கந்து வட்டி கேட்டு பெண்ணை மிரட்டிய இந்து தமிழர் கட்சி நிர்வாகி கைது..!

கந்து வட்டி கேட்டு பெண்ணை மிரட்டிய இந்து தமிழர் கட்சியின் மாவட்ட தலைவர், அமைப்பாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் சுங்கான்கடை அசோக் நகர் பகுதியை சேர்ந்த ராஜாவின் மனைவி அனுஷா மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஒரு புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில், எனது கணவரின் நண்பராக இருந்த, குமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ள நங்கூரான் பிலாவிளையை சேர்ந்த சந்தை ராஜன் என்பவரிடம் கொரோனா கால கட்டத்தில் ரூ.1 லட்சம் கடனாக பெற்று இருந்தேன். 100 -க்கு 8 ரூபாய் வட்டி என்ற அடிப்படையில் மாதம் ரூ.8000 கட்ட வேண்டும் என்ற நிபந்தனையுடன் எழுதப்படாத காசோலை மற்றும் எழுதப்படாத பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு இந்த தொகையை தந்தனர்.

இந்த தொகை்கு 2024-ம் வருடம் வரை மொத்தம் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் வரை கட்டி உள்ளேன். அதன் பின்னரும் என்னிடம் பணம் கேட்டு சந்தைராஜன் மற்றும் அவருடன் இருந்தவர்கள் மிரட்டினர். திடீரென எனது வீட்டின் முன் நின்ற ரூ.7 லட்சம் மதிப்பிலான காரை திருடி சென்றனர். கடந்த 03.01.2025 அன்று என்னை செல்போனில் அழைத்து, மிகவும் அவதூறாக பேசி ஜாதி பெயரை கூறி, சந்தைராஜன் திட்டினார். மேலும் சந்தைராஜன் மற்றும் அவரது டிரைவர் ராஜேஷ், நண்பர்கள் அம்பிளி கண்ணன், சதீஷ் ஆகிய 4 பேர் என்னை மிரட்டினர் என அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகார் மனு தொடர்பாக இரணியல் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கந்து வட்டி தடுப்பு சட்டம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சந்தைராஜன், அவரது டிரைவர் ராஜேஷ், நண்பர்கள் அம்பிளி கண்ணன், சதீஷ் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் சந்தைராஜன், அம்பிளி கண்ணன், சதீஷ் உள்ளிட்ட 3 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமியை மிரட்டி உல்லாசம்..! எனக்கு இருக்கும் நோயை நீயும் எடுத்துக்கோ..!

ஹெராயின் போதைக்கு அடிமையான 17 வயது சிறுமியை மிரட்டி உல்லாசமாக இருந்த 19 இளைஞர்களுக்கு எச்ஐவி தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இப்போதுவரை மருந்து கண்டுபிடிக்காத உலகில் மிகவும் கொடிய தொற்று HIV ஆகும். HIV தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பதை தடுக்க முடியாமல் போனாலும் மருந்துகளை சரியாக எடுத்துக் கொண்டால், நீண்ட நாட்களுக்கு உயிர் வாழ முடியும் மருத்துவ உலகம் கூறுகின்றது. ஆனாலும், HIV -யுடன் வாழ்வது என்பது, மிகப்பெரிய போராட்டம் ஆகும். இப்படிபட்ட சூழ்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில், போதைக்கு அடிமையான சிறுமியை மிரட்டி உல்லாசமாக இருந்த 19 இளைஞர்கள் HIV தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

உத்தரகாண்ட் மாநிலம் நானிடால் மாவட்டத்திலுள்ள ராம் நகர் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் ஹெராயின் பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், சிறுமியுடன் பழகிய இளைஞர்கள் சிலர், போதை பொருள் வேண்டும் என்றால் தன்னுடன் நெருக்கமாக பழக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி இருக்கின்றனர். இப்படி 17 வயது சிறுமியை 19 பேருக்கும் அதிகமான இளைஞர்களால் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார். இந்த இளைஞர்களில் ஒரு சிலருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல், தீராத உடல் சோர்வு என உடல்நலப் பிரச்சனை ஏற்பட்ட இவர்களை மருத்துவமனைகளில் அனுமதித்து உள்ளனர்.

இவர்களின் ரத்த மாதிரியை பரிசோதித்தபோது, இவர்களுக்கு HIV தொற்று பாதிப்பு இருந்தது தெரிய வந்திருக்கிறது. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவர்கள் அனைவரும் அந்த சிறுமியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தொற்று யார் மூலம் பரவியது என்பது குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் ஜார்க்கண்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.