவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. ஊழலின் குகையாக பாஜக மாறியுள்ளது. பாஜகவின் ஊழலுக்கு நாடு விலை கொடுக்கிறது. மோடியின் ஊழல் பள்ளியையும் ஊழல் பாடத்தையும், இந்தியா கூட்டணியின் அரசு மூடிவிடும்” என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.