நான் தமிழ்நாட்டில் தான் உள்ளேன்…! முடிந்து வாருங்கள் என்று சிவசேனா கட்சியினருக்கு குணால் கம்ரா சவால் விடுத்துள்ளார். மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்யும் வகையில் பேசிய நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். ஸ்டாண்ட் – அப் காமெடியனான நடிகர் குணால் கம்ரா, சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.
அதில், சிவ சேனாவை உடைத்து, MLA -க்கள் சிலரை தன் பக்கம் இழுத்து பிறகு பாஜக கூட்டணியில் இணைந்து ஒரு துரோகி ஆதாயம் அடைந்தார் என விமர்சித்து இருந்தார். மேலும் அவர், சிவ சேனா உருவாக பாஜகதான் காரணம். சிவ சேனா இரண்டாக உடையவும் பாஜகதான் காரணம் என்று அந்த விடூயோவில் இருந்தது. இதனால் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் புயல் வீசிக் கொண்டிருக்கிறது.
ஆனால், அவரின் கருத்துக்களால் ஷிண்டே தொண்டர்கள் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்று குணால் காமிராவின் ஸ்டூடியோவை அடித்து உடைத்தனர். போதாக்குறைக்கு சேதமடைந்த ஸ்டுடியோவை மாநகராட்சி அதிகாரிகள் இடித்துத் தள்ளினர். மகாராஷ்டிரா சட்டசபையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. இதனிடையே துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை கேலி செய்ததற்காக, குணால் கம்ரா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவுறுத்தி இருந்தார்.
மேலும் குணால் கம்ராவின் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி குணால் கம்ராவுக்கு தொடர் மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் குணால் கம்ரா மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறியது மட்டுமின்றி கொலை மிரட்டல் விடுத்த சிவசேனா கட்சியினருக்கு நான் தமிழ்நாட்டில் தான் உள்ளேன். முடிந்து வாருங்கள் என்று சவால் விடுத்துள்ளார்.
இப்படியான சூழலில் தான் இன்று மீண்டும் பாஜகவை சீண்டும் வகையில் குணால் கம்ரா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது குணால் கம்ரா நிகழ்ச்சி நடந்த இடத்தை சிவசனோ கட்சியினர் அடித்து சேதப்படுத்தியது தொடர்பான வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். அதன் பின்னணியில் இந்தி மொழியில் Hum Konge Kangaal என்ற பாடலை பாடி பாஜக கூட்டணி ஆட்சியை விமர்சனம் செய்துள்ளார். இது மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இது பாஜக, சிவசேனா மற்றும் தேசிய வாத காங்கிரஸ் கட்சியினரை கொதிப்படைய வைத்துள்ளது.