சீமான் ஆவேசம்: அண்ணன் என்ன, தம்பி என்ன..!? கொண்ட கொள்கை தான் முக்கியம்..!

கடவுளே ஆனாலும் கொள்கைக்கு எதிராக வந்தால் எதிரிதான். இதில் அண்ணன், தம்பி என்று எதுவும் இல்லை. ரத்த உறவை விட லட்சிய உறவுதான் மேலானது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, “பாலகன் பாலச்சந்திரன் நெஞ்சில் ஐந்து குண்டுகளைத் தாங்கி மரணித்துக் கிடந்தபோது, பதறித்துடிப்பது தமிழ்த்தேசியம். அதேநேரம், சிறிதும் பதற்றம் இல்லாமல், பதவியேற்கும் திராவிடம். இரண்டும் ஒன்றா? திராவிடம் பெண்ணிய உரிமையைப் பேசும். ஆனால் தமிழ்த் தேசியம், பெண்ணிய உரிமையைக் கொடுக்கும், நிறைவேற்றும் . எனவே, இது இரண்டும் ஒன்று இல்லை. அப்படியிருக்கும்போது, எப்படி விஜய் இரண்டையும் தன்னுடைய கண் என்று கூறுவார்.

அதெப்படி சமம் ஆகும்? அதேபோல், இருமொழிக் கொள்கை என்கிறார். அடுத்தவர்கள் மொழி எப்படி எனக்கு கொள்கை மொழியாக இருக்க முடியும்? ஆயிரக்கணக்கான பேரை அம்மா என்று அழைக்கலாம். ஆனால், பெற்றவள் ஒருத்திதான். அதனால் எனக்கு கொள்கை மொழி என்னுடைய தாய்மொழி. தெலுங்கு, கன்னடா, பிஹாரி என அவரவருக்கு அவர்களுடைய தாய்மொழிதான் கொள்கை மொழியாக இருக்க முடியும். விரும்பி நாங்கள் எந்த மொழியை வேண்டும் என்றாலும் கற்போம். உலக மொழிகளுக்கு எல்லாம் நாங்கள் பற்றாளர்கள். ஆனால், எங்கள் மொழிக்கு நாங்கள் உயிரானவர்கள்.

தமிழ்ப் பயிற்றுமொழி. ஆங்கிலம் கட்டாயப் பாடமொழி. இந்தி உட்பட உலகின் அனைத்து மொழிகளும் எங்களுடைய விருப்ப மொழி. விரும்பினால் கற்போம். மும்மொழிக் கொள்கை என்பது மோசடி கொள்கை. இருமொழிக் கொள்கை என்பது ஏமாற்றுக் கொள்கை. தமிழே எங்கள் மொழி என்பது தமிழ்த் தேசிய கொள்கை. திராவிடம் என்றால் என்ன? தமிழ்த்தேசியம் என்றால் என்ன? தவெகவைச் சேர்ந்த யார் இதற்கு விளக்கம் கூறுவார்கள்?

மதச்சார்பற்ற சமூக நீதி எப்படி? பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு, EWS-க்கு 10 விழுக்காடு இதை ஏற்றுக்கொள்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? அருந்ததியருக்கு 3 விழுக்காடு உள் இடஒதுக்கீடு, இதை ஏற்றுக்கொள்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? எனவே, சமூக நீதி என்பதெல்லாம் சும்மா பேச்சு. திமுக கூடத்தான் வெகு நாட்களாக சமூகநீதி பேசுகிறது. அது ஜமுக்காள நீதி கூட கிடையாது. எங்கே இருக்கிறது நீதி? பெண்ணியம் உரிமை பேசும் திமுக அதை கொடுத்திருக்கிறதா?

தமிழக அமைச்சரவையில் சரிபாதி விழுக்காடு கொடுக்கப்பட்டிருக்கிறதா? ஆணும் பெண்ணும் சமம் என்பதுதான் தமிழ்த்தேசியக் கோட்பாடு. பெண் விடுதலை இல்லையே, மண் விடுதலை இல்லை. இதுதான் தமிழ்த்தேசியம். மதுகடைகளை மூடச் சொல்வது தமிழ்த்தேசியம். தெருவுக்கு இரண்டு மதுகடைகளைத் திறப்பது திராவிடம். இரண்டும் ஒன்று என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்?

தம்பி என்ற உறவு வேறு. கொள்கையில் முரண் வேறு. என்னைப் பெற்ற தாய் தந்தையராகவே இருந்தாலும், எங்களுடைய கொள்கைக்கு எதிராக இருந்தால், எதிரி எதிரிதான். நீ கடவுளே ஆனாலும் கொள்கைக்கு எதிராக வந்தால் எதிரிதான். இதில் அண்ணன், தம்பி என்று எதுவும் இல்லை. ரத்த உறவை விட லட்சிய உறவுதான் மேலானது. எனவே, அண்ணன், தம்பி என்பது வேறு. கொள்கை என்று வந்துவிட்டால் பகைதான்” என சீமான் தெரிவித்தார்.

சீமானால் கடந்த 15 ஆண்டுகளில் எண்ணற்ற இழப்புகள்..! ஒரு பயனுமில்லை..!

கடந்த 15 ஆண்டுகளில்எண்ணற்ற இழப்புகளை சந்தித்து சீமான் சரியான முடிவுகளை எடுத்து முன்னோக்கி கொண்டு செல்வார் என்ற நம்பிக்கை அமைதிகாத்து, பொறுமையுடன் பின்தொடர்ந்தோம் என கட்சியில் இருந்து விலகிய முன்னாள் நிர்வாகிகள் குற்றச்சாட்டியது நாம் தமிழர் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறிய முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் செ.வெற்றிக்குமரன், நிர்வாகிகள் புகழேந்தி மாறன், சுப தனசேகரன் உள்ளிட்டோர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, நாம் தமிழர் கட்சியை, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சரியான முடிவுகளை எடுத்து முன்னோக்கி கொண்டு செல்வார் என்ற நம்பிக்கையில் அவருடன் பயணித்தோம்.

பல நேரங்களில் உடன்படாடு இல்லாவிட்டாலும் அமைதிகாத்து, பொறுமையுடன் பின்தொடர்ந்தோம். இதனால் எண்ணற்ற இழப்புகளை கடந்த 15 ஆண்டுகளில் சந்தித்திருக்கிறோம். கடந்த 2009-ல் தொடங்கப்பட்ட இயக்கம் தற்போது தான் அங்கீகாரம் பெற்ற கட்சியாக மாறியிருக்கிறது.

இதுவே நாம் தமிழர் கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவு. நாம் தமிழர் கட்சியின் அரசியல் கோட்பாடு இந்த மண்ணில் நிலை பெற்றுவிட்டது. ஆனால் இதை அடுத்த கட்டத்துக்கு முன்னேற்றி கொண்டு செல்வதற்கு இனி சீமானால் முடியாது. அந்த திறனும் பார்வையும் அவருக்கு இல்லை.

எனவே ‘தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம்’ என்ற பெயரில் புதிய அரசியல் அமைப்பை தமிழர் நலன் சார்ந்து உருவாக்கி இருக்கிறோம். முதல்கட்டமாக திருச்சியில் வரும் 27-ஆம் தேதி இலங்கை போரில் உயிர்நீத்த தமிழர்களுக்காக மாவீரர் நாள் நிகழ்ச்சியை நடத்துகிறோம்.

அதைத்தொடர்ந்து கலந்தாய்வு கூட்டம் நடத்தி எங்களது அரசியல் பயணம் தொடங்கும். நாம் தமிழர் கட்சியின் கொள்கை, கோட்பாடு எங்களால் உருவாக்கப்பட்டது. அதே கோட்பாட்டை ஜனநாயக முறையில் சரியாக எடுத்து செல்வதே இந்த அமைப்பின் நோக்கம் என அவர்கள் தெரிவித்தனர்.

நாம் தமிழர் கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல சீமானால் முடியாது..!

நாம் தமிழர் கட்சியை முன்னேற்றி அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானால் முடியாது என கட்சியில் இருந்து விலகிய முன்னாள் நிர்வாகிகள் குற்றச்சாட்டியது நாம் தமிழர் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறிய முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் செ.வெற்றிக்குமரன், நிர்வாகிகள் புகழேந்தி மாறன், சுப தனசேகரன் உள்ளிட்டோர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, நாம் தமிழர் கட்சியை, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சரியான முடிவுகளை எடுத்து முன்னோக்கி கொண்டு செல்வார் என்ற நம்பிக்கையில் அவருடன் பயணித்தோம்.

பல நேரங்களில் உடன்படாடு இல்லாவிட்டாலும் அமைதிகாத்து, பொறுமையுடன் பின்தொடர்ந்தோம். இதனால் எண்ணற்ற இழப்புகளை கடந்த 15 ஆண்டுகளில் சந்தித்திருக்கிறோம். கடந்த 2009-ல் தொடங்கப்பட்ட இயக்கம் தற்போது தான் அங்கீகாரம் பெற்ற கட்சியாக மாறியிருக்கிறது.

இதுவே நாம் தமிழர் கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவு. நாம் தமிழர் கட்சியின் அரசியல் கோட்பாடு இந்த மண்ணில் நிலை பெற்றுவிட்டது. ஆனால் இதை அடுத்த கட்டத்துக்கு முன்னேற்றி கொண்டு செல்வதற்கு இனி சீமானால் முடியாது. அந்த திறனும் பார்வையும் அவருக்கு இல்லை.

எனவே ‘தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம்’ என்ற பெயரில் புதிய அரசியல் அமைப்பை தமிழர் நலன் சார்ந்து உருவாக்கி இருக்கிறோம். முதல்கட்டமாக திருச்சியில் வரும் 27-ஆம் தேதி இலங்கை போரில் உயிர்நீத்த தமிழர்களுக்காக மாவீரர் நாள் நிகழ்ச்சியை நடத்துகிறோம்.

அதைத்தொடர்ந்து கலந்தாய்வு கூட்டம் நடத்தி எங்களது அரசியல் பயணம் தொடங்கும். நாம் தமிழர் கட்சியின் கொள்கை, கோட்பாடு எங்களால் உருவாக்கப்பட்டது. அதே கோட்பாட்டை ஜனநாயக முறையில் சரியாக எடுத்து செல்வதே இந்த அமைப்பின் நோக்கம் என அவர்கள் தெரிவித்தனர்.

இரா. முத்தரசன்: முதல்ல சீமான் ஆட்சிக்கு வரட்டும்..! மத்ததை அப்புறம் பாத்துக்கலாம்..!

ஆட்சிக்கு வந்தால் தமிழ்தாய் வாழ்த்தை மாற்றுவேன் என சீமான் கூறுகிறார். அதை சீமான் ஆட்சிக்கு வந்த பின் பார்த்து கொள்ளலாம் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா ஆசிரியர் பயிலரங்க கூட்டம் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு இரா. முத்தரசன் பதிலளித்தார். அப்போது, 1925 -ஆம் ஆண்டு டிசம்பர் 26 -ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது. கட்சி தொடங்கப்பட்டு நூறாண்டுகள் ஆன நிலையில் நூற்றாண்டு விழாவை கொண்டாட முடிவெடுத்துள்ளோம்.

அதன் ஒரு பகுதியாக திருச்சியில் பயிலரங்கம் ஏற்பாடு செய்துள்ளோம். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு குறித்து புத்தகம் வெளியிடப்படுகிறது. கட்சியின் வரலாறு குறித்து மூத்த தலைவர்கள் எடுத்துரைப்பார்கள்.

நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் ஆண்டு முழுவதும் கருத்தரங்குகள், பொதுக்கூட்டங்கள், கலை நிகழ்சிகள், விளையாட்டு போட்டிகள் போன்ற பல்வேறு நிகழ்வுகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற இருக்கிறது. கட்சியின் வரலாறுகள் முழுவதும் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளியிடப்பட உள்ளன என இரா. முத்தரசன் தெரிவித்தார்.

மேலும் இரா. முத்தரசன் பேசுகையில், ஆட்சிக்கு வந்தால் தமிழ்தாய் வாழ்த்தை மாற்றுவேன் என சீமான் கூறுகிறார். அதை சீமான் ஆட்சிக்கு வந்த பின் பார்த்து கொள்ளலாம். தற்போது தமிழ் தாயை மதிக்க வேண்டுமா ? வேண்டாமா ? தமிழ் தாய் வாழ்த்தை அவமதிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா ? வேண்டாமா ? இது தான் தற்போதைய பிரச்சனை, இதற்கு தான் சீமான் பதில் கூற வேண்டும் என இரா. முத்தரசன் தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின் கர்ஜனை: திராவிடத்தை நீக்குங்க பார்ப்போம்..!

“தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடத்தை நீக்க சிலர் கிளம்பியுள்ளனர், தி.மு.க-வின் கடைசி தொண்டன், தமிழன் இருக்கும் வரை தொட்டுக் கூட பார்க்க முடியாது.” என சீமானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கர்ஜித்து உள்ளார்.

சென்னையில் உள்ள டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி துவங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதில், “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரியை விட்டு பாடப்பட்டது. இதேபோல், நிகழ்ச்சியின் இறுதியில் பாடப்பட்ட தேசிய கீத பாடலில் திராவிடம் சொல் தவிர்க்கப்பட்டது. இதனால், பெரும் சர்ச்சை கிளம்பியது.

இந்த விவகாரத்திற்கும் தமிழக ஆளுநருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது. இதனிடையே, நடந்த தவறுக்கு மன்னிப்பு கோருவதாக டிடி தமிழ் தொலைக்காட்சி கூறியது. இருப்பினும், தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான சர்ச்சை இன்னும் முடிந்தபாடில்லை.

இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை தொடர்பாக ஈரோட்டில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ‘திராவிடல் நல் திருநாடு’ என்கிற வார்த்தையை விட்டுவிட்டார்கள் அல்லது தூக்கி விட்டார்கள் என்பது தானே உங்களுக்கு பிரச்சினை. அதே தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ஆரியங்கோல் வழக்கொழிந்து என்ற வார்த்தையை தூக்கியது யார்?. கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட வார்த்தைகள் அடங்கிய அந்த வரியை தூக்கியது யார்?. திராவிடன் என்ற ஒரு சொல்லை எடுத்ததற்கே இப்படி குதிக்கிறீர்கள்.

50 ஆயிரம் ஆண்டுகளுன் முன் தோன்றிய என் தாய்மொழி தமிழை கொன்று சமாதி கட்டி வைத்திருக்கிறீர்கள். கொத்துக்கொத்தாக, லட்சக்கணக்கான என் இன மக்கள் சாவும் போது கொதித்து வராத கோவம், ஆந்திர காடுகளில் எங்களை சுட்டுக்கொல்லும் போது வராத கோபம், அன்னை தமிழ் மொழி செத்துவிழும் போது வராத கோபம், இப்போது ஏன் வருகிறது ?இதே ஆளுநர் 100 ரூபாய் வெளியிடும் போது கட்டிப்பிடித்து அணைத்துக் கொண்டீர்கள்.

நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து என்ற பாடலே இருக்காது. அப்போது என்ன செய்வீர்கள். இது எங்கள் நாடு. எங்கே இருக்கிறது திராவிடம்?. எங்கிருந்து வந்தது திராவிடம் என்ற சொல்?. திராவிடம் என்றால் என்ன? கேரளாவில் பஞ்ச திராவிடர் மாநாடு நடந்ததா இல்லையா?. அதில் ஏன் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் பங்கேற்க வேண்டும். அவர் ஏன் ராகுல் டிராவிட் என அழைக்கப்படுகிறார். நான் எப்படி திராவிடர் ஆனேன். திராவிடம் என்பது சமஸ்கிருதம் சொல். மாடல் என்பது ஆங்கில சொல்.” என சீமான் பேசியிருந்தார்.

இந்நிலையில், சீமானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடத்தை நீக்க சிலர் கிளம்பியுள்ளனர். தி.மு.க-வின் கடைசி தொண்டன், தமிழன் இருக்கும் வரை தொட்டுக் கூட பார்க்க முடியாது.

தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க பல்வேறு வகைகளில் முயற்சி செய்கிறார்கள். நேரடியாக இந்தியை திணிக்க இயலாத காரணத்தால் தமிழ்த்தாய் வாழ்த்தில் சில சொற்களை நீக்குகின்றனர். தமிழகத்தில் இந்தியை திணிக்கும் முயற்சிக்கு பலர் துணை போகின்றனர்.” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழ்த்தாய் வாழ்த்தை நீக்கி விடுவோம் என சீமான் பேசியது வேதனை அளிக்கிறது..!

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தை நீக்கி விடுவோம் என சீமான் பேசியிருப்பது வேதனை அளிக்கிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பள்ளிகல்வித்துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம், கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் கனவு ஆசிரியர் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 34 ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 22 ஆசிரியர்கள் என 54 ஆசிரியர்கள் அக்டோபர் 23-ஆம் தேதி காலை சென்னையிலிருந்து புறப்பட்டு ஃபிரான்ஸ் செல்கின்றனர். அக்டோபர்28-ஆம் தேதி வரை ஃபிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

தமிழகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 54 ஆசிரியர்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்தார்.

அப்போது, கனவு ஆசிரியர் திட்டத்தில் தேர்வான ஆசிரியர்களை பாரீஸ்க்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்ல உள்ளோம். ஆசிரியர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் முதன்முறையாக வெளிநாட்டிற்கு சுற்றுலா அழைத்துச் செல்ல உள்ளோம்.

பள்ளிக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட குறைபாடுகளை கண்டறிந்து அதனை சரி செய்யும் வகையில் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். அதேபோல பள்ளிக்கு வர இயலாத மாற்றுத்திறனாளி குழந்தைகள், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உள்ளிட்டோரையும் கண்டறிந்து அவர்களுக்கும் முறையாக கல்வி வழங்கப்படுகிறது.

மேலும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில்,  தமிழ்நாட்டு அரசியலே கல்வியில்தான் இருக்கிறது. அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தான் நீதிக்கட்சி தொடங்கப்பட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தை நீக்கி விடுவோம் என சீமான் பேசியிருப்பது வேதனையாக இருக்கிறது என அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

சீமான்: நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து என்ற பாடலே இருக்காது..!

நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து என்ற பாடலே இருக்காது என சீமான் பேசினார்.

சென்னையில் உள்ள டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி துவங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதில், “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரியை விட்டு பாடப்பட்டது. இதேபோல், நிகழ்ச்சியின் இறுதியில் பாடப்பட்ட தேசிய கீத பாடலில் திராவிடம் சொல் தவிர்க்கப்பட்டது. இதனால், பெரும் சர்ச்சை கிளம்பியது.

இந்த விவகாரத்திற்கும் தமிழக ஆளுநருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது. இதனிடையே, நடந்த தவறுக்கு மன்னிப்பு கோருவதாக டிடி தமிழ் தொலைக்காட்சி கூறியது. இருப்பினும், தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான சர்ச்சை இன்னும் முடிந்தபாடில்லை.

இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை தொடர்பாக ஈரோட்டில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ‘திராவிடல் நல் திருநாடு’ என்கிற வார்த்தையை விட்டுவிட்டார்கள் அல்லது தூக்கி விட்டார்கள் என்பது தானே உங்களுக்கு பிரச்சினை. அதே தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ஆரியங்கோல் வழக்கொழிந்து என்ற வார்த்தையை தூக்கியது யார்?. கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட வார்த்தைகள் அடங்கிய அந்த வரியை தூக்கியது யார்?. திராவிடன் என்ற ஒரு சொல்லை எடுத்ததற்கே இப்படி குதிக்கிறீர்கள்.

50 ஆயிரம் ஆண்டுகளுன் முன் தோன்றிய என் தாய்மொழி தமிழை கொன்று சமாதி கட்டி வைத்திருக்கிறீர்கள். கொத்துக்கொத்தாக, லட்சக்கணக்கான என் இன மக்கள் சாவும் போது கொதித்து வராத கோவம், ஆந்திர காடுகளில் எங்களை சுட்டுக்கொல்லும் போது வராத கோபம், அன்னை தமிழ் மொழி செத்துவிழும் போது வராத கோபம், இப்போது ஏன் வருகிறது ?இதே ஆளுநர் 100 ரூபாய் வெளியிடும் போது கட்டிப்பிடித்து அணைத்துக் கொண்டீர்கள்.

நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து என்ற பாடலே இருக்காது. அப்போது என்ன செய்வீர்கள். இது எங்கள் நாடு. எங்கே இருக்கிறது திராவிடம்?. எங்கிருந்து வந்தது திராவிடம் என்ற சொல்?. திராவிடம் என்றால் என்ன? கேரளாவில் பஞ்ச திராவிடர் மாநாடு நடந்ததா இல்லையா?. அதில் ஏன் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் பங்கேற்க வேண்டும். அவர் ஏன் ராகுல் டிராவிட் என அழைக்கப்படுகிறார். நான் எப்படி திராவிடர் ஆனேன். திராவிடம் என்பது சமஸ்கிருதம் சொல். மாடல் என்பது ஆங்கில சொல்.” என சீமான் தெரிவித்தார்.

ராஜீவ் காந்தி கொலை குறித்த அவதூறு வழக்கில் சீமான் நீதிமன்றத்தில் ஆஜர்..!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விக்கிராவண்டி உரிமையியல் நீதிமன்றத்தில் ராஜீவ் காந்தி கொலை குறித்த அவதூறு வழக்கில் இன்று நேரில் ஆஜரானார் .

விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ராதாமணி காலமானதைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் கடந்த 2019-ல் நடைபெற்றது. அந்த இடைத்தேர்தலில் பிரகலதாவை ஆதரித்து கஞ்சனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நேமூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் சீமான் பேசினார்.

அப்போது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சீமான் மீது காங்கிரஸ் கட்சியின் விழுப்புரம் மாவட்ட தலைவர் ரமேஷ் விக்கிரவாண்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது விக்கிரவாண்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் சீமான் நேரில் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி சத்ய நாராயணன், அடுத்தகட்ட வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

சீமான்: திராவிட மாடல் அரசின் நிர்வாகத் தோல்வி..! மழைநீரில் தத்தளிக்கும் தமிழ்நாட்டின் பிற நகரங்கள்..!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், முறையான மழைநீர் வடிகால் கட்டமைப்புகள் இல்லாமை காரணமாக கோவை, மதுரை, சிவகங்கை, காரைக்குடி, விருதுநகர், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாநகரங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கும், மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கமும் பெரும் வேதனையளிக்கிறது.

மக்கள் மிக அடர்த்தியாக உள்ள தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில்தான் அடிப்படைக் கட்டுமானம் முறையாகச் செய்யப்படாத காரணத்தால் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் வெள்ளத்தில் மிதக்கின்ற கொடுந்துயரை அனுபவிக்க வேண்டிய கொடுமைகள் நிகழ்கிறது என்றால் தற்போது தமிழ்நாட்டின் பிற நகரங்களும் அதேபோன்று மழை வெள்ளத்தில் தவிக்கும் நிலைக்கு ஆளாக்கி இருப்பது திராவிட மாடல் அரசின் அப்பட்டமான நிர்வாகத் தோல்வியாகும்.

இயற்கைச்சீற்றத்தை எவராலும் தடுக்க முடியாதென்றாலும், அம்மழையை எதிர்கொள்வதற்குரிய வடிகால் வாய்ப்புகளும், வாய்க்கால்களும், நீர்வழிப்பாதைகளும் ஒரு நகரத்தில் அமைக்கப்பட்டிருக்க வேண்டியது பேரவசியமாகும். அரை நூற்றாண்டு காலமாக தமிழகத்தை ஆண்டு வரும். இருபெரும் திராவிடக்கட்சிகளும் அதனைச் செய்யத் தவறி, தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களை வாழத் தகுதியற்ற நிலம் போல மாற்றியிருப்பது வெட்கக்கேடானது.

தமிழ்நாடு முழுவதும் மழைநீர் வடிகால் அமைப்பதற்கென ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையில் பல ஆயிரம் கோடிகளை ஒதுக்கீடு செய்துவிட்டு, மழை வெள்ளத்தில் மக்களைத் தத்தளிக்க விடுவது என்பது திராவிட மாடல் அரசு நிர்வாகத்தில் நிகழ்கின்ற ஊழல் முறைகேடுகளின் உச்சமாகும். 2015-ஆம் ஆண்டு அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மதிப்பிட முடியாத அளவுக்குப் பேரிழிவை எதிர்கொண்டும், இன்றுவரை அதிலிருந்து பாடம் கற்காது இருந்துவிட்டு திமுக அரசும் தொடர்ச்சியாக மக்களை வெள்ளப்பாதிப்பிற்குச் சிக்கித் தவிக்கவிட்டுள்ளது.

ஒவ்வொரு முறையும் மக்கள் பாதிக்கப்பட்ட பிறகுதான், அரசு விழித்துக் கொண்டு செயலாற்றுமென்றால், அதற்கு அரசின் நிர்வாகத் திறமையின்மைதான் முதன்மை காரணம். சிவகங்கையில் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் அவசர அழைப்புகளை ஏற்கக்கூட பணியாளர் இல்லையென பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பல நூறு கோடிகளைக் கொட்டி கார் பந்தயம் நடத்தும் திமுக அரசிற்கு மக்களுக்கான அடிப்படைக் கட்டமைப்புகளை ஏற்படுத்தும் திறன் இல்லையா? அல்லது அக்கறை இல்லையா? இருந்தபோதிலும், தற்சமயத்தில் எல்லோரும் இணைந்து செயலாற்றினால்தான், மழைவெள்ளப் பாதிப்புகளிலிருந்து முழுமையாக மீண்டு வர முடியும் என்பதால், அரசுக்கும், அதிகாரிகளுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும், மின்வாரியப் பணியாளர்களென எல்லோருக்கும் மக்கள் முழு ஒத்துழைப்பை நல்கக் கோருகிறேன்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகளை மேற்கொள்ள நாம் தமிழர் உறவுகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறேன். அவர்களும் களத்தில் செயலாற்றி, உதவிக் கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும், முழு வீச்சில் செயல்பட்டால் மட்டும்தான் மழைவெள்ளப் பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்டுக் கொண்டு வர முடியுமென்பதை உணர்ந்து, கூடுதல் கவனத்துடன் பணியாற்ற முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியாளர்களை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், தலைநகர் சென்னைக்குத் தற்போது கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் கடந்த காலங்களைப் போலல்லாது தமிழ்நாடு அரசு பன்மடங்கு கூடுதல் கவனத்துடன் செயல்பட்டு மக்களையும், அவர்தம் உடமைகளையும் பாதுகாக்க வேண்டுமெனவும், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கினால் மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படா வண்ணம் தடுக்க முன்னெச்சரிக்கை சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை இவ்வறிக்கையின் வாயிலாக வலியுறுத்துகிறேன் என சீமான் தெரிவித்துள்ளார்.

சீமான் வலியுறுத்தல்: அதிமுக, திமுக இடையே தெருச்சண்டை நடக்கிறது..!

“இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும்” என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார். தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மதியம் தூத்துக்குடிக்கு சென்றார். தூத்துக்குடி விமான நிலையத்தில் சீமான் செய்தியாளர்களுக்கு பதிலளித்தார்.

அப்போது, “இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன் பிடிக்கின்றனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக்க கூறியுள்ளார். இலங்கையில் தமிழர்களை சுட்டு கொன்றார்கள், வலைகளை கிழித்து எறிந்தார்கள், இதற்கு மேல் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள். இதற்கு மேல் என்ன நடவடிக்கை உள்ளது.

இந்திய பெருங்கடல் என்றால் போதுமா? மீன் பிடிப்பதற்கு உரிமை இல்லையா?. இலங்கையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு இலங்கை மீது இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும். கட்சத்தீவை மீட்க வேண்டும். அதிமுக ஆட்சியில், அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள் திமுக ஆட்சியில் முடிக்கப்பட்டுள்ளன. பேருந்து நிலையத்தில் உதயசூரியன் சின்னம் தான் உள்ளது. அதிகாரம் நிலையானது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரம் தமிழன் கைக்கு வரும் போது அனைத்தும் மாறும். வசதியாக பதுங்க பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டது தான் திராவிடம்.

 

தமிழ் தேசியமும், திராவிடமும் ஒன்றல்ல. வேளாண் கல்லூரி மாணவர்களை நில அளவைக்கு பயன்படுத்துவது தவறு. 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான கட்டமைப்பு நடைபெறுகிறது. அனைத்து கட்சியும் என் பின்னால் தான் ஓடி வருகிறார்கள். நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். என் பயணம் என் கால்களை நம்பிதான் உள்ளது. அடுத்தவர் கால்களை நம்பி பயணத்தை தொடங்காதீர்கள். என் கொள்கை யாரோடும் ஒத்து போகவில்லை. வியாபாரத்துக்காக கல்வி, மருத்துவத்தை தரம் குறைக்கிறார்கள். அவர்களுடன் எப்படி நாங்கள் சேர முடியும்.

அரசியல் அதிகாரம் இல்லாத, எளிய மக்கள் உள்ள இடங்களில் தான் நச்சு ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஊழல் செய்யும் அமைச்சர்கள் பட்டியலை வெளியிடுவோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் கூறியுள்ளார். திமுகவும் இதையே கூறியது. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த அதிமுக, திமுக. இரண்டு கட்சிகளுக்கும் இடையே தெருச்சண்டை தான் நடக்கிறது. இதை ஒழிக்க வேண்டும்” என சீமான் தெரிவித்தார்.