அமலாக்கத்துறை அதிரடி: முன்னாள் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக்கிற்கு ‘லுக்அவுட்’ நோட்டீஸ்

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை மாநகர காவல் ஆணையாளராக இருந்த பரம்பீர் சிங், மாநில உள்துறை மந்திரி பதவி வகித்த அனில் தேஷ்முக் ஓட்டல்கள், பார்கள் மூலம் மாதம் ரூ.100 கோடி மாமூல் வசூலித்து தரும்படி காவல்துறையினருக்கு கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டினார். இதனால் அனில் தேஷ்முக் தனது பதவியை ராஜினாமா செய்தார். நிலையில் அனில் தேஷ்முக் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது.

இதன் தொடர்ச்சியாக சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. அனில் தேஷ்முக்கு அமலாக்கத்துறை நேரில் ஆஜராகுமாறு 5 முறை சம்மன் அனுப்பியது ஆனால் அனில் தேஷ்முக் தொடர்ந்து நேரில் ஆஜராவதை தவிர்த்து வருகிறார். இந்நிலையில் அனில் தேஷ்முக் வெளிநாடு தப்பி செல்வதை தடுக்கும் வகையில் அமலாக்கதுறை லுக்அவுட் நோட்டீஸ் விடுத்து அனைத்து விமான நிலையங்களுக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.