Mayawati: வாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக களமிறங்கும் பகுஜன் சமாஜ் வேட்பாளர் அதர் ஜமால் லாரி

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் உள்ள 80 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் – 19, ஏப்ரல் -26, மே -4, மே -13, மே -20, மே -25, ஜூன் -1 தேதி முதல் ஏழு கட்டங்களிள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் வரவிருக்கும் நாடளுமன்ற மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடப் போவதாக அக்கட்சியின் தலைவர் மாயாவதி குமாரி அறிவித்திருந்தார். இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் 11 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்துள்ளது.

அதன்படி, வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சி அதர் ஜமால் லாரியை களமிறக்கியுள்ளது. மேலும் புடான் தொகுதியில் முஸ்லிம் கானை நிறுத்தியுள்ளது. பரேலியில் சோட்டலால் கங்வார் கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். உதய் ராஜ் வர்மா சுல்தான்பூர் தொகுதியிலும், கிராந்தி பாண்டே ஃபரூகாபாத் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். மெயின்புரி தொகுதியில் சிவபிரசாத் யாதவுக்கு சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

பண்டா மக்களவைத் தொகுதியில் பிஎஸ்பி வேட்பாளராக மயங்க் திவேதியும், துமரியகஞ்ச் தொகுதியில் குவாஜா ஷம்சுதினும் போட்டியிடுகின்றனர். பல்லியா தொகுதியில் லல்லன் சிங் யாதவ் மற்றும் ஜான்பூரில் வேட்பாளராக ஸ்ரீகலா சிங் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.

அதே வேளையில், காஜிபூரில் சமாஜ்வாதி கட்சியின் அப்சல் அன்சாரியை எதிர்த்து உமேஷ் குமார் போட்டியிடுகிறார். முஸ்லிம் சமூகத்தின் ஆதரவை எதிர்பார்த்து பிஎஸ்பி வாரணாசியில் லாரியை களமிறக்கியுள்ளதாக பலர் கூறுகின்றனர். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அதர் ஜமால் லாரி, “பகுஜன் சமாஜ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையேதான் போட்டி இருக்கும்” என தெரிவித்தார்.

மாயாவதி கேள்வி: காங்கிரஸ் மேலிடம் மவுனம் சாதிப்பது ஏன்?

ராஜஸ்தானின் அனுமன்கார்க் பகுதியில் காதல் விவகாரத்தில் தலித் வாலிபர் ஒருவர் கடந்த 7-ந்தேதி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியது. இந்நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பாக மாநில காங்கிரஸ் அரசு மற்றும் தேசிய காங்கிரஸ் தலைவர்களை பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி சாடியுள்ளார்.

இது குறித்து மாயாவதி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ராஜஸ்தானின் அனுமன்கார்கில் தலித் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டு உள்ளார். இது மிகவும் சோகமானதும், கண்டனத்துக்குரியதும் ஆகும். ஆனால் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் மவுனம் சாதிப்பது ஏன்?’ என கேள்வி எழுப்பி உள்ளார்.

கொல்லப்பட்டவரின் குடும்பத்தினரை சத்தீஸ்கார் மற்றும் பஞ்சாப் மாநில முதலமைச்சர்கள் சந்தித்து ரூ.50 லட்சம் இழப்பீடு கொடுப்பார்களா? எனவும் கேள்வி எழுப்பியுள்ள மாயாவதி, இதற்கு பதில் தேவை எனவும், இல்லையென்றால் தலித்துகளின் பெயரில் முதலைக்கண்ணீர் வடிப்பதை நிறுத்துமாறும் கூறியுள்ளார்.

தடுப்பூசி பணியில் நடைபெறும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்

நாட்டில் கோவிட் -19 தடுப்பூசி தயாரிப்பது மற்றும் தடுப்பூசி போடுவது தொடர்பான சர்ச்சை, அரசியல், குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர் குற்றச்சாட்டுகள் போன்றவை நாட்டில் நிகழ்ந்து வருகின்றன. இதன் காரணமாக மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அதனால் இப்போது தடுப்பூசி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பதன் மூலம், அதன் நன்மைகளை மக்களுக்கு எடுத்துச் செல்வதற்கான, முழுமையான முயற்சி அவசியம் என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “தடுப்பூசி உற்பத்தி தொடர்பாக எவ்வளவோ அரசியலும், சர்ச்சையும் செய்தாகி விட்டது. அதனால் மக்கள் நிறைய அனுபவித்து விட்டனர். இத்தகைய அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது அவசியம். அதன்மூலம் தடுப்பூசி பணியால் மக்கள் அனைவரும் பலன் அடைவார்கள்” என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.