ஆளுநர் என்பவர் மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம். அப்படி இருக்கையில் ஆளுநரை தபால்காரர் எனக் கூறுவது தமிழக முதலமைச்சருக்கு அழகல்ல” என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் ஆளும் திமுக அரசுக்கும் தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது.
இதுகுறித்த கேள்விக்கு, “மத்திய – மாநில அரசுகளுக்கிடையேயான உறவில் ஆளுநர் என்பவர் தபால்காரர் போன்றவர்தான். தற்போதைய உச்ச நீதிமன்ற தீர்ப்பும் இதைத்தான் கூறியிருக்கிறது. தமிழ் மொழிக்கும், தமிழ்நாடு என்ற பெயருக்கும் எதிராக ஆளுநர் செயல்படுகிறார். தன்னை ஒரு தீவிர பாஜககாரராக ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டிக் கொள்கிறார். பதவிக்காலம் முடிந்த பிறகும் ஆளுநர் தமிழ்நாட்டில் உள்ளார்.” என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், பழனி முருகன் கோவிலில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக மூத்த தலைவர் H .ராஜா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், ஆளுநரை தபால்காரர் என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டது பற்றிப் பேசினார். மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே ஆளுநர் ஒரு தபால்காரர் என முதல்வர் கூறுகிறார். ஆளுநர் என்பவர் மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம். அப்படி இருக்கையில் ஆளுநரை தபால்காரர் எனக் கூறுவது தமிழக முதலமைச்சருக்கு அழகல்ல” என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.