தெருக்களில் கரைபுரண்டு ஓடும் நீரில் சந்தோஷமாக மீன் பிடிக்கும் இளசுகள்…!

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட சற்று அதிகமாக பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது இருந்த நிலையில். வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே தமிழகத்துக்கு இயல்பை விட தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வங்க கடலில் சமீபத்தில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்டம், குடமுருட்டி கரையோரம் உள்ள கணபதி நகர் பகுதியில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததுடன் தெருக்களிலும் ஆக்கிரமித்து தேங்கி நின்றன. குடமுருட்டி வெள்ள நீர் காவிரி ஆற்றில் கலக்கும் வேளையில் அங்கிருந்து மீன்கள் புதுவெள்ளத்தை நோக்கி எதிர்த்து வருகின்றன. இந்நிலையில் கணபதி நகர் பகுதியில் தெருக்களில் தேங்கிய வெள்ளத்தில் அப்பகுதி இளம்பெண்கள் தங்களது துப்பட்டாவை பிடித்து மீன்பிடித்து மகிழ்ந்தனர்.

5 மாதங்களுக்கு முன்பு இறந்தவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியதாக குறுஞ்செய்தி

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுக்கா வெங்கடம்பேட்டை ஊராட்சி பிள்ளைபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சீனுவாசன் குடும்பத்தில் கடந்த 5.8 .2021 அன்று அவருடைய பிள்ளைகள் 2-பேருக்கும் மனைவிக்கும் செவிலியர்கள் வீட்டிலேயே வந்து கோவிசில்டு கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார்கள். மீண்டும் இரண்டாவது தடுப்பூசி போடுவதற்கு 84- நாள் கழித்து வருகிறோம் என்று கூறியுள்ளார்கள்.

ஆனால் குடும்பத்தில் உள்ள ஒரு மகள் கல்லூரிக்கும் மற்ற இருவர் கும்பகோணத்திற்கு வேலைக்கு சென்றுள்ளனர் நிலையில் கொரோனா தடுப்பூசி போடாமலேயே தடுப்பூசி போட்டதாக செல்போனுக்கு சர்டிபிகேட் வந்துள்ளது. அந்த சம்பவம் அடங்கும் முன்பே திருச்சி உறையூர் பெஸ்கி நகரை சேர்ந்த செல்வராஜ் கடந்த ஏப்ரல் மாதம் 28-ந் தேதி கொரோனா தடுப்பூசி முதல் தவணை செலுத்திக் கொண்டார். அதன்பிறகு 4 நாட்களில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிக்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செல்வராஜ் சிகிச்சை பலனின்றி கடந்த மே மாதம் 15-ந் தேதி இறந்தார்.

இந்நிலையில் செல்வராஜ் பயன்படுத்திய செல்போன் எண்ணுக்கு நேற்று முன்தினம் குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அந்த குறுஞ்செய்தியில், செல்வராஜூக்கு நேற்று முன்தினம் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. 5 மாதங்களுக்கு முன்பு கொரோனாவால் இறந்தவரின் செல்போனுக்கு 2-வது தவணை தடுப்பூசி செலுத்தியதாக குறுஞ்செய்தி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை: அமைச்சர் கே.என்.நேரு

நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே. என். நேரு அவர்கள் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநகராட்சி விரிவாக்கம் மற்றும் லால்குடி, முசிறி ஆகிய பேரூராட்சிகள் நகராட்சிகளாக தர உயர்வாக்கம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

கொரோனா தடுப்பூசிக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசு பள்ளி மாணவர்கள்

திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியப்பகுதி ஊனையூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சற்குணன் தலைமையில் இருபால் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பொதுமக்களிடையே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.

பெரிய அட்டையில் ஊசி போன்ற வடிவத்தை உருவாக்கி அதை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அப்போது மாணவி ஒருவர் மருத்துவர் போல வேடமணிந்து கலந்து கொண்டார்.

தீ விபத்தில் சேதமடைந்த வீட்டிற்கு நிவாரணம்

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியமிளகு பாறை நாயக்கர் தெருவில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த வீட்டின் உரிமையாளர் ஜீவாசின்னத்துரை என்பவரது குடும்பத்தினரை அமைச்சர் கே.என் . நேரு நேரில் சந்தித்தார். அத்துடன் நிவாரண உதவியாக ரூ.20 ஆயிரத்துடன் அரிசி, மளிகை பொருட்களையும் வழங்கி ஆறுதல் கூறினார்.