சுப்பிரமணியன் சுவாமி வழக்கு: ராகுல் காந்தியின் இந்தியக் குடியுரிமையை பறிக்காதது ஏன்..!?

கடந்த 2019-ல் ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என்று சுப்பிரமணியன் சுவாமி மத்திய உள்துறை அமைச்சகத்தில் புகார் கடிதம் அளித்த நிலையில், ராகுல் காந்தியின் இந்தியக் குடியுரிமையை ரத்து செய்வது தொடர்பாக பாஜக மூத்ததலைவர் சுப்பிரமணியன் சுவாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்துள்ளார்.

அந்த கடிதத்தில், பிரிட்டனில் 2003-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பேக்காப்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக ராகுல் காந்தி இருந்துள்ளார். 2005 அக்டோபர் 10 மற்றும் 2006 அக்டோபர் 31 ஆகிய தேதிகளில் அந்த நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வருடாந்திர அறிக்கையில், ராகுல் பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பிறகு அந்நிறுவனம் தொடர்பான விவரங்கள் 2009-ல் வெளியிடப்பட்டபோதும் பிரிட்டன் குடியுரிமை பெற்றவராக ராகுல் காந்தியின் பெயர் மீண்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்திய அரசியலமைப்பு சட்டப்படி அயல்நாட்டின் குடியுரிமை பெற்ற ஒருவர் இந்திய குடிமகனாக கருதப்படமாட்டார். இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார்.

சுப்பிரமணியன் சுவாமி அளித்த புகாரின் பேரில் உள்துறை அமைச்சகம் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அப்போது ராகுல்காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கிடையில், ராகுல்காந்தி இந்திய குடிமகனாக இல்லாத நிலையில் 2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் அமேதியிலும் வயநாட்டிலும் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழக்கிறார். எனவே உச்ச நீதிமன்றம் இதில் தலையிட கோரி இரு தனி நபர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஏதோ ஒரு நிறுவனம் ஒருவர் பிரிட்டன் குடிமகன் என்று கூறினால் அதற்காக அவரை பிரிட்டன் குடியுரிமை பெற்றவராக கருத முடியாது. போதிய ஆதாரங்கள் இல்லாததால் இந்த குற்றச்சாட்டு செல்லாது என்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் ராகுல் காந்தியின் குடியுரிமையை ரத்து செய்வது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி சுப்பிரமணியன் சுவாமி சார்பில் அவரது உதவியாளரும் வழக்கறிஞருமான சத்ய சபர்வால் வழக்கு தொடுத்துள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது.

சுப்பிரமணியன் சுவாமி: நிர்மலா சீதாராமன் மோடியிடம் பணம் கொடுங்கள்” என்று கேட்டிருக்க வேண்டும்..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு நிதி அமைச்சராக இருப்பவர் நிர்மலா சீதாராமன் இவரது பதவிக்காலம் வரும் 2028-ம் ஆண்டுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில் TIMES NOW Summit 2024-ல் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் கலந்துகொண்டார். அப்போது, “என்னிடம் இந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறீர்களா? என்று கேட்டார்கள். எங்கள் கட்சித் தலைவர் இதுபற்றி கேட்டார். ஒரு வாரம் இதுகுறித்து யோசித்துப்பார்த்தேன். பின்பு அவர்களிடம் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். எங்கள் கட்சியின் தேசியத் தலைவர் நட்டா, ’தெற்கில் வேண்டுமானால் போட்டியிடுகிறீர்களா? தமிழ்நாடோ, ஆந்திராவோ, நீங்களே தேர்ந்தெடுங்கள்’ என்று கேட்டார்.

ஆனால் நான் தேர்தலில் போட்டியிடும் அளவு பணம் என்னிடம் இல்லை என சொல்லிவிட்டேன். கட்சியும் பெருந்தன்மையாக அதை ஏற்றுக்கொண்டது” என தெரிவித்து இருந்தார். இந்தச் சூழலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “தேர்தலில் போட்டியிடுவதற்கு என்னிடம் பணம் இல்லை” என தெரிவித்திருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது பற்றி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது எக்ஸ் பக்கத்தில், மோடியிடம் பல்வேறு பதவிகளில் பணியாற்றிய அவர், போட்டியிட “எவ்வளவு பணம் கொடுங்கள்” என்று கேட்டிருக்க வேண்டும். மேலும் அவர் 2004-05 மற்றும் 2022-23க்கான வருமான வரி அறிக்கையை வெளியிட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் உண்மையான காரணத்தை அவள் சொல்ல வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டுள்ளார்.