ஆதித்ய தாக்கரே: யார் துரோகி மற்றும் திருடன் என்பது முழு நாடும், முழு உலகமும் அறிந்ததே..!

யார் துரோகி மற்றும் திருடன் என்பது முழு நாடும், முழு உலகமும் அறிந்ததே என ஆதித்ய தாக்கரே தெரிவித்தார். ஸ்டாண்ட் – அப் காமெடியனான நடிகர் குணால் கம்ரா, சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், சிவ சேனாவை உடைத்து, MLA -க்கள் சிலரை தன் பக்கம் இழுத்து பிறகு பாஜக கூட்டணியில் இணைந்து ஒரு துரோகி ஆதாயம் அடைந்தார் என விமர்சித்து இருந்தார்.

மேலும் அவர், சிவ சேனா உருவாக பாஜகதான் காரணம். சிவ சேனா இரண்டாக உடையவும் பாஜகதான் காரணம் என்று அந்த விடூயோவில் இருந்தது. இந்த வீடியோவை, சிவ சேனா இளைஞரணியினர், குணால் கம்ரா தனது வீடியோவை பதிவு செய்த ஸ்டூடியோவை நேற்று சேதப்படுத்தினர். இதனால் மகாராஷ்டிரா அரசியல் களம் சூடுபித்தது. இந்நிலையில்; மும்பையில் செய்தியாளர்களின் கேள்விக்கு ஆதித்ய தாக்கரே பதிலளித்தார். அப்போது, ” குணால் கம்ராவின் வீடியோ கிளிப்பை பார்த்தேன். ஏக்நாத் ஷிண்டேவின் தொண்டர்கள் எப்போது அவரை ஒரு துரோகி மற்றும் திருடன் என்று முடிவு செய்தார்கள் என்ற கேள்வி எழுகிறது? அவர் யாருடைய பெயரையும் சொல்லவில்லை. ஆனால், ஏக்நாத் ஷிண்டே ஏன் கோபப்படுகிறார்?

யார் துரோகி மற்றும் திருடன் என்பது முழு நாடும், முழு உலகமும் அறிந்ததே. குணால் கம்ரா நம்மைப் பற்றி, பலரைப் பற்றி, மோடி பற்றியும் பலமுறை பேசியுள்ளார். ஆனால் யாரும் இப்படி எதிர்வினைவ ஆற்றவில்லை. நாக்பூரில் நாசவேலை செய்தவர்களிடம் இருந்து அதற்கான இழப்பீடு பெறப்படும் என்று முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறினார். அதேபோல், நேற்று குணால் கம்ராவுக்கு எதிராக நாசவேலை செய்தவர்களிடம் இருந்து இழப்பை வசூலிக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் தனது கண்களைத் திறந்து யார் அவரை குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். அது எதிர்க்கட்சியா அல்லது அவரது நண்பர்களா?

குணால் கம்ரா ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? ஏக்நாத் ஷிண்டே ஒரு துரோகி மற்றும் திருடன் என கூறி இருந்தால், குணால் கம்ரா மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் பெயரைக் குறிப்பிடவில்லை. அப்படி இருக்கும்போது, ஏக்நாத் ஷிண்டே முதலில் தான் ஒரு துரோகி மற்றும் திருடனா என்பது குறித்து பதிலளிக்க வேண்டும்” என ஆதித்ய தாக்கரே தெரிவித்தார்.