india vs Bangladesh: ஷேன் வார்னே சாதனையை சமன் செய்த ரவிச்சந்திரன் அஸ்வின்

சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என அஸ்வின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷான்டோ பந்து வீசியது.

முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 56 , கேப்டன் ரோகித் சர்மா 6, சுப்மன் கில் 0 , விராட் கோலி 6, ரிஷப் பந்த் 36, கேஎல் ராகுல் 16, என 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இக்கட்டான அந்த சூழலில் ரவிச்சந்திரன் அஸ்வின் 113 ரன்கள் மற்றும் ரவீந்திர ஜடேஜா 86 ரன்கள் என 199 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். முதல் இன்னிங்ஸில் 376 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் ஆனது.

தொடர்ந்து வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது. இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பும்ரா 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஆகாஷ் தீப், சிராஜ் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.

இதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை 227 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா தொடங்கியது. தொடக்கம் முதலே அதிரடியை தொடங்கிய இந்திய அணி யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 , கேப்டன் ரோகித் சர்மா 5, விராட் கோலி 17 என ஆட்டமிழந்தனர். ஆனால் ஷுப்மன் கில் மற்றும் ரிஷப் பந்த் இணைந்து 167 ரன்கள் இணைந்து எடுத்திருந்தனர். சுப்மன் கில் 119 மற்றும் ரிஷப் பந்த் 109 ரன்கள் அடித்து அசத்தினர்.

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்திருந்த போது இந்திய அணி டிக்ளேர் செய்தது. 515 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை வங்கதேச அணி விரட்டிய நிலையில் மூன்றாம் நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் நான்காவது நாள் ஆட்டத்தின் முதல் செஷன் முடிவதற்குள் எஞ்சியிருந்த 6 விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்த இன்னிங்ஸில் வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 127 பந்துகளில் 82 ரன்கள் எடுத்திருந்தார். ஜாகிர் 33, ஷத்மான் இஸ்லாம் 35 மற்றும் ஷகிப் 25 ரன்கள் எடுத்திருந்தனர். 62.1 ஓவர்களில் 234 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் வங்கதேசம் இழந்தது. இதன் மூலம் 280 ரன்களில் இந்தியா வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். ஜடேஜா 3 மற்றும் பும்ரா 1 விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்ட நாயகன் விருதை வென்றார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் 5+ விக்கெட்டுகளை அஸ்வின் 37-வது முறையாகும். இதன் மூலம் ஷேன் வார்னேவின் சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் சமன் செய்தார்.

தேசிய அளவில் வாரிசு அரசியலை விமர்ச்சிக்கும் பாஜக..! ஹரியானாவில் வாரிசுகளுக்கு சீட்..!

மாட்டிறைச்சி, இந்தி மொழி, கலாச்சார காவலர்கள் என பல சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றது ஹரியானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 1-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று அக்டோபர் 4-ஆம் தேதி எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாஜக 67 வேட்பாளர்களின் பெயர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டது. இந்த முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் முன்னாள் எம்எல்ஏ, எம்பிக்களின் வாரிசுகளுக்கு சீட் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

இருப்பினும் சிலருக்கு அதிருப்தி ஏற்பட்டது. இந்த அதிருப்தி காரணமாக, ஹரியானா பாஜக மூத்த தலைவரான ஷம்ஷேர் கில், கட்சி உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகினார். அதாவது உக்லானா சட்டமன்றத் தொகுதியை யாருக்கு ஒதுக்குவது என்று பஞ்சாயத்து வெடித்தது. ஷம்ஷேர் கில் ஒருவரின் பெயரை குறிப்பிட கட்சி தலைமை அதனை ஏற்க மறுத்து வேறு ஒருவருக்கு சீட்டை ஒதுக்கியது. இதற்கு ஷம்ஷேர் கில் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

“உக்லானா தொகுதி தவறாக ஒதுக்கப்பட்ட இருப்பதன் மூலம் கட்சிக்கு மட்டுமின்றி.. ஒட்டுமொத்த ஹரியானாவுக்குமே பாதிப்பை ஏற்படுத்தும். பாஜக இனி அடல் பிஹாரி வாஜ்பாயின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட கட்சியாக இருக்கப்போவதில்லை” என்று கூறிவிட்டு, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்துவிட்டார்.

இதனை தொடர்ந்து ரத்தியா தொகுதியின் பாஜக எம்எல்ஏவான லட்சுமண நாபா, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்திருக்கிறார். இந்த தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு.. சிர்சா நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் எம்பி, சுனிதா துக்கலை வேட்பாளராக கட்சி அறிவித்தது. எனவேதான் நாபா கட்சியிலிருந்து விலகியுள்ளார்.

ஏற்கெனவே, ஹரியானா பாஜக மீது வாரிசு அரசியல் புகார் இருக்கிறது. அதாவது அடம்பூர், சமல்கா, அட்டேலி, தோஷம், சார்க்கி தாத்ரி ஆகிய தொகுதிகளில், முன்னாள் எம்எல்ஏ, எம்பிக்களின் மகன்/மகள்களுக்கு கட்சி சீட் ஒதுக்கியுள்ளது. தேசிய அளவில் வாரிசு அரசியலை விமர்சித்து வந்த பாஜக, ஹரியானாவில் வாரிசுகளுக்கு சீட் கொடுத்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து எம்எல்ஏ கட்சியிலிருந்து விலகியிருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது.

Shamsher Gill : பாஜக இனி வாஜ்பாயின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட கட்சியாக இருக்கப்போவதில்லை..!