தன் உயிரையும் பொருட்படுத்தாமல் சாதுரியமாக பேருந்தை ஓட்டி பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர்..!

கோவை – திருப்பூர் இடையே நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வேலைக்கும், மாணவ, மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். இதற்காக நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி திருப்பூரில் இருந்து கோவை நோக்கி சென்ற ASM என்ற தனியார் பேருந்து புறப்பட்டு சென்றது. அந்த ASM என்ற தனியார் பேருந்தை தொண்டாமுத்தூரை சேர்ந்த ஓட்டுநர் சுரேந்திரன் என்பவர் அன்று ஓட்டி வந்தார். அந்த பேருந்தில் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வந்தனர்.

திருப்பூர் அவிநாசி தேசிய நெடுந்சாலையில் பேருந்து செல்லும் போது, காற்று பலமாக வீசியதால் பேருந்தின் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக உடைந்தது ஓட்டுநர் சுரேந்திரன் மீது கண்ணாடி துண்டுகள் தலை, கை மற்றும் கால் போன்ற பகுதிகளில் பட்டு காயம் ஏற்பட்டது.

இதனை சுதாரித்துக்கொண்ட சுரேந்திரன், பயணிகளின் உயிரை பாதுகாக்க தனக்கு ஏற்பட்ட படுகாயங்களை பொருட்படுத்தாமல் பேருந்தை லாவகமாக இயக்கி சாலையோரம் நிறுத்தி, பயணிகளின் உயிரை காப்பாற்றினார். இந்த சம்பவத்தை கண்ட பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அவரை பாராட்டி, அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்நிலையில் பேருந்தில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் கண்ணாடிகள் நொறுங்கி விழும் காட்சிகளும், ஓட்டுநர் சுரேந்திரன் ரத்தக்காயத்துடன் பேருந்தை இயக்கி, பயணிகளை காப்பாற்றிய காட்சிகளும் பதிவாகி இருந்தது. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து பெண் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் பெண் வழக்கறிஞர்கள் சார்பில் திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ‘மணிப்பூர் மகள்களை பாதுகாப்போம்’ என்ற முழக்கத்துடன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர்கள் முத்துலட்சுமி, தமயந்தி, இந்திராகாந்தி, திங்களவள், சத்தியா, சவுமியா, மோகனாம்பாள், ஆகியோர் தலைமையில், மூத்த பெண் வழக்கறிஞர்கள் முன்னிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூர் கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அமைதி திரும்ப தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும். பெண்கள் மீதான வன்கொடுமைகளை செய்த குற்றவாளிகளை கைது செய்து சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும். உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலை மத்திய, மாநில அரசுகள் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான பெண் வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.

விஜயலலிதாம்பிகை தலைமையில் தொடரும் ஆய்வு

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் உத்தரவின்படி, உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் பல மாதங்களாகவே மாவட்டம் முழுவதும் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். அதன் ஒரு தொடர்ச்சியாக அவினாசிபாளையம், செட்டிப்பாளையம் பகுதிகளில் உள்ள உணவகங்கள், இனிப்பு, கார வகைகள் தயாரிப்பு நிறுவனங்கள், பேக்கரிகள் எனபத்திற்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது.

உணவுப்பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்களில் பணிபுரிபவர்களில் ஒருவர் உணவு பாதுகாப்பு துறையால் நடத்தப்படும் Fostac பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் என்பது கட்டாயம். உணவு தயாரிப்பதற்காக வாங்கப்பட்ட இறைச்சிகள் குளிர்சாதன பெட்டியில் வைத்து பராமரித்தால் சரியான வெப்பநிலையில் பராமரிக்க வேண்டும் போன்ற விதிமுறைகளை கடைகளுக்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவின் பேரில் 3 பேருக்கு குண்டர் சட்டம் பாய்ந்தது ..!

தேனி மாவட்டம் சின்ன மனூரை சேர்ந்த பாபு ராஜ் என்பவர் தனது பெற்றோருடன் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள வாஷிங் டன் நகரில் வசித்து வந்தார். இவர் மீது பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. அதே பகுதியில் விஸ்வநாதன் என்பவருக்கு சொந்தமான டாஸ்மாக் பார் ஒன்று கண்ணப்பன் என்பவரால் நடத்தப்பட்டு வருகிறது.

கண்ணப்பன் நடத்தி வரும் பாரில் பணம் கேட்டு மிரட்டியதாக பாபுராஜ் மீது கடந்த 6 மாதத்திற்கு முன் கண்ணப்பன் பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க அதன்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறை பாபுராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் நிபந்தனை ஜாமீன் பெற்ற பாபுராஜ் சொந்த ஊரான தேனி சின்னமனூர் சென்று வசித்து வந்தார். இந்நிலையில் பெற்றோரை பார்க்க பாபு ராஜ் திருப்பூர் வந்து திரும்பும்போது கண்ணப்பன் அடியாட்கள் பாபு ராஜை அருகில் உள்ள விஸ்வநாதனுக்கு சொந்தமான டாஸ்மாக் பாருக்கு சென்றுள்ளனர் .

அதன்பின்னர் கண்ணப்பன் மற்றும் கண்ணப்பன் அடியாட்கள் சரமாரியாக தாக்கி உள்ளனர் இதன்விளைவாக பாபு ராஜ் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற பாபு ராஜ் நண்பர்கள் மயங்கி கிடந்த பாபுராஜை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் பாபுராஜ் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பெருமாநல்லூர் காவல்துறை கண்ணப்பன் மற்றும் உள்ளிட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மூலனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிளாங்குண்டல் கிராமம் சுள்ளப்பெருக்கி பாளையத்தில் வசித்து வந்த வேலுசாமி, ரவி ஆகிய இருவரும் அடித்து எரித்து கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக திருப்பூர் மாவட்டம் மூலனூர் வெள்ளகோவில் ரோடு தாளக்கரை பிரிவு சேர்ந்த முத்துசாமி என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இதுபோல் திருப்பூர் வீரபாண்டி குளத்துப்பாளையத்தை சேர்ந்த சிவபெருமாள் என்பவரது மகன் ஹரிகணேஷ் கடந்த செப்டம்பர் 12-ந் தேதி பொங்கலூரை அடுத்த பொள்ளிக்காளிபாளையம் என்ற இடத்தில், செல்போனில் பேசியபடி நடந்து சென்றவரிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றார். இந்த நிலையில் ஹரிகணேஷை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். இதையடுத்து இந்த 3 பேரயைும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங்சாய் பரிந்துரையின் கீழ், திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவிட்டார்.

தமிழகத்தில் அதிகாரிகளின் ஆசியுடன் இயங்கும் பார்களில் தொடரும் கொடூரம்… திருப்பூரில் பட்டப்பகலில் பாரில் இளைஞர் அடித்துக்கொலை …

உலகே கொரோனா பெருந்தொற்றால் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது. இதன் விளைவாக தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திரை அரங்குகள், கேளிக்கை விடுதிகள், பார்கள், கிளப்புகள் ஆகியவை மூடப்பட்டு இருக்கின்றன. இது ஒருபுறமிருக்க தமிழக அரசும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் இயங்க அனுமதிக்கவில்லை.

ஆனால் சில சட்ட விரோதிகள்  டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை கையில் வைத்து கொண்டு தமிழக மூலை, முடுக்கெல்லாம் பார்கள் இயங்குவது மட்டுமின்றி இரவு பகல் பாராமல் சரக்கு மக்களுக்கு தங்குதடை  இல்லாமல் வழங்குவதால் பல இளைஞர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சமுதாயமே இன்று சீர்கெட்டு கொண்டுள்ளது. இதன்விளைவாக எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்பு போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கின்றன.

இதன் ஒரு தொடர்ச்சியாக  திருப்பூர் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் பட்ட பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூர் மட்டுமல்லாது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் சின்ன மனூரை சேர்ந்த பாபு ராஜ்  என்பவர் தனது பெற்றோருடன் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள வாஷிங் டன் நகரில் வசித்து வந்தார். இவர் மீது பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

அதே பகுதியில் விஸ்வநாதன் என்பவருக்கு சொந்தமான டாஸ்மாக்( கடை எண்: 1948) பார் ஒன்று கண்ணப்பன் என்பவரால் நடத்தப்பட்டு வருகிறது.  கண்ணப்பன் நடத்தி வரும் பாரில் பணம் கேட்டு மிரட்டியதாக பாபுராஜ் மீது கடந்த 6 மாதத்திற்கு முன் கண்ணப்பன் பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க அதன்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறை பாபுராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் நிபந்தனை ஜாமீன் பெற்ற பாபுராஜ் சொந்த ஊரான தேனி சின்னமனூர் சென்று வசித்து வந்தார். இந்நிலையில் பெற்றோரை பார்க்க பாபு ராஜ் திருப்பூர் வந்துள்ளார். மேலும் பாபுராஜ் பெற்றோரை பார்த்து விட்டு நண்பன் தினேஷூடன் சின்னமனூர் செல்வதற்காக பெருமாநல்லூர் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்த போது அதை மோப்பம் பிடித்த கண்ணப்பன் அடியாட்களை அனுப்பி உன்னை கண்ணப்பன் பேச அழைக்கிறார் எனவே நீ வா தங்கள் பைக்கில் என அழைத்து கொண்டு அருகில் உள்ள விஸ்வநாதனுக்கு சொந்தமான டாஸ்மாக் பாருக்கு சென்றுள்ளனர் .

ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்த பிரச்சனையை மனதில் கொண்டு ஆத்திரம் அடைந்த கண்ணப்பன் மற்றும் கண்ணப்பன் அடியாட்கள் சரமாரியாக கட்டை மற்றும் இரும்பு கம்பியால் பாபு ராஜை தாக்கி உள்ளனர் இதன்விளைவாக பாபு ராஜ் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். மேலும் பாபு ராஜுடன் சென்ற அவரது நண்பன் தினேஷ்க்கும் பலத்த அடி விழுந்துள்ளது. தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற பாபு ராஜ் நண்பர்கள் மயங்கி கிடந்த பாபுராஜை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் பாபுராஜ் பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையில் சம்பவம் நடைபெறும் முன் பார் உரிமையாளர் கண்ணப்பன் பாபு ராஜ் சகோதர் ஷேக்கை  அழைத்து உங்கள் தம்பி பாரில் வந்து தகராறு செய்வதாகவும், அவனை அடித்து கொன்று விடுவேன் நீ வந்து அவன் பிணத்தை அள்ளிக் கொண்டு போ என ஆவேசமாக பேசும் ஆடியோ வைரலாகி நிலையில் பிரேத பரிசோதனை முடிந்த பின்பு பாபுராஜ் உடல் உறவினர்களிடத்தில்  ஒப்படைக்கப்பட்டது.

பெருமாநல்லூர் வாஷிங்டன் நகரில் உடலைக் கொண்டு சென்ற அவரது உறவினர்கள் வாசிங்டன் நகர் பேருந்து நிலையத்தில்  கொலைக்கு உடந்தையாக இருந்த  பார் உரிமையாளர் விஸ்வநாதனை கைது செய்யக்கோரி பேருந்து மறியலில் ஈடுபட்டனர்.  இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டிஎஸ்பி பவுல்ராஜ் மற்றும் ஆய்வாளர் மகாலிங்கம் பார் உரிமையாளர் விஸ்வநாதன் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் மறியல் கைவிடப்பட்டது.

திருப்பூர் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் அரசால் மூடப்பட்டுள்ள டாஸ்மாக் பார்கள் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரின் துணையோடு இயங்குவதன காரணமாக பார் கொலைகள் அதிகரித்துள்ளன. நடவடிக்கை எடுக்க வேண்டிய டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்து வருவது வேதனையாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை படுகின்றனர்.

திருப்பூர் தெற்கு மாநகரம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் திமுக கொடி ஏற்றினார்

திருப்பூர் மத்திய மாவட்டம், தெற்கு மாநகரம்..47 வது வட்ட கழக செயலாளர் வெங்கட்ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கழக நிகழ்வில் மத்திய மாவட்ட கழக செயலாளரும் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் அவர்கள் கலந்து கொண்டு கழக கொடியை ஏற்றி வைத்தார்.

அதனை தொடர்ந்து விஜயாபுரம் அரசு பள்ளியில் நடைபெறும் தடுப்பூசி முகாமை பார்வையிட்டார்..தடுப்பூசி செலுத்தி கொண்ட பொது மக்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை வழங்கினார். உடன் தெற்கு மாநகர செயலாளர் அண்ணன் டி.கே.டி.நாகராஜ், வடக்கு மாநகர செயலாளர் அண்ணன் ந.தினேஷ்குமார் பகுதி கழக செயலாளர் மேங்கோ பழனிச்சாமி..மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் பாரப்பாளையம் தடுப்பூசி முகாமை சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் பார்வை

திருப்பூர் மத்திய மாவட்டம் தெற்கு மாநகரம் 42 வது வட்ட கழகத்தில் உள்ள பாரப்பாளையம் அரசு பள்ளியில் நடைபெறும் மாபெரும் தடுப்பூசி முகாமை மத்திய மாவட்ட கழக செயலாளரும் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் அவர்கள் பார்வையிட்டார்.

மேலும் புதிய குடிநீர் இணைப்புகளை பொது மக்கள் பயன்பாட்டிற்காக  சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் அவர்கள் திறந்து வைத்தார்.

உடன் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.நாகராஜ் வடக்கு மாநகர செயலாளர்  ந.தினேஷ்குமார் பகுதி கழக செயலாளர் மியாமி ஐயப்பன் பொறுப்பு குழு உறுப்பினர் வெங்கடாசலம் வட்ட கழக செயலாளர் S.R. ரமேஷ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்

இன்று பிறந்தநாள் காணும் திருப்பூர் மத்திய மாவட்ட பொறுப்பாளர் மற்றும் திருப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் அவர்களை நேரில் சந்தித்து இந்தியா ஃபஸ்ட் மாத இதழின் தலைமை நிருபர் விக்னேஷ் மற்றும் ஈரோடு நிருபர் இசக்கிமுத்து ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

75 -வது சுதந்திர தின விழாவினை சிறப்பிக்கும் வகையில் மரம் நடும் விழா

இந்தியா சுதந்திரம் அடைந்த 75-வது ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து கொண்டாடும் விதமாக..தேசிய பேரிடர் மீட்பு குழு சார்பாக (National Disaster Responce Force) திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மரம் நடும் விழாவில் செய்தி துறை அமைச்சர் அண்ணன் மு.பெ.சாமிநாதன், சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் மாவட்ட ஆட்சியர் வினீத் ஆகியோர் கலந்து கொண்டனர். உடன் வடக்கு மாநகர செயலாளர் அண்ணன் ந.தினேஷ்குமார் கலந்து கொண்டார்.

திருப்பூரில் “உலக வர்த்தகத்தில் இந்திய ஏற்றுமதி – கண்காட்சி மற்றும் கலந்துரையாடல்” நிகழ்ச்சி

மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் பல்வேறு ஏற்றுமதி குழுமங்கள் இணைந்து ‘வர்த்தகம் மற்றும் வணிக வாரம்’ நிகழ்வினை இந்திய சுதந்திர தின விழாவின் 75-வது வருடத்தை முன்னிட்டு நடத்துகின்றன. உலக அளவில் வர்த்தகம் மற்றும் வணிகத்தில் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக மாற்றுவதை குறிக்கோளாகக் கொண்டு ‘ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னணியில் தமிழ்நாடு’ என்ற மாநாடு நடைபெறுகிறது. இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக துவக்க விழா, கண்காட்சி மற்றும் கலந்துரையாடல் ஆகியவை அமையும்.

இதன் தொடர்ச்சியாக இன்று திருப்பூர் அனைப்புதூர் IKF வளாகத்தில் நடைபெற்ற உலக வர்த்தகத்தில் இந்திய ஏற்றுமதி – கண்காட்சி மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர் – மாண்புமிகு தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் கலந்துகொள்ள திருப்பூர் மத்திய தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் க.செல்வராஜ் MLA அவர்களின் முன்னிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் S.வினித் IAS அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தெற்கு மாநகர திமுக சார்பாக TKT நாகராசன் அவர்கள், வடக்கு மாநகர பொறுப்பாளர் ந‌.தினேஷ்குமார் அவர்களும் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.