சோசியல் மீடியாவில் டிரெண்டாகும் அஜித்குமார் மகன் ஆத்விக் புயலாய் பாய்ந்த வீடியோ..!

நடிகர் அஜித்குமார் மகன் ஆத்விக்கின் வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. நடிகர்களுக்கு பெயரும் புகழும் மிகவும் முக்கியம் கொடுப்பார். எனவே, புகழை குறைக்கும் வகையில் எந்த செயலையும் செய்வதற்கு தயங்குவார்கள். நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி, பைக் பந்தயங்களில் அவருக்கு இருந்த ஈடுபாடு காரணமாக நாடு முழுவதும் பைக்குகளில் ரெய்டு செய்து அதன் அனுபவங்களை சேகரித்து இருந்தார்.

ஆனால் சினிமாவில் இவரை நம்பி பலர் இருப்பதால், பைக் பந்தயத்தை முழுமையாக தொடர முடியாமல் போனது. மேலும் பைக்கு பந்தயங்களில் நடக்கும் விபத்துகளால் இவரை நம்பியிருந்த தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டனர். அஜித்குமாரால் சொன்ன நேரத்திற்கு படத்தை முடித்துக்கொடுக்க முடியவில்லை என்ற புள்ளி அஜித்தை கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.

https://x.com/sureshthalaras1/status/1884406686624227698

மேலும் அஜித்குமாருக்கு ஆரம்ப காலத்திலிருந்தே கார் பந்தயம் மீது ஆர்வம் இருந்தாலும், அதில் ஈடுபட பொருத்தமான நேரம் வரவில்லை. அஜித்குமாரின் கார் பந்தயம் மீது ஆர்வம் தொடர்ந்துகொண்டே செல்ல கார் பந்தயங்களில் திரும்ப தீவிரமான பயிற்சி, விடாமுயற்சி என தனது பங்கேற்பை தீவிரப்படுத்த தொடங்கினார். அதன் விளைவு சர்வதேச கார் பந்தயத்தில் அஜித்தின் அணி 3-வது இடத்தை பிடித்து வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வெற்றியை அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். அஜித்தின் வெற்றியை ஊக்குவிக்கும் விதமாக அவருக்கு பத்மபூஷன் விருதை மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

இந்நிலையில், அஜித்குமாரின் மகன் ஆத்விக், அவரது பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டியில் முதலிடம் பிடித்திருக்கிறார். ஓட்டப்பந்தய போட்டியில் சக மாணவர்களை வீழ்த்தி ஆத்விக் முதலிடம் பிடித்திருக்கும் வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக ஷேராகி வருகிறது.

தாவூத் இப்ராஹிம் வழியில் லாரன்ஸ் பிஷ்னோய்..! சமூக வலைத்தளங்கள் மூலம் ஆட்கள் சேர்ப்பு..!

தேசிய புலனாய்வு முகமை உபா சட்டத்தின் கீழ் லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் கோல்டி பிரார் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது மேலும் NIA லாரன்ஸ் பிஷ்னோய் குழுவை தாவூத் இப்ராஹிமின் டி-கம்பெனி உடன் NIA ஒப்பிட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு லாரன்ஸ் பிஷ்னோய் குழு பொறுப்பேற்றது. அவரது குழு இந்தியாவில் 11 மாநிலங்களில் சுமார் 700 துப்பாக்கி பயிற்சி பெற்ற ஷூட்டர்களை கொண்டு இயங்குவதாக NIA தெரிவித்துள்ளது. சிறிய அளவில் தொடங்கி அவரது குழு மிகப்பெரிய அளவில் விரிவடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அதன் மூலம் வட இந்தியாவில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார். அவரது குழுவை சத்விந்தர் சிங் என்கிற கோல்டி பிரார் இயக்கி வருகிறார். அவர் கனடா மற்றும் இந்திய அளவில் தேடப்படும் குற்றவாளி. பிஷ்னோய் குழுவில் உள்ள 700 பேரில் 300 பேர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

சமூக வலைத்தளங்கள் மூலம் தங்கள் குழுவுக்கு ஆட்களை சேர்க்கும் முயற்சியை அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள் என NIA குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது. மிரட்டி பணம் பறிப்பது அவர்களது குழுவின் பணியாக உள்ளது. அப்படி பெறப்படும் கோடிக்கணக்கான பணத்தை ஹவாலா மூலம் மாற்றியுள்ளனர். பஞ்சாப், மகாராஷ்டிரா, ஹரியானா, ராஜஸ்தான், டெல்லி, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குடிபோதையில் பெண்ணை பைக்கில் கட்டி இழுத்துச் சென்ற ஆசாமி..!

ராஜஸ்தான் மாநிலத்தின் நாகவுர் மாவட்டம் நரசிங்கபுரா கிராமத்தை சேர்ந்த பிரேம் ராம் மெக்வால். குடிபோதைக்கு அடிமையான இவர், தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் போதையில் இருந்த பிரேம் ராம் மெக்வால் தனது மனைவியை தாக்கியுள்ளார். அதன் பின்னர் அவரது கால்களை பைக்கில் கட்டி கரடுமுரடான மண் சாலையில் இழுத்துச் சென்றுள்ளார்.

இது தொடர்பான வீடியோதற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 40 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில், அப்பெண் வலியால் அலறுவது தெரிகிறது. எனினும் கிராமத்தைச் சேர்ந்த எவரும் தங்கள் வீட்டை விட்டுவெளியே வரவில்லை. சம்பவத்தின்போது மற்றொரு பெண், வீடியோ எடுத்த ஆண் உள்ளிட்ட 3 பேர் அங்கு இருந்ததாக நம்பப்படும் நிலையில் அவர்களும் இதனை தடுக்கவில்லை. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், பிரேம் ராம் மெக்வாலை கைது செய்துள்ளனர்.

சமூக வலைத்தளத்தில் ஏற்பட்ட மோதலில் விரோதியை சிக்கவைக்க போட்ட வலை..! விசாரைணையில் தானே மாட்டிய கொடூரம்…!

தஞ்சாவூர் மாவட்டம் தம்பிக்கோட்டை பகுதியை சேர்ந்த இளவரசன் என்பவர் பெயரில் கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை குண்டு வைத்து தகர்க்கப்போவதாகவும், காவல் கண்காணிப்பாளரை அவரது அலுவலகத்தின் உள்ளேயே புகுந்து சுட்டுவிடுவதாகவும் கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு கடிதம் ஒன்று வந்தது.

இந்த கடிதலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி காவல்துறையினர் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு சென்று இளவரசன் என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் தான் இதுபோன்ற கடிதம் ஏதும் அனுப்பவில்லை என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து விசாரணை செய்ததில் அதே கிராமத்தை சேர்ந்த கோடீஸ்வரன் என்பவரை இளவரசன் என்பவர் சமூக வலைத்தளத்தில் தரக்குறைவாக பதிவு செய்ததாகவும், அதனால் ஏற்பட்ட முன்விரோதத்தால் அவரை காவல்துறையில் சிக்க வைக்க இளவரசன் பெயரில் போலியான கடிதத்தை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கோடீஸ்வரன் அனுப்பியது தெரிய வந்துள்ளது. இதையடுத்து கோடீஸ்வரனை காவல்துறையினர் கைது செய்தனர்.

நெருக்கமாக இருந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என மிரட்டி நகை, பணம் பறிப்பு

தியாகராயநகரில் உள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் 23 வயது பெண் சென்னை சூளைமேட்டில் வசித்து வருகிறார். அவருடன் பணியாற்றும் பட்டாபிராமை சேர்ந்த ஜீவரத்தினம் என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில், தன்னிடம் நெருக்கமாக இருந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி, ரூ.6 லட்சத்து 30 ஆயிரம் பணம், 22 பவுன் நகையை ஜீவரத்தினம் பறித்துள்ளார். தொடர்ந்து அந்த பெண்ணை மிரட்டி வருவதால் சூளைமேடு காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்து இருந்தார்.

மேலும் அந்த புகாரில் ஜீவரத்தினத்தின் மனைவிக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்திருந்தார். அதன்பேரில் சூளைமேடு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஜீவரத்தினம் மற்றும் அவரது மனைவி ஆகியோரை காவல்துறை கைது செய்தனர்.