23 வயது பெண் 7 மாதங்களில் 25 கணவன்கள்..!! கான்ஸ்டபிளை 26-வது திருமணத்திற்கு ரெடியான பெண் கைது..!

23 வயது பெண் 7 மாதங்களில் 25 கணவன்கள் ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் என்று ஒவ்வொரு மாநிலங்களாக சென்று திருமண செய்து நகை, பணம் என கையில் கிடைத்ததை சுருட்டி கொண்டு ஓட்டம் பிடித்து கடைசியாக போபாலில் கான்ஸ்டபிளை 26-வது திருமணம் செய்ய முயன்றபோது கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கோயம்புத்தூரை சேர்ந்த 47 வயது மடோனா என்ற பெண், மனைவியை இழந்து தனியே வசிக்கும் ஆண்களுக்கு, அதிலும் குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு மட்டுமே குறி வைத்து ஏமாற்றி வந்துள்ளார். சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்களிடம் நெருங்கி பழகி, அவர்களையே திருமணம் செய்து கொண்டு நகை, பணம், சொத்துக்களை அபகரித்துவிடுவாராம். பல ஆண்களை ஏமாற்றிய மடோனா நேற்று கைதாகி தமிழகத்தில் பேசுபொருளாக மாறியது. ராஜஸ்தானில் அனுராதா ஹேக் என்ற பெண் இன்று பலருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளார்.

ராஜஸ்தானை சேர்ந்த 23 வயதாகும் அனுராதா ஹேக் மேட்ரிமோனியல், திருமண புரோக்கர்களை அணுகி, வசதியான ஆண்களுக்கு வலையை விரிப்பவராம். தன்னை திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கும் ஆண்கள் என்றால், உடனே அவர்களுடன் சட்டப்படி பதிவு திருமணமும் செய்து கொள்வாராம். பதிவு திருமணம் செய்வதால், யாருக்கும் அனுராதா மீது சந்தேகம் வருவதில்லை. திருமணம் முடிந்து சில நாட்களில் நகை, பணம், சொத்துக்களை அபகரித்து, அதற்கு பிறகு அந்த வீட்டிலிருந்து கிளம்பி சென்றுவிடுவாராம். அதுவும் 7 மாதங்களில் இதுவரை 25 பேரை திருமணம் செய்துள்ளார்.

இப்படி பலரும் ஏமாந்துபோன நிலையில், சவாய் மாதோப்பூர் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு சர்மா என்ற நபர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் தந்துள்ளார். இந்த புகாரை விசாரிக்க சென்றபோதுதான், அனுராதா ஹேக்கின் அனைத்து தில்லாலங்கடி வேலைகளும் வெளிச்சத்துக்கு வந்தன. காவல்துறையினர்அனுராதா ஹேக்யை தேடி செல்வதற்குள், போபாலில் ஒரு காவல்துறை கான்ஸ்டபிளை திருமணம் செய்ய முயன்று கொண்டிருந்து போது அனுராதா ஹேக்யை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

அதன் பிறகு அனுராதா ஹேக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் என்று ஒவ்வொரு மாநிலங்களாக சென்று திருமண மோசடி செய்துள்ளதாக தெரிவித்து காவல்துறையினருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

11 -ஆம் வகுப்பு மாணவியை 9 பேர் அடங்கிய கும்பலால் கூட்டுப் பாலியல் செய்த கொடூரம் ..!

திருமண நிகழ்வுக்குச் சென்ற 11 -ஆம் வகுப்பு மாணவியை 9 பேர் அடங்கிய கும்பல் கடத்தி சென்று கூட்டுப் பாலியல் செய்த கொடூர சம்பவம் அரங்கேறி நாட்டையே உலுக்கியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஜலாவர் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, திருமண நிகழ்வுக்குச் சென்ற 11 -ஆம் வகுப்பு மாணவி ஒருவரை 9 பேர் அடங்கிய கும்பல் கடத்தி சென்று அருகிலிருந்த வயல்வெளி வைத்து சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

அடுத்த நாள் பெற்றோருக்கு உண்மை தெரியவந்தது. இருப்பினும் மாணவிக்கு வியாழக்கிழமை தேர்வு நடைபெற இருந்ததால், தேர்வு நேரத்தில் காவல் நிலையத்தில் புகார் அளித்தால், கல்வி பாதிக்கப்படும் என்று கருதிய மாணவியின் பெற்றோர், அவரை தேர்வெழுத வைத்துள்ளனர்.

தொடர்ந்து வெள்ளிக்கிழமை காவல்நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மாணவியிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் குற்றவாளிகள் அதே ஊரைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்த நிலையில் காவல்துறை அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் நீதிமன்ற உத்தரவின் பேரில், குற்றத்தில் ஈடுபட்ட ஒரு சிறுவன் கூர்நோக்கு இல்லத்திலும், மீதமுள்ள 8 பேரை சிறையில் அடைத்தனர்.

பேருந்தில் கட்டணம் தர மறுத்த பெண் காவலர்: பாஜக ஆட்சி செய்யும் ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களில் மாறி மாறி அபராதம் விதிக்கும் கொடுமை..!

ராஜஸ்தான் அரசுப் பேருந்தில் ஹரியானா பெண் காவலர் பயணச்சீட்டு வாங்க மறுத்த விவகாரம் இரு மாநில போக்குவரத்து காவல்துறை இடையிலான மோதலாக உருவெடுத்துள்ளது. இதில் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி அபராதம் விதித்து வருகின்றனர்.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து கடந்த 22-ஆம் தேதி ராஜஸ்தான் அரசுப் பேருந்தில் ஹரியானா பெண் காவலர் ஒருவர் பயணம் செய்துள்ளார். ஜெய்ப்பூரில் இருந்து ஹரியானாவின் தர்ஹரா செல்ல அக்காவலரிடம் நடத்துநர் ரூ.50 பயணக் கட்டணம் கேட்டுள்ளார். ஆனால் அரசு ஊழியர் என கூறி பெண் காவலர் பயணச்சீட்டை வாங்க மறுத்துள்ளார்.

இதற்கு நடத்துநர், ராஜஸ்தானில் அரசு ஊழியர்களுக்கு இலவசப் பயணம் இல்லை என தெளிவுபடுத்தி உள்ளார். இதன் பிறகும் பெண் காவலர் பயணச்சீட்டை வாங்க மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்று மோதலாக உருவெடுத்தது. பயணிகள் கூறியும் பெண் காவலர் பயணச்சீட்டு வாங்கவில்லை, பேருந்தை விட்டு இறங்கவும் இல்லை. இறுதியில் பெண் காவலருக்காக பயணி ஒருவர் ரூ.50 கொடுத்து பயணச்சீட்டு வாங்கியதால் சாலையோரம் நிறுத்தப்பட்ட பேருந்து அங்கிருந்து புறப்பட்டது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது

இத்தனை தொடர்ந்து , ஹரியானா போக்குவரத்து காவல்துறை, இதனை ஒரு அவமானமாக கருதினர். இதனால் தர்ஹரா வந்த சுமார் 90 ராஜஸ்தான் அரசுப் பேருந்துகளுக்கு அபராதம் விதித்து ரசீது அனுப்பினர். இதற்கு ஏதாவது ஒரு விதிமீறல் காரணமும் காட்டியிருந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜஸ்தான் போக்குவரத்து காவல்துறை தங்கள் மாநிலம் வந்த 100-க்கும் மேற்பட்ட ஹரியானா அரசுப் பேருந்துகளுக்கு அபராதம் விதித்ததுடன் 8 பேருந்துகளை காவல் நிலையங்களில் நிறுத்திக் கொண்டனர். ஹரியானா மற்றும் ராஜஸ்தான் இந்த இரு மாநிலங்களை ஆட்சி செய்யும் பாஜக அரசு என்ன செய்ய போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

குடிபோதையில் பெண்ணை பைக்கில் கட்டி இழுத்துச் சென்ற ஆசாமி..!

ராஜஸ்தான் மாநிலத்தின் நாகவுர் மாவட்டம் நரசிங்கபுரா கிராமத்தை சேர்ந்த பிரேம் ராம் மெக்வால். குடிபோதைக்கு அடிமையான இவர், தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் போதையில் இருந்த பிரேம் ராம் மெக்வால் தனது மனைவியை தாக்கியுள்ளார். அதன் பின்னர் அவரது கால்களை பைக்கில் கட்டி கரடுமுரடான மண் சாலையில் இழுத்துச் சென்றுள்ளார்.

இது தொடர்பான வீடியோதற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 40 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில், அப்பெண் வலியால் அலறுவது தெரிகிறது. எனினும் கிராமத்தைச் சேர்ந்த எவரும் தங்கள் வீட்டை விட்டுவெளியே வரவில்லை. சம்பவத்தின்போது மற்றொரு பெண், வீடியோ எடுத்த ஆண் உள்ளிட்ட 3 பேர் அங்கு இருந்ததாக நம்பப்படும் நிலையில் அவர்களும் இதனை தடுக்கவில்லை. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், பிரேம் ராம் மெக்வாலை கைது செய்துள்ளனர்.