ஆர்.பி.உதயகுமார்: ஆக்டோபஸ் அரைவேக்காடு அட்டைப்பூச்சி அண்ணாமலை..!

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அண்ணாமலை பேசும் போது, காலில் விழுந்து பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமிக்கு பண்பாடு மிக்க விவசாயி மகனை, பச்சை இங்கில் 10 ஆண்டுகாலம் கையெழுத்து போட்ட அண்ணாமலையை பற்றி பேச எடப்பாடி பழனிசாமி என்ற தற்குறிக்கு எந்த அதிகாரமும் கிடையாது” என்று மிகக் கடுமையாக பேசினார்.

இதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில், அண்ணாமலை மனநல மருத்துவரை உடனடியாக சந்திக்க வேண்டும் என்று சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில், அண்ணாமலை மனநல மருத்துவரை உடனடியாக சந்திக்க வேண்டும். அப்படி சந்திக்க முடியவில்லை என்றால் சொல்லுங்கள் நாங்கள் சைக்காலஜி படித்திருக்கிறோம். எனவே, நாங்கள் மனநல மருத்துவத்தை பற்றி அறிந்திருக்கிறோம். உங்களக்கு மதுரையிலேயே கூட ஒரு பைசா கட்டணம் இல்லாமல் சேர்த்துவிட்டு அந்த புண்ணியத்தை ஏற்றுக் கொள்கிறோம். தமிழ்நாட்டு மக்களை உங்களின் பைத்தியக்கார தனத்தில் இருந்து மீட்டெடுத்து

உதவுகின்ற வகையில் அதை செயவதற்கு நாங்கள் முன்வருகிறோம். பாரதிய ஜனதா கட்சியை பின்னுக்கு தள்ளிவிட்டு, அந்த கட்சியுடைய விலாசத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு, ஆக்டோபஸ் அரைவேக்காடு அட்டைப்பூச்சி அண்ணாமலை தன்னுடைய முகவரியை, விலாசத்தை முன்னிலைப்படுத்தி, சுயநலத்தோடு எடுத்து வரும் அத்தனை முயற்சிகளும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அப்பட்டமாக வெளிச்சம்போட்டு காட்டியிருக்கிறது.

தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக கடுகளவும் உழைப்பை தந்திடாத ஆக்டோபஸ் அண்ணாமலை போன்ற பைத்தியங்கள் பகல்கனவு கானும் இந்த காலத்தையும் நாம் கவனமாக கடந்து செல்ல வேண்டி இருக்கிறது என ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

ஆர்.பி.உதயகுமார்: ஈயம் பித்தளைக்கு பேரீச்சம் பழம் தான் அண்ணாமலைக்கு தெரியும்..!“

மதுரை திருமங்கலம் பகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனை ஆதரித்து ஆர்.பி.உதயகுமார் பேசினார். அப்போது, ‘‘அண்ணாமலை ரெடிமேட் அரசியல்வாதி. இரண்டு விதமான சட்டைகளை நாம் போடுவோம். ஒன்று அளவு எடுத்து டெய்லர் தைத்த சட்டையைப் போடுவோம். மற்றொன்று அளவு எடுத்து தைக்காமல் ஆத்திர அவசரத்துக்கு கடையில் சென்று எடுத்து ரெடிமேட் சட்டையை எடுத்துப்போடுவோம். அதுமாதிரி பாஜகவில் தலைவர்கள் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தை நிரப்புவதற்கு ரெடிமேட் அரசியல்வதியாக அண்ணாமலை பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதனால், ரெடிமேட் தலைவர் அண்ணாமலை ரெடிமேட் டயலாக்குதானே பேசுவார். அவருக்கு தெரிந்தது எல்லாம் ஈயம் பித்தளைக்கு பேரீச்சம் பழம், இரும்புகடை போன்றவைதான் தெரியும். அவருக்கு எங்கே அரசியல் தெரியும். தமிழக அரசியல் கட்சிகள், தலைவர்களை தெரியும். அதிமுக எஃகு கோட்டை. அந்தக் கோட்டை பக்கம் கூட அவரால் நெருங்க கூட முடியாது.

அவர் ரெடிமேட் அரசியல்வாதி என்பதால் அவருக்கு வரலாறு தெரியாது. அதனாலேயே, தேர்தலுக்காக தினமும் ரெடிமேடாக தினமும் இரண்டு டயலாக்கைப் படித்துவிட்டு வந்து பேசி வருகிறார். அது தவறு என்று தெரியாமலே குழந்தைபோல் படித்து வந்த டயலாக்கை ஒப்புவிக்கிறார். இப்படி மனப்பாடம் செய்து அரசியலில் வசனம் பேசும் அண்ணாமலை விரைவில் தமிழக அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்படுவார் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.