H.ராஜா: சீமான் வீட்டுக்குள் ஏன் போனீங்க… இந்த மாதிரி கொடுமைப்படுத்துறீங்க..!

ஈ.வெ. ராமசாமி நாயக்கரின் பொய் உருவத்தை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்துக் கொண்டிருப்பவர் சீமான். அதனால் அனாவசியமாக சீமானை இந்த மாதிரி கொடுமைப்படுத்துறீங்க.. இது ரொம்ப தப்பு என H. ராஜா தெரிவித்தார். தஞ்சாவூரில் H. ராஜா இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.  அப்போது, சீமான் வீட்டுக்குள் நுழைந்து அங்கு இருவரை கைது செய்த காவல் ஆய்வாளரின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நீங்க நோட்டீஸை சர்வ் செய்வது என்றால் என்ன? நோட்டீஸை வீட்டில் ஒட்டிவிட்டுப் போனால் முடிந்துவிட்டது. ஆக ஒட்டிவிட்டுப் போக வேண்டியதுதானே.. இதன் பின்னர் சீமான் வீட்டுக்குள் ஏன் போனீங்க? ஆகவே இந்த அரசாங்கம்.. ஈ.வெ. ராமசாமி நாயக்கரை சரியான முறையில் சீமான் அவர்கள் விமர்சித்து வருகிறார். இதனால் ஈ.வெ. ராமசாமியின் கைக்கூலிகள் இந்த மாதிரி மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.

சீமான் மீதான புகார் என்பது நீதிமன்றத்தில் இருக்கிறது.. சட்டப்படி நீதிமன்றம் நடக்கட்டும். ஆனால் எல்லோரது கவனத்துக்காகவும் சொல்கிறேன். உச்சநீதிமன்றம், உடலுறவு தொடர்பாக அண்மையில் ஒரு தீர்ப்பு கொடுத்துள்ளது; இருவரும் பரஸ்பரம் ஒப்புதலுடன் உறவு வைத்துக் கொள்வது குற்றம் அல்ல என்பது தீர்ப்பு. அதனால் சட்டம் அதன் கடமையை செய்யட்டும். ஆய்வாளர் எதற்காக இப்படி செயல்பட வேண்டும்? ஆகவே இந்த அரசாங்கம், அவங்களால் தாங்க முடியவில்லை. ஈவெ ராமசாமி நாயக்கரின் பொய் உருவத்தை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்துக் கொண்டிருப்பவர் சீமான். அதனால் அனாவசியமாக சீமானை இந்த மாதிரி கொடுமைப்படுத்துறீங்க.. இது ரொம்ப தப்பு.

தமிழ்நாட்டில் பலாத்கார சம்பவங்கள் அதிகரிக்க காரணம் யார்? ஆட்சிக்கு வந்த உடன் இந்த திராவிடியன் ஸ்டாக் என்ன வேலை செஞ்சீங்க? அனைத்து பள்ளிக் கூடங்களிலும் நீதி போதனை வகுப்புகளை கேன்சல் செய்தீங்க.. அறம் செய்ய விரும்பு என்பதை நீக்கினீர்கள்.. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பதை எடுத்தீங்க.. தீய சக்திகள் ஆட்சிக்கு வந்த காரணத்தால் 1967-ல் இருந்து சமூக நன்னடத்தை கெட்டுப் போய்விட்டது. திராவிடியன் ஸ்டாக்கை தமிழ்நாட்டில் இருந்து அடித்து விரட்டாமல் பலாத்கார வன்முறைகளை நிறுத்த முடியாது என H.ராஜா தெரிவித்தார்.