வினேஷ் போகத்: மக்களின் ஆசியால் மல்யுத்த களம்..!தேர்தல் களம் இரண்டிலும் வெற்றி பெறுவேன்..!

சமீபத்தில் நடந்த பாரீஸ் ஒலிம்பிக்சில் இறுதிப் போட்டி வரை முன்னேறி அதிக உடல் எடை காரணமாக பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்த வினேஷ் போகத். மல்யுத்த சம்மேளத்தின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சிங்க்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டை கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்திய வீராங்கனை வினேஷ் போகத் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு மல்யுத்த வீரர்களான வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்துவிட்டு முறைப்படி அக்கட்சியில் இணைந்தனர்.

ஹரியாணாவில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 5-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று அக்டோபர் 8-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் வெளிவரவுள்ளது. இந்நிலையில், காங்கிரஸில் இணைந்த வினேஷ் போகத் தேர்தலில் ஜூலானா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தனது தொகுதியில் வினேஷ் போகத் நேற்று முதல் முறையாக பிரசாரத்தை தொடங்கினார். அவருக்கு தொகுதி மக்கள், கட்சியினர் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய போகத், ‘‘மக்களின் ஆசியால் மல்யுத்த களம், தேர்தல் களம் இரண்டிலும் வெற்றி பெறுவேன்’’ என வினேஷ் போகத் உரையாற்றினார்.

வினேஷ் போகத், பஜ்ரங் புனியா மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து காங்கிரஸில் இணைந்தனர்.!

ஹரியாணாவில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 5-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று அக்டோபர் 8-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் வெளிவரவுள்ளது. இந்நிலையில், வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா இருவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை கடந்த புதன்கிழமை டெல்லியில் சந்தித்தனர். இதுதொடர்பான புகைப்படத்தை காங்கிரஸ் கட்சி அதன் அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மல்யுத்த வீரர்களான வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்துவிட்டு முறைப்படி அக்கட்சியில் இணைந்தனர்.இவர்கள் இருவருமா அல்லது யாரவது ஒருவர் தேர்தலில் போட்டியிடுவார்களா என்பது விரைவில் தெரியவரும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பஜ்ரங் புனியா டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றிருந்தார். இதனிடையே வினேஷ் போகத் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பாரிஸ் ஒலிம்பிக்கில் எட்டிப்பிடித்தார். அந்தநிலையில் அவர் போட்டியிட்ட 50 கிலோ எடை பிரிவில் நிர்ணயிக்கப்பட்ட எடையைவிட 100 கிராம் அதிகமாக இருந்ததாக கூறி போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாகவும் அவர் அறிவித்தார்.

பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் இருவரும், பாஜக முன்னாள் எம்.பி.யும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷண் சிங்குக்கு எதிராக கடந்த ஆண்டு நடந்த பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு போராட்டத்தில் அங்கம் வகித்தனர். இந்தப் பின்னயில் வீரர்கள் இருவரும் ஹரியாணா தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதாக ஊடகங்களில் உலாவி வந்தன. அதற்கு ஏதுவாக வினேஷ் போகத் அண்மையில் ஷம்பு எல்லையில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு தனது ஆதரவினைத் தெரிவித்து இருந்தார்.

காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு முன்பாக வினேஷ் போகத் இந்திய ரயில்வேயில் தான் பார்த்து வந்த பணியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து பதிவொன்றை வினேஷ் போகத் வெளியிட்டுள்ளார். அதில் அவர், “எனது வாழ்க்கையின் இந்தக் காலகட்டத்தில் இந்திய ரயில்வே பணியில் இருந்து என்னை விலக்கிக் கொள்வதாக முடிவு செய்துள்ளேன். அதற்கான எனது ராஜினாமா கடிதத்தை சம்மந்தப்பட்ட இந்திய ரயில்வே அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளேன். இந்திய ரயில்வேக்கும், நாட்டுக்கும் சேவை செய்ய இந்த வாய்ப்பினை வழங்கிய இந்திய ரயில்வே குடும்பத்துக்கு நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.” என வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.

 

ராகுல் காந்தியை மல்யுத்த வீரர்களான வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா சந்திப்பு..!

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இந்தியாவின் தலைசிறந்த மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில் 100 கிராம் கூடுதல் எடை இருந்ததாகக் கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதன்பின் மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்தார். பாரிஸிலிருந்து இந்தியா திரும்பியதும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக நின்றார்.

முன்னதாக கடந்த ஆண்டில் இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் தொல்லை புகார் அளித்தவர் வினேஷ் போகத். இவருக்கு உறுதுணையாக பஜ்ரங் பூனியா உள்ளிட்டோர் நின்று போராட்டத்தை நடத்தினர். இருவருமே ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஹரியானா மாநிலத்தில் அடுத்த மாதம் 5-ம் தேதி சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோர் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியை நேற்று நேரில் சந்தித்து பேசியுள்ளனர். இதன்மூலம் ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலில் இம்முறை இருவரும் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

நாடு டெல்லி திரும்பிய வினேஷ் போகத்திற்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு..!

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் மகளிருக்கான 50 கிலோ எடை பிரிவின் இறுதிப்போட்டியில் 100 கிராம் எடை அதிகரித்திருப்பதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்ட காரணத்தால் வினேஷ் போகத்தின் பதக்க கனவு நொறுங்கியது. வினேஷ் போகத், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்ததன் மூலம் குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றுவதை உறுதி செய்திருந்தார். எனினும், தகுதி நீக்கம் காரணமாக அவரால் போட்டியில் தொடர்ந்து பங்கேற்க முடியாத நிலை உருவானது.

தகுதி நீக்கத்தை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தில் வினேஷ் போகத் மேல்முறையீடு செய்தார். அதில், தனது தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், வெள்ளிப் பதக்கத்தை தனக்கு வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். மனுவை விசாரித்த நடுவர் மன்றம், கடந்த 14-ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இறுதிப் போட்டி வரை சென்ற வினேஷ் போகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்பட பலரும் ஆறுதல் தெரிவித்திருந்தனர். விளையாட்டு வீரர்கள் பலரும் வினேஷ் போகத்துக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இன்று டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வினேஷ் போகத்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் எம்பி தீபேந்தர் ஹூடா, சக மல்யுத்த வீரர், வீராங்கனைகளான பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் உள்ளிட்டோர் வினேஷ் போகத்தை விமான நிலையத்திற்கு வந்து வரவேற்றனர்.

பின்னர் அவர் வாகனத்தில் அமர வைக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். மிகவும் சோர்வாக காணப்பட்ட அவருக்கு நண்பர்கள் பலரும் ஆறுதல் வார்த்தைகளை தெரிவித்தபடி உடன் சென்றனர். வரவேற்க வந்த அதிக எண்ணிக்கையிலான ரசிகர்களைப் பார்த்து வினேஷ் போகத் கண் கலங்கினார். கைகளைக் கூப்பி அனைவருக்கும் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்தார். “நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி! துரதிருஷ்டவசமாக நான் வெற்றிபெற முடியவில்லை” என்று செய்தியாளர்களிடம் சுருக்கமாகப் பேசினார்.