நீட் தேர்வு ஆடை கட்டுப்பாட்டின் எதிரொலி… “நீட் தேர்வு டாப்ஸ்” இங்க கிடைக்கும்..!

நீட் ஆடை கட்டுப்பாட்டின் எதிரொலி.. “நீட் தேர்வு டாப்ஸ்” இங்க கிடைக்கும் என ஜவுளி கடைகளில் விற்பனையை தொடங்கினர்.  நாடு முழுவதும் மொத்தம் 22 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் 1.5 லட்சம் மாணவர்கள் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான (MBBS, BDS) நீட் NEET (UG) நுழைவுத் தேர்வு நேற்று நடைபெற்றது.

தமிழ்நாட்டின் சென்னை, திருச்சி, மதுரை உட்பட மொத்தம் 31 நகரங்களில், நீட் நுழைவுத் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் நீட் தேர்வு 720 மதிப்பெண்களுக்கான 180 வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் இருந்தது. ஒரு வினாவுக்கு 4 மதிப்பெண்கள், தவறான வினாவிற்கு ஒரு நெகட்டிவ் மதிப்பெண் வழங்கப்படும். என்பது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வுகளுக்கு வழக்கம் போல இந்த ஆண்டும் கடும் உடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மாணவர்கள், வெளிர்நிற அரை கை சட்டைகளைத்தான் அணிய வேண்டும். முழு கை சட்டைகளை அணியக் கூடாது. ஷீக்களை அணியவும் கூடாது. கை கடிகாரங்கள், கூலிங் கிளாஸ் போன்றவை அணியவும் தடை தடைவிதிக்கப்பட்டது.

மாணவிகள் முழுக்கை ஆடைகள், எம்பிராய்டரி ஆடைகளை மாணவிகள் அணியக் கூடாது; ஹேர்பின்கள், கிளிப்புகள், ஆடம்பர ஆபரணங்கள் அணியவும் கூடாது; காதணிகள், மூக்குத்திகள், வளையல்கள், மோதிரங்கள், கொலுசுகளும் அணியக் கூடாது. ஹை ஹீல்ஸ் காலணிகள், ஷூக்கள் போடவும் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. தேர்வு மையத்துக்குள் கால்குலேட்டர், செல்போன்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டு செல்லக் கூடாது.

குறிப்பாக, மாணவிகளில் துப்பட்டாவை கழற்ற சொல்வது முதல், மூக்குத்தி, காதில் தோடு என மாணவிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. திருப்பூரில் ஒரு மாணவியில் உடையில் நிறைய பொத்தான்கள் இருந்ததாக கூறி அதை அறுத்து எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சாப்பிடக் கூடிய பொருட்களையும் கொண்டு செல்லக் கூடாது. நீட் நுழைவுத் தேர்வு எழுதும் மாண்வர்கள் முற்பகல் 11.30 மணி முதல் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் அனைவரும் மிக கடுமையான சோதனைகளுக்குப் பின்னரே நீட் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இதனால் மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நீட் தேர்வு எழுதும் மாணவிகள் அணிந்து வரும் ஆடைகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பதால், பல்வேறு ஜவுளி கடைகளில் நீட் தேர்வுக்கான ஆடை விற்பனைக்கு வந்துள்ளது. தேசிய தேர்வுகள் முகமை எதிர்பார்க்கும் வகையில், பொத்தன்கள் இல்லாத, எந்த வித டிசைன்களும் இல்லாத பிளைன் நிறத்தில் சுடிதார் டாப்கள் விற்பனைகளை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்துள்ளது அனைவரையும் ஒரு கணம் திருப்பி வைத்துள்ளது.

சீமான் ஆவேசம்: மூக்குத்திக்குள்ள பிட் எடுத்துட்டு போக முடியுமா..!?

என் மாநிலத்தில் மட்டும் ஏன் இந்த கொடுமை மூக்குத்திக்குள்ள பிட் எடுத்துட்டு போக முடியுமா? – நீட் தேர்வு கட்டுப்பாடுகளுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். நாடு முழுவதும் மொத்தம் 22 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் 1.5 லட்சம் மாணவர்கள் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான (MBBS, BDS) நீட் NEET (UG) நுழைவுத் தேர்வு நேற்று நடைபெற்றது.

தமிழ்நாட்டின் சென்னை, திருச்சி, மதுரை உட்பட மொத்தம் 31 நகரங்களில், நீட் நுழைவுத் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் நீட் தேர்வு 720 மதிப்பெண்களுக்கான 180 வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் இருந்தது. ஒரு வினாவுக்கு 4 மதிப்பெண்கள், தவறான வினாவிற்கு ஒரு நெகட்டிவ் மதிப்பெண் வழங்கப்படும். என்பது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வுகளுக்கு வழக்கம் போல இந்த ஆண்டும் கடும் உடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மாணவர்கள், வெளிர்நிற அரை கை சட்டைகளைத்தான் அணிய வேண்டும். முழு கை சட்டைகளை அணியக் கூடாது. ஷீக்களை அணியவும் கூடாது. கை கடிகாரங்கள், கூலிங் கிளாஸ் போன்றவை அணியவும் தடை தடைவிதிக்கப்பட்டது.

மாணவிகள் முழுக்கை ஆடைகள், எம்பிராய்டரி ஆடைகளை மாணவிகள் அணியக் கூடாது; ஹேர்பின்கள், கிளிப்புகள், ஆடம்பர ஆபரணங்கள் அணியவும் கூடாது; காதணிகள், மூக்குத்திகள், வளையல்கள், மோதிரங்கள், கொலுசுகளும் அணியக் கூடாது. ஹை ஹீல்ஸ் காலணிகள், ஷூக்கள் போடவும் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. தேர்வு மையத்துக்குள் கால்குலேட்டர், செல்போன்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டு செல்லக் கூடாது.

சாப்பிடக் கூடிய பொருட்களையும் கொண்டு செல்லக் கூடாது. நீட் நுழைவுத் தேர்வு எழுதும் மாண்வர்கள் முற்பகல் 11.30 மணி முதல் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் அனைவரும் மிக கடுமையான சோதனைகளுக்குப் பின்னரே நீட் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் சென்னை தாம்பரம் சானடோரியத்தில் சீமான் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, இந்தியா முழுமைக்கும் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகிறார்கள். என் மாநிலத்தில் மட்டும் ஏன் இந்த கொடுமை நடக்கிறது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாமல் என் மாநிலத்தில் மட்டும் என் பிள்ளையின் துப்பட்டாவை எடுக்கிறார்கள். பூணூல், அரைஞாண் கயிறு அறுக்கப்படுகிறது. முழுக்கை சட்டை கத்தரிக்கப்படுகிறது.

மாணவிகளின் உள்ளாடையை கூட கழற்ற சொல்கிறார்கள். நீட் தேர்வு மையங்களில் காவல் துறைக்கு என்ன வேலை? இத்தூண்டு மூக்குத்திக்குள்ள பிட்டை கொண்டு போய் பார்த்து எழுதிட முடியும் என நம்புகிறதா இந்த சமூகம்? வோட்டு போடும் இயந்திரத்திலும் எந்த கோல்மாலும் செய்ய முடியாது என்றும் நம்ப சொல்கிறார்கள் என சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.