Nara Lokesh: அண்ணாமலை தமிழ்நாட்டில் அரசியல் புரட்சியை ஏற்படுத்தி வருகிறார்..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், வேட்பாளர்கள் வாக்கு வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.

இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம், பீளமேடு ரொட்டிக்கடை மைதானத்தில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து தெலுங்கு தேசம் கட்சி பொதுச் செயலாளர் நாரா லோகேஷ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, கர்நாடகா மாநிலத்தில் சிங்கமாக திகழ்ந்தவர் ஐபிஎஸ்‌ அதிகாரி அண்ணாமலை. பொதுமக்கள் நலனுக்காக அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டு, அரசியலுக்கு வந்துள்ளார். தமிழ்நாட்டில் அரசியல் புரட்சியை ஏற்படுத்தி வருகிறார். அண்ணாமலை நேர்மையானவர். அண்ணாமலை வெற்றி பெற்றால், கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பான வளர்ச்சியைப் பெறும் என்பது உறுதி என நாரா லோகேஷ் பேசினார்.