திருநங்கையர்களுக்கான தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சென்னை – தியாகராய நகரில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், திருநங்கையர்களுக்கான தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகளை, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கீதா ஜீவன், பி.கே.சேகர்பாபு மற்றும்  மா. சுப்பிரமணியன் ஆகியோர் வழங்கினார்கள்.

இந்தநிகழ்ச்சியில் சென்னைக்குட்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கண்ணதாசன் அவர்களின் 95-வது பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தல்

கவிஞர் கண்ணதாசன் அவர்களின் 95-வது பிறந்தநாளான இன்று தியாகராய நகரில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பி.கே.சேகர்பாபு, மா. சுப்பிரமணியன், கயல் விழி செல்வராஜ், எஸ். ரகுபதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மயிலை வேலு, கருணாநிதி, பிரபாகர் ராஜா ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

கொரோனா சிறப்பு நிவாரண இரண்டாம் தவணை உதவித்தொகை

கொரோனா சிறப்பு நிவாரண இரண்டாம் தவணை உதவித்தொகை ரூ.2000 மற்றும் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை நேற்று அடையாறு – இந்திரா நகர், காந்தி நகர் ஆகிய பகுதிகளில் தமிழச்சி தங்கப்பாண்டியன் தொடங்கி வைத்தார்.


இந்தநிகழ்ச்சியில், பகுதிச் செயலாளர் துரைகபிலன், வட்டச் செயலாளர்கள், வழக்கறிஞர் சந்தானம், தனசேகரன், கழக நிர்வாகிகள், முன்னணியினர் கலந்துகொண்டனர்.

தொழுநோயாளிகளுக்கு கோவிட் -19 தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் சிகிச்சை பெற்றுவரும் 11490 தொழுநோயாளிகளுக்கு கோவிட் -19 தடுப்பூசி போடும் பணியை முன்னிலையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்வில், சட்டமன்ற் உறுப்பினர் ரமேஷ் அரவிந்த் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசுச் ராதாகிருஷ்ணன், அரசு உயர் அதிகாரிகள், பகுதிச் செயலாளர் திரு.எஸ்.வி. ரவிச்சந்திரன், கழக நிர்வாகிகள், முன்னணியினர், மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்துகொண்டனர்.

 

தமிழச்சி தங்கப்பாண்டியன் மருத்துவர்கள் மற்றும் திமுக மகளிரணியுடன் கலந்துரையாடல்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி நேற்று சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் புதிய ஆக்ஸிஜன் ஜெனரேட்டர் ஒன்றும், குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மையம் ஒன்றும், கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.


இதனை தொடர்ந்து தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்கள் மருத்துவர்கள் மற்றும் திமுக மகளிரணியை சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடினார்.