வாட்ஸ்அப் வீடியோ காலில் நிர்வாணமாக தோன்றிய பெண்.. தொடர்ந்து 6 நாளில் ரூ.14 லட்சம் இழந்த முதியவர்

முதியவர் ஒருவரிடம் நூதன முறையில் ஆன்லைனில் தொடர்ந்து 6 நாளில் ரூ.14 லட்சம் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த சமுதாயத்தையே உலுக்கி எடுத்து உள்ளது. இன்றைய வேகமான டிஜிட்டல் உலகில், சமூக ஊடகங்கள் நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறியுள்ளது. அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப் பிரபலமான மெசேஜிங் ஆப்பை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை உலகம் முழுவதும் பல்வேறு பயனர்களை கொண்டுள்ளது.

இந்நிலையில், சமீப கலங்களாகவே சமூக ஊடகங்கள் மூலம் விதவிதமான மோசடிகள் அரங்கேறி வருகின்றன. காவல்துறையினரும் இதுபோன்ற தடுக்க இவ்வளவே முயற்சிகள் மேற்கொண்டாலும் சைபர் குற்றவாளிகள் தினுசு தினுசாக யோசித்தது குற்ற செயல்களில் ஈடுபடுவதால் மக்கள் தொடர்ந்து ஏதாவது வகையில் சிக்கி கொள்வது தொடர்ந்து அரங்கேறி வருகின்றது.

மகாராஷ்டிராவில்  சத்திரபதி சாம்பாஜி நகரை சேர்ந்த அந்த முதியவர் கடந்த மார்ச் 23 -ஆம் தேதி காலை குளியலறையில் குளித்துக் கொண்டு இருந்தபோது அவரது மொபைலுக்கு தெரியாத எண்ணில் இருந்து ஒரு வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு வந்தது. அவர் அழைப்பை எடுத்தவுடன், ஒரு இளம் பெண் நிர்வாண நிலையில் அவர் முன் தோன்றினார். அந்த நேரத்தில் அந்த முதியவரும் அரை நிர்வாண நிலையில் இருந்தார். அந்தப் பெண் அந்த வீடியோ அழைப்பைப் பதிவு செய்து வைத்துள்ளார்.

சிறிது நேரம் கழித்து அந்த முதியவருக்கு மற்றொரு அழைப்பு வந்தது, இந்த முறை அழைத்தவரின் பெயர் ஹேமந்த் மல்ஹோத்ரா அந்த முதியவரிடம் அவரது ஆபாச வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி விட்டதாகக் கூறினார். இதன் பிறகு அழைத்த பிரமோத் ரத்தோட் என்ற மற்றொரு நபர், தன்னை ஒரு காவல் அதிகாரி என்று கூறிக் கொண்டு, முதியவருக்கு அடிக்கடி போன் செய்து, சமரசத்திற்கு உடன்படவில்லை என்றால், சிறையில் அடைப்பேன் என்று மிரட்டினார்.

முதியவரை தொடர்ந்து மிரட்டி, கொஞ்சம் கொஞ்சமாக மார்ச் 23 முதல் ஏப்ரல் 28 வரை ரூ.14 லட்சத்து 66 ஆயிரம் பணத்தை இந்த கும்பல் கரைந்துள்ளது. பணத்தை கொடுத்த பிறகும் மிரட்டல் நின்றபாடில்லை. அவர்கள் மேலும் பணம் கேட்கத் தொடங்கினர். இதனால் விரக்தியடைந்த அந்த முதியவர் இறுதியில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த காவல்துறை விசாரணையை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், பாட்டீல், ஹேமந்த் மல்ஹோத்ரா, பிரமோத் ரத்தோட், அரவிந்த் சிங் மற்றும் அடையாள தெரியாத 2 நபர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டதை கண்டறிந்தனர்.

40 பவுன் ஆட்டைய போட்ட பெண் யோகா மாஸ்டர் கைது..!

சென்னை வடபழனி, ஏவிஎம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து சங்கர் வளசரவாக்கத்தில் சொந்தமாக ஐ.டி நிறுவனம் நடத்தி வருகிறார். சங்கர் கடந்த மாதம் 3-ஆம் தேதி பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகைகள் மயமானதை தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார்.

இந்த புகார் குறித்து உரிய விசாரணை நடத்த கே.கே.நகர் காவல் நிலைய குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில், புகார் குறித்து விசாரிக்க, உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், அவரது நண்பர் எண்ணுக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சமாக அனுப்ப கேட்டுக் கொண்டதாகவும், அதன்படி, சங்கர் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், லஞ்சப் பணத்தை பெற்றுக் கொண்டும், உரிய விசாரணை நடத்தாமல் புகார்தாரரை, உதவி ஆய்வாளர் அநாகரிகமாகப் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த உயர் அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.

அதன்படி, வடபழனி காவல் சரக உதவி ஆணையர் நேற்று முன்தினம் விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில், புகாருக்கு உள்ளான உதவி ஆய்வாளர் ராஜேந்திரனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், வடபழனி ஏவிஎம் ஸ்டூடியோ பகுதியை சேர்ந்த யோகா மாஸ்டர் காயத்ரி, கடந்த 2 மாதமாக யோகா கற்றுக் கொடுக்க சங்கர் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். கடந்த மாதம் சங்கர் வீட்டுக்கு வந்தபோது, நகை இருந்த அறை திறந்து கிடந்துள்ளது.

அதைப் பார்த்த காயத்ரி, பீரோவில் இருந்து 40 பவுன் நகைகளை எடுத்துள்ளார். அதில் ஒரு பகுதியை விருகம்பாக்கத்தில் உள்ள பிரபலமான நகைக்கடை ஒன்றில் விற்று ரூ.3 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பில் வைர செயின் வாங்கியது காவல்துறை விசாரணையில் தெரியவர யோகா மாஸ்டர் காயத்ரி கைது செய்தனர்.